மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் குருபூஜை விழாவை முன்னிட்டு, மதுரை தெப்பக்குளத்தில் உள்ள அவர்களது திருவுருவச் சிலைக்கு பாஜக தேசிய சிறுபான்மை அணி செயலாளர் வேலுர் இப்ராஹிம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் மகா.சுசீந்திரன், சிறுபான்மையினர் அணி மாநில பொது செயலாளர் கல்வாரி தியாகராஜன், மாநில செயலாளர் சாம் சரவணன் , தல்லாகுளம் மண்டல் தலைவர் அருண் உள்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்
இன்று காங்கிரஸ் கட்சியின் தலைவராக மதிப்பிற்குரிய திரு. மல்லிகார்ஜுன் கார்கே அவர்கள், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள், மதிப்பிற்குரிய அன்னை திருமிகு. சோனியா காந்தி,தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்கள் முன்னிலையில் பதவியேற்ற நிகழ்வில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தேர்தல் குழு உறுப்பினர், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு. செ. ஜோதிமணி அவர்கள் பங்கேற்றார்.
கருணை இல்லத்தில் உள்ள ஆதரவற்ற முதியோர்கள் மற்றும் கை கால்கள் செயலிந்தோருக்கு உணவுகளை ஊட்டி தீபாவளி கொண்டாடிய காவல் ஆய்வாளரை சமூக சேவகர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் பாராட்டி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் அருகில் முதியோர் கருணை இல்லம் உள்ளது.இந்த இல்லத்தில் ஏராளமான முதியோர்கள் உள்ளனர்.
தீபாவளி அன்று கருணை இல்லத்தில் இருக்கும் முதியோர்களை அம்மைய நாயக்கனூர் காவல் ஆய்வாளர் சண்முகலட்சுமி சென்று பார்த்து அன்பாகவும் ஆதரவாகவும் பேசினார்.மேலும் கை,கால்கள் செயலற்று இருந்தோருக்கு உணவை ஊட்டினார்.
மேலும் அங்கிருந்த அனைவருக்கும் உணவு வழங்கி அவர்கள் அனைவருடனும் தீபாவளி வாழ்த்து பகிர்ந்து கொண்டார்.
சொந்த பந்தங்களை விட்டு பிரிந்து வாழ்ந்து வரும் முதியோர்களுடன் தீபாவளி கொண்டாடிய காவல் ஆய்வாளர் சண்முகலட்சுமியை அனைவரும் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
பிரிட்டனை பிரதமராக ரிஷி சுனக் நல்லபடி ஆளட்டும், வாழ்த்துகள்!
இந்த நேரத்தில் மறைமுகமாக எம்பிக்களால் தேர்ந்தெடுக்கப்படும், பிரதமர் பதவியில் அமரும் இந்திய, இந்துப் பின்னணியைக் கொண்ட ரிஷி சுனக்கை மட்டும் அல்ல; நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் லண்டன் மேயர் பதவிக்கும் ஒரு வெளிநாட்டு பூர்வீகர் – பாகிஸ்தானைப் பின்புலமாகக் கொண்ட முஸ்லிம் சாதிக் கானை – பிரிட்டிஷார் தேர்ந்தெடுத்திருக்கின்றனர் என்பதையும் நினைவில் கொள்வோம்.
இந்தியர்களுக்கு இதில் உள்ள சேதி என்ன?
வெளியிலிருந்து வருவோரையும்கூட ஒரு சமூகம் எந்த அளவுக்கு அரவணைக்கிறது, மதிப்பளிக்கிறது, பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்பதுதான்!
இன்று ரிஷி சுனக் பிரிட்டன் பிரதமராக ஆவதையும், நேற்று கமலா ஹாரிஸ் அமெரிக்க துணை அதிபர் ஆனதையும் கொண்டாடும் அதே வாய்கள்தான் கடந்த காலத்தில் சோனியா இந்திய பிரதமர் ஆவதை எதிர்த்து சுதேசி எதிர் விதேசி நியாயம் பேசிப் புறந்தள்ளின என்பதை மறக்க முடியுமா? இது தற்செயலா அல்லது இந்தியர்களுக்கே உரிய இரட்டை நாக்கின் இயல்பா?
அட, வெளிநாட்டுப் பின்னணி கொண்ட சோனியா இருக்கட்டும், இந்தியாவுக்குள்ளேயே பிறந்த முஸ்லிம்கள், தலித்துகள் என்றைக்கு இந்த நாட்டில் பிரதமராக முடியும்? இந்தி தெரிந்திராத ஒரு காஷ்மீரியோ, சிக்கிமியரோ பிரதமர் பதவியைக் கற்பனை செய்ய முடியுமா?
பெருமை கொள்ள ஏதும் இல்லை… 75 ஆண்டு கால சுதந்திரத்தில், ஒரு ஜனநாயக நாட்டின் சொந்த மக்கள் இடையே இன்னமும் இவ்வளவு பாகுபாட்டையும் ஏற்றத்தாழ்வையும் வைத்திருக்கும் நாம் இதுகுறித்து வெட்கப்பட வேண்டும்.
நமக்கு நாமே சுய பரிசீலனைக்குள்ளாக்கிக்கொள்ள வேண்டும்.
இந்நன்னாளில் அனைவர் வாழ்விலும் அன்பு, மகிழ்ச்சி, கல்வி, செல்வம் , சகோதரத்துவம் மற்றும் மேன்மையான நற்குணங்கள் ஆகியவை மேலோங்கி தழைத்திட எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றேன்.
மகாத்மா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட களக்காடில் நடைப்பெற்ற தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் செயலாளர் திரு.சாமுவேல் பிரேம் குமார் ஏற்பாடில் இந்திய ஒற்றுமை மராத்தான் ஓட்டம் நடைபெற்றது.
சுமார் 2000 பேர் கலந்துக் கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ், கேடயம், பதக்கம் ஆகியவை வழங்கப்பட்டது. பொதுமக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன.
இவ்விழாவில் Dr.A.செல்லக்குமார்., M.B.B.S., M.P அவர்கள் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்.
சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் மத்திய அமைச்சர் திரு R. தனுஷ்கோடிஆதித்தன் அவர்கள், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் திரு.ரூபி R மனோகரன், மாவட்ட தலைவர் திரு.K.P.K ஜெயகுமார் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கோவை ஒரு பெருமைக்குறிய தொழில் நகரம். மோடியின் மோசமான ஆட்சியில் தொழில்கள் சிதைந்து விட்டன. லட்சக்கணக்கானவர்கள் வேலை இழந்துள்ளனர். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல, மதவெறி பிடித்த, கலவர பாஜக, பொறுப்பற்ற முறையில், கோவையை தீவிரவாத நகரமாக சித்தரிப்பது கடுமையான கண்டனத்துக்குரியது. மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் பொறுப்புமிகுந்த அரசு, குற்றவாளிகளை பிடிக்க விரைந்து செயல்பட்டுள்ளது. முறையான,விரைவான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் பாஜக மலிவான அரசியல் செய்வது அவமானகரமானது. மோடி, பாஜக ஆட்சியைப் போல சீனாவைக் கண்டு அஞ்சி நடுங்குகிற, தீவிரவாத குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டவர்களை நாடாளுமன்ற உறுப்பினராக்கி அழகு பார்க்கிற ஆட்சி தமிழகத்தில் நடக்கவில்லை. பாஜகவின் கலவர அரசியலை மீறி தமிழகம் தொடர்ந்து அமைதிப்பூங்காவாகவே இருக்கும் - ஜோதிமணி, கரூர், எம்.பி.
மதுரை, அக் 25: பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை புற்றுநோய் குறித்து அப்போலோ மருத்துவ குழுவினர்கள் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்ததாவது நவீன உலகில் பெண்கள் உடல் நலம் குறித்த அதிக கவனம் இல்லாமல் உள்ளனர். ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்களுக்கு மாரடைப்பினால் வரும் மரண விகிதம் அதிகமாக உள்ளது. கருப்பை மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் இரண்டுக்கும் இடையேயான வேறுபாடுகள் பலருக்கும் தெரிவதில்லை.
கர்ப்பை வாய் புற்றுநோயை பாப்ஸ்மியர் சோதனையில் கண்டறியலாம். கருப்பை புற்றுநோய் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு ஏற்படுகிறது, ஆனால் 25% பெண்களுக்கு மாதவிடாய் நிற்பதற்க்கு முன் ஏற்படலாம். பிறப்புறுப்பு இதழ் (வால்வார்) புற்றுநோய் புற்றுநோய் என்பது 0.6% பெண்களுக்கு ஏற்படும் அரிதான புற்றுநோயாகும். 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் 4% பெண்களுக்கு வரும் புற்றுநோய். இது பாலியல் ரீதியாக பரவும் வைரஸ். ஒரு பெண்ணுக்கு வெளிப்புற பிறப்புறுப்பில் தொடர்ந்து அரிப்பு, வலி, புண், மருக்கள், புண் அல்லது கட்டியுடன் கூடிய வெள்ளைப்படுதல் அல்லது ரத்தப்போக்கு இருக்கும் பெண்கள் மருத்துவர்களை அனுக வேண்டும்.
மகளிர் மற்றும் மகப்பேறு நோய்களை நிர்வகிப்பதில் அறுவை சிகிச்சை தலையீடுகளுக்கு தலையீட்டு கதிரியக்க செயல்முறைகள் ஒரு சிறந்த மாற்றாகும். வழக்கமான அறுவை சிகிச்சையை விட எம்போலைசேஷன் சிகிச்சையில் குறைவான சிக்கல்களே உள்ளது என்றனர்.
பேட்டியின்போது போது மருத்துவர்கள் லலிதா, ஹேமலேகா, ஷாஹிதா பர்வீன், -மகப்பேறு மருத்துவர் ஸ்ரீ தேவி, அறுவை சிகிச்சை மற்றும் புற்றுநோயியல் நிபுணர் பாலு மகேந்திரா, கதிர்வீச்சு புற்றுநோயியல் நிபுணன் சதீஷ் சீனிவாசன், இன்டர்வென்ஷனல் ரேடியாலஜிஸ்ட் மற்றும் தலைமை செயல் அதிகாரி நீலக்கண்ணன், பொது மேலாளர் நிக்கி திவாரி, மார்க்கெட்டிங் மேலாளர் மணிகண்டன், டாக்டர் பிரவீன் ராஜன் ஜேடிஎம்எஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.