மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டம், சாத்தங்குடி கிராமத்தில் அமைந்துள்ள, சக்கரைத்தேவன் வகையறாவிற்கு பாத்தியப்பட்ட பழமை வாய்ந்த, அருள்மிகு ஸ்ரீபூரண, ஸ்ரீ புஷ்கலா, சமேத அய்யனார் திருக்கோயிலில், 300 வருடங்களுக்கு பிறகு பிரமலைக்கள்ளர் சமுதாயம் சின்ன பங்காளி பெட்டி எடுப்பு திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
சுவாமியின் நகைகள் மற்றும் பொருட்கள் அடங்கிய பெட்டி பூக்களால் அலங்கரிக்கப்பட்டு மாலை மரியாதையுடன் சிறப்பு ஆராதனை செய்யப்பட்டு , கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக எடுத்து வரப்பட்டது.
300 வருடங்களுக்கு பிறகு திருவிழா நடைபெறுவதால் கிராமத்தினர் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கிராமமே திருவிழா கோலம் பூண்டுள்ளது.
திருவிழா ஏற்பாடுகளை சக்கரை தேவன் வகையறாவை சேர்ந்த பங்காளிகள் சிறப்பாக செய்திருந்தனர்.
பி.கே மூக்கையா தேவரின் நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரை அரசரடி பகுதியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு, முக்குலத்தோர் எழுச்சி கழகத்தின் பொதுச்செயலாளர் வி.ஆர்.கே.கவிக்குமார் அவர்களின் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வின் போது நேதாஜி சுபாஷ் சேனை மாநில செயலாளர் சுமன் தேவர் உடன் இருந்தார்.
இதில் மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் துரை கோபிநாதன், மாவட்ட இளைஞரணி செயலாளர் பசும்பொன் ராஜா உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பீ.கே.மூக்கையாத்தேவரின் நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை அரசரடி பகுதியில் உள்ள அவரின் திருவுருவச் சிலைக்கு அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில பொதுச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பி.வி.கதிரவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் முத்துராமலிங்கம், திருப்பதி, பசும்பொன், சிவபாண்டியன், வடிவேல், ஆசைராஜ், ஆதவன், தங்கப்பாண்டி, சண்முகம் உள்பட நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பி.கே மூக்கையா தேவரின் நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரை அரசரடி பகுதியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு, ஏராளமான அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அந்த வகையில் நேதாஜி சுபாஷ் சேனை நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் மகாராஜன் அவர்களின் ஆணைக்கிணங்க, மாநில செயலாளர் சுமன்தேவர் அவர்கள் ஏராளமான நிர்வாகிகளுடன் வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள், ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மதுரை மாவட்டம் கீழபனங்காடியில் எஸ்.கே.எம் உலக சிலம்பம் விலையாட்டு சங்கம் சார்பாக நடந்த மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் ஸ்ரீ.சித்தந்த இராவணன் சிலம்பம் &நாட்டுப்புற கலை அகாடமி மாணவர்கள். மாணவிகள். 6 முதல் பரிசு.6 இரண்டாம் பரிசு வென்றனர்.
இந்நிகழ்வில் சிலம்பம் ஆசான்.ச.விக்னேஷ்வரன், ஆனையூர் அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் ப.ஹரிபாபு, சிறப்பு விருந்தினர் நாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுரை மாவட்டம் கீழபனங்காடியில் எஸ்.கே.எம் உலக சிலம்பம் விலையாட்டு சங்கம் சார்பாக நடந்த மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் ஸ்ரீ.சித்தந்த இராவணன் சிலம்பம் &நாட்டுப்புற கலை அகாடமி மாணவர்கள். மாணவிகள். 6 முதல் பரிசு.6 இரண்டாம் பரிசு வென்றனர்.
இந்நிகழ்வில் சிலம்பம் ஆசான்.ச.விக்னேஷ்வரன் ஆனையூர் அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் ப.ஹரிபாபு அவர்கள் சிறப்பு விருந்தினர். திரு.நாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்
பாரதிய ஜனதா கட்சி அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவு மாநில மாவட்ட உட்பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஆலாத்தூர் கணேஷ் மஹாலில் நடைபெற்றது….
இதில் மாநிலத் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
கேசவ விநாயகம் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் பொன் பாலகணபதி மாநில பொதுச் செயலாளர் கரு நாகராஜன் மாநில துணைத்தலைவர் பாண்டித்துரை முன்னாள் மாநிலத் தலைவர் அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவு. மதுரை புறநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் மற்றும் பிரிவின் மாநில நிர்வாகிகள் செந்தில்குமார் ராஜேஷ் கண்ணன் ரௌத்திரம் ஜெகதீஸ் பிரிவின் மாவட்ட தலைவர் அருண்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிக வாக்கு பாரதிய ஜனதா கட்சிக்கு பெற்றுத்தரும் என்று உறுதிமொழி அளித்து நிகழ்ச்சியை முடித்தனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பி.கே.மூக்கையாதேவர் நினைவு நாளையொட்டி அதிமுக சார்பாக மாலை அணிவித்து மரியாதை.! ஆர்.பி.உதயகுமார் எம்எல்ஏ அழைப்பு விடுத்து சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர்,மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.பி. உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
அரசியலும், பொதுசேவை புரிவதிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவரும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் மக்களுக்கு பணிஆற்றியவரும், தேவர் தந்த தேவர், கல்வித்தந்தை ,பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக உழைத்திட்ட திரு.பி.கே.மூக்கையா தேவர் அவர்களின் 43 வது நினைவு நாளையொட்டி கழக இடைக்கால பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க உசிலம்பட்டியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரியில் அமைந்திருக்கும் அவரது நினைவிடத்தில் நாளை காலை 10.45 மணிக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செய்யப்படுகிறது
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர், கழகத் துணை பொதுச் செயலாளர் நத்தம் இரா. விசுவநாதன், முன்னாள் அமைச்சர் கழகப் பொருளாளர் திண்டுக்கல் சி.சீனிவாசன், முன்னாள் அமைச்சர் கழக அமைப்புச் செயலாளர் செல்லூர் கே ராஜு, கழக அமைப்புச் செயலாளர், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா, கழக அமைப்புச் செயலாளர் எஸ்.டி.கே.ஜக்கையன், மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பி.பெரியபுள்ளான் என்ற செல்வம் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கா.தவசி பா.நீதிபதி ஆகியோர்கள் பங்கேற்கின்றனர்
பி.கே.மூக்கையா தேவருக்கு புகழ் அஞ்சலி செலுத்து வண்ணம் முன்னாள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர பேரூர், கிளைக் கழகநிர்வாகிகள், வார்டு கழக நிர்வாகிகள், மாவட்ட அணி நிர்வாகிகள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க நிர்வாகிகள், கழக செயல் வீரர்கள் மற்றும் செயல் வீராங்கனைகள் அனைவரும் அணி திரண்டு வருமாறு மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்
மலேசியாவைச் சேர்ந்த டத்தோ ஸ்ரீ நடராஜனுக்கு ‘சோழன் உலக சாதனைக்கான’ அங்கீகாரம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்
ஸ்டாண்டிங் ரைடிங் மோட்டார் சைக்கிள் ஹீரோ’என்று அழைக்கப்படும் மலேசியாவைச் சேர்ந்த டத்தோ ஸ்ரீ நடராஜன் பெரியசாமிக்கு இன்று சென்னையில் ‘சோழன் உலக சாதனைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதற்கான சான்றிதழை சோழன் உலக சாதனை புத்தக நிறுவனர் டாக்டர் நீலமேகம் நிமலன் மற்றும் பன்னாட்டு MMA மற்றும் கிக்-பாக்சிங் சண்டையாளருமான பாலீ சதீஸ்வர் போன்றோர் தமிழ் நாடு சென்னையில் உள்ள தங்கும் விடுதியில் வைத்து வழங்கினார்கள்.
டத்தோஸ்ரீ நடராஜன் மலேசியா, தாய்லாந்து மற்றும் இலங்கை வரை நீண்ட தூரம் பயணம் செய்த முதல் மனிதன் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், தமது மகன் விபத்தில் இறந்ததை அடுத்து தமது மகனின் கண்கள், சிறுநீரகம் மற்றும் இருதயம் ஆகியவற்றைத் தேவைப்பட்டோருக்கு தானம் செய்த பெருமை டத்தோ ஸ்ரீ நடராஜனைச் சேரும்.
தமிழ் நாட்டில் வைத்து உலக சாதனைக்கான அங்கீகாரம் பெற்ற இவரை சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் மலேசிய கிளையின் பொதுத் தலைவர், தலைவர், தலைமைச் செயற்குழுவைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் மாநிலத் தலைவர்கள் என பலரும் வாழ்த்தி தமது பாராட்டைத் தெரிவித்தார்கள்.
மலேசியாவைச் சேர்ந்த டத்தோ ஸ்ரீ நடராஜனுக்கு ‘சோழன் உலக சாதனைக்கான’ அங்கீகாரம்
ஸ்டாண்டிங் ரைடிங் மோட்டார் சைக்கிள் ஹீரோ’என்று அழைக்கப்படும் மலேசியாவைச் சேர்ந்த டத்தோ ஸ்ரீ நடராஜன் பெரியசாமிக்கு இன்று சென்னையில் ‘சோழன் உலக சாதனைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதற்கான சான்றிதழை சோழன் உலக சாதனை புத்தக நிறுவனர் டாக்டர் நீலமேகம் நிமலன் மற்றும் பன்னாட்டு MMA மற்றும் கிக்-பாக்சிங் சண்டையாளருமான பாலீ சதீஸ்வர் போன்றோர் தமிழ் நாடு சென்னையில் உள்ள தங்கும் விடுதியில் வைத்து வழங்கினார்கள்.
டத்தோஸ்ரீ நடராஜன் மலேசியா, தாய்லாந்து மற்றும் இலங்கை வரை நீண்ட தூரம் பயணம் செய்த முதல் மனிதன் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், தமது மகன் விபத்தில் இறந்ததை அடுத்து தமது மகனின் கண்கள், சிறுநீரகம் மற்றும் இருதயம் ஆகியவற்றைத் தேவைப்பட்டோருக்கு தானம் செய்த பெருமை டத்தோ ஸ்ரீ நடராஜனைச் சேரும்.
தமிழ் நாட்டில் வைத்து உலக சாதனைக்கான அங்கீகாரம் பெற்ற இவரை சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் மலேசிய கிளையின் பொதுத் தலைவர், தலைவர் தலைமைச் செயற்குழுவைச் சேர்ந்த தலைவர் மற்றும் மாநிலத் தலைவர்கள் என பலரும் வாழ்த்தி தமது பாராட்டைத் தெரிவித்தார்கள்.