Wednesday , December 11 2024
Breaking News
Home / செய்திகள் (page 100)

செய்திகள்

All News

பாஜக மதுரை மாநகர் விவசாய அணி சார்பாக துவரிமானில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஜி மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மாநில விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே நாகராஜன் ஜி, விவசாய அணி மதுரை மாநகர் மாவட்ட தலைவர் முத்துப்பாண்டி அவர்களின் தலைமையிலும், மாவட்ட பொதுச்செயலாளர் துரைபாஸ்கர், மாநில திட்ட பொறுப்பாளர் அழகுராஜா ஆகியோர் முன்னிலையிலும், பாஜக பரவை மண்டல் துணைத்தலைவர் கண்ணன், மற்றும் விவசாய அணி பரவை மண்டல் தலைவர் சந்திரசேகர், பட்டியல் அணி மாவட்ட பொதுச்செயலாளர் இளங்கோவன், மாவட்ட செயலாளர்கள் விஜி, ராமகிருஷ்ணன் ஆகியோர் ஏற்பாட்டில், இன்று (30/08/2022) மதுரை துவரிமான் கிராமத்தில் வீடு,வீடாக சென்று பொதுமக்களை நேரடியாக சந்தித்து விவசாயிகளுக்கான மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்து மாவட்ட செயலாளர் சுரேஷ் விளக்கி பேசினார்.

மேலும் பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை விவசாய அணி மாநகர் தலைவர் முத்துப்பாண்டி அவர்கள் வழங்கினார்.

மதுரையில் நோபல் உலக சாதனை படைத்த சகோதரிகள்: குவியும் பாராட்டு.!

மதுரை தெப்பக்குளத்தில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் இந்துமதி,உடல் கல்வி இயக்குனர் வசந்தி மற்றும் பி.டி.ஆர் பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் தனவேலன் முன்னிலையில், பதினெட்டாம்படி சிலம்பம் அகாடமியின் தலைமை ஆசான் சிலம்புச்செல்வன் மாரிமுத்து மற்றும் நோபல் ரெக்கார்டு புரொபஷனல் எடிட்டர் தியாகராஜன் தலைமையிலும், நடந்த நோபல் உலக சாதனை முயற்சியில், மதுரை கோமதிபுரத்தை சேர்ந்த மணிகண்டன், வசந்தி ஆகியோரின் மகள் ரிங் ரோட்டில் உள்ள அண்ணாமலையார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு மாணவி பவித்ரவேலா 2 1/2 அடி உயரம் கொண்ட பொய்க்காலில் நின்று இடைவிடாமல் நடந்து கொண்டே ஒற்றை சிலம்பத்தை 2 மணி நேரம் சுற்றி நோபல் உலக சாதனை படைத்துள்ளார். மேலும் பவித்ரவேலாவின் இளைய சகோதரி அண்ணாமலையார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 3ஆம் வகுப்பு பயிலும் மாணவி காவ்யாஸ்ரீ யும் இரண்டு மணி நேரம் இடைவிடாது ஒற்றை சிலம்பம் சுற்றி நோபல் உலக சாதனை படைத்தார். சாதனை படைத்த சகோதரிகள் இருவருக்கும் நண்பர்கள், உறவினர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சி முன்னெடுக்கும் #இந்தியஒற்றுமைப்பயணம் எனும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு

கடந்து 25 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை ஏற்றுப் பணியாற்றியிருக்கேன். எல்லாவற்றையும் விட தலைவர் ராகுல்காந்தி தலைமையில், காங்கிரஸ் கட்சி முன்னெடுக்கும் #இந்தியஒற்றுமைப்பயணம் எனும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை ஒருங்கிணைக்கும் இந்த வாய்ப்பு மகத்தானது.

வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தல் நமது தேசம் எதிர்நோக்கியிருக்கும் வாழ்வா? சாவா? போராட்டம். ஆர்எஸ்எஸ்/ பாஜகவின் மோடி ஆட்சி இந்த தேசத்தின் ஆன்மாவை மதம்,சாதியின் அடிப்படையில் கூறுபோட்டுள்ளது. விலைவாசி உயர்வு,வேலைவாய்ப்பின்மை.விவசாயம்,சிறு,குறு,நடுத்தர தொழில்கள் பேரழிவை சந்தித்துள்ளன.

காயம்பட்டுக் கிடக்கும் இந்த தேசத்தின் ஆன்மாவை மீட்டெடுக்கவும், வெறுப்பால் பிரிந்துகிடக்கும் இதயங்களை ஒருங்கிணைத்து,அன்பை விதைக்கவும்,அழிந்துபோன பொருளாதாரத்தை மறுகட்டமைப்பு செய்யவும் காங்கிரஸ் கட்சி இந்த இரண்டாவது சுதந்திரப் போராட்டத்தை நடத்துகிறது.இது மக்களுக்கான ஒரு மாபெரும் இயக்கம்.

இந்த மாபெரும் மக்கள் இயக்கம், தொன்மையும்,பெருமையும் மிக்க தமிழ் மண்ணில், கன்னியாகுமரியில் இருந்து துவங்குகிறது.

இப்படியொரு வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பை வழங்கிய அன்னை திருமிகு.சோனியா காந்தி,தலைவர் திரு.ராகுல்காந்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் திரு.திக்விஜயசிங் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள்.

இந்த நடைபயணம் சிறப்பாக நடைபெற வேண்டும் என்கிற ஒற்றை நோக்கோடு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ,தலைவர் திரு.கே.எஸ்.அழகிரி அவர்கள் தலைமையில் அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கி வருகிறது. அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். அனைவரும் ஒருங்கிணைந்து இந்தப் பணியினை சிறப்பாக செய்துமுடிப்போம். இந்தியாவை மீட்டெடுப்போம்.

#BharatJodoYatra

May be an image of text

மதுரையில் காங்கிரஸ் பிரமுகர் பி.ஜே.காமராஜ் அவர்களின் 30 ஆம் நாள் நினைவு அஞ்சலி நிகழ்ச்சி.

மதுரையில் காங்கிரஸ் மனித உரிமை துறை மாநில பொதுச்செயலாளர் பி.ஜே.காமராஜ் அவர்களின் 30 ஆம் நாள் நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு அவரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி நினைவு அஞ்சலியை செலுத்தினர். இந்நிகழ்வில் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் ரமேஷ்குமார், மாநில பொதுச்செயலாளர் எஸ்.பி.வரதராஜன், ஊடகப்பிரிவு மாநில பொதுச்செயலாளர் பால்ஜோசப், பஞ்சாயத்து ராஜ் மாவட்ட தலைவர் முத்துக்குமார், கவுன்சிலர் தல்லாகுளம் முருகன், தொழிலதிபர் சந்திரபோஸ்,‌ பகுதி தலைவர் பூக்கடை கண்ணன், மாவட்ட பொதுச்செயலாளர் போஸ், இராஜராஜ சோழன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்தியாவில் சிறந்த தரவரிசையில் உள்ள வணிகப் பள்ளியான IBS, MBA/PGPM திட்டத்தில் சேர்வதற்காக IBSAT 2022 கிட் மதுரையில் அறிமுகம்

இந்தியாவில் சிறந்த தரவரிசையில் உள்ள வணிகப் பள்ளியான IBS, MBA/PGPM திட்டத்தில் சேர்வதற்காக IBSAT 2022 கிட்டை அறிமுகப்படுத்தியது.

மதுரையில் நடந்த நிகழ்ச்சியின் போது டாக்டர் மனிஷா சிங் & பேராசிரியர் ஆனந்த் சீனிவாசன் ஆகியோர் அனைத்து IBS வளாகங்களைப் பற்றிய விரிவான பொது மற்றும் சேர்க்கை தொடர்பான தகவல்களைக் கொண்ட கருவியை முறையாக வெளியிட்டனர்.

வருங்கால மாணவர்கள், பெற்றோர்கள், பயிற்சி மையங்களின் தலைவர்கள், பிற புகழ்பெற்ற நிறுவனங்களின் ஆசிரியர்கள், ஐபிஎஸ் மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் அடங்கிய பெரிய கூட்டத்தில் உரையாற்றினார்.


அவரது உரையில், அவர் இந்திய மேலாண்மை கல்வி முறை பற்றிய தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார் மற்றும் IBS இல் வழங்கப்படும் படிப்புகள் பற்றிய காட்சிகளையும் வழங்கினார். “எம்பிஏ/பிஜிபிஎம் திட்டம் 100% கேஸ் அடிப்படையிலான கற்றல், அதிநவீன உள்கட்டமைப்பு, நடைமுறை திறன்களைப் பெறுவதில் முக்கியத்துவம், வலுவான தொழில் இடைமுகத்தை நிறுவுதல், இதன் விளைவாக அனைத்து எம்பிஏ/பிஜிபிஎம் பட்டதாரிகளுக்கும் சிறந்த இறுதி வேலை வாய்ப்புகளைப் பெறுதல் ஆகியவற்றுடன் தனித்துவமானது” என்று கூறினார்.

மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்

வீரமங்கை வேலுநாச்சியார் இசையார்ந்த நாட்டிய நாடகம் – மதுரையில் அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி முன்னிலையில் அரங்கேற்றம்

                                    

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் அரங்கேற்றப்பட்டு வரும் வீரமங்கை வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் இசையார்ந்த நாட்டிய நாடகத்தை, சென்னை கலைவாணர் அரங்கில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த வாரம் தொடங்கி வைத்தார் .

இதன் தொடர்ச்சியாக மதுரை, ராஜா முத்தையா மன்றத்தில் இன்று அரங்கேற்றப்பட்டது. நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்,வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் பி மூர்த்தி ஆகியோர் முன்னிலையில் நாட்டிய நாடகம் அரங்கேற்றம் செய்யப்பட்டது.

இதனை கலை பண்பாட்டுத்துறை மூலம் ஓவிஎம் தியேட்டர்ஸ் நிறுவனம் அரங்கேற்றியது . இதில் 62 கலைஞர்கள் பங்கேற்றனர்.ஆங்கிலேயர்களுடனான போராட்டத்தில் ஜான்சி ராணி தோற்றார், ஆனால் வேலு நாச்சியார் வெற்றி கண்டார். அவரது மறைக்கப்பட்ட வரலாறை ஆதாரங்களுடன் எடுத்துக் கூறுகிறோம் என்ற வகையில் நாடகம் அமைக்கப்பட்டிருந்தது. சுமார் 1 மணி நேரம் நடந்த நாடகத்தை அமைச்சர்கள் கண்டு ரசித்தனர்.

பின்னர் நாடகத்தில் பங்கேற்றவர்களுக்கு பாராட்டு தெரிவித்ததுடன் அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.தொடர்ந்து, வேலுநாச்சியார் நாட்டிய நாடகத்தின் இயக்குநர் ஸ்ரீராம் சர்மாவுக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.

இந்த நிகழ்வில் எம் எல் ஏக்கள் பூமிநாதன்,வெங்கடேசன், மதுரை மாநகர மேயர் இந்திராணி பொன்வசந்த்,மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர்,மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல்,மதுரை மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜீத் சிங்,மதுரை மாநகர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் பொன்முத்துராமலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மதுரை மாவட்டம் பெருமாள்பட்டி கிராமத்தில் பாஜக விவசாய அணி சார்பாக பொதுமக்களுக்கு மத்திய அரசின் திட்டங்கள் குறித்து விளக்கம்

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஜி மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மாநில விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே நாகராஜன் ஜி, விவசாய அணி மதுரை மாநகர் மாவட்ட தலைவர் முத்துப்பாண்டி அவர்களின் தலைமையிலும், மாவட்ட பொதுச்செயலாளர் துரைபாஸ்கர் முன்னிலையிலும், அழகுராஜா ஏற்பாட்டில், மதுரை மாவட்டம் பெருமாள்பட்டி கிராமத்தில் வீடு,வீடாக சென்று பொதுமக்களை நேரடியாக சந்தித்து

மத்திய அரசின் திட்டங்களான பயிர் காப்பீட்டு திட்டம், வேளாண் சந்தை திட்டம், மண்வள அட்டை, பிரதமரின் வேம்பு கலந்த யூரியா திட்டம், பிரதமரின் விவசாயிகளுக்கான ரூபாய் 6000 வழங்கும் திட்டம், கிசான் பயிர் காப்பீட்டு திட்டம் போன்ற நலத்திட்டங்கள் குறித்து மாவட்ட செயலாளர் சுரேஷ் விளக்கி பேசினார்.

மேலும் இந்நிகழ்வின் போது 150க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ காப்பீட்டு திட்ட அடையாள அட்டைகளை மாநகர் மாவட்ட தலைவர் முத்துப்பாண்டி அவர்கள் வழங்கினார்.

பொய்க்காலில் நின்று இரண்டு மணி நேரம் இடைவிடாது சிலம்பம் சுற்றி மதுரை கௌசிகா நோபல் உலக சாதனை.!

75 வது இந்திய சுதந்திர தின விழாவை முன்னிட்டு, மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் இந்துமதி மற்றும் பி.டி.ஆர் பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் தனவேலன் ஆகியோர் முன்னிலையிலும், 18-ஆம் படி சிலம்பம் அகாடமியின் தலைமை ஆசான் சிலம்பு செல்வன் மாரிமுத்து மற்றும் நோபல் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் புரொபஷனல் எடிட்டர் தியாகராஜன் அவர்களின் தலைமையிலும் நோபல் உலக சாதனை முயற்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மதுரை மேலமடை பகுதியை சேர்ந்த தேமுதிக மாநகர் வடக்கு மாவட்ட அவைத்தலைவர் பாண்டியராஜன், தனலட்சுமி ஆகியோரின் மகள் ரிங் ரோட்டில் உள்ள நாராயணா இ-டெக்னோ பள்ளியில் 6-ம் வகுப்பு பயிலும் மாணவி கௌசிகா (வயது 11) மூன்று அடி பொய்க்காலில் நின்று கொண்டு இடைவிடாது இரண்டு மணி நேரம் சிலம்பம் சுற்றி நோபல் உலக சாதனை படைத்தார்.

இந்த சிறிய வயதில் நோபல் உலக சாதனை படைத்த அவருக்கு ஏராளமானோர் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்

பொய்க்காலில் நின்று மூன்று மணிநேரம் இடைவிடாது சிலம்பம் சுற்றி மதுரை கௌசிகா நோபல் உலக சாதனை.!

75 வது இந்திய சுதந்திர தின விழாவை முன்னிட்டு, மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் இந்துமதி மற்றும் பி.டி.ஆர் பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் தனவேலன் ஆகியோர் முன்னிலையிலும், 18-ஆம் படி சிலம்பம் அகாடமியின் தலைமை ஆசான் சிலம்பு செல்வன் மாரிமுத்து மற்றும் நோபல் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் புரொபஷனல் எடிட்டர் தியாகராஜன் அவர்களின் தலைமையிலும் நோபல் உலக சாதனை முயற்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மதுரை மேலமடை பகுதியை சேர்ந்த தேமுதிக மாநகர் வடக்கு மாவட்ட அவைத்தலைவர் பாண்டியராஜன், தனலட்சுமி ஆகியோரின் மகள் ரிங் ரோட்டில் உள்ள நாராயணா இ-டெக்னோ பள்ளியில் 6-ம் வகுப்பு பயிலும் மாணவி கௌசிகா (வயது 11) மூன்று அடி பொய்க்காலில் நின்று கொண்டு இடைவிடாது இரண்டு மணி நேரம் சிலம்பம் சுற்றி நோபல் உலக சாதனை படைத்தார்.

இந்த சிறிய வயதில் நோபல் உலக சாதனை படைத்த அவருக்கு ஏராளமானோர் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பாக கவன ஈர்ப்பு தர்ணா போராட்டம்

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பாக கவன ஈர்ப்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பாக கவன ஈர்ப்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது

தமிழக முதல்வர் அறிவித்துள்ள காலை உணவுத் திட்டத்தை தமிழக அரசு ஏற்று நடத்த வேண்டும்.

குழந்தைகளின் நலன் கருதி சத்துணவு மையங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும்.

அனைத்து சத்துணவு ஊழியர்களுக்கும் முறையான கால முறை ஊதியம் வழங்கிட வேண்டும் ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு வருவாய் கிராம உதவியாளர்களுக்கு வழங்குவது போல 6750 அகவிலைப்படி உடன் கூடிய ஓய்வு விதமாக வழங்கிட வேண்டும்.

இதுவரையிலும் ஓய்வு பெறும் வயது நீட்டிப்பு பெறாத சத்துணவு அமைப்பாளர்களுக்கு ஓய்வு பெறும் வயதை 60 வயதில் இருந்து 62 ஆக உயர்த்திட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நிர்வாகிகள் பேசினர்.

இக்கூட்டத்தில் மாவட்ட தலைவர் கௌரிஅம்மாள்,மாவட்ட பொருளாளர் முருகேஸ்வரி, அரசு ஊழியர்கள் சங்கம் மாவட்ட துணைத் தலைவர் ஆறுமுகம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES