Saturday , December 20 2025
Breaking News
Home / செய்திகள் (page 82)

செய்திகள்

All News

மதுரையில் நடைபெற உள்ள தமிழக திரைப்பட துணை நடிகர்- நடிகைகள் & திரைப்பட உதவியாளர்கள் நலச்சங்கத்தின் முப்பெரும் விழாவிற்கான டிக்கெட்டை வி.பி.ஆரிடம் பன்னீர்செல்வம் வழங்கினார்.!

தமிழக திரைப்பட துணை நடிகர்- நடிகைகள் & திரைப்பட உதவியாளர்கள் நலச்சங்கம் சார்பாக மதுரை காந்தி மியூசியத்தில் ஜனவரி 5 ஆம் தேதி நடைபெற உள்ள முப்பெரும் விழா மற்றும் “மதுரையை கலக்க போவது யாரு” நிகழ்ச்சியில் சினிமா நடிகர்கள், சின்னத்திரை நடிகர்கள் என ஏராளமானோர் கலந்து கொள்ள உள்ளனர்.

இதற்கான டிக்கெட்டை தேசிய மனித உரிமைகள் சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் மதுரை வடக்கு மாவட்ட தலைவர் வி.பி.ஆர் செல்வக்குமார் அவர்களிடம் சங்கத்தலைவர் பன்னீர்செல்வம் வழங்கினார்.

இந்நிகழ்வின் போது வடக்கு மாவட்ட செயலாளர் சின்னசாமி, மாவட்ட இணைச்செயலாளர் பிரகாஷ், மாவட்ட துணைத் தலைவர் மணிகண்டபிரபு, வளைகுடா வாழ் தமிழர்கள் நலச்சங்கம் வடக்கு தொகுதி செயலாளர் ஜெயப்பாண்டி ஆகியோர் உடன் இருந்தனர்…

மதுரையில் “லா பியூர்” புதிய மூலிகை சோப்‌ அறிமுகம்.!


மதுரையில் “லா பியூர்” என்ற புதிய மூலிகை சோப்‌ 5 வகை நறுமணங்களில் அறிமுகப் படுத்தப்பட்டது.
மதுரை கோர்ட் மரியாட் ஹோட்டலில் “லா‌ பியூர்” என்ற நிறுவனம் புதிய மூலிகை சோப்பை அறிமுகப்படுத்தியது. இந்த சோப் சந்தனம், மில்க், மூலிகை, வேம்பு, கற்றாழை போன்ற 5 வகைகளில் இயற்கை முறையில் தயாரிக்கப் பட்டுள்ளது.

இந்த புதிய மூலிகை சோப் பற்றி “லா பியூர்” நிறுவனத்தின் இயக்குனர்கள் பாலாஜி, லலிதா ஆகியோர் கூறும் போது, பொதிகை மலையில் உற்பத்தியாகி இயற்கை மூலிகைகளால் தவழ்ந்து வரும் தாமிரபரணியின் தண்ணீர் கொண்டு இயற்கை மூலிகைகள் கலந்து மிகவும் ஆரோக்கியம் மற்றும் தூய்மையாக 5 நறுமணங்களில் இந்த சோப் தயாரிக்கப்படுகிறது. இந்த நிறுவனம் முழுக்க முழுக்க குடும்ப பெண்களால் நடத்தப்படுகிறது என்று கூறினர்.

இந்நிகழ்ச்சியில் காவல்துறை முன்னாள் தடயவியல் இயக்குனர் விஜயகுமார், சோலைமலை குரூப்ஸ் சேர்மன் பிச்சை, ஐ.ஆர்.எஸ். அதிகாரி சம்பத், இந்தியன் வங்கி அதிகாரி பாண்டி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர்.

இவ்விழாவில் “லா பியூர்” நிறுவனத்தின் இயக்குனர்கள் பாலாஜி, லலிதா, பிசினஸ் அட்வைசர் முத்துக்குமார் மற்றும் ஐஸ்வர்யா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

மதுரை கே.புதூர் தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகம் முன்பு ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.!

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 19 ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஒப்பந்த ஊழியர்கள் தங்களை நிரந்தர படுத்த கோரி மதுரை கே.புதூர் பகுதியில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களை விரைவில் நிரந்தர படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் திருநெல்வேலி, தூத்துக்குடி, திருவண்ணாமலை, கொடைக்கானல், திண்டுக்கல், ராமநாதபுரம், திருச்சி போன்ற மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மதுரையில் இ.டி.இ.இ, அசெஞ்சர் மற்றும் பெட்கிராட் இணைந்து கைவினை பொருட்கள் தயாரிப்பது குறித்து பயிற்சி பெற்ற பெண்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

மதுரையில் இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம், இ.டி.இ.இ. அசெஞ்சர் மற்றும் பெட்கிராட் அமைப்பு இணைந்து கைவினை பொருட்கள் தயாரிப்பது குறித்து ஒருமாத பயிற்சி பெண்களுக்கு வழங்கப்பட்டு, அதற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி எஸ்.எஸ்.காலனியில் உள்ள “பெட்கிராட்” அலுவலகத்தில் நிர்வாக இயக்குனர் சுப்புராம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

செயலாளர் சாராள்ரூபி வரவேற்று பேசினார். நிகழ்ச்சிக்கு தலைவர் சுருளி,பொதுச் செயலாளர் அங்குசாமி, பொருளாளர் கிருஷ்ணவேணி, செயலாளர் ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இந்நிகழ்வில் இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தின் திட்ட அலுவலர் கார்த்திகேயன் பாராட்டி பேசினார். இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட வடக்கு தாசில்தார் தமிழ்ச்செல்வி சான்றிதழ்களை வழங்கினார். நிகழ்ச்சியின் முடிவில் பெட்கிராட் துணைத் தலைவர் மார்ட்டின் நன்றியுரை கூறினார்.

மதுரை 20-வது வார்டு விளாங்குடியில் பாஜக மாநகர் மாவட்ட செயலாளர் வேங்கைமாறன் மற்றும் ஆறுமுகம் தலைமையில் தூய்மை பணி.!

மதுரை மாநகராட்சி 20-வது வார்டு விளாங்குடியில் பாஜக மாநகர் மாவட்ட செயலாளர் வேங்கைமாறன் மற்றும் ஆறுமுகம் ஆகியோர் தலைமையில் தூய்மை பணி மற்றும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாநகர் மாவட்ட தலைவர் மகா.சுசீந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தூய்மை பணி மற்றும் மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் மாநகர் மாவட்ட துணைத்தலைவர்கள் ஜெயவேல், பழனிவேல், மாவட்ட பொருளாளர் ராஜ்குமார், மருத்துவர் பிரிவு மாவட்ட தலைவர் டாக்டர் முரளிபாஸ்கர், மக்கள் பணி மேற்கு தொகுதி பொறுப்பாளர் முனைவர் பிச்சைவேல், பரவை மண்டல் பார்வையாளர் ரமேஷ்கண்ணன், மீனவர் பிரிவு மாவட்டத் தலைவர் இளங்கோமணி, வர்த்தகர் பிரிவு மாவட்ட தலைவர் வடமலையான், மாநில செயற்குழு உறுப்பினர் பாரி ஜெயவேல், வார்டு தலைவர்கள் சேது, திருப்பதி, முருகேசபாண்டி, செல்வி கிருஷ்ணன் உள்பட பாஜக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விளாங்குடி சபாராம் மருத்துவமனை டாக்டர் பாலசுப்ரமணியம் தலைமையிலான மருத்துவர்கள் டாக்டர் கலையரசன், டாக்டர் கணேஷ்பாபு, மற்றும் விக்னேஷ், வேணுகோபால், கார்த்திக் மற்றும் செவிலியர்கள் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டனர். 150-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த மருத்துவ முகாமில் கலந்து கொண்டனர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

மதுரையில் எம்.ஜி.பாலு தனது பிறந்த நாளை முன்னிட்டு மனநலம் பாதிக்கப்பட்டோர் இல்லத்தில் அன்னதானம்.!

மதுரையைச் சேர்ந்த எம்.ஜி.பாலு தனது பிறந்த நாளை முன்னிட்டு மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு அன்னதானத்தை வழங்கினார்.



மதுரை மாவட்டம் கோவில் பாப்பாக்குடியைச் சேர்ந்த சேர்ந்த காவிரி கூட்டு குடிநீர் பராமரிப்பாளர் எம்.ஜி பாலு அவர்கள் தனது ஒவ்வொரு பிறந்தநாள் அன்று ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்டங்கள், பள்ளிகளில் பயிலும் மாணவ,மாணவிகளுக்கு இலவச நோட்புக் மற்றும் கல்வி உபகரணங்கள், ஆதரவற்றோர் இல்லத்திற்கு நேரில் சென்று அன்னதானம் வழங்குவது வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்தவகையில் இன்று செவ்வாய்க்கிழமை தனது
57-வது பிறந்த நாளை முன்னிட்டு அருள்தாஸ்புரம் பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு மையத்திற்கு நேரில் சென்ற அவர் அன்னதானம் வழங்கினார்.

இந்நிகழ்வில் பாலமுருகன், துரைப்பாண்டி, முருகேசன், சரவணன், பூங்குன்றன் உள்பட பலர் பங்கேற்றனர்.

  மயிலாடுதுறையில் உள்ள ரேஷன் கடைகளில் கோதுமை தட்டுப்பாடு! உடனடியாக நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை.!

  மயிலாடுதுறை மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் கோதுமை தட்டுப்பாடு! உடன் நடவடிக்கைகள் எடுக்க சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் முறையாக உணவு தானியங்கள் வழங்க வேண்டும் என்பதே அரசின் முதன்மையான குறிக்கோள் ஆகும்.
ஆனால்மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் குடும்ப அட்டைதாரா்களுக்கும் ஏற்கனவே வழங்கப்படும் குறிப்பிட்ட அளவு கோதுமை வழங்கப்படுவதில்லை, மிகவும் குறைவாக வழங்கப்படுகிறது என்னும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, கோதுமை, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசியமான உணவுப் பொருட்கள் இலவசமாகவும் குறைந்த விலைக்கும் பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகின்றன. அதனால் வறுமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் காரணமாகஒரு வேளைகூட உணவு இல்லாமல் இருப்போரே இல்லை என்னும் நிலையை உருவாக்கவே அரசு முயற்சிகள் செய்து வெற்றியும் பெற்றுள்ளது என்று கூறலாம்.அதனடிப்படையில் ரேஷன் பொருட்களைக் கொண்டு நூற்றுக்கணக்கான ஏழை,எளிய நடுத்தர குடும்ப மக்கள் தங்கள் உணவு தேவையை நிறைவேற்றி வருகிறார்கள்.

ரேஷன் கடைகளில் இருந்த குறைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தனிக்கவனம் செலுத்தி சரிசெய்து தற்பொழுது தரமான அரிசி, பருப்பு. எண்ணெய் வகைகள் வழங்கப்படுவதால் மக்கள் மகிழ்ச்சியில் இருக்கின்ற நிலையில், கோதுமை மட்டும் அனைத்து குடும்பஅட்டை தாரா்களுக்கும் தடையின்றி முறையாக கிடைப்பதில்லை என்னும் குற்றச்சாட்டு மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் உள்ள 350-க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளில் இருந்து வருகிறது.

இத்தகைய சூழல் கடந்த மூன்று மாதங்களாக நீடித்து இருப்பதாகவும் உடனடியாக ரேஷனில் கோதுமையையும் சேர்த்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொது மக்கள் கோருகின்றனர். மேலும் மாநிலம் முழுவதும் கோதுமை தட்டுப்பாடு ஏற்பட்டதற்கு காரணம் என்ன என்று கேட்டால் மத்திய அரசு வழங்க வேண்டிய கோதுமையின் அளவினை தமிழ்நாடு உட்பட 10க்கும் மேற்பட்ட மாநிலங்களுக்கு வழக்கமாக வழங்குவதை விட பல மடங்கு குறைவாக அனுப்புவதாக அரசின் வழங்கல் அலுவலர்கள் தெரிவிக்கின்றார்கள். கோதுமை அளவை குறைக்காமல் தமிழ்நாட்டுக்கு பெற்று தருகின்ற பொறுப்பை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் கவர்னர் ஆர்.என். ரவி போன்றோர் ஏற்க வேண்டும்.

தமிழகத்தின் நலனில் உண்மையான அக்கறை உள்ளவர்கள் என்பது இதன்மூலம் நிரூபிக்க வேண்டும். மேலும் தமிழ்நாட்டிற்கு ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட கோதுமையை வலியுறுத்தி பெற்றுத்தர வேண்டும் என்றும், அரிசியோடு நார்சத்து அதிகமுள்ள கோதுமையை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கையும் கனிசமாக அதிகரித்து வருவதாலேயே அனைத்து ரேஷன் கடைகளிலும் கோதுமை தேவையும் ஏற்பட்டுள்ளது என்றும், ஆகவே இச்சூழலை உணர்ந்து மக்களின் நலன்கருதி கோதுமை தட்டுப்பாட்டை நீக்கி வழங்கிட வேண்டும் என்று சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தேசிய மனித உரிமை சமூகநீதி கவுன்சில் ஆப் இந்தியா குளோபல் அமைப்பின் மதுரை மாநகர் மாவட்ட செயலாளராக முருகேசபாண்டி நியமனம்.!

மதுரையில் தேசிய மனித உரிமை சமூகநீதி கவுன்சில் ஆப் இந்தியா குளோபல் அமைப்பின் சார்பாக புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட நிர்வாகிகளுக்கு அங்கீகார கடிதம் மற்றும் அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது


இந்நிகழ்வின் போது
மதுரை மாநகர் மாவட்ட செயலாளராக டி முருகேச பாண்டி அவர்களை நியமனம் செய்யப்பட்டு மாவட்ட தலைவர் முனைவர் ஆர். பிச்சைவேல் முன்னிலையில் அதற்கான அடையாள அட்டை அங்கீகாரச் சான்று மாநில நிர்வாகிகள் வழங்கினார்கள்

தேசிய மனித உரிமைகள் – சமூகநீதி கவுன்சில் ஆஃப் இந்தியா-தமிழக பிரிவின் மாநில தலைவர், டாக்டர் நம்புதாளை பாரிஸ் அவர்களுக்கு, ஜம்மு காஷ்மீரில் Excellent Humanity ) விருது வழங்கி கௌரவிப்பு.!!

National Human Rights
Social Justice Counsil of India – Jammu & Kashmir,
(All India – New Delhi)


சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு, ஜம்மு காஷ்மீர் பிரஸ் கிளப் உள்ளரங்கில் NHR-SJC OF INDIA – விழா நடைபெற்றது.
இதில், மத்திய அமைச்சர், மாநில அமைச்சர், மத்திய மாநில அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.

விழாவில், NHRSJC சார்பாக, 2022 ம் ஆண்டிற்கான மிக சிறந்த மனிதநேய விருது, (Excellent Humanity Award) இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட
மத்திய, மாநில அமைச்சர் உள்பட 12- பேர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது..

அதில், தேசிய மனித உரிமைகள் – சமூகநீதி கவுன்சில் ஆஃப் இந்தியா – தமிழக பிரிவின் மாநில தலைவர், டாக்டர் நம்புதாளை பாரிஸ் அவர்களின் பல்வேறு சமூக சேவையை பாராட்டி Excellent Humanity ) விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

விருதை பெற்றுக் கொண்ட டாக்டர் நம்புதாளை பாரிஸ் அவர்களுக்கு மதுரை மாவட்ட தலைவர் பிச்சைவேல் மற்றும் நிர்வாகிகள் வாழ்த்துக்களை கூறிவருகின்றனர்.

“தேசிய மனித உரிமைகள்- சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் அமைப்பின் மதுரை வடக்கு மாவட்ட தலைவராக வி.பி.ஆர். செல்வகுமார் நியமனம்.!

உலக மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு, மதுரையில் “தேசிய மனித உரிமைகள்- சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் அமைப்பு சார்பாக புதிதாக நியமனம் செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு அங்கீகார சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை வழங்கும் விழா ஒருங்கிணைந்த மதுரை மாவட்ட தலைவர் முனைவர் ஆர்.பிச்சைவேல் தலைமையில் நடைபெற்றது.


இந்நிகழ்வின் போது புதிதாக நியமனம் செய்யப்பட்ட மதுரை வடக்கு மாவட்ட தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் தலைவராக வி.பி.ஆர் செல்வகுமார் அவர்களுக்கு, தேசிய தலைமையில் இருந்து வழங்கப்பட்ட நியமனம் செய்வதற்கான அங்கீகார கடிதம் மற்றும் அடையாள அட்டையை மாவட்ட தலைவர் பிச்சைவேல் முன்னிலையில் மாநில நிர்வாகிகள் வழங்கினர்.

மேலும் கொரோனா ஊரடங்கு காலத்தில் பல்வேறு சமூக சேவைகள் செய்தோருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இதில் மாநில, மாவட்ட, தேசிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES