Friday , November 22 2024
Breaking News
Home / செய்திகள் (page 37)

செய்திகள்

All News

தமிழ்நாட்டில் சுங்கக் கட்டண உயர்வு நிறுத்தி வைப்பு!

தமிழ்நாட்டில் சுங்கக் கட்டண உயர்வு நிறுத்தி வைப்பு!

Tollgate: நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளின் கட்டண உயர்வு முடிவைத் திரும்பப் பெற்றது தேசிய நெடுஞ்சாலை ஆணையம்.

நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதில், தமிழகத்தில் அரியலூரில் மணகெதி, திருச்சியில் கல்லக்குடி, வேலூரில் வல்லம், திருவண்ணாமலையில் இனம்கரியாந்தல், விழுப்புரத்தில் தென்னமாதேவி சென்னை புறநகரில் உள்ள பரனூர் மற்றும் ஆத்தூர் ஆகிய சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் உயர்வு இன்று முதல் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த கட்டண உயர்வு அறிவிப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் என பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளின் கட்டண உயர்வு முடிவை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திரும்பப் பெற்றது.

அதில், சென்னை புறநகரில் உள்ள 2 சுங்கச்சாவடிகள் உட்பட தமிழ்நாட்டில் 7 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான உத்தரவு அனைத்து திட்ட இயக்குநர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக ஆண்டுதோறும் ஏப்ரல் 1ஆம் தேதி சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டு வந்த நிலையில் நிறுத்தம் செய்யப்பட்டது. எனவே, மக்களவை தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட வாய்ப்பு இருப்பதாகவும் என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் ராகுல், கார்கே பிரச்சார திட்டம் தயார்

தமிழகத்தில் ராகுல், கார்கே பிரச்சார திட்டம் தயார்

தமிழகத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் பிரச்சாரம் மேற்கொள்வது குறித்த திட்டத்தை தயாரித்து, ஒப்புதலுக்காக தமிழ்நாடு காங்கிரஸ் டெல்லி தலைமைக்கு அனுப்பியுள்ளது.

தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் 9 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இன்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சுற்றுப்பயணம் தொடங்குகிறார். வரும் 15-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்கிறார். சில இடங்களில் பொதுக்கூட்டங்களிலும் பங்கேற்கிறார்.

இதற்கிடையில் தமிழகத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் பங்கேற்கும் பிரச்சார திட்டத்தையும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தயாரித்து, ஒப்புதலுக்காக டெல்லி தலைமைக்கு அனுப்பியுள்ளது.

அதன்படி ராகுல்காந்தி, முதல்வர் ஸ்டாலினுடன் இணைந்து 2 இடங்களில் மாபெரும் பிரச்சார பொதுக்கூட்டங்களில் பங்கேற்க இருப்பதாகவும், கார்கே மற்றும் பிரியங்கா காந்தி தலைமையில் ஓரிரு இடங்களில் பிரச்சார பொதுக்கூட்டங்கள் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. வரும் ஏப்.11-ம் தேதி ராகுல்காந்தி தமிழகம் வர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நரேந்திர மோடி மிரட்டி, பணம் பறிக்கும் கும்பலை வழிநடத்துகிறார்.. ‘Click Here’ டிரெண்ட் மூலம் மக்களுக்கு செய்து சொன்ன காங்கிரஸ்..!!

நரேந்திர மோடி மிரட்டி, பணம் பறிக்கும் கும்பலை வழிநடத்துகிறார்.. 'Click Here' டிரெண்ட் மூலம் மக்களுக்கு செய்து சொன்ன காங்கிரஸ்..!!

டெல்லி: எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வரும் Click Here டிரெண்டிங் என்றால் என்ன?. நடப்பு நாடாளுமன்ற தேர்தலுக்கும் அதற்கும் என்ன தொடர்பு?

என்பதை பாப்போம். சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது ஏதாவது ஒரு சுவாரசியமான கருத்து அல்லது நகைச்சுவை துணுக்கு டிரெண்டாவது வழக்கம். அந்த வகையில் கடந்த சில நாட்களாக எக்ஸ் வலைதளத்தில் இளைய தலைமுறையினரால் டிரெண்ட் செய்யப்படுவது தான் Click Here அதாவது எக்ஸ் வலைத்தளத்தில் Click Here என்றும், இடது கீழ்புறத்தை குறிக்கும் ஒரு அம்பு குறியும் போடப்பட்ட ஒரு புகைப்படம் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

இதன் நிஜ பெயர் Alt பட்டன் என்றும் பார்வை மாற்றுத்திறனாளிகளும் எக்ஸ் தளத்தை சிரமமின்றி பயன்படுத்தும் வகையில் செய்திகளை ஒளி வடிவத்திற்கு மாற்றி கொள்ளும் வசதி தான் இது என்றும் எக்ஸ் வலைத்தள நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்த வசதியானது கடந்த 2016ம் ஆண்டே நடைமுறைக்கு வந்துவிட்டாலும் அவ்வப்போதைய அனுபவங்களின் அடிப்படையில் மேம்படுத்தப்பட்டு தற்போது Alt பட்டன் மூலம் 420 எழுத்துக்கள் வரை பதிவு செய்ய இயலும். தற்போது இந்தியாவில் மக்களவை தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் இந்த Click Here டிரெண்டையும் தங்களுக்கு சாதகமாக மாற்றி கொண்டுள்ளன முக்கிய அரசியல் கட்சிகள்.

இந்த டிரெண்டில் முதலில் இணைந்த பாரதிய ஜனதா கட்சி, ஒரு Click Here படத்தை பகிர்ந்து அதன் Alt பட்டனில் மீண்டும் மோடி அரசு என குறிப்பிட்டிருந்தது. இதையடுத்து பாஜக-வை தேர்தல் களத்தில் எதிர்கொள்வதை போலவே எக்ஸ் களத்திலும் எதிர்கொண்டது காங்கிரஸ். உடனடியாக ஒரு Click Here படத்தை பகிர்ந்த காங்கிரஸ் அதன் Alt பட்டனில் நரேந்திர மோடி மிரட்டிப் பணம் பறிக்கும் கும்பலை வழிநடத்துகிறார். அது உங்களுக்கே தெரியும்! என்று குறிப்பிட்டிருந்தது.

நாடு முழுவதும் காங்கிரசின் இந்த Click Here படம் பரவலாக பகிரப்பட, ஆம் ஆத்மி கட்சியும் இந்த டிரெண்டிங்கில் இணைந்தது. நேற்றைய தினம் இந்தியா கூட்டணியின் பிரமாண்ட பொதுக்கூட்ட வேலையில் இருந்த அக்கட்சி பகிர்ந்த Click Here Alt பட்டனில் நாட்டை காப்பாற்ற மார்ச் 31 அன்று ராம்லீலா மைதானத்திற்கு வாருங்கள் என்று குறிப்பிட்டது. திரை பிரபலங்கள், செய்தி ஊடகங்கள், மீம் கிரியேட்டர்கள் போன்றவர்களையும் இந்த Click Here டிரெண்ட் விட்டுவைக்க வில்லை. இந்த டிரெண்ட் போகும் வேகத்தை பார்த்தால் இதன் சுவாரசியம் இப்போதைக்கு தீராது போல் இருக்கிறது.

ரூ.52,000-ஐ நெருங்கும் தங்கம் விலை!

ரூ.52,000-ஐ நெருங்கும் தங்கம் விலை!

சென்னை: சென்னையில் தங்கம் விலை திங்கள்கிழமை காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ.680 அதிகரித்து விற்பனையாகி வருகிறது.

கடந்த வியாழக்கிழமை முதல்முறையாக தங்கத்தின் விலை ரூ.50,000-ஐ தொட்டு அதிர்ச்சி அளித்துள்ளது. தொடர்ந்து, மறுநாளே ரூ.51,000-ஐ எட்டியது.

சனிக்கிழமை சற்று குறைந்து ரூ.50,960-க்கு விற்பனையான நிலையில், இன்று மீண்டும் சவரனுக்கு ரூ.680 அதிகரித்து ரூ.51,640-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.தேர்தல் களத்தில் சூடுபிடிக்கும் கச்சத்தீவு விவகாரம்!

ஒரு கிராம் தங்கம் ரூ.85 அதிகரித்து ரூ.6,455-க்கு விற்பனையாகிறது.

செய்கூலி, சேதாரம் மற்றும் ஜி.எஸ்.டி. உள்ளிட்டவையுடன் சேர்த்து ஒரு சவரன் தங்கம் தற்போது ரூ.53,000-க்கும் மேல் விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை தொடர் உயர்வால், மக்கள் கவலை அடைந்துள்ளனர்.

மேலும், வெள்ளியில் விலை ஒரு கிராமுக்கு 60 பைசா அதிகரித்து ரூ.81.60-க்கும் ஒரு கிலோ ரூ.81,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

“அனைத்து கட்சிகளையும் தேர்தல் ஆணையம் சமமாக நடத்த வேண்டும்” – பிரியங்கா

"அனைத்து கட்சிகளையும் தேர்தல் ஆணையம் சமமாக நடத்த வேண்டும்" - பிரியங்கா

பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பேசியதாவது: ராமாயணத்தில் ராவணனிடம் படை பலம், ஆயுத பலம், ஏராளமான செல்வம் குவிந்திருந்தது.

பகவான் ராமரிடம் உண்மை, நம்பிக்கை, பொறுமை, வீரம் மட்டுமே இருந்தது. இறுதியில் ராமர்தான் வெற்றி பெற்றார். தேர்தலில் உண்மையை முன்வைத்து, மக்களை நம்பி களமிறங்கி உள்ளோம்.

5 கோரிக்கைகள்: அனைத்து கட்சிகளையும் தேர்தல் ஆணையம் சமமாக நடத்த வேண்டும். எதிர்க்கட்சிகளை குறிவைக்கும் வருமான வரித் துறை, சிபிஐ, அமலாக்கத் துறையின் நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும். ஹேமந்த் சோரன், அர்விந்த் கேஜ்ரிவால் உடனே விடுதலை செய்யப்பட வேண்டும்.

எதிர்க்கட்சிகளின் நிதி ஆதாரங்களை முடக்கும் முயற்சிகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். தேர்தல் பத்திரம் மூலம் பாஜக பெற்ற நன்கொடைகள் குறித்து விசாரணை நடத்த உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வு குழுவை நியமிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதே கோரிக்கையை பல தலைவர்களும் வலியுறுத்தினர்.

வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர் விவரங்களை அறிய புதிய செயலி அறிமுகம்!

வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர் விவரங்களை அறிய புதிய செயலி அறிமுகம்!

வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர் விவரங்கள் குறித்து அறிய செயலி தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முதல் கட்டமாக தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால், அனைத்து பிரதான கட்சிகளும் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் பட்டியலை தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 27-ம் தேதி முடிவடைந்த நிலையில், வேட்புமனு பரிசீலினையும் நிறைவு பெற்றது.

: ஶ்ரீ திரௌபதி அம்மன் ஆலய அக்னி வசந்த விழா! – ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து சாமி தரிசனம்!

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் கடந்த 28-ஆம் தேதியுடன் இறுதி செய்யப்பட்டு, அவை சம்பந்தப்பட்ட மக்களவைத் தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. வாக்காளர் பட்டியலில் நம்முடைய பெயர் இருக்கிறதா, இல்லையா என்பதை அறிந்திட பிரத்யேக செயலி நடைமுறையில் உள்ளது. ஓட்டர் ஹெல்ப் லைன் என்ற செயலி மூலமாக வாக்காளர் பட்டியல் பெயர்களை உறுதி செய்யலாம்.

தேர்தல் நடத்தை விதிகள் மீறப்பட்டால் அதுகுறித்த புகார்களைத் தெரிவிக்க, சி-விஜில் எனப்படும் பிரத்யேக செயலி பயன்பாட்டில் உள்ளது. வீடியோ அல்லது புகைப்பட ஆதாரத்துடன் தேர்தல் நடத்தை விதி மீறல்களைத் தெரிவிக்கலாம். சி விஜில் செயலி வழியாக குறிப்பிடப்படும் புகார்கள் மீது தேர்தல் ஆணையம் உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருகிறது.

வாக்காளர்கள், தங்களது தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் விவரங்களையும் அறிந்திடலாம். இந்தச் செயலிகளை ‘கூகுள் பிளே ஸ்டோரில்’ இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். வாக்காளர்களின் வசதிகளைக் கருத்தில் மேலும் பல புதிய செயலிகளை அறிமுகப்படுத்தத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

இன்று (ஏப்ரல் 1) முதல் அமல். ரயில் டிக்கெட்களுக்கு இனி பணம் கொடுக்க வேண்டாம். சூப்பர் அறிவிப்பு.!!!

இன்று (ஏப்ரல் 1) முதல் அமல். ரயில் டிக்கெட்களுக்கு இனி பணம் கொடுக்க வேண்டாம். சூப்பர் அறிவிப்பு.!!!

இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சிறிய பொருட்களை வாங்குவது முதல் மக்கள் அனைத்திற்கும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை பயன்படுத்துகின்றனர்.

இத்தகைய டிஜிட்டல் பண பரிவர்த்தனை அரசு பேருந்துகள் மற்றும் ரயில்களில் பயனடிக்கட்டுகளை நேரடியாக சென்று வாங்குவதில் மட்டுமே பயன்படுத்தப்படாமல் இருந்தது. ஆனால் ரயில்களின் முன்பதிவு பெட்டிகளின் டிக்கெட்டுகளை ஆன்லைன் பண பரிவர்த்தனை மூலம் பெறும் வழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது.

இது போன்ற முன்பதிவு இல்லாத பெட்டிகளின் டிக்கெட்டுகளை நேரில் சென்று வாங்குவதற்கான முறையில் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை கொண்டு வருமாறு ரயில்வே துறைக்கு பயணிகள் கோரிக்கை வைத்தனர். இதனைத் தொடர்ந்து இனி முன்பதிவு இல்லாத பெட்டிகளின் டிக்கெட்டுகளை பணம் செலுத்தி வாங்க தேவையில்லை எனவும் upi மூலமாக டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறை மூலம் செலுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை இன்று ஏப்ரல் 1ம் தேதி முதல் அனைத்து ரயில் நிலையங்களிலும் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

ஏப்ரல் மாதத்தில் 14 நாட்கள் வங்கி விடுமுறை… இன்னைக்கே திட்டமிடுங்க!

ஏப்ரல் மாதத்தில் 14 நாட்கள் வங்கி விடுமுறை... இன்னைக்கே திட்டமிடுங்க!

மக்களவை தேர்தல் நேரம் என்பதால் பணப்பரிவர்த்தனை , கையில் ரொக்கமாக எடுத்து செல்லுதல் என தேர்தல் நடத்தை விதிமுறைகள் இந்தியா முழுவதும் அமலில் இருந்து வருகின்றன.

நமது வங்கிப் பணிகளை மாதத் தொடக்கத்திலேயே திட்டமிட்டு கொண்டால் கடைசி நேர பரபரப்பை தவிர்க்கலாம். பொதுமக்களின் வசதிக்காக ரிசர்வ் வங்கி முன்பே வரும் மாதத்தின் வங்கி விடுமுறை நாட்களை அறிவித்து விடுகிறது.

இந்தியா முழுவதும் தேர்தல் ஜூரம். பணப்பரிவர்த்தனை கைகளில் ரொக்கமாக கொண்டு செல்வது என அனைத்துமே தேர்தல் ஆணையத்தின் சிறப்பு குழுக்களாக தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஏப்ரல் மாதத்தில் வங்கி விடுமுறைகள் குறித்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. ஏப்ரல் மாதத்தில் நாடு முழுவதும் கிட்டத்தட்ட 14 நாட்களுக்கு வங்கி விடுமுறையாக இருக்கும் என ஆர்பிஐ தெரிவித்துள்ளது. வங்கிகளில் சேமித்து வைத்துள்ள பணத்தை எடுக்கவும், கடன்களை பெறவும், மற்ற பணப்பரிவர்த்தனைகளை செய்து முடிக்கவும் வங்கி விடுமுறைகளை அறிந்து வைத்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.


ஏப்ரல் மாத வங்கி விடுமுறை பட்டியல்:

1 ஏப்ரல் 2024 – மார்ச் 31 ம் தேதி ஞாயிற்றுக்கிழமையாக இருப்பதால் நிதியாண்டின் வங்கிக் கணக்குகள் முடிக்கப்படும்.
5 ஏப்ரல் 2024: ஸ்ரீநகர், ஜம்மு மற்றும் தெலுங்கானாவில் வங்கிகளுக்கு விடுமுறை.
7 ஏப்ரல் 2024: ஞாயிற்றுக்கிழமை
9 ஏப்ரல் 2024: குடி பத்வா/உகாதி பண்டிகை/தெலுங்கு புத்தாண்டு பேலாப்பூர், பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், இம்பால், ஜம்மு, மும்பை, நாக்பூர், பனாஜி மற்றும் ஸ்ரீநகர் பகுதிகளில் வங்கிகளுக்கு விடுமுறை.

10 ஏப்ரல் 2024: ஈத் பண்டிகை கொச்சி மற்றும் கேரளாவில் வங்கிகள் விடுமுறை
11 ஏப்ரல் 2024: ஈத் பண்டிகை நாடு முழுவதும் வங்கிகள் விடுமுறை.
13 ஏப்ரல் 2024: 2 வது சனிக்கிழமை
14 ஏப்ரல் 2024: ஞாயிற்றுக்கிழமை
15 ஏப்ரல் 2024: ஹிமாச்சல் தினத்தையொட்டி கவுகாத்தி மற்றும் சிம்லா வங்கிகள் விடுமுறை

17 ஏப்ரல் 2024: ஸ்ரீராம நவமி அகமதாபாத், பேலாப்பூர், போபால், புவனேஸ்வர், சண்டிகர், டேராடூன், காங்டாக், ஹைதராபாத், ஜெய்ப்பூர், கான்பூர், லக்னோ, பாட்னா, ராஞ்சி, சிம்லா, மும்பை மற்றும் நாக்பூர் நகரங்களில் வங்கிகளுக்கு விடுமுறை.
20 ஏப்ரல் 2024: கரியா பூஜை அகர்தலாவில் வங்கிகளுக்கு விடுமுறை.
21 ஏப்ரல் 2024: ஞாயிற்றுக்கிழமை
27 ஏப்ரல் 2024: 4வது சனிக்கிழமை
28 ஏப்ரல் 2024: ஞாயிற்றுக்கிழமை

மாணவர் காங்கிரஸ் தேசிய செயலாளராக நியமனம் செய்யப்பட்ட ராஜீவ்காந்திக்கு நிர்வாகிகள் வாழ்த்து

மாணவர் காங்கிரஸ் தேசிய செயலாளராக நியமனம் செய்யப்பட்ட ராஜீவ்காந்திக்கு ஏராளமானோர் சால்வை அணிவித்து வாழ்த்து

மதுரை, மார்ச்.30-

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அகில இந்திய தலைவர் மல்லிகாஅர்ஜீனே கார்கே மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோரின் நேரடி ஒப்புதலோடு, மதுரையை சேர்ந்த ராஜீவ்காந்தியை,
மாணவர் காங்கிரஸ் தேசிய செயலாளராக,
அகில இந்திய பொதுச்செயலாளர் கே.சி வேணுகோபால்
அறிவித்துள்ளார்.

ராஜீவ்காந்தி காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் மணிமாறன் அவர்களின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிதாக நியமனம் செய்யப்பட்ட அவருக்கு மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் எஸ் மீர்பாஷா, பூக்கடை கண்ணன், கே ஆர் சுரேஷ் பாபு மற்றும் பஞ்சாயத்து ராஜ் மாவட்ட தலைவர் ஜி முத்துக்குமார், தொழிற்சங்க மாவட்ட தலைவர் பாலாஜி, மாவட்ட பொதுச்செயலாளர்கள் போஸ், மூவேந்திரன் மற்றும் வார்டு தலைவர்கள் குமரகுரு, கோவிந்தராஜன், பகுதி தலைவர் சக்திவேல், சரவணராஜ், மாநில மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் பஞ்சவர்ணம் உள்பட நிர்வாகிகள் பலர் சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

மாணவர் காங்கிரஸ் தேசிய செயலாளராக நியமனம் செய்யப்பட்ட ராஜீவ்காந்திக்கு நிர்வாகிகள் வாழ்த்து..!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அகில இந்திய தலைவர் மல்லிகாஅர்ஜீனே கார்கே மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோரின் நேரடி ஒப்புதலோடு, மதுரையை சேர்ந்த ராஜீவ்காந்தியை,
மாணவர் காங்கிரஸ் தேசிய செயலாளராக, அகில இந்திய பொதுச்செயலாளர் கே.சி வேணுகோபால் அறிவித்துள்ளார்.

ராஜீவ்காந்தி காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் மணிமாறன் அவர்களின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிதாக நியமனம் செய்யப்பட்ட அவருக்கு மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் எஸ் மீர்பாஷா, பூக்கடை கண்ணன், கே ஆர் சுரேஷ் பாபு மற்றும் பஞ்சாயத்து ராஜ் மாவட்ட தலைவர் ஜி முத்துக்குமார், தொழிற்சங்க மாவட்ட தலைவர் பாலாஜி, மாவட்ட பொதுச்செயலாளர்கள் போஸ், மூவேந்திரன் மற்றும் வார்டு தலைவர்கள் குமரகுரு, கோவிந்தராஜன், பகுதி தலைவர் சக்திவேல், சரவணராஜ், மாநில மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் பஞ்சவர்ணம் உள்பட நிர்வாகிகள் பலர் சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES