Tuesday , January 27 2026
Breaking News
Home / செய்திகள் (page 85)

செய்திகள்

All News

காரைக்குடி அப்போலோ ரீச் மருத்துவமனையில் குழந்தைகள் வாரக் கொண்டாட்டம்

பச்சிளம் குழந்தைகளின் பராமரிப்பு தொடர்பான விழிப்புணர்வு
காரைக்குடி அப்போலோ ரீச் மருத்துவமனையில்
புதிதாய் பிறந்த குழந்தைகள் வாரக் கொண்டாட்டம்

ஒவ்வோர் ஆண்டும் நவ.15 – 21 வரையிலான ஏழு நாட்கள் புதிதாய்ப் பிறந்த குழந்தைகள் வாரமாக இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் புதிதாகப் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்வதை முக்கிய முன்னுரிமை தேவைகளில் ஒன்றாக முன்னிறுத்தவும், இதுதொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாகவும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் இந்த வாரத்தை அனுசரிக்கிறது. நடப்பாண்டில் இந்த வாரத்திற்கான கருப்பொருள் “பாதுகாப்பான, தரமான, கவனமான பராமரிப்பு – குழந்தைகளின் பிறப்புரிமை” என்பதாகும்

இந்த நிலையில், பச்சிளம் குழந்தைகளின் பராமரிப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக காரைக்குடி அப்போலோ ரீச் மருத்துவமனை புதிதாய்ப் பிறந்த குழந்தைகள் வாரத்தை கொண்டாடுகிறது. இந்த மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு நலம் பெற்ற குழந்தைகள் இது தொடர்பான விழாவில் பங்கேற்றனர்.

அப்போலோ ரீச் மருத்துவமனையில், அண்மையில் பெரிய கர்ப்பப் பை கட்டி இருந்த பெண்ணுக்கு அறுவைசிகிச்சை செய்து ஒரு நாள் ஆன குழந்தையை வெளியே எடுத்தது சாதனையாக அமைந்தது. மேலும் மெகோனியம் ஆஸ்பிரேசன் குறைபாட்டுடன் பிறந்த குழந்தைக்கு சுவாச சிகிச்சை மற்றும் மூளைப் பாதுகாப்புக்கு குளிர்விப்பு சிகிச்சை தேவைப்பட்ட நிலையில் சிறப்பான மருத்துவ பராமரிப்பை வழங்கி அப்போலோ ரீச் அந்தக் குழந்தையை காப்பாற்றியது. நரம்பு குறைபாடுகளுடன் பிறந்த குழந்தைகளும் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு நலம் பெற்றுள்ளனர்.

குழந்தையின் முதல் 28 நாட்களில் சிகிச்சை அளிப்பது சவாலான ஒன்று. சிகிச்சையில் மிகச் சிறிய மாற்றம் ஏற்பட்டாலும் அது மூளை மற்றும் அறிவு வளர்ச்சியைப் பாதிக்கக் கூடிய அபாயம் இருக்கிறது. அதனால் பச்சிளம் குழந்தைகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கு சரியான இடத்தை தேர்வு செய்ய வேண்டியது மிகவும் அவசியம். அப்போலோ ரீச் மருத்துவமனையில், பல்வேறு குறைபாடுகள் கொண்ட 41 பச்சிளம் குழந்தைகளுக்கு சிறப்பான, நவீன மற்றும் மேம்பட்ட சிகிச்சை அளித்து காப்பாற்றியுள்ளோம். இதில் 94 சதவீதம் குழந்தைகள் உயிர் பிழைத்து நல்ல உடல் நிலையில் உள்ளனர் என்று அப்போலோ ரீச் மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் மருத்துவ நிபுணர் டாக்டர் மணிகண்டன் தெரிவித்தார்.

இதுதொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு காரைக்குடியில் உள்ள அப்போலோ ரீச் மருத்துவமனையில், தலைமை செயல்பாட்டு அதிகாரி (சிஓஓ) நீலக்கண்ணன் தலைமையில் நடந்தது. மருத்துவமனை நிர்வாகி செல்வகுமாரி லாவண்யா, மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் கோகுலகிருஷ்ணன், மார்க்கெட்டிங் பிரிவு பொது மேலாளர் மணிகண்டன் ஆகியோர் உடனிருந்தனர்.

காரைக்குடி அப்போலோ ரீச் மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளின் பராமரிப்பு தொடர்பான விழிப்புணர்வு

டிச-6 – டாக்டர் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு மதுரை அவுட் போஸ்ட் பகுதியில் உள்ள அவரது சிலையை புதுப்பிக்கும் பணி.!

டிசம்பர் 6 சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு மதுரை அவுட் போஸ்ட் பகுதியில் உள்ள அவரது திருவுருவச் சிலையை புதுப்பிக்கும் பணியை விசிக கல்வி பொருளாதாரம் விழிப்புணர்வு இயக்கத்தின் மாநில துணைச்செயலாளர் இரா.அய்யங்காளை மேற்கொண்டார். உடன் ஓவியர் மதியழகன், பிரபாகரன் உள்ளனர்.

ஒரு கிளையில் பத்து இளைஞர்கள்” என்ற படிவத்தை மதுரை மாநகர் மாவட்ட பாஜக இளைஞரணி சார்பாக வழங்கப்பட்டது

பாஜக மதுரை மாநகர் மாவட்ட தலைவர் மகா.சுசீந்திரன் வழிகாட்டுதலின்படி, “ஒரு கிளையில் பத்து இளைஞர்கள்”
என்ற படிவத்தை மதுரை மாநகர் மாவட்ட வடக்கு, மேற்கு மற்றும் மத்திய,தெற்கு தொகுதிகளின் படிவத்தை சம்பந்தப்பட்ட நிர்வாகிகளிடம் பாஜக இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர் நவீன்அரசு வழங்கினார்.

இந்நிகழ்வில் நிர்வாகிகள் மேலமடை மணி, நாகராஜ், சேதுசரவணன், வேல்முருகன், அருண்பிரசாத், கார்த்திக்மணி,
ராம்,ஆட்டோ பிரபு வன்னி தினேஷ், அரவிந்த்,சந்துரு
மகாதேவன் அஜித்,ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

வளைகுடா வாழ் தமிழர்கள் நலச்சங்கத்தின், மாநில துணைத்தலைவராக முனைவர் பிச்சைவேல் நியமனம்.!

வளைகுடா வாழ் தமிழர்கள் நலச்சங்கத்தின், மாநில துணைத்தலைவராக மதுரையை சேர்ந்த முனைவர் பிச்சைவேல் அவர்களை, வளைகுடா வாழ் தமிழர்கள் நலச்சங்கத்தின் நிறுவனத்தலைவர் டாக்டர் நம்புதாளை பாரிஸ் நியமனம் செய்துள்ளார்.

வளைகுடா வாழ் தமிழர்கள் நலச்சங்கத்தின், தலைமை ஒருங்கிணைப்பாளராக மதுரை டாக்டர் கஜேந்திரன் நியமனம்.!

வளைகுடா வாழ் தமிழர்கள் நலச்சங்கத்தின், சிங்கப்பூர் மற்றும் மலேசியா நாடுகளின் தலைமை ஒருங்கிணைப்பாளராக மதுரையை சேர்ந்த டாக்டர் கஜேந்திரன் அவர்களை, வளைகுடா வாழ் தமிழர்கள் நலச்சங்கத்தின் நிறுவனத்தலைவர் நம்புதாளை டாக்டர் பாரிஸ் நியமனம் செய்துள்ளார்.

மதுரை மாட்டுத்தாவணியில் ரைட் பைக்ஸ் இருசக்கர வாகன விற்பனை நிறுவனம் திறப்பு விழா.!

மதுரை மாட்டுத்தாவணி பழமண்டி வணிக வளாகத்தில் ரைட் பைக்ஸ் 7- வது இருசக்கர வாகன விற்பனை நிறுவனத்தை, ஜெயபாலன், நிர்மலா ஜெயபாலன், நிர்வாக இயக்குனர் ராஜுவ் சுப்பிரமணியம், ரேவதி ராஜுவ் , சுசி நிறுவனத்தலைவர் சுந்தர் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக ரம்யா மருத்துவமனை உரிமையாளர் டாக்டர் துரைராஜ் கலந்து கொண்டு சிறப்பித்தார். இதில் நிறுவனத்தின் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள், நண்பர்கள், உறவினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மதுரையில் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்.!

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பால் விலை, சொத்து வரி குடிநீர் வரி மற்றும் மின் கட்டணம் உயர்வை கண்டித்து இந்திய மாதர் தேசிய சம்மேளனம் மதுரை மாநகர் – புறநகர் சார்பில், புறநகர் மாவட்ட செயலாளர் நாகஜோதி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாதர் சங்கத்தின் மாநில குழு உறுப்பினர் மணிமேகலை, மாதர் சங்கத்தின் மாநில துணைத் தலைவரும் மாவட்ட செயலாளருமான இராஜலெட்சுமி கண்டன உரை ஆற்றினர்.

மேலும், ஏஜடியூசி மாவட்ட துணைச் செயலாளர் தாமஸ், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் எம்.எஸ் முருகன், புறநகர் மாவட்ட செயலாளர் பி.முத்துவேல் ஆகியோர் இந்த ஆர்ப்பாட்டத்தை வாழ்த்தி பேசினர்.

மாநில குழு உறுப்பினரும் மாவட்ட தலைவருமான கற்பக வள்ளி, பொருளாளர் ஜாகீர் நிஷா, மாதர் உறுப்பினர்கள், நிர்வாகிகள், பெண்கள் உட்பட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

மக்கள் கண்காணிப்பகம் நிறுவனர் ஹென்றி டிபேனுடன் டாக்டர் ஜாகிர் உசேன் மரியாதை நிமித்தமாக சந்திப்பு.!

இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு பிரவாசி புலம்பெயர்ந்த இந்தியர்கள் மீட்பு மற்றும் நல அமைப்பின் நிறுவனர் டாக்டர் ஜாகிர் உசேன் மக்கள் கண்காணிப்பகம் நிறுவனர் ஹென்றி டிபேன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.

மதுரை 58-வது வார்டு கவுன்சிலர் ஜெயராம் குப்பை அள்ளும் மிதிவண்டியை துப்புரவு பணியாளர்களுக்கு வழங்கினார்

மதுரை மாநகராட்சி 58வது வார்டு ஞானஒளிவுபுரம் A.A.ரோட்டில் அமைந்துள்ள பாமா மெடிக்கல் சார்பாக குப்பை அள்ளும் மிதிவண்டியை வார்டு கவுன்சிலர் மா.ஜெயராம் அவர்கள் துப்புரவு பணியாளர்களுக்கு வழங்கினார்.

உடன் வட்ட கழக செயலாளர் சீனிரமேஷ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உள்ளனர்.
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES