Thursday , December 12 2024
Breaking News
Home / செய்திகள் (page 55)

செய்திகள்

All News

அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் மதுரை ராமராயர் மண்டபம் கிளை சார்பாக அன்னதானம்

அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பாக மதுரை ராமராயர் மண்டபம் கிளை சார்பாக 12 ஆம் ஆண்டு மண்டல பூஜையை முன்னிட்டு மாபெரும் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.

முன்னதாக அன்று காலை சிறப்பு தீபராதனை,பஜனை மற்றும் பூஜைகள் நடைபெற்றது.

இந்நிகழ்வில் குருநாதர் மலைராஜன், சுந்தரமகாலிங்கம், ஆர்.சி.மணிகண்டன், மருதுபாண்டியன், பி.கே.ராஜா, வெங்கடேஸ்வரன், ஆறுமுகம், மன்னாதிமன்னன் மற்றும் சமூக சேவகர் அண்ணாநகர் முத்துராமன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

டிசம்பர் 26ல் பிறந்த நாள் காணும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் திரு. இரா. நல்லகண்ணு…

டிசம்பர் 26ல் பிறந்த நாள் காணும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் திரு. இரா. நல்லகண்ணு அவர்கள் இன்று போல் இன்னும் பல நூற்றாண்டுகள் வாழ்க வளமுடன் நலமுடன் என்று பஞ்சாயத்து ராஜ் சங்கதன் சார்பாக மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. ம. அண்ணாதுரை அவர்கள் சார்பாகவும் திருச்சி மாநகர் மாவட்ட பொதுச் செயலாளர் தமிழக இளைஞர் காங்கிரஸ் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. மணிவேல் அண்ணாதுரை அவர்கள் சார்பாகவும் திருச்சி மாநகர் மாவட்ட பஞ்சாயத்து ராஜ் பொறுப்பாளர்கள், கோட்ட தலைவர்கள், வார்டு தலைவர்கள், நிர்வாகிகள், மகளிரணியிணர், காங்கிரஸ் கட்சி, இளைஞர் காங்கிரஸ் மற்றும் திருச்சி மாநகர் மாவட்ட பஞ்சாயத்து ராஜ் சங்கதன் என அனைவரின் சார்பாகவும் பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ம. அண்ணாதுரை
மாநில ஒருங்கிணைப்பாளர்
உறுப்பினர் சேர்க்கை
ராஜுவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் தமிழக காங்கிரஸ் கமிட்டி.

நேதாஜி சுபாஷ் சேனை மாநிலச் செயலாளர் சுமன், வேலுநாச்சியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்

வீரமங்கை வேலுநாச்சியாரின் 227-வது நினைவு தினத்தை முன்னிட்டு, சிவகங்கையில் உள்ள அவரது நினைவிடத்தில், நேதாஜி சுபாஷ் சேனை நிறுவனத் தலைவர் டாக்டர் மகாராஜன் அவர்களின் ஆணைக்கிணங்க, மாநில செயலாளர் சுமன்தேவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் சக்திவேல் பாண்டியன், களஞ்சியம் முருகன், தத்தனேரி கார்த்திக், சேதுபதி, நிர்மல்குமார், பாலா உள்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

தென்இந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் மாவட்ட மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம்

தென்இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பாக ஜனவரி 7ஆம் தேதி அன்று மதுரையில் நடக்க உள்ள மாவட்ட மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் மதுரை கண்மாய்கரையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் நிறுவனத் தலைவர் திருமாறன் ஜி கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கி பேசுகையில் :- வரும் ஜனவரி 07 ஆம் தேதி அன்று நமது கட்சி சார்பாக மாவட்ட மாநாடு சிறப்பாக நடைபெற உள்ளது.இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொள்ள வேண்டும்.என பேசினார்.

இக்கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் வி.எஸ்.மாரிமறவன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாநில பொருளாளர் நாட்டார் முத்தையா பங்கேற்றார். மாவட்ட பொதுச் செயலாளர் பி.எம்.திருமுருகன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பள்ளபட்டி உஸ்வத்துன் ஹஸனா பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் முடிக்கப்பட்டு பாராளுமன்ற உறுப்பினர் செல்வி ஜோதிமணி அவர்களால் இன்று திறந்து வைக்கப்பட்டது.

பதிவு நாள்: 24/12/2023

பள்ளபட்டி காங்கிரஸ் கமிட்டியின் சிபாரிசின் பேரில் பாராளுமன்ற உறுப்பினர் நிதி ஒதுக்கீட்டில் சுமார் 21 லட்ச ரூபாய் செலவில், பள்ளபட்டி உஸ்வத்துன் ஹஸனா பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் முடிக்கப்பட்டு பாராளுமன்ற உறுப்பினர் செல்வி ஜோதிமணி அவர்களால் இன்று திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் கரூர் மாவட்ட சிறுபான்மையினர் அணி மாவட்ட தலைவர் திரு அண்ணம்பாரி ஜக்கரியா, பள்ளப்பட்டி நகர தலைவர் திரு.அன்சார் அலி, பள்ளப்பட்டி பாப்புலர் அபுதாஹிர், மனிதநேய மக்கள் கட்சி & தமுமுக மாவட்டத் தலைவர் திரு சாகுல் ஹமீது, அரவக்குறிச்சி காங்கிரஸ் கமிட்டியின் வட்டார தலைவர் திரு.காந்தி, முன்னாள் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் திரு சதாசிவம் அவர்களின் மகன் தமிழ்மணி, வழக்கறிஞர் அணி மாநில செயலாளர் திரு.க.முகமது அலி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத்துறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.க.பாலமுருகன், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக துறை மாவட்ட பொதுச் செயலாளர் திரு. சாகுல் அமீத், மாவட்ட தகவல் தொழில்நுட்பம் செயற்குழு உறுப்பினர்கள் ஷேக் அப்துல் காதர், திரு.சுகைப், திரு.சாதிக் ஹாஜியார், பள்ளப்பட்டி நகராட்சி 16வது உறுப்பினர் சம்ரானா, அரவக்குறிச்சி பாதிரியார் மகேஷ், காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் பள்ளப்பட்டி முக்கிய பிரமுகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அரவக்குறிச்சி 9-வது வார்டில் சாலை மேம்பாட்டு பணிகளுக்கு அடிக்கள் நாட்டு விழா…

காங்கிரஸ் தலைவி திருமதி சோனியா காந்தி, இளம் தலைவி திருமதி பிரியங்கா காந்தி, இளம் தலைவர் திரு ராகுல் காந்தி அவர்களின் பேராசியுடன், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் திரு. மல்லிகார்சுன கார்கே, தமிழக காங்கிரஸ் தலைவர் திரு. கே.எஸ்.அழகிரி அவர்களின் நல்ஆசியுடன், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு. செ.ஜோதிமணி அவர்களின் வழிகாட்டுதலுடன் செயல்படும் அரவக்குறிச்சி பேரூராட்சி 9-வது உறுப்பினர் திருமதி பஜிலாபானு அவர்களின் கோரிக்கைளை நிறைவேற்றும் வண்ணம், இன்று 21.12.2023 வியாழக் கிழமை அரவக்குறிச்சி முருகன் கோவில் முன்பு
அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் மொஞ்சனூர் திரு.PR. இளங்கோ அவர்கள் ,
பூமி பூஜையுடன் பணிகளை துவக்கி வைத்தார்.

முன்னிலை:
அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் திரு.N. மணிகண்டன் அவர்கள் ,
அரவக்குறிச்சி சிறப்பு நிலை பேரூராட்சி மன்ற தலைவர் திருமதி. ஜெயந்தி மணிகண்டன் அவர்கள் பேரூராட்சி மன்ற துணை தலைவர் திரு.தங்கராஜ் அவர்கள் ,
அரவக்குறிச்சி பேரூர் கழக செயலாளர் திரு.B.S. மணி அவர்கள்,
பேரூராட்சி மன்ற செயல் அலுவலர் திரு.ஆனந்தன் அவர்கள் ,

உடன்: பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்

புதுடெல்லி: பார்லிமென்ட் மக்களவையில் கடந்த 13-ம் தேதி கண்காணிப்பு தளத்தில் இருந்து 2 பேர் குதித்து வண்ண புகை குப்பிகளை வீசினர்.

இதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளிக்கக் கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக இரு அவைகளிலும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த 143 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.இதனை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு அகில இந்திய எம்.பி.க்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர் சோனியா காந்தி ஆகியோர் தலைமையில் போராட்டம் நடந்தது.ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள் என்ற பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.

காங்கிரஸ் எம்.பி., சசிதரூர் கூறியதாவது:-

பார்லிமென்ட் வரலாற்றில், இது நம்ப முடியாத செயல்.இது ஜனநாயகத்திற்கு அடியாகும்.பாராளுமன்றத்தில் உண்மையாக செயற்படுவது அமைச்சர்களின் மிக முக்கியமான பொறுப்பு.நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு இல்லாத சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் சபைக்கு வந்து விளக்கம் அளித்திருக்க வேண்டும்.

ஆனால், இதைப் பற்றி விவாதிக்க அரசு விரும்பவில்லை.ஆளும் கட்சியினர் தங்கள் இஷ்டப்படி நடக்க நினைக்கிறார்கள்.சசிதரூர் கூறினார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், “எதிர்ப்பு தெரிவித்து சர்வாதிகாரியாக செயல்படும் அனைவரையும் சஸ்பெண்ட் செய்ய ஆளுங்கட்சி விரும்புகிறது. ஜனநாயகத்தில் இது சாத்தியமில்லை. அதனால்தான் மக்களிடம் செல்கிறோம். எம்.பி.க்கள் சஸ்பெண்ட் ரத்து செய்யப்பட்டு விளக்கம் அளிக்கும் வரைசபையில் கொடுக்கப்பட்டால், எங்கள் போராட்டம் தொடரும்.

எனது கடிதத்திற்கு துணை ஜனாதிபதியின் பதிலுக்காக காத்திருக்கிறேன்,” என்றார்.அகில இந்திய எம்.பி.,க்களின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்து, மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியதாவது:-

பார்லிமென்டில் நடந்த அத்துமீறல் சம்பவம் குறித்து, உயர்மட்ட விசாரணை நடத்த, உள்துறை செயலருக்கு, சபாநாயகர் கடிதம் எழுதியுள்ளார்.புதிய நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் இயக்குநர் ஜெனரல் மேற்பார்வையின் கீழ் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

அவை சுமுகமாக நடைபெறுவதை எதிர்க்கட்சிகள் விரும்பவில்லை.பார்லிமென்ட் அத்துமீறலுக்கு வேலையில்லா பிரச்னையே காரணம் என ராகுல் கூறுகிறார்.எனவே இதை ராகுல் ஆதரிக்கிறாரா?இது ஒரு பொறுப்பற்ற கருத்து.அவர்கள் அனைத்தையும் அரசியலாக்க விரும்புகிறார்கள்.இவ்வாறு பிரகலாத் ஜோஷி கூறினார்.

சினிமா பாணி சேஸிங்; 35 கி.மீ துரத்திய நாகை எஸ்.பி – திருவாரூரில் சிக்கிய கரூர் கொள்ளையர்கள்!

சினிமா பாணி சேஸிங்; 35 கி.மீ துரத்திய நாகை எஸ்.பி - திருவாரூரில் சிக்கிய கரூர் கொள்ளையர்கள்!

கரூரில் மர்ம கும்பல் ஒன்று காரில் சென்றபடி, சாலையில் செல்வோரிடம் நகைகளை பறித்து வழிபறியில் ஈடுபட்டு தப்பி சென்றனர்.

இந்த சம்பவம் கரூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்த சம்பவ தொடர்பாக கரூர் மாவட்ட போலீஸார் அனைத்து மாவட்ட போலீஸாருக்கும் தகவல் கொடுத்தனர். கொள்ளையர்களை விரட்டி பிடித்த எஸ்பி

இந்நிலையில் நாகப்பட்டினம் எஸ்.பி ஹர்ஷ்சிங் நாகை மாவட்ட போலீஸாரை உஷார் படுத்தியிருந்தார். காரில் வழிப்பறி செய்த கும்பல் குறித்து நாகை போலீஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். இதில் அந்த கும்பல் வேளாங்கண்ணியில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதனைதொடர்ந்து எஸ்.பி ஹர்ஷ்சிங் தலைமையில் தனிப்படை போலீஸார், நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் மற்றும் அதிவிரைவுப்படை உள்ளிட்ட போலீஸார் நான்கு பிரிவுகளாக பிரிந்து மர்மகும்பல் தங்கியிருந்த இடத்திற்கு சென்றுள்ளனர்.

இதை மோப்பம் பிடித்த மர்ம கும்பல், டாடா சுமோ காரில் தப்பித்து சென்றனர். இதையடுத்து எஸ்.பி ஹர்ஷ் சிங், பக்கத்தும் மாவட்ட எஸ்.பி அலுவலகத்திற்கும், மாவட்ட எல்லையில் உள்ள காவல் நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்ததுடன் காரில் தப்பி சென்ற வழிப்பறி கொள்ளையர்களை பிடிக்க காரில் விரட்டி சென்றார். பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதம்

கொள்ளையர்கள் சற்றும் சளைக்காமல் எஸ்.பிக்கு போக்கு காட்டி சென்றனர். சினிமா பாணியில் நடந்த இந்த சேஸிங்கில் 35 கிலோ மீட்டர் எஸ்.பி ஹர்ஷ் சிங் தலைமையில் போலீஸார் விரட்டி சென்று திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் கொள்ளையர்களை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவர்களை திருவாரூர் மாவட்ட போலீஸாரிடம் ஒப்படைத்தார்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், சிக்கியவர்கள் மதுரையை சேர்ந்த கண்ணன் (23), பக்ருதீன் (33), பாண்டியன் (31), சிவகங்கையை சேர்ந்த அஸ்வின் (30), தஞ்சாவூரை சேர்ந்த ராஜேஸ் (33) ஆகிய ஐந்து பேர் எனவும் கரூரில் வழிப்பறியில் ஈடுப்பட்டதையும் ஒப்புக்கொண்டனர். மேலும் இவர்கள் கும்பலாக காரில் சென்று பல மாவட்டங்களில் வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. கொள்ளை கும்பலிடம் திருவாரூர் மாவட்ட போலீஸார் விசாரணை முடிந்த பிறகு கரூர் மாவட்ட போலீஸாரிடம் ஒப்படைக்க உள்ளனர். கார்

கரூரில் கொள்ளையடித்து விட்டு காரின் நம்பேர் பிளேட்டை மாற்றிக்கொண்டு வேளாங்கண்ணி வந்து தங்கி விட்டனர். சந்தேகத்தின் பேரில் அவர்களை ஃபாலோ செய்ததை அறிந்து கொண்ட கொள்ளையர்கள் காரில் தப்பி சென்ற போது காரில் விரட்டி சென்று பிடித்ததாகவும், கொள்ளைர்களிடமிருந்து கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்திருப்பதாகவும் நாகை போலீஸ் தரப்பில் தெரிவிக்கின்றனர். 35 கிலோ மீட்டர் விரட்டி சென்று கொள்ளையர்களை பிடித்த நாகை எஸ்பி ஹர்ஷ்சிங் டீமை போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

INDIA கூட்டணியின் 4வது ஆலோசனை கூட்டம் – டெல்லியில் இன்று தொடக்கம்.!

இந்தியா கூட்டனியின் 4வது ஆலோசனை கூட்டம் இன்று மாலை டெல்லியில் நடைபெற உள்ளது.

2024 மக்களவைத் தோதலில் ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் ஒருங்கிணைந்து ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்கியுள்ளன.

காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாடி உள்ளிட்ட பிரதான எதிா்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் ‘இந்தியா’ கூட்டணியின் முதல் மூன்று ஆலோசனைக் கூட்டங்கள் முறையே பாட்னா, பெங்களூரு, மும்பை ஆகிய நகரங்களில் நடைபெற்றன.

 தெலங்கானா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மத்தியப் பிரதேச தலைநகா் போபாலில் இந்தியா கூட்டணியின் நான்காவது கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் கூட்டணி கட்சிகளின் முக்கியத் தலைவர்களான மம்தா பானர்ஜி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிதிஷ் குமார், அகிலேஷ் யாதவ் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்க முடியாத சூழல் நிலவியதால் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இந்தியா கூட்டணி கட்சிகளின் நான்காவது கூட்டம் நடைபெறும் விவரங்களை காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் டெல்லியில் டிசம்பர் 19-ஆம் தேதி மாலை 3 மணிக்கு நடைபெறும் என்று தெரிவித்தார். இந்த நிலையில் டெல்லியில் நடைபெற உள்ள I.N.D.I.A கூட்டணியின் 4-வது ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வரும் நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றார்.

இந்த நிலையில் இன்று மாலை 3மணி அளவில் இந்தியா கூட்டனியின் 4வது ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

3 மாநில தேர்தல் தோல்வி, கூட்டணி குறித்து விவாதிக்க டிச.21-ல் நடக்கிறது காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம்

3 மாநில தேர்தல் தோல்வி, கூட்டணி குறித்து விவாதிக்க டிச.21-ல் நடக்கிறது காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம்

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அக்கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தை வரும் 21-ம் தேதி கூட்டியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாஜகவுக்கு எதிராக ஐக்கிய முன்னணியை உருவாக்குவதற்காக வரும் புதன்கிழமை (டிச.19) ‘இண்டியா’கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் நடைபெற இருக்கும் நிலையில், அதற்கு சில நாட்களுக்கு பின்னர் காங்கிரஸ் கட்சியின் முக்கிய முடிவுகள் எடுக்கும் குழு கூட இருக்கிறது.

இந்தி பேசும் மாநிலங்களின் மையப்பகுதியாக இருக்கும் மாநிலங்களான மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ‘இண்டியா’ கூட்டணிகளுக்குள் இணக்கம் ஏற்படவில்லை. மத்தியப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியுடன் தொகுதிகளைப் பங்கிட்டுக் கொள்ள காங்கிரஸ் உடன்படவில்லை. இது காங்கிரஸின் பின்னடைவுக்கு வழிவகுத்தது.

மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியை தட்டிப்பறிக்கவும், சத்தீஸ்கரில் ஆட்சியைத் தக்கவைக்கவும் விரும்பியதால் அங்கு கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவுகள் குறித்து செயல்வீரர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

ராஜஸ்தானைப் பொறுத்த வரை அங்கு ஆளுங்கட்சிக்கு எதிராக வாக்களிக்கும் வழக்கம் இருந்தாலும், அசோக் கெலாட் அரசின் நலத்திட்டங்கள் இந்த வழக்கத்தை மாற்றிவிடும் என்று காங்கிரஸ் கட்சி நம்பியது.

இந்தநிலையில், தேர்தல் முடிவுகள் வெளியானதும் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கட்சியின் முக்கிய தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் (அமைப்பு) செயலாளர் கே.சி. வேணுகோபால் ஆகியோர் கட்சியின் மோசமான தேர்தல் செயல்பாடுகள் குறித்து மட்டும் ஆய்வு செய்திருந்தனர்.

இதற்கிடையே, காங்கிரஸின் மத்தியப் பிரதேச மாநிலத் தலைவராக ஜிது பட்வாரியையும், சத்தீஸ்கர் மாநிலத்தின் முன்னாள் சபாநாயகர் சரண் தாஸ் மஹந்த் அம்மாநில காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை கட்சித் தலைவராகவும் மல்லிகார்ஜுன கார்கே சனிக்கிழமை நியமித்தார்.

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES