Wednesday , January 21 2026
Breaking News
Home / இந்தியா (page 11)

இந்தியா

India

திண்டுக்கல் அஞ்சலி ரவுண்டானா மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம் செல்லும் வழியில் கிரசன்ட் ஆட்டோ வாகன புகை பரிசோதனை நிலையம் திறப்பு…

திண்டுக்கல் அஞ்சலி ரவுண்டானா மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம் செல்லும் வழியில் கிரசன்ட் ஆட்டோ வாகன புகை பரிசோதனை நிலையம் திறப்பு விழா 13 -1-2024 சனிக்கிழமை மாலை 3 மணிக்கு நடைபெற்றது. இத்திறப்பு விழாவில் ஏ எச் எஸ் ஜியாவுர் ரஹ்மான் வரவேற்புரை நிகழ்த்த எல் எஸ் அப்துல் ஹை முன்னிலையில் உயர்திரு அப்துல் சமது சட்டமன்ற உறுப்பினர் மணப்பாறை அவர்கள் திறந்து வைக்க, தென்னக நுகர்வோர் மற்றும் …

Read More »

“கரூர் மாவட்டத்துக்கு மோடி அரசு துரோகம் இழைத்துவிட்டது!” – குற்றம்சாட்டிய ஜோதிமணி

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோன்றிமலையில், தனியார் அமைப்பு சார்பில் பெண்களுக்கான நிதி கல்வியறிவு மேம்பாடு குறித்து பயிலரங்கம் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜோதிமணி, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “திருச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைத்து சென்றுள்ளார். திருச்சி விமான நிலையம் யாருக்காக பிரதமர் மோடி திறந்து வைத்து சென்றுள்ளார் என்பதை பார்த்தால், விமான நிலையம் அதானிக்கு தாரைவார்த்து கொடுக்கத்தான் …

Read More »

மோடியின் கனவு தமிழ்நாட்டில் நிறைவேறாது: கே.எஸ்.அழகிரி உறுதி

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கை: திருச்சி விழாவில் பிரதமர் மோடி திட்டங்களை துவக்கி வைத்து உரையாற்றும் போது வெள்ள பாதிப்புகளில் இருந்து மீள தமிழக மக்களுக்கு துணை நிற்போம் என்று உறுதி வழங்கியிருக்கிறார். வெள்ள சேதத்தை பேரிடராக அறிவித்து தமிழகத்திற்கு நிதி வழங்க பிரதமர் மோடியை நேரிலும், நேற்றைய கூட்டத்திலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருக்கிறார். ஒன்றிய குழு வருகை புரிந்து அறிக்கை தாக்கல் செய்ததோடு, நிதியமைச்சர் …

Read More »

காங்கிரஸில் இணைந்தார் ஒய்எஸ் ஷர்மிளா.. ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சியும் காங்கிரஸில் இணைப்பு..!

ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சியின் நிறுவனர் ஒய்எஸ் ஷர்மிளா இன்று டெல்லியில் ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸில் இணைந்தார். ஒய்எஸ் ஷர்மிளா நேற்று இரவே அரசியல் காரணங்களால் டெல்லி சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அங்குள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில் இன்று காலை 11 மணியளவில் ஒய்எஸ் ஷர்மிளா கட்சியில் இணைந்தார். இவருடன் ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சியின் தொண்டர்களும், ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சியும் காங்கிரஸில் இணைக்கப்பட்டது. முன்னதாக நேற்று இரவு …

Read More »

போட்டியிடும் தொகுதிகள் எவை எவை ? காங்கிரஸ் இன்று எடுக்கும் முடிவு.. பரபரக்கும் டெல்லி வட்டாரம்.!

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பாஜகவுக்கு எதிராக உருவாக்கி உள்ள இண்டியா கூட்டணி தங்களின் அடுத்த கட்ட தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளன. குறிப்பாக காங்கிரஸ் மற்றும் கூட்டணியில் உள்ள மாநில கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து கடந்த முறை டெல்லியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின் போது விரிவாக விவாதிக்கப்பட்டது.இந்த விவாதத்தின் போது பிராந்திய கட்சிகளுடன் தொகுதி பங்கீடு செய்வதற்கான குழு அமைக்கப்பட்டு அதன் மூலம் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் மற்றும் கூட்டணி கட்சிகள் …

Read More »

INDIA கூட்டணியின் 4வது ஆலோசனை கூட்டம் – டெல்லியில் இன்று தொடக்கம்.!

இந்தியா கூட்டனியின் 4வது ஆலோசனை கூட்டம் இன்று மாலை டெல்லியில் நடைபெற உள்ளது. 2024 மக்களவைத் தோதலில் ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் ஒருங்கிணைந்து ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்கியுள்ளன. காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாடி உள்ளிட்ட பிரதான எதிா்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் ‘இந்தியா’ கூட்டணியின் முதல் மூன்று ஆலோசனைக் கூட்டங்கள் முறையே பாட்னா, பெங்களூரு, மும்பை ஆகிய நகரங்களில் நடைபெற்றன. தெலங்கானா, சத்தீஸ்கர், மத்தியப் …

Read More »

3 மாநில தேர்தல் தோல்வி, கூட்டணி குறித்து விவாதிக்க டிச.21-ல் நடக்கிறது காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம்

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அக்கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தை வரும் 21-ம் தேதி கூட்டியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜகவுக்கு எதிராக ஐக்கிய முன்னணியை உருவாக்குவதற்காக வரும் புதன்கிழமை (டிச.19) ‘இண்டியா’கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் நடைபெற இருக்கும் நிலையில், அதற்கு சில நாட்களுக்கு பின்னர் காங்கிரஸ் கட்சியின் முக்கிய முடிவுகள் எடுக்கும் குழு கூட இருக்கிறது. இந்தி பேசும் மாநிலங்களின் மையப்பகுதியாக இருக்கும் மாநிலங்களான மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், …

Read More »

கரூர் மாவட்ட தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத்துறை சார்பாக பாரதிய ஜனதா கட்சியின் மீது புகார் மனு…

கரூர் மாவட்ட தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத்துறை சார்பாகவும், கரூர் மாவட்ட வழக்கறிஞர் அணி மற்றும் கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பாகவும். பாரதிய ஜனதா கட்சியின் அதிகார இணையதள சமூக பக்கத்தில் தவறான மற்றும் பொய்யான செய்திகளை பரப்புறை செய்வதை கண்டித்தும் காங்கிரஸ் முன்னணி தலைவர்கள் திருமதி. சோனியா காந்தி மற்றும் திரு. ராகுல் காந்திக்கு எதிராக சமூக வலைதளங்களில் பொய் செய்திகளை பரப்புவதை கண்டித்து அதன் …

Read More »

கன்னியாகுமரியில் திமுக இளைஞரணி மாநில மாநாட்டையொட்டி, இருசக்கர வாகன பேரணியை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் திமுக இளைஞரணி மாநில மாநாட்டையொட்டி, இருசக்கர வாகன பேரணியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கன்னியாகுமரியில் தொடங்கி பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று சேலத்தில் நிறைவடையும். பிரசார பேரணியில் 188 இருசக்கர வாகனங்கள் பங்கேற்றுள்ளனர்.

Read More »

திராவிட மாடல் ‘திமுக’ அரசால் சிறப்பிக்கப்பட்ட இடதுசாரி தலைவர் சங்கரய்யா-முதல் தகைசால் தமிழர் விருது!

சென்னை: இந்தியாவின் முதுபெரும் இடதுசாரித் தலைவரான இன்று மறைந்த சங்கரய்யாவுக்கு (வயது 102) தமிழ்நாட்டில் ஆளும் திராவிட மாடல் திமுக அரசு தமது முதலாவது தகைசால் தமிழர் விருது வழங்கி பெருமைப்படுத்தியது. இந்தியாவின் விடுதலைக்காக சிறைவாசம் அனுபவித்தவர் சங்கரய்யா. 95 வயது வரை தமது போராட்ட குணத்தை இடைவிடாது கடைபிடித்தவர். 95 வயதில் ஆணவக் கொலைகளுக்கு எதிரான போராட்ட களத்தில் நின்றவர் சங்கரயா. இன்று வயது முதுமையின் காரணமாக 102 …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES