Friday , March 20 2026
Breaking News
Home / செய்திகள் / தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே தனியார் விடுதியில் பிணமாக எலக்டீரிசன்
NKBB Technologies

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே தனியார் விடுதியில் பிணமாக எலக்டீரிசன்

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே தனியார் விடுதியில் எலக்டீரிசன்னாக பணி செய்து வந்த லெனின் இட் பிராங்க்ளின் என்பவர் இன்று (28.8.21) காலை 10 மணி வரை விடுதியின் அறைக் கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்த விடுதி மேலாளர் மருத்துவ கல்லூரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார், இத்தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த ஆய்வாளர் பிராங்க்ளின் உட்ரோ வில்சன் அவர்களின் தலைமையிலான காவலர்கள் அறைக் கதவை திறந்து பார்த்த போது அறையில் தங்கி இருந்த லெனின் இட் பிராங்க்ளின் சுவற்றில் சாய்ந்த நிலையில் பிணமாக கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த காவலர்கள் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது கொலையா?, தற்கொலையா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • “காவல்டுடே” மாவட்ட தலைமை நிருபர் A.ராஜேஷ்
Bala Trust

About Admin

Check Also

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை பிப் 06 மதுரை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES