Monday , July 28 2025
Breaking News
Home / Kanagaraj Madurai (page 4)

Kanagaraj Madurai

தென் தமிழகத்தில் முதன் முறையாக மதுரையில் அப்போலோ பிரெஸ்ட் கிளினிக் எனும் மார்பக நல சிகிச்சை மையம் தொடக்கம்..

தென் தமிழகத்தில் முதன் முறையாக மதுரை அப்போலோ மருத்துவமனை, அப்போலோ பிரெஸ்ட் கிளினிக் எனும் மார்பக நல சிகிச்சை மையத்தை துவக்கியது மதுரை, ஆக 20: மதுரை அப்போலோ சிறப்பு மருத்துவமனை, தென் தமிழகத்திலேயே முதன் முறையாக பெண்களுக்கு விரிவான மார்பக நல சிகிச்சையை வழங்குவதற்காக பிரத்யேகமாக அப்போலோ பிரெஸ்ட் கிளினிக்கை துவங்கி இருக்கிறது. இந்த கிளினிக்கின் மூலம் பெண்களின் மார்பகம் குறித்த ஆரோக்கியத்தையும் மற்றும் அதன் பிரச்சனைகளையும் கண்டறிந்து …

Read More »

மதுரையில் பெருந்தலைவர் நடிகர் திலகம் அறக்கட்டளை சார்பாக ராஜீவ்காந்தி பிறந்தநாளை முன்னிட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 80-வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை செல்லூர் பகுதியில் பெருந்தலைவர் நடிகர் திலகம் அறக்கட்டளை சார்பாக பஞ்சாயத்து ராஜ் சங்கதன் மதுரை மாவட்ட தலைவர் ஜி.முத்துக்குமார் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் மீர்பாஷா, சோசியல் மீடியா மாநில பொதுச் செயலாளர் நாஞ்சில் பால் ஜோசப், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கே.ஆர்.சுரேஷ்பாபு, பூக்கடை கண்ணன், வீரவாஞ்சிநாதன், பகுதி …

Read More »

கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழா மத்திய அரசு விழா என்று முழு பூசணிக்காய் சோற்றில் மறைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் பேட்டி..!

கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழா மத்திய அரசு விழா என்று முழு பூசணிக்காய் சோற்றில் மறைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் மதுரையில் பேட்டி மதுரை ஆகஸ்ட் 20 மதுரை காந்தி மியூத்தில் மாற்று திறனாளிகளுக்கு அக்சயபாத்திரம் டிரஸ்ட் சார்பில் நலத்திட்ட உதவிகளை சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி உதயகுமார் எம்எல்ஏ வழங்கினார். இதற்கான ஏற்பாட்டினை டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார். இந்த …

Read More »

தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா மாநில நிர்வாக பொதுச் செயலாளராக ஆடிட்டர் ஹரிஹரசுதன் நியமனம்..!

தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் தேசிய இயக்குனர் சர்க்கார் பட்னவி அவர்களின் ஆணைக்கிணங்க, தமிழ்நாடு மாநில துணை சேர்மன் டாக்டர் வி.பி.ஆர் செல்வகுமார் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு மாநில சேர்மன் & தேசிய துணைத் தலைவருமான டாக்டர் கஜேந்திரன் மற்றும் தேசிய செய்தி தொடர்பாளர் கீதா முருகன் ஆகியோரின் பரிந்துரையின்படி, மதுரையைச் சேர்ந்த ஆடிட்டர் ஹரிஹரசுதன் என்பவர் மாநில நிர்வாக பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். …

Read More »

தமிழ்நாடு அப்பளம் வடகம் மோர் வத்தல் சங்கத்தின் 12-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம்..!

மதுரை, ஆக. 11- தமிழ்நாடு அப்பளம் வடகம் மோர் வத்தல் சங்கத்தின் 12-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம், ஏற்றுமதியாளர்கள்- விற்பனையாளர்கள் கூட்டம், தொழில்துறை சட்டங்கள் பற்றிய கலந்தாய்வு கூட்டம் என முப்பெரும் விழா, மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள ஸ்ரீகாமாட்சி மகாலில் நடந்தது. மாநில தலைவர் முனைவர் திருமுருகன் தலைமை தாங்கி, அனைவரையும் வரவேற்றார். மாநில செயலாளர் விஜீஷ், சங்கத்தின் ஆண்டறிக்கை வாசித்தார். மாநில பொருளாளர் விஜயன், சங்க நிதிநிலை …

Read More »

மதுரை சம்மட்டிபுரம் அருள்மிகு ஸ்ரீ அருள் அம்மன் கோவிலில் கூழ் ஊற்றும் நிகழ்ச்சியை பாஜக மாவட்ட துணைத்தலைவர் ராஜ்குமார் தொடங்கி வைத்தார்.

மதுரை சம்மட்டிப்புரம் மேட்டுத்தெருவில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ அருள் அம்மன் திருக்கோவிலில் நேற்று வெள்ளிக்கிழமை அம்மனுக்கு பொங்கல் வைத்து கூழ் காய்ச்சி பக்தர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சியை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பாஜக மதுரை மாநகர் மாவட்ட துணைத் தலைவர் ராஜ்குமார் மற்றும் அவரது துணைவியார் இந்துமதி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் கோவில் விழா குழு தலைவர் பி.தங்கபாண்டியன், செயலாளர் பென்னர் ரமேஷ், பொருளாளர் ஆராம் புலி, உதவி …

Read More »

மதுரை சிறைக் கைதிகள் நலனுக்காக JCI மதுரை சென்ட்ரல் அமைப்பு சார்பில் 500-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்த்திருத்தப் பணிகள் துறை சார்பாக நடைபெற்ற இந்த விழாவில் ஜேசிஐ மதுரை சென்ட்ரல் சார்பில் 500 புத்தகங்கள் சிறைக்கைதிகளின் நலனுக்காக வழங்கப்பட்டது. இந்த ஆண்டு இறுதிக்குள் 2000 புத்தகங்கள் வழங்குவோம் என்று ஜே.சி.ஐ அமைப்பினர் தெரிவித்தனர்.இந்நிகழ்வில் தலைமை விருந்தினராக ஜே.சி.ஐ தேசிய இயக்குநர் G.S.வர்மா, மண்டல தலைவர் சுந்தரேஸ்வரன் மற்றும் சிறப்பு அழைப்பாளராக மண்டல இயக்குநர் திருமதி பவித்ரா ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி …

Read More »

தேனி மாவட்டம் கொண்டமநாயக்கன்பட்டி என்.ஜி.ஓ நகரில் அக்ரி ரகுவரன்-அனிதா இல்ல புதுமனை புகுவிழா..!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே கொண்டமநாயக்கன்பட்டி என்.ஜி.ஓ நகரில், ஜோதி மாணிக்கம் பெருமாள் கோவில் பங்காளி அக்ரி ரகுவரன்-அனிதா இல்ல புதுமனை புகுவிழா நடைபெற்றது. இவ்விழாவில் தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் முருக்கு ஓடை ராமர், அதிமுக மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.டி.கே ஜக்கையன், ஒன்றிய சேர்மன் லோகிராஜன், ஒன்றிய பொருளாளர் லோகநாதன் உள்பட மாவட்ட, ஒன்றிய, வார்டு நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு …

Read More »

பாரதிய ஜனசங்கம் ஸ்தாபகர் ஷ்யாம் பிரசாத் முகர்ஜி நினைவு தினம் :- மதுரை காளவாசல் மண்டலில் மலர் அஞ்சலி செலுத்திய பாஜக நிர்வாகிகள்…!

பாரதிய ஜனசங்கம் ஸ்தாபகர் ஷ்யாம் பிரசாத் முகர்ஜி நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை காளவாசல் மண்டல் சார்பாக மலரஞ்சலி  மதுரை ஜூன் 23 “பாரதிய ஜனசங்கம் ஸ்தாபகர் “ஷ்யாம்பிரசாத் முகர்ஜியின்” 72 வது நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது திருவுருவ படத்திற்கு மதுரை காளவாசல் மண்டல் சார்பாக  பாஜக நிர்வாகிகள் மலர் தூவி நினைவு அஞ்சலியை செலுத்தினர் மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஷியாம் பிரசாத் முகர்ஜி “பாரதிய ஜனசங்கம் என்ற …

Read More »

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் நடிகர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை தீக்கதிர் அலுவலகம் எதிரே உள்ள திருவள்ளுவர் நகரில் இரத்த தானம் மற்றும் இலவச கண் பரிசோதனை முகாம்..!

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் நடிகர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை தீக்கதிர் அலுவலகம் எதிரே உள்ள திருவள்ளுவர் நகரில் இரத்த தானம் மற்றும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இம்முகாமில் பங்கேற்ற பொதுமக்களுக்கு கம்ப்யூட்டர் கண் பரிசோதனை, இரத்த அழுத்த பரிசோதனை, சர்க்கரை அளவு பரிசோதனை, மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இந்த பரிசோதனை முகாமில் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். …

Read More »
NKBB TECHNOLOGIES