தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருவுருவச் சிலைக்கு பெருந்தலைவர், நடிகர் திலகம் அறக்கட்டளை சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் மணிமாறன்,கே.ஆர் சுரேஷ்பாபு,பூக்கடை கண்ணன், வீரவாஞ்சிநாதன், பஞ்சாயத்து ராஜ் மாவட்ட தலைவர் முத்துக்குமார், மாவட்ட பொதுச் செயலாளர் செல்வராஜ் மற்றும் மூவேந்தரன்,போஸ் பவர் சிங், பாலமுருகன்,குமரகுரு, மீனாட்சி சுந்தரம், சக்திவேல்,குரு பிரசாத் லெனின், மகளிரணி பஞ்சவர்ணம் உள்பட காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்
மதுரையில் மக்கள் நீதி மய்யம் தெற்கு தொகுதி நகர செயலாளர் எல்லன் பாண்டி பிறந்த நாள் விழா நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக மக்கள் நீதி மய்யம் நற்பணி இயக்க நிர்வாகி சமூக சேவகர் அண்ணாநகர் முத்துராமன் கலந்து கொண்டு சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.
மதுரை திருப்பரங்குன்றத்தில் விஜய் மக்கள் இயக்கம் வடக்கு மாவட்ட தலைவர் விஜய் அன்பன் கல்லணை அவர்களின் ஆலோசனைப்படி, மாணவரணி தலைவர் UPM.ஆனந்த் தலைமையில், தெற்கு நகர மாணவரணி தலைமை நகர தலைவர் விஜய் செல்வா மற்றும் நகர துணைத் தலைவர் முத்துப்பாண்டி ஆகியோர் ஏற்பாட்டில் 15-வது வாரம் குழந்தைகளுக்கு விலையில்லா ரொட்டி,பால்,பழம், முட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் Mr.பிளாக் விஜய் பாரதி,கனகவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.
மதுரையில் வேங்கடாச்சலம் அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஆதரவற்ற முதியோர்களுக்கு புத்தாடை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
மதுரை,அக்.29-
மதுரை பெத்தானியாபுரத்தில் உள்ள ஜெகம் டிரஸ்ட் அலுவலகத்தில் ஏழை எளிய முதியோர்களுக்கு தினமும் அன்னதானம் வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் இன்று மெஜூரா கோட்ஸில் பணிபுரிந்த வெங்கடாசலம் அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது துணைவியார் வசந்தா மற்றும் ஆவரது மகன் இந்து முன்னணி மாவட்ட துணைத்தலைவர் பாண்டியராஜன், திருமதி செண்பகாதேவி பாண்டியராஜன், பிரிமால்,பிரிஜித் ஆகியோர் 50க்கும் மேற்பட்ட ஆதரவற்ற முதியோர்களுக்கு புத்தாடை மற்றும் அன்னதானத்தை வழங்கினார்கள்.
இந்நிகழ்விற்கு மேனேஜிங் டிரஸ்டி சோலை எஸ்.பரமன் தலைமை வகித்தார். டிரஸ்ட் பொருளாளர் திருஞானசம்பந்தம் நன்றி கூறினார்.
இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்
மதுரை மீனாம்பாள்புரத்தில் உள்ள ராஜாஜி நடுநிலைப்பள்ளியில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இலவச பொது மருத்துவ முகாமை முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்விற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் மோகன்குமார் மற்றும் மாவட்ட துணைச்செயலாளர் மேத்தா (எ) ரபீக் ராஜா ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்டச் செயலாளர் ஜலால் முஹம்மது வரவேற்று பேசினார்
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில துணைப் பொதுச் செயலாளர் சண்முகராஜா, 24 வது வார்டு அதிமுக மாமன்ற உறுப்பினர் மாணிக்கம்,விசிக மதுரை மண்டல செயலாளர் மாலின், தமஜக மாநிலத் துணைச் செயலாளர் சையது யூசுப்,எஸ்டிபிஐ வடக்கு மாவட்ட தலைவர் பிலால்தீன்,
நீர் நிலைகள் பாதுகாப்பு இயக்கத்தின் நிறுவனர் அபூபக்கர், தமிழ் தேச குடியரசு இயக்கம் மாநில கொள்கை பரப்பு செயலாளர் மெய்யப்பன்,இராஜாஜி நடுநிலைப்பள்ளி மேலாளர் வினோத், தமஜக முபாரக் அலி, சாதிக் பாஷா மற்றும் கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இம்முகாமில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் 222-வது குருபூஜையை முன்னிட்டு மதுரை தெப்பக்குளத்தில் உள்ள அவர்களது திருவுருவச் சிலைக்கு, அகில பாரத இந்து மகா சபா அர்ச்சகர் பேரவை மதுரை மாவட்ட தலைவர் தெய்வேந்திரன் மற்றும் மாநில இளைஞரணி செயலாளர் எம்.டி.ராஜா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
உடன் அர்ச்சகர் பிரிவு மாவட்ட செயலாளர் ராமர் மற்றும் முத்துக்குமார், சங்குமணி, முத்தையா, நீதிராஜன், அஜீத்குமார் உள்ளனர்.
சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவ.9 முதல் 11ம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.தீபாவளியை ஒட்டி நவ.9 முதல் 11ம் தேதி வரை சென்னையில் இருந்து இயக்கக் கூடிய 2,100 பேருந்துகளுடன் 3 நாட்களுக்கு மொத்தம் 10,975 பேருந்துகளும் பிற ஊர்களில் இருந்து 3 நாட்களுக்கு 5,920 என மொத்தமாக 16,895 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
The post தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவ.9 முதல் 11ம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்: அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு appeared first on Dinakaran
‘நீட் விலக்கு மசோதாவிற்கு தாமதமின்றி ஒப்புதல் அளிக்க வேண்டும்’ என குடியரசுத் தலைவரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு மசோதாவிற்கு, மேலும் தாமதமின்றி உடனடியாக ஒப்புதல் அளித்து, தமிழ்நாட்டு மாணவர்களின் நலன் காத்திட வேண்டும்’ – சென்னை விமான நிலையத்தில் மாண்புமிகு இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது..
‘ தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) அடிப்படையிலான மாணவர் சேர்க்கை, ஏழை மற்றும் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு எதிரானது என்பதைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் ப்ளஸ் 2 மதிப்பெண்கள் மூலம் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இந்தச் செயல்முறை கடந்த காலங்களில் மாநிலத்தில் நல்ல பலன்களை அளித்ததது. மத்திய அரசு நீட் தேர்வை அறிமுகப்படுத்தியதால், அதைத் தொடர்ந்து மத்திய அரசின் சட்டங்களில் செய்யப்பட்ட பல்வேறு மாற்றங்கள் காரணமாகவும், ப்ளஸ் 2 மதிப்பெண்கள் மூலம் நடைபெற்ற சேர்க்கை முறை நிறுத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது.
நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்புகளை ஆராய்ந்து, மாற்றுவழிகளை செயல்படுத்துவதற்குத் தேவையான பரிந்துரைகளை அரசுக்கு வழங்கிட நியமிக்கப்பட்ட நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமையிலான குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையிலும், பல்வேறு விவாதங்கள் நடத்தப்பட்டும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 13-9-2021 அன்று ‘தமிழ்நாடு இளநிலை மருத்துவப் பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை சட்டமுன்வடிவு, 2021’ (சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 43/2021) நிறைவேற்றப்பட்டது.
மேலும் இந்த தீர்மானம் தமிழ்நாடு ஆளுநருக்கு 18-9-2021 அன்று அனுப்பப்பட்டது. ஆளுநர் ஐந்து மாத காலத்திற்குப் பிறகு, மேற்படி சட்டமுன்வடிவினை மறுபரிசீலனை செய்யுமாறு தமிழ்நாடு அரசுக்குத் திருப்பியனுப்பிய நிலையில், 8-2-2022 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் மீண்டும் இந்தச் சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறவேண்டிஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதன் பின்னர், மேற்படி சட்டமுன்வடிவு தமிழ்நாடு ஆளுநர் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டு, ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்தச் சட்டமுன்வடிவு தொடர்பாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், மத்திய உயர்கல்வித் துறை, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் ஆயுஷ் அமைச்சகம் கோரிய அனைத்து விளக்கங்களும், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு உரிய காலத்திற்குள் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் சார்பில் போதிய விளக்கங்கள் அளிக்கப்பட்ட பிறகும் இந்த விஷயத்தில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால், இந்தியக் குடியரசுத் தலைவருக்கு, 14-8-2023 அன்று தான் கடிதம் எழுதியிருந்ததேன். அதில், நீட் தேர்வினால் பின்தங்கிய வகுப்பைச் சார்ந்த மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் மாணவர்கள் தற்கொலைகள் குறித்தெல்லாம் குறிப்பிட்டு, இனியும் தாமதிக்காமல் மேற்படி சட்டமுன்வடிவிற்கு ஒப்புதல் அளிக்க வேண்டுமென தான் கோரியிருந்தேன்.
மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் சமீபத்திய கேள்விகளுக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில் பதிலளிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இதுவரை இந்த சட்டமுன்வடிவிற்கு ஒப்புதல் வழங்கப்படாத நிலை உள்ளது. இந்தச் சூழ்நிலையில், நீட் விலக்கு தொடர்பான சட்டமுன்வடிவிற்கு ஒப்புதல் அளிப்பதில் ஏற்பட்டுள்ள அதீத காலதாமதம், அதிக கட்டணங்களைச் செலுத்தி பயிற்சி பெற முடியாத, பல தகுதிவாய்ந்த மாணவர்களின் மருத்துவ சேர்க்கையைப் பறித்துள்ளது.
தமிழ்நாட்டில் பரந்த சட்டமன்ற, அரசியல் மற்றும் சமூக ஒருமித்த கருத்தின் நோக்கத்தைச் செயல்படுத்திட இயலாமல் முடக்கியுள்ளது. இந்த உணர்வுப்பூர்வமான பிரச்சினையில் உடனடியாகத் தலையிட்டு, நீட் விலக்கு தொடர்பான மசோதாவுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும்’ என இந்தியக் குடியரசுத் தலைவர் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
புதுச்சேரி: தமிழக ஆளுநர் மாளிகை முன்பு குண்டு வெடித்த சம்பவத்தில் ஆழமாக விசாரித்து பார்த்தால் இதன் பின்னணியில் முழுக்க முழுக்க பாஜகவின் திட்டமாக இருக்கக்கூடிய அளவிற்கு இரண்டு மூன்று ஆதாரங்கள் சிக்கி இருக்கின்றன என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
குலக்கல்வி திட்டத்தை மீண்டும் அமல்படுத்தும் மத்திய பாஜக அரசை கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் புதுச்சேரி முத்தியால்பேட்டையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக மாநில அமைப்பாளர் சிவா உள்பட காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர். இந்தப் பொதுக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கி.வீரமணி, “தமிழ்நாடு எப்போதுமே ஓர் அமைதிப் பூங்கா. அதில் எந்த சந்தேகமும் இல்லை. தமிழக ஆளுநர் மாளிகை முன்பு குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் சம்பந்தப்பட்ட நபரை அழைத்துக்கொண்டு வந்தவர் பாஜகவைச் சேர்ந்த வழக்கறிஞர் தான். தமிழக ஆளுநர் மாளிகை முன்பு நடைபெற்ற தாக்குதலில் பாஜகவுக்கும் தொடர்பு உள்ளது. பாஜகவினர் இதே போன்று பல நேரங்களில் செய்து தங்களுக்கு பெருமை உண்டாக்க வேண்டும் என்று நினைக்கின்றனர்.
தமிழக ஆளுநர் மாளிகை முன்பு குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் ஆழமாக விசாரித்து பார்த்தால் இதன் பின்னணியில் முழுக்க முழுக்க பாஜகவின் திட்டமாக இருக்கக்கூடிய அளவிற்கு இரண்டு மூன்று ஆதாரங்கள் தெளிவாக சமூக வலைதளங்களில் வந்துள்ளன. எனவே அந்த கோணங்களில் மட்டுமே தீவிரமாக விசாரிக்க வேண்டும்.
ஆளுநர் பல இடத்திற்குச் சென்றுள்ளார். அப்போது கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்து கைது செய்யப்பட்டுள்ளனரே தவிர இது போன்ற சம்பவங்கள் ஏதும் நடைபெற்றதில்லை. பாஜகவினர் அரசியல் திருப்பங்களை உண்டாக்கவும், தமிழக அரசு மீது பழி போடலாம் என்றும் நினைக்கின்றனர். அது ஒருபோதும் நடக்காது.” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய கி.வீரமணி, “பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை தருகிறோம் என்று கூறிவிட்டு அந்த இட ஒதுக்கீடு எப்போது வரும் என்று சொல்ல முடியாது என்ற நிலை இருக்கிறது. இதைவிட பெண்களை ஏமாற்றும் மோசடி குற்றம் வேறு ஏதும் இல்லை. பெண் இனம் வஞ்சிக்கப்பட்டுள்ளது. ஏமாற்றப்பட்டுள்ளது. அதற்கு ஒரே பதில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றதும் இவற்றை நிறைவேற்றுவோம் என சோனியா காந்தியே கூறியுள்ளார்.
பாஜக அரசு விஸ்வகர்மா திட்டத்தின் மூலம் குலத் தொழிலை ஊக்குவிக்க முயற்சித்து வருகிறது. சமூக நீதிக்கு எதிரான திட்டங்களை நாள்தோறும் அறிவிக்கும் பாஜக அரசுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டும். 5 மாநிலங்களில் நடைபெறும் தேர்தலில் பாஜகவின் தோல்வி உறுதியாகி விட்டது” எனத் தெரிவித்தார்.
சென்னை : தமிழ்நாட்டிற்கு 100 நாள் வேலை திட்டத்தில் வழங்க வேண்டிய ரூ.2697 கோடி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கிய வேண்டும் என்று ஒன்றிய தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கிரிராஜ் சிங்கிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அதில்,”மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், கிராமப்புறங்களில் உள்ள முதியோர்கள், ஆதரவற்ற பெண்கள், குடும்பத் தலைவிகள், மாற்றுத் திறனாளிகள் போன்றோருக்கு முக்கியமானதொரு வாழ்வாதாரமாகவும், குறிப்பாக விவசாயம் நலிவடைந்த பருவத்தில், கிராமப்புறங்களில் உள்ள பலருக்கு கூடுதல் வாழ்வாதார வாய்ப்பாகவும் கருதப்படுகிறது என்று தெரிவித்துள்ள முதலமைச்சர் அவர்கள், இந்தத் திட்டத்தில் பெரும்பான்மையான தொழிலாளர்கள் பெண்களாக இருப்பதாலும், அவர்களின் வங்கிக் கணக்கில் ஊதியம் வரவு வைக்கப்படுவதாலும், அவர்களின் நிதிநிலை மற்றும் வாழ்வாதாரம் பெரிதும் மேம்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ்நாட்டில், 2023-2024 ஆம் ஆண்டில் 40 கோடி மனித நாட்கள் தேவைப்படும் நிலையில், இதுவரை, 28 கோடி மனித நாட்களுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், 23-10-2023 வரை, 66.26 இலட்சம் குடும்பங்களைச் சேர்ந்த 76.06 இலட்சம் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கியதன் மூலம், தமிழ்நாடு 31.15 கோடி மனித நாட்களை எட்டியுள்ளதாகவும் தனது கடிதத்தில் முதலமைச்சர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். 2023-2024 நிதியாண்டில், 19-7-2023 வரை, தொழிலாளர்களுக்கு திறன்சாரா ஊதியத்திற்காக ரூ.4,903.25 கோடியை ஒன்றிய அரசு விடுவித்துள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து 25-9-2023 அன்று 1,755.43 கோடி ரூபாய், திறன்சாரா ஊதியம் வழங்குவதற்காக ஒன்றிய அரசால் ஒப்பளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள முதலமைச்சர் அவர்கள், எனினும் அனுமதிக்கப்பட்ட தொகையில் ரூ.418.23 கோடி மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள ரூ.1,337.20 கோடி, தொழிலாளர்களின் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை என்று தெரிய வந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதோடு, அதற்குப்பிறகான வாரங்களுக்கான ஊதியத்திற்கான ரூ.1,359.57 கோடி நிலுவைத் தொகையும் இன்னும் வழங்கப்படவில்லை என்றும், 20-10-2023 நிலவரப்படி, தமிழ்நாட்டில் தொழிலாளர்களின் ஊதிய நிலுவை ரூ.2,696.77 கோடி என்றும் முதலமைச்சர் அவர்கள் தனது கடிதத்தில் கோடிட்டுக் காட்டியுள்ளார். “கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் ஒரு பகுதியாக, கடந்த 17-10-2023 அன்று, செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு தான் ஆய்வுப் பயணம் மேற்கொண்டபோது, வரவிருக்கும் பண்டிகைக் காலத்தைக் கருத்தில் கொண்டு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ், தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியத்தை உடனடியாக வழங்கிட வேண்டுமென்று பொது மக்களும், மக்கள் பிரதிநிதிகளும் தம்மிடம் கோரிக்கை விடுத்ததாகவும், இதேபோன்ற கோரிக்கை திருவண்ணாமலை மாவட்ட ஆய்வுப் பயணத்தின் போதும் தமக்கு வந்ததாகவும் தனது கடிதத்தில் முதலமைச்சர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, மேற்குறிப்பிட்ட காரணங்களை கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ், தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.2,696.77 கோடி மொத்த ஊதிய நிலுவைக்கான தொகையினை உடனடியாக விடுவிக்க வேண்டுமென்று ஒன்றிய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளதோடு, திறன்சாரா தொழிலாளர்களுக்குத் தொடர்ந்து கூடுதல் நிதி விடுவிக்கப்பட வேண்டுமென்றும் தனது கடிதத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.