Friday , November 22 2024
Breaking News
Home / செய்திகள் (page 28)

செய்திகள்

All News

தேனி மாவட்டம் கொண்டமநாயக்கன்பட்டி என்.ஜி.ஓ நகரில் அக்ரி ரகுவரன்-அனிதா இல்ல புதுமனை புகுவிழா..!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே கொண்டமநாயக்கன்பட்டி என்.ஜி.ஓ நகரில், ஜோதி மாணிக்கம் பெருமாள் கோவில் பங்காளி அக்ரி ரகுவரன்-அனிதா இல்ல புதுமனை புகுவிழா நடைபெற்றது.

இவ்விழாவில் தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் முருக்கு ஓடை ராமர், அதிமுக மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.டி.கே ஜக்கையன், ஒன்றிய சேர்மன் லோகிராஜன், ஒன்றிய பொருளாளர் லோகநாதன் உள்பட மாவட்ட, ஒன்றிய, வார்டு நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

பாரதிய ஜனசங்கம் ஸ்தாபகர் ஷ்யாம் பிரசாத் முகர்ஜி நினைவு தினம் :- மதுரை காளவாசல் மண்டலில் மலர் அஞ்சலி செலுத்திய பாஜக நிர்வாகிகள்…!

பாரதிய ஜனசங்கம் ஸ்தாபகர் ஷ்யாம் பிரசாத் முகர்ஜி நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை காளவாசல் மண்டல் சார்பாக மலரஞ்சலி 

மதுரை ஜூன் 23

“பாரதிய ஜனசங்கம் ஸ்தாபகர் “ஷ்யாம்பிரசாத் முகர்ஜியின்” 72 வது நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது திருவுருவ படத்திற்கு மதுரை காளவாசல் மண்டல் சார்பாக  பாஜக நிர்வாகிகள் மலர் தூவி நினைவு அஞ்சலியை செலுத்தினர்

மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஷியாம் பிரசாத் முகர்ஜி “பாரதிய ஜனசங்கம் என்ற அமைப்பை தொடங்கினார். மேலும் ஜவர்ஹலால் நேரு மந்திரி சபையில் தொழில் மற்றும் வர்த்தகத்துறை  அமைச்சராக பதவி வகித்தார். 1980 ஆம் வருடம் பாரதிய ஜன சங்கம் பாரதிய ஜனதா கட்சியாக பெயர் உருவெடுத்தது. இன்று இந்தியாவில் மாபெரும் கட்சியாக பாரதிய ஜனதா கட்சி உருவாகி அதன் பிரதமராக மூன்றாவது  முறையாக நரேந்திரமோடி  பிரதமராக பதவி ஏற்று சாதனை படைத்துள்ளார். தமிழ்நாட்டில் பாஜக மாநில தலைவராக உள்ள அண்ணாமலை தலைமையில் வலுவான எதிர்க்கட்சியாக பாஜக மாறி வருகிறது. இந்நிலையில் பாரதிய ஜனசங்கம் 

ஸ்தாபகர் “ஷ்யாம்பிரசாத் முகர்ஜியின்” 72 வது நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரை காளவாசல் மண்டலில், மாவட்ட துணைத் தலைவர் ராஜ்குமார் தலைமையிலும், காளவாசல் மண்டல் தலைவர் முனைவர் பிச்சைவேல் முன்னிலையில்  பிரசாத் முகர்ஜியின் திருவுருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் தொழில் பிரிவு மாவட்ட செயலாளர் பாலமுருகன், பொருளாதார பிரிவு மாவட்ட துணைத்தலைவர் உமா மகேஸ்வரி, மாவட்டச் செயலாளர் சாய் கிருஷ்ணமூர்த்தி,மாவட்ட பொதுச்செயலாளர் ஸ்ரீ ராம், மண்டல் செயலாளர் அ.கண்ணன், கிளைத்தலைவர் பொன்முருகன், சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் கரீம்பாய், கலை கலாச்சார பிரிவு மாவட்ட செயலாளர் தினேஷ்குமார், திருக்கோவில் பிரிவு கண்ணன்சாமி, மகளிரணி மாவட்ட செயலாளர் உமாராணி  மற்றும் வல்லத்தரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பூப்பூ நீராட்டு விழாவில் பசுமைக்குடி தன்னார்வ இயக்கத்தின் சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது…

கரூர் மாவட்டம் கடவூர் ஊராட்சி ஒன்றியம் வீராணம்பட்டி திரு ஏழுமலை அவர்கள் எனது மகளின் பூப்பூ நீராட்டு விழாவிற்கு, வருகை தரும் உறவினர்களும், நண்பர்களும் மரக் கன்றுகள் வழங்க வேண்டும் என திரு நரேந்திரன் கந்தசாமி கணினி தொழில்நுட்ப ஆலோசகர் (அமெரிக்கா) பசுமைக்குடி தன்னார்வ இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர், அவர்களிடம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, திரு நரேந்திரன் கந்தசாமி அவர்களின் அறிவித்தலின்படி ஐயா திரு மு கந்தசாமி வரவனை ஊராட்சி மன்ற தலைவர் அவர்கள் மூலமாக 300 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளும், பழக்கன்றுகளும் வழங்கப்பட்டது.

மேலும் பசுமைக்குடி தன்னார்வலர்கள் கருப்பையா, காளிமுத்து, கவிநேசன், செந்தமிழ்செல்வன் ஆகியோரும் கலந்து கொண்டார்கள். பசுமைக்குடி தன்னார்வலர்கள் போட்டோவுடன் பேனர் வைத்து வரவேற்ற குடும்பத்திற்கு பசுமைக்குடி தன்னார்வலர்கள் சார்பில் நன்றி தெரிவித்தார் கருப்பையா அவர்கள்.

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் நடிகர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை தீக்கதிர் அலுவலகம் எதிரே உள்ள திருவள்ளுவர் நகரில் இரத்த தானம் மற்றும் இலவச கண் பரிசோதனை முகாம்..!

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் நடிகர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை தீக்கதிர் அலுவலகம் எதிரே உள்ள திருவள்ளுவர் நகரில் இரத்த தானம் மற்றும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

இம்முகாமில் பங்கேற்ற பொதுமக்களுக்கு கம்ப்யூட்டர் கண் பரிசோதனை, இரத்த அழுத்த பரிசோதனை, சர்க்கரை அளவு பரிசோதனை, மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

இந்த பரிசோதனை முகாமில் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

பின்னர் பொதுமக்களுக்கு மாபெரும் அன்னதானம் மற்றும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்புக் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

விழாவிற்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் எல்லீஸ் பிரபு, எல்லீஸ் சரவணன், கணபதி, ஆதிகேசவன், பிரபா, சக்திமுருகன், தங்கப்பாண்டி, பால்பாண்டி, வெற்றி, ரோம்லஸ், பிரசன்னா, சிவா, தனபால் உள்ளிட்ட நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

நீட் தேர்வில் பிஜேபி எவ்வளவு முயற்சி செய்தாலும், மோசடி, ஊழல் மற்றும் கல்வி மாஃபியாவை ஊக்குவிக்கும் பொறுப்பில் இருந்து தப்ப முடியாது.

Madhya Pradesh: Human excreta smeared on dalit man; Kharge attacks BJP govt  - The Week

3 உண்மைகள் மற்றும் 3 கேள்விகளுக்கு – மோடி அரசு பதில் சொல்ல வேண்டும்!

1.

உண்மை – தாள் கசிவுக்கு எதிரான சட்டம் அறிவிக்கப்படவில்லை, இது குறித்து கல்வி அமைச்சரிடம் செய்தியாளர் சந்திப்பில் கேட்டபோது, ​​இந்த சட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது என்றார். இந்த சட்டத்திற்கு 13 பிப்ரவரி 2024 அன்று குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைத்தது, ஆனால் நேற்று இரவுதான் சட்டம் அறிவிக்கப்பட்டது.

கேள்வி – மோடி அரசின் கல்வி அமைச்சர், சட்டம் அறிவிக்கப்பட்டு விட்டதாகவும், சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் அதன் விதிகளை உருவாக்குவதாகவும் மீண்டும் பொய் சொன்னது ஏன்?

2.

உண்மை – முதலில் தாள் கசிவை மறுத்த கல்வி அமைச்சர், பின்னர் குஜராத், பீகார், ஹரியானா ஆகிய மாநிலங்களில் கைது செய்யப்பட்ட போது, ​​சில இடங்களில் உள்நாட்டில் தாள்கள் கசிந்ததால், மீண்டும் தேர்வை நடத்த முடியாது என்று கூறுகிறார். . கடந்த 2015-ம் ஆண்டு 44 மாணவர்கள் மட்டுமே முன் மருத்துவத் தேர்வில் ஈடுபட்டிருந்த நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் 6 லட்சம் பேருக்கு மீண்டும் தேர்வு நடத்தப்பட்டது.

கேள்வி – நீட் தேர்வில் கூட, 0.001 முறைகேடு நடந்திருந்தால், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாண்புமிகு உச்ச நீதிமன்றம் கூறியும், “முறைகேடு” என்ற விஷயத்தை ஏற்றுக் கொண்ட மோடி அரசு ஏன் தேர்வை மீண்டும் நடத்தவில்லை? “?

3.

உண்மை – NTA 9 நாட்களில் 3 முக்கிய தேர்வுகளை ரத்து செய்துள்ளது அல்லது ஒத்திவைத்துள்ளது. சட்டம் இயற்றப்பட்ட பிறகும், UP போலீஸ் ஆட்சேர்ப்பு மற்றும் பதவி உயர்வு வாரியத்தின் (UPPRPB) தாள் பாஜக ஆளும் உத்தரபிரதேசத்தில் கசிந்தது, அதன் இணைப்புகள் குஜராத்தில் உள்ள ஒரு நிறுவனத்துடன் இணைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

கேள்வி – காகிதக் கசிவுக்கு எதிராக சட்டம் இயற்றிய பின்னரும் ஏன் தாள்கள் கசிகின்றன? கடந்த 7 ஆண்டுகளில் 70 ஆவணங்கள் கசிந்தபோது, ​​மோடி அரசு அதன் மீது ஏன் கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை?

பாஜக-ஆர்எஸ்எஸ்-ன் குறுக்கீடுகள் மற்றும் பக்கவிளைவுகளில் இருந்து கல்வி அமைப்பும், தன்னாட்சி அமைப்புகளும் விடுபடாத வரை…

புதிய சட்டம் கொண்டு வருவது பாஜகவின் வெள்ளையடிப்பு

…அதுவரை இந்த மோசடி, திருட்டு, ஊழல் தொடரும்!

கள்ளர் பள்ளிகள் மற்றும் ஆதிதிராவிடர் பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையுடன் இணைப்பதற்கு அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்கம் எதிர்ப்பு..!

கள்ளர் பள்ளிகள் மற்றும் ஆதிதிராவிடர் பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையுடன் இணைக்கும் செயலுக்கு அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்க மாநிலத் தலைவர் ஆபேல்மூர்த்தி எதிர்ப்பு தெரிவித்து பேசினார்

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் சங்கீதா தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் கூட்டுறவு இணைப்பதிவாளர் குருமூர்த்தி மற்றும்
பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அன்புச்செல்வன் மற்றும் வட்டாட்சியர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட அனைத்து விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் அப்துல் கலாம் அறிவியல் விவசாய சங்க மாநில தலைவர் ஆபேல் மூர்த்தி கலந்து கொண்டு பேசுகையில்,

கள்ளர் பள்ளிகள் மற்றும் ஆதிதிராவிடர் பள்ளிகளின் பெயர்களை நீக்கி பள்ளிக்கல்வி துறையோடு இணைக்க கூடாது.

ஆங்கிலேயர்கள் கொண்டு வந்த சட்டத்தை தொடர்ந்து அமல்படுத்த வேண்டும். அந்த சட்டத்தை நீக்க நடவடிக்கை எடுப்பதை தவிர்க்க வேண்டும். ஆங்கிலேயர்கள் கட்டிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உட்பட பல்வேறு கட்டிடத்தை பயன்படுத்தும் நாம் அவர்களின் சட்டத்தை நீக்குவதற்கு முயற்சி எடுப்பது மிகவும் கண்டனத்திற்கு உரியது. கள்ளர் பள்ளிகள் மற்றும் ஆதிதிராவிடர் பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையோடு இணைத்தால் மாணவர்களுக்கான சலுகைகள் பறிக்கப்பட்டு அவர்களது எதிர்காலம் பாதிக்கப்படும். மேலும் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு அவர்கள் முதல்வரிடம் வழங்கிய அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள பள்ளிகளுக்கு மாணவர்கள் வரும்போது திருநீறு கயிறு உள்ளிட்ட மத அடையாளங்களை மாணவர்கள் அணியக்கூடாது என்ற அறிக்கையை செயல்படுத்த கூடாது.

அவரவர்கள் மத அடையாளங்களை வெளிப்படுத்துவதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு. எனவே மாணவர்கள் எப்போதும் போல் கயிறு,திருநீறு அணிந்து வருவதற்கு அனுமதி அளிக்க வேண்டும். என பேசினார்.

இந்நிகழ்வில் அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்கத்தின் செக்கானூரணி பகுதி தலைவர் செல்லப்பாண்டி மற்றும் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

“2025 ஆம் ஆண்டிற்குள் குழந்தை தொழிலாளர் முறை நிச்சயம் ஒழிக்கப்படும்” : அமைச்சர் சி.வி.கணேசன் உறுதி!

"2025 ஆம் ஆண்டிற்குள் குழந்தை தொழிலாளர் முறை நிச்சயம் ஒழிக்கப்படும்" : அமைச்சர் சி.வி.கணேசன் உறுதி!

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல்நாளான நேற்று மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இன்று கேள்வி நேரத்துடன் சட்டப்பேரவை தொடங்கியது. பின்னர் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.

இதில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் சி.வி.கணேசன் பதிலளித்து உரையாற்றினார்.

அப்போது பேசிய அமைச்சர் சி.வி.கணேசன், ” குழந்தை தொழிலாளர் முறையினை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அமலாக்க அலுவலர்களால் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு 65 குழந்தை தொழிலாளர்களும், 274 வளரிளம் பருவத் தொழிலாளர்களும், 196 கொத்தடிமைத் தொழிலாளர்களும் மீட்கப்பட்டு அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2025 ஆம் ஆண்டிற்குள் குழந்தை தொழிலாளர் முறை தமிழ்நாட்டில் அகற்றப்படும்” என தெரிவித்துள்ளார்.

சட்டசபையில் இன்று விஸ்வரூபமாகும் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகள்- அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனை!

சட்டசபையில் இன்று விஸ்வரூபமாகும் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகள்- அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனை!

சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் இதர கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து கேள்வி எழுப்ப உள்ளனர்.

முன்னதாக கள்ளக்குறிச்சி சென்ற தமிழக அமைச்சர்கள் குழுவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார்.

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 42 பேர் உயிரிழந்துள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழ்நாட்டையே பதறவைத்துள்ளது கள்ளக்குறிச்சியின் மரண ஓலம். தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் தொடர்ந்து கள்ளக்குறிச்சிக்கு சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து வருகின்றனர். தமிழ்நாடு அரசு ஏற்கனவே ரூ10 லட்சம் நிவாரண உதவி அறிவித்துள்ளது. இதற்கு தேமுதிக, நாம் தமிழர் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பாஜகவும் ரூ1 லட்சம் நிதி உதவி அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கூடுதல் நிதி உதவி வழங்க வேண்டும் என அதிமுக வலியுறுத்தி உள்ளது.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் முதல் கடைநிலை போலீசார் வரை பல்வேறு தரப்பினர் மீது தமிழக அரசு அடுத்தடுத்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் தமிழ்நாடு சட்டசபையில் இன்று நீர்வளத்துறை மானியக் கோரிக்கை தாக்கல் செய்யபட்டு விவாதம் நடைபெற உள்ளது. தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சியான அதிமுக, பாஜக மற்றும் திமுகவின் கூட்டணி கட்சிகளும் கள்ளச்சாராய மரணங்கள் குறித்து கேள்வி எழுப்ப உள்ளன. இது தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ் ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ளன.

அரசியல் கட்சிகளின் கருத்துகளுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் விரிவான பதிலைத் தரக் கூடும். முன்னதாக கள்ளக்குறிச்சி சென்றுள்ள தமிழ்நாடு அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு, மா.சுப்பிரமணியம் ஆகியோர் அடங்கிய குழு முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளது. இந்த ஆலோசனைகளின் அடிப்படையில் முதல்வர் ஸ்டாலின் விரிவான பதிலைத் தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக நேற்று தமிழக சட்டசபையில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாரயம் குடித்து உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

மதுரை மாவட்டம் ஆலாத்தூரில் நேயா டிரஸ்ட் அலுவலகம் திறப்பு விழா..!

மதுரை மாவட்டம் ஆலாத்தூரில் நேயா டிரஸ்ட் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. மடீட்சியா செயலாளர் கோடீஸ்வரன் அலுவலகத்தை திறந்து வைத்தார்.

ஆலாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் சரண்யா ராஜவேல் குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். நேயா டிரஸ்ட் நிறுவனர் அமுதா சதீஸ்குமார் அனைவரையும் வரவேற்று பேசினார்.

மடீட்சியா துணைத் தலைவர் அசோக் மரக்கன்றுகளை வழங்கினார்.தமிழ்நாடு மெர்க்ககன்டைல் வங்கியின் ஓய்வு பெற்ற மதுரை முதுநிலை மேலாளர் அய்யம்பெருமாள், ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் பழனிக்குமார் ஆகியோர் பள்ளிக் குழந்தைகளுக்கு நோட்புக்,பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கினர்.

ஓய்வு பெற்ற டிஎஸ்பி கோபாலகிருஷ்ணன் அன்னதானத்தை தொடங்கி வைத்தார். எல்.ஐ.சி ஏஜென்ட் பரமசிவம், டி.எம். புட்ஸ் நிறுவனர் சரவணகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி பேசினர்.

நிகழ்ச்சியின் முடிவில் சுபம் கோல்டு பைனான்ஸ் ஹேமா முத்துப்பாண்டி நன்றி கூறினார்.

பாரத் ஜோடோ நாயகன் திரு. ராகுல் காந்தி (எம்.பி – ரேபரேலி, உத்தரபிரதேசம்) அவர்களின் 54 வது பிறந்தநாளில் மரக்கன்றுகள் நடும் விழா…19.6.2024

திட்ட அமலாக்கம்: கிரீனரா; கரூர் காங்கிரஸ் தகவல் தொழில்நுட்ப பிரிவு & சமூக ஊடகம்; அரவக்குறிச்சி சிறப்பு நிலை பேரூராட்சி

திட்டத் தலைமை: காங்கிரஸ் தகவல் தொழில்நுட்ப பிரிவு & சமூக ஊடகம், இந்திய கூட்டணி

திட்ட ஆதரவாளர்: பாலா டிரஸ்ட், பசுமைக்குடி

திட்ட வழிகாட்டுதல்: செல்வி ஜோதிமணி (எம்.பி – கரூர் தொகுதி)

திட்ட கட்டமைப்பு: சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் நிர்வாகம் (ESG)

திட்ட இலக்கு: அரவக்குறிச்சியை பசுமையான மற்றும் நிலையான அரவக்குறிச்சியை உருவாக்கி, நகரத்திலும் அதன் சுற்றுப்புறங்களிலும் பல்வேறு பழங்கள் மற்றும் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கும் விதமாக விழா நடைபெற்றது.

விழாவில் வரவனை ஊராட்சி மன்ற தலைவர் திரு கந்தசாமி அவர்களும் மற்றும் பசுமைக்குடி தன்னார்வலர்கள் திரு கருப்பையா, திரு காளிமுத்து, திரு பாலசுப்ரமணியம், அரவக்குறிச்சி பேரூராட்சி தலைவர் திருமதி ஜெயந்தி மணிகண்டன், அரவக்குறிச்சி பேரூராட்சி செயல் தலைவர் திரு ஆனந்தன், அரவக்குறிச்சி காவல் உதவி ஆய்வாளர் திரு திருநாவுக்கரசு, கரூர் மாவட்ட காங்கிரஸ் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத்துறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு பாலமுருகன், அரவக்குறிச்சி வார்டு கவுன்சிலர்கள். திருமதி பஜிலா பானு, திரு ரவி, திரு மைக்கேல், அரவக்குறிச்சி காங்கிரஸ் வட்டார தலைவர் திரு காந்தி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வழக்கறிஞர் பிரிவு மாநிலத் செயலாளர் திரு முகமது அலி மற்றும் அரவக்குறிச்சி பாவா நகர், கரடிப்பட்டி, சேவியர் தெரு பொதுமக்கள், தூய்மை காவலர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

திட்ட அமலாக்கம்: கிரீனரா; கரூர் காங்கிரஸ் தகவல் தொழில்நுட்ப பிரிவு & சமூக ஊடகம்; அரவக்குறிச்சி சிறப்பு நிலை பேரூராட்சி

திட்டத் தலைமை: காங்கிரஸ் தகவல் தொழில்நுட்ப பிரிவு & சமூக ஊடகம், இந்திய கூட்டணி

திட்ட ஆதரவாளர்: பாலா டிரஸ்ட், பசுமைக்குடி

திட்ட வழிகாட்டுதல்: செல்வி ஜோதிமணி (எம்.பி – கரூர் தொகுதி)

திட்ட கட்டமைப்பு: சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் நிர்வாகம் (ESG)

திட்ட இலக்கு: அரவக்குறிச்சியை பசுமையான மற்றும் நிலையான அரவக்குறிச்சியை உருவாக்கி, நகரத்திலும் அதன் சுற்றுப்புறங்களிலும் பல்வேறு பழங்கள் மற்றும் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கும் விதமாக விழா நடைபெற்றது.

விழாவில் வரவனை ஊராட்சி மன்ற தலைவர் திரு கந்தசாமி அவர்களும் மற்றும் பசுமைக்குடி தன்னார்வலர்கள் திரு கருப்பையா, திரு காளிமுத்து, திரு பாலசுப்ரமணியம், அரவக்குறிச்சி பேரூராட்சி தலைவர் திருமதி ஜெயந்தி மணிகண்டன், அரவக்குறிச்சி பேரூராட்சி செயல் தலைவர் திரு ஆனந்தன், அரவக்குறிச்சி காவல் உதவி ஆய்வாளர் திரு திருநாவுக்கரசு, கரூர் மாவட்ட காங்கிரஸ் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத்துறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு பாலமுருகன், அரவக்குறிச்சி வார்டு கவுன்சிலர்கள். திருமதி பஜிலா பானு, திரு ரவி, திரு மைக்கேல், அரவக்குறிச்சி காங்கிரஸ் வட்டார தலைவர் திரு காந்தி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வழக்கறிஞர் பிரிவு மாநிலத் செயலாளர் திரு முகமது அலி மற்றும் அரவக்குறிச்சி பாவா நகர், கரடிப்பட்டி, சேவியர் தெரு பொதுமக்கள், தூய்மை காவலர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

சிறப்பு விருந்தினராக ஆறுமுகம் அகடாமி பள்ளியின் பசுமை அரசி செல்வி நிரஞ்சனா அவர்கள் கலந்து கொண்டு சுற்றுச்சூழல் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு கொடுத்தார்.

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES