Tuesday , January 27 2026
Breaking News
Home / செய்திகள் (page 94)

செய்திகள்

All News

மதுரையில் தமிழ் சினிமா நடிகர்கள் சங்க அலுவலகத்தில் தீபாவளி கொண்டாட்டம்.!!

மதுரை பாத்திமா நகரில் உள்ள தமிழ் சினிமா நடிகர்கள் சங்க அலுவலகத்தில் தீபாவளி திருநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

நடிகர் சங்க பொதுச் செயலாளர் சி.எம்.வினோத் துணை நடிகர்கள் அனைவருக்கும் புத்தாடைகள் மற்றும் இனிப்புகளை வழங்கினார்.

இவ்விழாவில் குறும்பட இயக்குனரும், நடிகரும், நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், பன்னீர்செல்வம், மணி, பாலா, ராணி, வாசுகி, சுமதி, பாண்டிச்செல்வி, மஞ்சு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

மதுரை மாவட்ட ஆட்சியருக்கு அகில இந்திய பார்வர்ட் பிளாக் சார்பாக,தேவர் ஜெயந்தி அழைப்பிதழ் வழங்கப்பட்டது

அக்டோபர் 30-ஆம் தேதி நடைபெற உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழாவின் அழைப்பிதழை மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அனீஷ்சேகர் அவர்களுக்கு, அகில இந்திய பார்வர்ட் பிளாக் மாநிலச் செயலாளர் பள்ளம் பசும்பொன் மற்றும் மாவட்ட பொதுச் செயலாளர் சிவபாண்டி ஆகியோர் வழங்கினர்.

சிவகங்கை மாவட்டம் எமனேஸ்வரத்தில் ROYAL SOUCO சவுராஷ்டிரா கல்லூரியின் 7-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு ஏழை குழந்தைகளுக்கு தீபாவளி புத்தாடைகள் வழங்கும் விழா.!!

சிவகங்கை மாவட்டம் எமனேஸ்வரம் ஈஸ்வர விலாஸ் ஆரம்பப் பள்ளியில் ROYAL SOUCO சவுராஷ்டிரா கல்லூரியின் 7-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு ஏழை,எளிய பள்ளி குழந்தைகளுக்கு தீபாவளி புத்தாடைகள் வழங்கும் விழா ROYAL SOUCO ஸ்தாபகர் & தலைவர் கே.என்.கே ரகுநாத் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு உப தலைவர் சாந்தமூர்த்தி முன்னிலை வகித்தார். ஸ்தாபகர் & செயலாளர் மற்றும் முன்னாள் கவுன்சிலருமான ஆர்.கே.பாலயோகி வரவேற்புரை ஆற்றினார்.

இந்நிகழ்வில் டாக்டர் டி என் குப்புசாமி சந்திரசேகரன் எமனேஸ்வரம் சௌராஷ்ட்ரா சபைத் தலைவர் சேஷய்யர், சேனாதி பிலேந்திரன், மாருதிராஜன், சுஜாதா,விஜயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மதுரை அண்ணாநகர் யானைக்குழாய் அருகே ஆப்பிள் மெட்ரோ ஷாப்பிங் திறப்பு விழா.!

மதுரை அண்ணாநகர் யானைக்குழாய் அருகே ஆப்பிள் மெட்ரோ ஷாப்பிங் திறப்பு விழா நடைபெற்றது.

பயாஸ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இவ்விழாவிற்கு வருகை தந்தவர்களை உரிமையாளர் பாரூக் வரவேற்றார். இவ்விழாவில் ஷாஜகான் உள்பட குடும்பத்தினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து பாரூக் நம்மிடம் கூறுகையில்:-

1000 ரூபாய்க்கு மேல் பொருட்கள் வாங்கினால் பிளாஸ்டிக் வாளி இலவசம், 2000 ரூபாய்க்கு மேல் பொருட்கள் வாங்கினால் சில்வர் சம்படம் இலவசம், 3000 ரூபாய்க்கு மேல் பொருட்கள் வாங்கினால் பெரிய சில்வர் சம்படம் இலவசம்.

முதல் மற்றும் 2-வது கிளை கே.புதூர் பகுதியிலும், 3-வது கிளை அண்ணாநகரிலும், 4 வது கிளை காளவாசலிலும் திறக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்

மதுரையில் பட்டியல் அணி மாநில செயலாளர் சிவாஜி தலைமையில் பாஜகவில் இணைந்த 500 இளைஞர்கள்.!!

மதுரை பீ.பீ.குளம் பகுதியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில், பட்டியல் அணி மாநில செயலாளர் சிவாஜி தலைமையில், மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் சீனிவாசன் முன்னிலையில், வழக்கறிஞர் கார்த்திகேயா 500 பேருடன் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.

இந்நிகழ்வின் போது மதுரை மாநகர் மாவட்ட பொறுப்பு தலைவர் மகா.சுசீந்திரன் உடன் இருந்தார்.

அதிமுக 51 ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு மதுரை மாநகர் 51 வது வட்டக்கழக செயலாளர் முனிச்சாலை சரவணன் தலைமையில் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.!

அதிமுக 51 ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு மதுரை மாநகர் 51 வது வட்டக்கழக செயலாளர் முனிச்சாலை சரவணன் தலைமையில் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது .

இவ்விழாவில் மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் வில்லாபுரம் ராஜா ஏழை.எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

முன்னதாக முன்னாள் முதல்வர்கள் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவ படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் முட்டை பிரியாணி வழங்கப்பட்டது.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக அவைத்தலைவர் அண்ணாதுரை, மாவட்ட பொருளாளர் பா.குமார், அண்ணா தொழிற்சங்க மாவட்ட தலைவர் எம்.எஸ்.கே மல்லன், தெற்கு 1.ம் பகுதி செயலாளர் எம்.எஸ்.செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் நிர்வாகிகள் முருகன், தர்மராஜ், நாகரத்தினம், மகேந்திரன், வேங்கையன், கண்ணன் மிட்டாய் பிரகாஷ், குணசேகரன், கமல், சாக்கு செல்வம், ரகுல், முத்து, மரக்கடை கணேசன், வேணுகோபால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மார்பக புற்றுநோயை சுய பரிசோதனை மூலம் எளிதில் கண்டறியலாம் அப்போலோ மருத்துவர்கள் தகவல்.!



மதுரை அப்போலோ மருத்துவமனையில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் குறித்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.இந்த சந்திப்பில் மருத்துவ புற்றுநோயியல் நிபுணர்கள் டாக்டர் முத்துக்குமாரசுவாமி, தேவானந்த், தீனதயாளன், அறுவை சிகிச்சை புற்றுநோயியல் நிபுணர்கள் சர்பராஜன், பாலுமகேந்திரா மற்றும் கதிர்வீச்சு புற்றுநோயியல் நிபுணர் சதீஷ்சீனிவாசன் ஆகியோர் முன்னிலையில் கலந்துரையாடல் நடந்தது.


புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் முத்துக்குமாரசுவாமி கூறுகையில், பெண்களைத் தாக்கும் புற்றுநோய்களில் மார்பகப் புற்றுநோய் முதன்மையானது. பெண்களிடையே புற்றுநோயால் ஏற்படும் மரணங்களில் மார்பகப் புற்றுநோயால் ஏற்படும் மரணங்கள் கணிசமானவை. காரணம், பெண்களின் தயக்கம். அந்தரங்கப் பிரச்சினைகளை வெளியே சொல்வதில் பெண்களுக்கு எப்போதும் தயக்கம் இருக்கும்.

அதனால்தான் பெண்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும்விதமாக அக்டோபர் மாதத்தை மார்பகப் புற்று நோய் விழிப்புணர்வு மாதமாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருக்கிறது. இந்த மாதத்தை ‘பிங்க் மாதம்’ என்றும் அழைக்கிறார்கள்.மார்பகப் புற்றுநோயை தொடக்க நிலையிலேயே கண்டறிந்துவிட்டால், அதிலிருந்து முழுமையாக மீண்டு விடலாம். மார்பகப் புற்றுநோயைச் சுயபரிசோதனை மூலம் நாமே எளிதில் கண்டறியலாம்.

18 முதல் 30 வயதிற்குட்பட்ட பெண்கள் மாதம் ஒரு முறையாவது மார்பக சுயபரிசோதனை செய்துகொள்வது அவசியம்.
முப்பது வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மார்பக சுயபரிசோதனையுடன், தேவை எற்பட்டால் மருத்துவமனைக்குச் சென்று முறையான பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றார்.
இதுகுறித்து புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் தேவானந்த் தெரிவிக்கையில், புற்றுநோய் பாதிப்பால் இறக்கும் விகிதம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தே வருகிறது.
மார்பகப்புற்று நோயை போக்குவதில் மருத்துவதுறை பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது. பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய்க்கு சிறந்த அறுவை சிகிச்சைகள் வழங்கப்படுகிறன்றன. குறிப்பாக மார்பகப் பாதுகாப்பு அறுவைசிகிச்சை முதல் ஆன்கோபிளாஸ்டிக் மார்பக அறுவைசிகிச்சை வரை வளர்ச்சியடைந்துள்ளது. மேலும், மார்பக அறுவை சிகிச்சையின் துறையானது, இம்யூனோ தெரபி மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை வாயிலாக முன்கூட்டியே கண்டறியப்பட்டு நோய் தீவிரத்தை குறைக்க முடியும் என்றார்.


இதில் சீஓஓ நீலகண்ணன் மதுரைமண்டலம், நிகில் திவாரி- ஜிஎம் – ஆபரேஷன், மணிகண்டன் – ஜிஎம் – மார்க்கெட்டிங், டாக்டர் பிரவீன் ராஜன் – ஜேடிஎம்எஸ் ஆகியோர் பங்கேற்றனர்.

மலேசிய போதைப் பொருள் கும்பலிடம் சிக்கிய இளைஞரை மீட்ட சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தினர்.!

நம் நாட்டில் தொடர்ந்து நிலவி வரும் வேலையில்லா திண்டாட்டதினால் வறுமையில் இருந்து மீள்வதற்காக வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்பு தேடிச் செல்வோர் தொடர்ந்து அதிகரித்து வருகின்றனர்.

இப்படி செல்வோரில் சிலர் மோசமான நபர்களிடம் சிக்கி பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாவது வழக்கமாகி வருகிறது. அப்படியோரு மோசமான கும்பலிடம் சிக்கி மீண்டு வந்த இளைஞரைப் பற்றிய தகவலே இது.

சிவகங்கை மாவட்டம், முத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்த் எனும் இளைஞர் வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர்கள் மூலம் மலேசிய நாட்டில் வேலைக்கென சென்றார். இதற்காக ரூ.80,000 முகவர்களிடம் வழங்கியிருந்தார். அங்கு சென்றவருக்கு சிலாங்கூர் மாநிலத்தில் இருக்கும் ஒரு அடுக்கு மாடிக்கட்டிடத்தில் வேலை வழங்கப்பட்டது. முற்றிலுமாக அடைக்கப்பட்டிருந்த அறைக்குள் மாவு போன்றதொரு பொருளை வழங்கி அவை மருந்தெனக் கூறி அவற்றை ஒரு கிராம் எடை கொண்ட சிறு பொதிகளாக்கும் வேலை வழங்கப்பட்டது. சந்தேகம் கொண்ட ஆனந்த் ரகசியமான முறையில் தகவலை சிவகங்கையில் வசித்து வரும் தனது உறவினருக்கு தெரிவித்தார். அவர் இத்தகவலை சிவகங்கை மாவட்டத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் நிறுவனர் அவர்களிடம் நடந்தவற்றைக் கூறினார்.

நடந்தவற்றை முழுமையாகக் கேட்டறிந்த அவர் மீண்டும் பல்வேறு வழிகளில் ஆனந்தை மீட்க தொடர் முயற்சிகளை மேற்கொண்டார். பின்னர் தமது நிறுவனத்தின் சிங்கப்பூர் நாட்டிற்கான தலைவர் முனைவர். மணிவண்ணன் நாச்சியப்பன் அவர்களுடன் இணைந்து செயற்பட்டு மலேசியக் காவல்துறையினரைத் தொடர்பு கொண்டு ஆனந்தை மீட்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டார். மிகவும் நுணுக்கமாகத் திட்டமிடப்பட்ட நடவடிக்கையின் மூலம் ஆனந்த் மீட்கப்பட்டார். அங்கிருந்த 5 கிலோ மற்றும் 160 கிராம் எடையிலான ஹெரோயின் போதைப் பொருளும் 175 கிராம் மெத்தபெத்தமின் ரக போதைப் பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
மலேசியக் காவல்துறையினர், சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் நிறுவனர் முனைவர்.நீலமேகம் நிமலன் அவர்களிடம் ஆனந்த் மீட்கப்படுவதற்கு முன்னர் வழங்கியிருந்த வாக்குறுதியை மீறி ஆனந்தை இவ்வழக்கின் சாட்சியாக உருவாக்கி வீட்டுக் காவலில் வைத்தனர்.

இரண்டு வருடங்களாக நடைபெற்ற பல்வேறு போராட்டங்களின் பின்னர் ஆனந்த கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு அவருடைய சொந்த ஊர் வந்து சேர்ந்தார்.

வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்பு தேடிச் செல்லும் போது அரசினால் அங்கீகாரம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களினூடாக செல்வது முக்கியமானதாகும்.

மதுரையில் ஆதரவற்றோர்களுக்கு தீபாவளி புத்தாடை வழங்கிய சிலம்பம் ஆசான் சரவணபாண்டி.!

மதுரையில் ஆதரவற்றோர்களுக்கு தீபாவளி புத்தாடை வழங்கிய சிலம்பம் ஆசான் சரவணபாண்டி

மதுரை எஸ்.எஸ் காலனியை சேர்ந்த சிலம்பம் ஆசான் டாக்டர் சரவணபாண்டி அவர்கள் கடந்த 5 வருடங்களாக இந்திய சிலம்பம் அறக்கட்டளை சார்பாக இலவசமாக சிலம்பம் கற்பித்தல் மற்றும் சாலையோரமாக வசிக்கும் ஆதரவற்றோர் மற்றும் மாற்று திறனாளிகளுக்கும் தொடர்ந்து உணவு கொடுத்து மனித நேயமிக்க இளைஞராக செயல்பட்டு வருகிறார்.

தற்போது வர உள்ள தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆதரவற்றோர் அனைவரும் கொண்டாட வேண்டும் என்ற அடிப்படையில் பெற்றோர்களை இழந்த பள்ளி குழந்தைகளுக்கும்,வயதான ஆதரவற்ற முதியோர்களுக்கும் புத்தாடைகளை இந்திய சிலம்பம் அறக்கட்டளை சார்பாக வழங்கினார். இவரது சமூக சேவைகளை அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.

தமிழக முதல்வர், அமைச்சர் செஞ்சி மஸ்தான்,டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோர்களுக்கு பிரவாசி புலம்பெயர்ந்த இந்தியர்கள் மீட்பு மற்றும் நல அமைப்பின் நிறுவனர் ஜாகிர் உசேன் நன்றி.!!

தமிழக முதல்வர், அமைச்சர் செஞ்சி மஸ்தான்,டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோர்களுக்குபிரவாசி புலம்பெயர்ந்த இந்தியர்கள் மீட்பு மற்றும் நல அமைப்பின் நிறுவனர் ஜாகிர் உசேன் நன்றி.!!

தமிழக முதல்வர், அமைச்சர் செஞ்சி மஸ்தான்,டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோர்களுக்குபிரவாசி புலம்பெயர்ந்த இந்தியர்கள் மீட்பு மற்றும் நல அமைப்பின் நிறுவனர் டாக்டர் ஜாகிர் உசேன் நன்றி தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது :-

போலி ஏஜெண்டுகளால் ஏமாற்றப்பட்டு முறையான ஆவணம் இல்லாமல் சுற்றுலா விசாவில் வேலைக்கு செல்வது, சட்டவிரோதமாக ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு எல்கையை கடப்பது. அங்கே சென்று சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடுவது. அதனால் அந்நாட்டு குடி வரவு அதிகாரிகளால் சிறைபிடிக்கப்பட்டு பல இன்னல்களை சந்தித்து வந்தனர்.

இதனை அறிந்து அவர்களை மீட்டு தாயகத்திற்கு திரும்ப அழைத்து வந்ததுள்ளேன்.


மேலும் பல விழிப்புணர்களை எனது அமைப்பின் மூலமாகவும், சமீபத்தில் நியூஸ் எக்ஸ்பிரஸ் தினசரி மாலை நாளிதழ் மூலமாகவும் செய்தி வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தேன்.


தமிழக முதல்வர் மற்றும் சிறுபான்மை மற்றும் வெளிநாட்டு வாழ் தமிழர் அமைச்சர் செஞ்சி கே.எஸ் மஸ்தான் மற்றும் தமிழ்நாடு காவல்துறை தலைவர் டிஜிபி சைலேந்திரபாபு அவர்களுக்கும், சில தினங்களுக்கு முன் இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை மனு அனுப்பினேன்.


எனது கோரிக்கையை ஏற்ற தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் இது போன்று செயல்படும் போலி ஏஜெண்டுகளை கண்டறிந்தால் குற்ற வழக்கு தொடரப்படும் என்றும் அறிக்கையாக வெளியிட்டுள்ளார்கள்.

மேலும் தமிழ்நாடு காவல்துறை தலைவர் டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் மக்களுக்கு இது பற்றி விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டு இருப்பது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.

இவர்களுக்கு பிரவாசி புலம்பெயர்ந்த இந்தியர்கள் மீட்பு மற்றும் நல அமைப்பு சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். என அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES