பத்மஸ்ரீ கமலஹாசன் பிறந்த நாளை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுடன் கேக் வெட்டி கொண்டாடிய மக்கள் நீதி மய்யம் மதுரை நிர்வாகி.!
பத்மஸ்ரீ கமலஹாசன் அவர்களின் 68-வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரையில் மக்கள் நீதி மையம் வடக்கு தொகுதி நற்பணி இயக்க மாவட்ட செயலாளர் அண்ணாநகர் முத்துராமன் அவர்கள் யானைக்குழாய் பகுதி, கோ.புதூர், மதிச்சியம் போன்ற மூன்று இடங்களில் ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானங்களை வழங்கினார்.
பத்மஸ்ரீ கமலஹாசன் அவர்களின் 68-வது பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை அண்ணாநகர் யானைக்குழாய் அருகே மக்கள் நீதி மய்யம் வடக்கு தொகுதி நற்பணி இயக்க மாவட்ட செயலாளர் சமூகசேவகர் அண்ணாநகர் முத்துராமன் தலைமையில் சலவை தொழிலாளிகளுக்கு அயர்ன்பாக்ஸ் மற்றும் அயர்ன் வண்டிகள், இனிப்புகள் வழங்கப்பட்டது.
மேலும் கோ.புதூர் தாமரைத் தொட்டி அருகே உள்ள பூங்காவில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மனநலம் குன்றியோருடன் கேக் வெட்டி கொண்டாடிய அண்ணாநகர் முத்துராமன் மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி, மளிகை பொருட்களையும் வழங்கினார்.
பின்னர் மதிச்சயம் ஆர்.ஆர்.மண்டபம் பகுதியில் உள்ள தாணு மலையன் அறக்கட்டளை ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் உள்ள பெரியோர்களுக்கு மதிய உணவை அவர் வழங்கினார்.
மேலும் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளுக்கு பதக்கம் அணிவித்து கௌரவித்தார்.
இந்நிகழ்ச்சிக்கு மக்கள் நீதி மய்யம் மண்டல தலைவர் அழகர் முன்னிலை வகித்தார்.இதில் மாற்றம் தேடி பாலமுருகன், நாகேந்திரன், குணா அலி, முருகன், குமார், பூமிராஜா, பூசாரி மகாலிங்கம், ராமலிங்கம், மைதீன், ஆர்.சி.மணிகண்டன், ஆசைத்தம்பி, பாண்டியன், பி.கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு எதிராக மதுரை புதூரில் எஸ்டிபிஐ கட்சி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் !
மதுரை தெற்கு மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க, வடக்கு மாவட்ட தலைவர் பிலால்தீன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில்
SDPI_கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் மற்றும் மாநில துணை தலைவர் S.M.ரபீக், மாநில செயலாளர் அபூபக்கர் சித்தீக், அதிமமுக நிறுவனர் பசும்பொன் பாண்டியன்,விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச் செயலாளர் வெ.கணியமுதன், திமுக மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் பாக்கியநாதன் ஆகியோர் கலந்து கொண்டு ஒன்றிய அரசின் ஹிந்தி திணிப்புக்கு எதிராக கண்டன உரையாற்றினர்.
மேலும் இந்த ஆர்பாட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள்,தொகுதி, வார்டு, கிளை நிர்வாகிகள், செயல்வீரர்கள் ஆதரவாளர்கள், பொதுமக்கள் ஜமாத்தார்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டனங்களை பதிவு செய்தனர்.
ஆர்ப்பாட்டத்தின் நிறைவாக வடக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் செந்தில் நன்றி கூறினார்.
தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்கம், மதுரை மாநகராட்சி அனைத்து பணியாளர்கள் சங்கம் இணைந்து நடத்திய மாபெரும் மாலை நேர கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.!
தமிழகத்தில் உள்ள 20 மாநகராட்சிகளில், நிரந்தர பணியாளர்களின் 90% குறைப்பதையும் தனியார் மூலம் ஒப்பந்த பணியாளர்கள் நியமிக்கும் அரசாணை எண் 152 ஐ ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்கம், மதுரை மாநகராட்சி அனைத்து பணியாளர்கள் சங்கம், மதுரை மாநகராட்சி தொழிலாளர் சங்கம் (சிஐடியூ) இணைந்து நடத்திய மாபெரும் மாலை நேர கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை முன்பு நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணைச் செயலாளர் சி.எம் மகுடீஸ்வரன் தலைமை வகித்தார். மதுரை மாநகராட்சி அனைத்து பணியாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் பார்த்தசாரதி, மாநிலத் துணைத் தலைவர் பஞ்சவர்ணம், பொறியியல் பிரிவு சங்க அவைத்தலைவர் தனசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எழுத்தர் சங்கத் துணைத் தலைவர் சின்னச்சாமி வரவேற்புரை ஆற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் நீதிராஜா, நெடுஞ்சாலைத்துறை மாநில பொருளாளர் இரா.தமிழ், சிஐடியு தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் தோழர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இதில் அனைத்து பணியாளர்கள் சங்க தலைவர் செந்தில்குமரன், கூட்டுறவு அலுவலர் சங்கத் தலைவர் கே.கண்ணன், பொறியியல் பிரிவு பணியாளர்கள் சங்க பொருளாளர் கே.துரைக்கண்ணன், துணைச் செயலாளர் பழனிக்குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்
மரணம் அடைந்த ஆதரவற்றோர்களை தொடர்ந்து நல் அடக்கம் செய்து வரும் தன்னார்வலர்கள்!!!
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அடையாளம் காணப்படாத மற்றும் ஆதரவு அற்ற நிலையில் மரணம் அடைந்த சுமார் ஆறு நபர்களின் உடல்களை உறவுகள் அமைப்பு மற்றும் ராயல் என்டர் பிரைஸ் & ராயல் கேட்டரிங் நிர்வாகம் சேர்ந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் இருந்து பலவிழி சுடுகாட்டுக்கு எடுத்து சென்று இறந்த உடல்களுக்கு உரிய மரியாதையுடன் நல் அடக்கம் செய்தனர்.
தொடர்ந்து இது போன்ற இறந்த போன ஆதரவற்றோர்களின் உடல்களை தகுந்த முறையில் சான்றுகள் பெற்று நல் அடக்கம் செய்து வரும் உறவுகள் அமைப்பின் நிர்வாகி வி.ஜான்சன் மற்றும் ராயல் என்டர் பிரைஸ் & ராயல் கேட்டரிங் நிர்வாகி கார்த்திக் ஆகியோரை மருத்துவமனை நிர்வாகமும் பொதுமக்களும் நன்றியோடு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
மதுரை T.அரசபட்டியை சேர்ந்த 3 வயதான குழந்தை திருமருது பிறந்த நாளை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி.!
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள எஸ்.பி திருமால் – பாண்டியம்மாள் ஆகியோரின் மகன் திருமருது (வயது 3) பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை கோ.புதூர் தாமரை தொட்டி அருகே உள்ள பூங்காவில், ஏழை,எளிய மாற்றுத்திறனாளிகள் 15க்கும் மேற்பட்டோருக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை “மாற்றம் தேடி” பாலமுருகன் அவர்களின் தலைமையிலும், சமூக ஆர்வலர்கள் அண்ணாநகர் முத்துராமன், பாரதி,அசோக்குமார், மூர்த்தி, பூசாரி மகாலிங்கம், செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையிலும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் திருமால் குடும்பத்தினர் பலர் கலந்து கொண்டனர்.
இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்
மதுரை ஆரப்பாளையத்தில் கவுன்சிலர் ஜெயராம் ஏற்பாட்டில் பகுதி சபைக் கூட்டம்.!
மதுரை ஆரப்பாளையத்தில் 58-வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஜெயராம் ஏற்பாட்டில், பகுதி சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி பொதுமக்களிடம் இருந்து குறைதீர் மனுக்களை பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதில் மாநகராட்சி அதிகாரிகள் கனி, கவிதா மற்றும் திமுக நிர்வாகிகள் எஸ்.எஸ்.மாறன், சீனிரமேஷ், மூவேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
மதுரை மாநகராட்சி 49-வது வார்டு கவுன்சிலர் செய்யது அபுதாகீர் தலைமையில் பகுதி சபை கூட்டம்.!
தமிழகத்தில் உள்ளாட்சி தினம் (நவம்பர் 01) இன்று கடைப்பிடிக்கப்பட்டது. எனவே மாநிலம் முழுவதும் இன்று கிராம சபை மற்றும் நகர சபை கூட்டங்கள் நடைபெற்றது.
மதுரை நெல்பேட்டை உமர்புலவர் பள்ளி திடலில் பகுதி சபை கூட்டம் 49- வது வார்டு மாமன்ற உறுப்பினர் செய்யது அபுதாகீர் தலைமையில் நடைபெற்றது
இக்கூட்டத்தில் மாநகராட்சி உதவி பொறியாளர் முருகன் உள்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்
மதுரை மாவட்டம் காதக்கிணறு ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்.!!
இக்கூட்டத்தில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஆரோக்கிய ஜெயந்தி ஸ்டாலின், வார்டு உறுப்பினர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர் வில்சன், ஊராட்சி செயலர் செல்லப்பா, வருவாய் அலுவலர், கிராம நிர்வாக அலுவலர், கால்நடை மருத்துவர்கள் மற்றும் கிராம பொதுமக்கள், தூய்மை பணியாளர்கள், செவிலியர்கள் நியாய விலைக்கடை பணியாளர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்
பாஜக மதுரை மாநகர் மாவட்ட தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட மகா.சுசீந்தரனுக்கு கோல்டு எஸ்.பிச்சை வாழ்த்து.!
பாஜக மதுரை மாநகர் மாவட்ட தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட மகா.சுசீந்தரனுக்கு பாஜக நிர்வாகிகள் ஏராளமானோர் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
அந்த வகையில் மதுரை பீ.பீ.குளத்தில் உள்ள பாரதிய ஜனதா கட்சி தலைமை அலுவலகத்தில், மாநகர் மாவட்ட புதிய தலைவர் மகா.சுசீந்திரன் அவர்களுக்கும், வர்த்தக பிரிவின் மாநில செயலாளர் கூடுதல் பொறுப்பாக மாவட்ட பார்வையாளராக பொறுப்பேற்றுக் கொண்ட கார்த்திக் பிரபு அவர்களுக்கும், வர்த்தகப் பிரிவு மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் கோல்டு எஸ்.பிச்சை சந்தன மாலை மற்றும் சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.