Saturday , December 20 2025
Breaking News
Home / செய்திகள் (page 112)

செய்திகள்

All News

தஞ்சாவூர் மாவட்டம் காவல் டுடே நிருபர்கள் குழு தஞ்சை மாவட்ட ஆட்சியர் சந்திப்பு

தஞ்சாவூர் மாவட்டம் காவல் டுடே நிருபர்கள் குழு தஞ்சை மாவட்ட ஆட்சியர் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்த பொழுது தஞ்சை மாவட்ட கௌரவத் தலைவர் தலைமையில் மதிப்பிற்குரிய திரு. K.N சுப்பையன் மற்றும் தஞ்சை மாவட்ட தலைமை நிருபர் A.ராஜேஷ் B.SC தஞ்சை மாவட்ட தாலுகா ரிப்போட்டர் M.பால்வாசகம் மற்றும் பேராவூரணி தாலுக்கா ரிப்போட்டர் S.இளையராஜா.

நேற்று தஞ்சைக்கு புதிய டிஎஸ்பி நியமனம்

தஞ்சைக்கு புதிய டிஎஸ்பி:

நேற்று தஞ்சை நகர உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளராக திரு கபிலன் ஐயா பதவி ஏற்றுக் கொண்டார். தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் நேரடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளராக பதவி ஏற்றது இதுவே முதன்முறை ஆகும் என்பது தஞ்சைக்கு சிறப்பு அம்சமாக இருக்கிறது.

-தஞ்சாவூர் ராஜேஷ் காவல் டுடே ரிப்போர்ட்டர்.

ஓட்டம் பிடித்த ஆப்கானிஸ்தான் அதிபர் மக்களை காப்பாற்ற வேண்டிய நேரத்தில்…

ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி அவசர அவசரமாக நாட்டை விட்டு ஓடி விமானத்தில் பறந்து விட்டார். இந்த இக்கட்டான சூழலில் நாட்டின் அதிபர் மக்கள் உயிர் காக்க நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளாமல் தான் மட்டும் முண்டியடித்துக் கொண்டு தப்பி இருப்பது அந்நாட்டு மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. முழுமையாக தலிபான்கள் கட்டுப்பாட்டுக்கு சென்று விட்டதை அடுத்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிர் பயத்தின் காரணமாக அங்கிருந்து வெளியேறும் முயற்சியில் காபூல் விமான நிலையத்தில் இரவு பகலாக காத்துக்கொண்டிருக்கின்றனர்.

அதேபோல் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளும் அதன் தூதரக அதிகாரிகள் மற்றும் மக்களை அங்கிருந்து அவரவர் தாயகம் அழைத்து வர தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர், ஆனால் அனைத்து விமானங்களும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர் தலிபான்கள். இது குறித்து செய்தி தொடர்பாளர் போர் முடிவுக்கு வந்துவிட்டதாகவும் தாங்கள் சர்வதேச நாடுகளுடன் அமைதியான முறையில் நல்ல பந்தத்தை தொடர்பு இருப்பதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார். பொதுமக்கள் பயப்பட தேவையில்லை என்று அறிவித்து விட்ட போதிலும் தலிபான்கள் ஆக்ரோஷமாக திரியும் அவர்களை கண்டு அஞ்சி நடுங்கி கொண்டிருக்கின்றனர்.

மக்களை காப்பாற்ற வேண்டிய ஆப்கானிஸ்தான் ராணுவத்தினர் தாலிபன்கள் வருவதற்கு முன்பாகவே அங்கிருந்து வெளியேறிவிட்டதாக கூறப்படுகின்றது. காப்பாற்ற வேண்டிய அரசு தங்களை கைவிட்டுவிட்ட நிலையில் நெருக்கடியான நிலையில் தாலிபான்களால் எந்த நேரமும் தங்களுக்கு எதுவும் நேரலாம் என்று பொதுமக்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு வெளியே 100க்கும் மேற்பட்ட ஆப்கன் மக்கள், அரசு போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரோகம் இழைத்து விட்டதாக குற்றம் சாட்டி போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர், யாரையும் கொல்ல மாட்டோம் மக்கள் தங்கள் உடமைகளை பற்றி கவலைப்படத் தேவையில்லை என்று தலிபான் செய்தி தொடர்பாளர் சார்பில் நேற்று மாலை உத்தரவாதம் அளித்தார், இருப்பினும் தலைநகர் காபூல் உள்ளிட்ட பெரும்பாலான நகரங்களில் பொது மக்கள் தாலிபான்களுக்கு பயந்து வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். அதேபோல் ஆயிரக்கணக்கான மக்கள் வங்கிகளில் மிக நீண்ட வரிசையில் காத்திருந்த பணத்தை எடுத்துக் கொண்டு அதிலிருந்து வெளியேற முனைப்பு காட்டி வருகின்றனர்.

ஆனால் தாலிபன்கள் பொதுமக்களிடம் மோதல் போக்கை கடைப்பிடிக்காமல் அமைதியான முறையிலேயே நகரங்களை கைப்பற்றி இருப்பதாக உள்ளுர் ஊடகங்கள் பலவும் தெரிவித்து வருகின்றனர். ஆப்கானிஸ்தான் தாலிபன்கள் கையில் முழுமையாகச் சென்று விட்ட நிலைமை குறித்து ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் விவாதிக்க அமெரிக்கா அரசு அவசர கூட்டத்தை கூட்டியது.கடந்த சில தினங்களில் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் அமெரிக்கா தனது படைகளை மீண்டும் அதிகப்படுத்தினால் இருதரப்பு மோதல் ஏற்படலாம் என்று தெரிகிறது.

யார் இந்த தலிபான்கள்?

தலிபான் எனப்படுவோர் ஆப்கானிஸ்தானை 1996 முதல் 2001 வரை ஆட்சி செய்த சுணி இஸ்லாமிய தேசியவாத அமைப்பாகும். 2001 இல் ஐக்கிய அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளின் உதவியுடன் இவ்வமைப்பின் தலைவர்கள் பதவியில் இருந்து அகற்றப்பட்டனர். அடிப்படைவாத தீவிரவாத அமைப்பாகக் கருதப்படும் “தலிபான்” பாகிஸ்தானின் பழங்குடியினரின் பகுதிகளில் தோற்றம் பெற்றது. தற்போது ஆப்கானிஸ்தானின் அரசுக்கெதிராகவும் நேட்டோ படைகளுக்கெதிராகவும் கெரில்லா முறையில் போரிட்டு வருகிறது.

தலிபான் அமைப்பின் தலைவர் முல்லா முகமது ஓமார் ஆவார். தலிபானின் படைகளில் பெரும்பாலானோர் தெற்கு ஆப்கானிஸ்தானிலும் மேற்கு பாகிஸ்தானிலும் உள்ள பாஷ்டன் மக்கள் ஆவார். இவர்களைவிட சிறிய அளவில் ஐரோப்பா மற்றும் சீனாவைச் சேர்ந்த தீவிரவாதிகளும் இவ்வமைப்பில் உள்ளனர். தலிபான் பாகிஸ்தான் அரசிடம் இருந்து இராணுவப் பயிற்சிகளையும் பெருமளவு இராணுவத் தளவாடங்களையும் பெற்றனர்.

குறிப்பு : பெண்கள் கல்விக்கு எதிர்ப்பாளர்களான இவர்கள் பெண்கள் படிக்கும் கல்லூரி,மற்றும் பள்ளிகளில் அமைந்துல்ள நீர்தொட்டியில் விசத்தைக் கலந்தும், பள்ளியின் வகுப்பறையில் விச வாயுவை தெளித்தும் பெண்கள் கல்வியை அழிக்கப்பார்க்கிறார்கள்.

YouTube player
YouTube player

தமிழக பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பாக நினைவு பரிசு

தமிழக பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பாக திண்டுக்கல் மாவட்ட நகர் நல அலுவலர் டாக்டர் திரு. லட்சிய வர்ணா அவர்களுக்கு தமிழக பத்திரிக்கையாளர் சங்கம் மாநில தலைவர் ப.ஹரிஹரன் நினைவு பரிசு வழங்கியபோது மாநில பொருளாளர் சரித்திரம் பிரபு, மண்டலச் செயலாளர் அசோக்குமார், மாவட்டச் செயலாளர் மோகன் கணேஷ், மாவட்டத் துணைச் செயலாளர் பாண்டியன், செயற்குழு உறுப்பினர் கார்த்திகேயன், மாவட்ட செய்தி தொடர்பு உதயகுமார் ஆகியோர் உடனிருந்து வழங்கினர்.

tTiE test of Thirukkural in English to win fabulous prizes

Following the launch of the first Thirukkural Ani (ABCmatrix) conference with Riyadh Tamil Sangam, OrangeTamil is inviting participants for the world’s first Tamil Olympiad based on Thirukkural in multiple languages.

OrangeTamil team is happy to introduce location-based sponsors who are onboarding gift coupons for the winners in different levels.

Delta Foods Thanjavur is pleased to give 500 rupees gift coupons for their products from their leading outlets in Thanjavur.

Email your name, class of study, age to OrangeTamil.com@Gmail.com to enroll in this competition.

அன்னை தெரசா கல்லூரி நடத்தும் பேச்சரங்கம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விருப்பமா?

அன்னை தெரசா கல்லூரி
திருக்கழுக்குன்றம்
செங்கல்பட்டு மாவட்டம்

தமிழ்த்துறையும் கல்லூரியின் கணித்தமிழ்ப் பேரவையும் இணைந்து நடத்தும் கல்லூரி இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கான பேச்சரங்கம்

https://forms.gle/KwvuaQ8w1y1eXPd39

நாள் 13/8/2021
நேரம் : காலை 10.00

தலைப்பு : வளர்ச்சி பாதையில் இந்தியா

நிடங்கள் : 3 நிமிடம் மட்டும்

பங்கேற்பாளர்கள் கவனத்திற்கு

  1. ஆரஞ்ச் தமிழ் டாட் காம் வலையொளி வழியாக ஒலிபரப்பப்படும்.
    2.பன்னாட்டளவில் பார்வையாளர்கள் கலந்து கொள்வார்கள்.
    3.தலைப்புக்கேற்ற பொருண்மையில் மட்டுமே பேசவேண்டும்.
    4.மூன்று நிமிடங்கள் உங்களுக்கானது..
    தமிழ் வணக்கம்
    அவை வணக்கம்
    எடுத்தல்,தொடுத்தல், முடித்தல்,நன்றி என்ற முறையில் உங்கள் பேச்சு இருத்தல் வேண்டும்.
    5.உலக அளவில் சென்று சேர்வதால் அரசியல் கலக்கக் கூடாது.தலைவர்களின் பெயர் உச்சரிக்க வேண்டிய இடம் வரும்போது மதிப்பு மிகு சொற்களை பயன்படுத்த வேண்டும்.உண்மைக்கு புறம்பான சொற்களை தவிர்க்க வேண்டும்.இந்தியாவின் பெருமைகளைப் பறைசாற்றுவதாக மட்டும் இருத்தல் வேண்டும்.
    6.பேச்சரங்கத்திற்கான குவியம் (ZOOM ) அனுப்பப்படும்.
    7.உங்கள் பெயர் அழைக்கப்படும் போது ஒலி,ஒளி வாங்கியினைத் திறந்து பேசுங்கள்.
    8.இணைய அவை ,உடை நாகரிகங்கள் கடைபிடிக்க வேண்டும்.
    9..உங்கள் பெயரினையும் மாவட்டத்தினையும் மட்டும் இங்கே குறிப்பிடுங்கள்.
    10.பதிவுக் கட்டணம் இல்லை
    11.பங்கேற்பாளர்களுக்கு மின் சான்றிதழ் வழங்கப்படும்.
    வாழ்த்துகள்🙏🙏💐💐💐💐💐

கரூர் மாவட்ட புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்ட திரு .பிரபு சங்கர் ஐ.ஏ.எஸ் அவர்களை பற்றிய சில தகவல்கள்…

மதுரை மருத்துவ கல்லூரியில் மருத்துவ படிப்பு. சண்டிகரில் மருத்துவ முதுநிலை படிப்பு. அதன்பின் சென்னையில் மருத்துவராக பணிபுரிந்துகொண்டே ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதி அதில் அகில இந்திய அளவில் 7 வது தரவரிசையில் வெற்றி பெற்று சாதனை. (பொதுவாக ஐ.ஏ.எஸ் நேர்முகத்தேர்வில் பங்கு பெறுபவர்களுக்கு சராசரியாக இருபது நிமிடங்கள் முதல் முப்பது நிமிடங்கள்தான் நேர்காணல் நடைபெறும். மிகச்சிறப்பாக பதிலளிப்பவர் எனில் இன்னும் ஒரு ஐந்து அல்லது பத்துநிமிடங்கள் கூடுதலாக நடக்கும். அதுவே பெரிய விசயம். ஏனெனில் எத்தனையோ நேர்முகத்தேர்வுகள் வெறும்
ஐந்து அல்லது பத்து நிமிடங்களிலெல்லாம் முடிந்துவிடுவதுண்டு. அனால் இவருக்கு நடந்த நேர்முகத்தேர்வு கிட்டதட்ட ஒருமணிநேரம். அந்த அளவுக்கு வெரி இன்ட்ரஸ்டிங் பர்சனாலிட்டி. நேர்முகத்தேர்வில் அவருக்கு வழங்கப்பட்ட மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா ? 220 மதிப்பெண்கள். ஐ.ஏ.எஸ் நேர்முகத்தேர்வில் 175 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்தால் அது பெரிய விசயம் என்பது குறிப்பிடத்தக்கது.)

உத்தரகாண்ட் மாநில முசோரியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி பயிற்சிமையத்தில் சிறந்த பயிற்சி அதிகாரியாக தேர்ச்சி பெற்று சாதனை. (1978 முதல் 2017 வரையிலான நாற்பதாண்டு கால வரலாற்றில் தமிழ்நாட்டை சேர்ந்த திரு .பாலாஜி மற்றும் திரு.பிரபு சங்கர் ஆகிய இருவர் மட்டுமே சிறந்த பயிற்சி அதிகாரியாக தேர்ச்சி பெற்றவர்கள் என்பது குறிபிடத்தக்கது).

சார் ஆட்சியராக செஞ்சியில் பொறுப்பேற்றவுடன் அப்துல் கலாம் அவர்களின் கனவுத்திட்டமான PURA திட்டத்திற்கு உயிர்கொடுக்கும் ஒரு முன்னெடுப்பாக இருளர் பழங்குடியினருக்காக அமைக்கப்பட்ட நிலையான நீடித்த வளர்ச்சிக்கான நவீன கட்டமைப்புகளுடன் கூடிய ஸ்மார்ட் காலனியை (First of its kind in India) உருவாக்கியதில் முக்கிய பங்காற்றியவர். அதே செஞ்சியில் கோவிலில் நுழைவதற்கு தலித்துகளுக்கு விதிக்கப்பட்டிருந்த நூறாண்டு தடையை உடைப்பதில் தீவிர கவனம் செலுத்தி இரு தரப்பினர்களுக்கிடையே ஜாதிக்கலவரம் எதுவும் நிகழ்ந்துவிடாமல் சுமூகமான முறையில் அனைவரும் கோவிலுக்குள் சென்று வழிபடும் வகையில் செயல்பட்டதால் ‘புதிய வைக்கம் வீரர்’ என்று அந்த பகுதி மக்களால் அழைக்கப்பட்ட பெருமைக்குரியவர்.

கடந்த நூற்றாண்டுகளில் சென்னை சந்தித்திராத கடுமையான தண்ணீர் பஞ்சத்தை 2018-19 இல் சந்தித்தபோது (தென்னாப்பிரிக்காவின் கேப்டவுனுக்கு இணையான பஞ்சம் என்றும் ‘இந்தியாவின் கேப்டவுன்’ சென்னை என்றும் பத்திரிக்கைகளால் வர்ணிக்கப்பட்டது.) சென்னை மெட்ரோ வாட்டர் செயல் இயக்குநராக பொறுப்பேற்றவுடன் பம்பரமாக சுழன்று அனைத்து தரப்பினர் பாராட்டையும் பெற்றவர்.

தற்போது கரூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து மக்களுக்காக சேவை செய்து மக்களின் அதிகாரியாக அனைவரின் மனதிலும் என்றென்றும் ஆட்சி செய்ய வாழ்த்துக்கள் .

சத்யா
இயக்குநர்,
சத்யா ஐ .ஏ .எஸ் அகாடமி
சென்னை மற்றும் ஈரோடு.
16 06.2021

ஊரடங்கில் முதியோர்களுக்கு மளிகை பொருட்கள் கொடுத்து உதவிய கல்லூரி உதவி பேராசிரியை…

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா வில் ராஜபுரம் ரோட்டில் அமைந்துள்ள ஹாப்பி ஹோம் அறக்கட்டளையில் இருக்கும் முதியோர்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான உணவு சமைக்க மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவற்றை செல்வி வளர்மதி வழங்கினார். இவர் கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள குமாரசாமி பொறியியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியைராக பணிபுரிகிறார்.

நன்கொடை வழங்கிய வளர்மதி அவர்களுக்கும் மற்றும் இதனை ஏற்பாடு செய்த பாலா டிரஸ்ட்டுக்கும், ஹாப்பி ஹோம் மேனேஜ்மென்ட் டிரஸ்டி அருள் ராணி நன்றி தெரிவித்தார்.

தமிழன் வடிவேலுவின் உழைப்பாளர் தின வாழ்த்துகள்.

தமிழன் வடிவேலுவின் உழைப்பாளர் தின வாழ்த்துகள்.

உலகத்தில் உள்ள அனைத்து தொழிலாளர்கள் அனைவருக்கும் (கல் உடைப்பவர் முதல் கணினி தட்டுபவர் வரை) ஊடக உரிமைக் குரல் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் உழைப்பாளர்கள் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

உழைக்கும் மக்களின் சிறப்பினை உலகிற்குப் பறைசாற்றும் தினமான இந்த “மே தின” நன்னாளில், நாட்டின் வளர்ச்சிக்காவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் தங்கள் உதிரத்தை வியர்வையாக சிந்தி உழைத்திடும் உலகெங்கிலும் வாழும் உழைப்பாளிகளான தொழிலாளிகள் அனைவருக்கும் எனது சார்பிலும் ஊடக உரிமைக் குரல் சங்கத்தின் சார்பிலும் உள்ளம் கனிந்த “மே தின” நல்வாழ்த்துகளை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

தற்பொழுது உலகமே சந்தித்து வருகிற கொடிய கொரோனா பேரிடர் நோயிலிருந்து மக்களை காக்கும் மகத்தான பணியில் ஓய்வின்றி, உணவின்றி, உறக்கமின்றி தங்களை அர்ப்பணித்து தியாக மனப்பான்மையோடு களப்பணியில் முன் வரிசையில் நின்று, தங்கள் உயிரை துச்சமென மதித்து களமாடும், மருத்துவர்கள், செவிலியர்கள்,துப்புரவு பணியாளர்கள், ஓட்டுநர்கள்,காவல்துறையினர்கள், அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் வழங்கி வரும் செய்தியாளர்கள் என அத்துணை உழைப்பாளிகளுக்கும் மீண்டும் ஒருமுறை “மே தின’ வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெருமை கொள்கிறேன்.

வி.எம்.தமிழன் வடிவேல்.
ஆசிரியர்.
சிறுத்தை செய்தி (மாதமிருமுறை)
பொதுச் செயலாளர்.
ஊடக உரிமைக் குரல்.
பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கம்.
9445272820,7904654776.

இளைஞர்களுடன் மய்யம் கொண்டுள்ளது வருகிற சட்டமன்ற தேர்தல் 2021….

மக்கள் நீதி மய்யத்துடன் தமிழ்நாடு இளைஞர் கட்சி இணைந்து வருகின்ற சட்டமன்ற தேர்தல் 2021 சந்திக்க இருக்கிறது என்று மக்கள் நீதி மய்யம் சார்பாகவும், தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பாகவும் இன்று சென்னையில் பத்திரிகையாளர்களுடன் சந்திப்பு நடைபெற்றது.

இந்தக் கூட்டணி, இக்கட்டான காலகட்டத்தில் மூன்றாம் அணியாக மக்களின் மனதில் பார்க்க படுமா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.


இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES