தென்காசி மாவட்டத்தில் புதிய மருத்துவக் கல்லூரி அமைக்க அதிமமுக துணை பொதுச்செயலாளர் நெல்லை மேட்டுப்பட்டி முத்துக்குமார் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளதாவது:-
தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் பொதுமக்கள் சார்பாக மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கும், தமிழக சுகாதார துறை அமைச்சர் அவர்களுக்கும், தென்காசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொதுமக்கள் சார்பாக கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி உட்பட்ட பொதுமக்கள் சார்பாகவும் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மக்கள் சார்பாகவும் வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதி உட்பட்ட பொதுமக்கள் சார்பாகவும் பணிவான கோரிக்கை.
தற்போது திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து தனியாக பிரிக்கப்பட்டு தென்காசி மாவட்டமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. தற்போது தென்காசி மாவட்டத்திற்கு மாவட்ட மருத்துவக் கல்லூரி கிடையாது. தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் தொகுதிக்கு உட்பட்ட பொதுமக்கள் அனைவரும் மாவட்டக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றால் திருநெல்வேலி செல்லக்கூடிய சூழ்நிலை உள்ளது.
அதே போல் தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட பொதுமக்கள் கோரிக்கையான தென்காசியை தலைமையிடமாக கொண்டு மருத்துவக் கல்லூரி ஒன்று அமைத்துக் கொடுத்தால் என்றும் தென்காசி மாவட்ட பொதுமக்கள் பொதுமக்கள் அனைவரும் என்றும் நன்றியுடன் இருப்பார்கள்.
அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் என்ற முறையில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு தென்காசி மாவட்ட பொதுமக்கள் சார்பாக இதை கோரிக்கையாக வைக்கிறேன்.
என அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.