Thursday , December 12 2024
Breaking News
Home / செய்திகள் (page 82)

செய்திகள்

All News

மதுரை மாட்டுத்தாவணியில் ரைட் பைக்ஸ் இருசக்கர வாகன விற்பனை நிறுவனம் திறப்பு விழா.!

மதுரை மாட்டுத்தாவணி பழமண்டி வணிக வளாகத்தில் ரைட் பைக்ஸ் 7- வது இருசக்கர வாகன விற்பனை நிறுவனத்தை, ஜெயபாலன், நிர்மலா ஜெயபாலன், நிர்வாக இயக்குனர் ராஜுவ் சுப்பிரமணியம், ரேவதி ராஜுவ் , சுசி நிறுவனத்தலைவர் சுந்தர் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக ரம்யா மருத்துவமனை உரிமையாளர் டாக்டர் துரைராஜ் கலந்து கொண்டு சிறப்பித்தார். இதில் நிறுவனத்தின் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள், நண்பர்கள், உறவினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மதுரையில் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்.!

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பால் விலை, சொத்து வரி குடிநீர் வரி மற்றும் மின் கட்டணம் உயர்வை கண்டித்து இந்திய மாதர் தேசிய சம்மேளனம் மதுரை மாநகர் – புறநகர் சார்பில், புறநகர் மாவட்ட செயலாளர் நாகஜோதி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இந்த ஆர்ப்பாட்டத்தில் மாதர் சங்கத்தின் மாநில குழு உறுப்பினர் மணிமேகலை, மாதர் சங்கத்தின் மாநில துணைத் தலைவரும் மாவட்ட செயலாளருமான இராஜலெட்சுமி கண்டன உரை ஆற்றினர்.

மேலும், ஏஜடியூசி மாவட்ட துணைச் செயலாளர் தாமஸ், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் எம்.எஸ் முருகன், புறநகர் மாவட்ட செயலாளர் பி.முத்துவேல் ஆகியோர் இந்த ஆர்ப்பாட்டத்தை வாழ்த்தி பேசினர்.

மாநில குழு உறுப்பினரும் மாவட்ட தலைவருமான கற்பக வள்ளி, பொருளாளர் ஜாகீர் நிஷா, மாதர் உறுப்பினர்கள், நிர்வாகிகள், பெண்கள் உட்பட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

மக்கள் கண்காணிப்பகம் நிறுவனர் ஹென்றி டிபேனுடன் டாக்டர் ஜாகிர் உசேன் மரியாதை நிமித்தமாக சந்திப்பு.!

இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு பிரவாசி புலம்பெயர்ந்த இந்தியர்கள் மீட்பு மற்றும் நல அமைப்பின் நிறுவனர் டாக்டர் ஜாகிர் உசேன் மக்கள் கண்காணிப்பகம் நிறுவனர் ஹென்றி டிபேன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.

மதுரை 58-வது வார்டு கவுன்சிலர் ஜெயராம் குப்பை அள்ளும் மிதிவண்டியை துப்புரவு பணியாளர்களுக்கு வழங்கினார்

மதுரை மாநகராட்சி 58வது வார்டு ஞானஒளிவுபுரம் A.A.ரோட்டில் அமைந்துள்ள பாமா மெடிக்கல் சார்பாக குப்பை அள்ளும் மிதிவண்டியை வார்டு கவுன்சிலர் மா.ஜெயராம் அவர்கள் துப்புரவு பணியாளர்களுக்கு வழங்கினார்.

உடன் வட்ட கழக செயலாளர் சீனிரமேஷ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உள்ளனர்.

மதுரையில் எஸ்டிபிஐ கட்சியின் தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம்.!


எஸ்டிபிஐ கட்சியின் தெற்கு மாவட்ட பொதுக்கைகுயானைக்கல் பகுதியில் உள்ள ஹோட்டல் பிரசிடென்ட்ல் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு

மாவட்ட அமைப்பு பொதுச் செயலாளர் சிராஜ்தீன் வரவேற்புரையும்,

மாவட்ட செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் முகமது யூசுப் தொகுப்புரையும்,

மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர் தலைமையுரையும் நிகழ்த்தினார்கள்.

மாவட்ட பொதுச் செயலாளர் சாகுல் ஹமீது கடந்த ஒரு ஆண்டிற்கான அறிக்கையை சமர்ப்பித்தார்.

மாநில செயலாளர் நஜ்மா பேகம் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.

மேலும்

SDTU மாநில துணைத் தலைவர் அப்துல் சிக்கந்தர்,
SDTU மாநில செயற்குழு உறுப்பினர் சத்ய மூர்த்தி,

வழக்கறிஞர் அணி மண்டல தலைவர் வழக்கறிஞர் பஷீர்,

WIM மாநில செயற்குழு உறுப்பினர் கதிஜா

உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இக்கூட்டத்தில் கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

1) சென்னை போன்ற நகரங்களில் கடந்து சென்ற மழை காலங்களில் வெள்ளம் உள்ளிட்ட பேரிடர் நிகழ்வுகளில் சிறப்புற கையாண்டு சீரிய செயலாற்றிய மாண்புமிகு மாநில முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

2) மதுரை சாலைகள் குறிப்பாக நகரின் பிரதான பகுதியில் உள்ள முக்கிய சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன. ஆகவே உடனடியாக சரி செய்து தர மதுரை மாவட்ட அரசு நிர்வாகத்தை கேட்டு கொள்கிறோம்.

3) மதுரை ஸ்மார்ட் சிட்டி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

4)மழை காலத்தில் பெரியார் பேருந்து நிலைய பகுதியில் வெள்ளம் சூழ்ந்து மக்கள் அவதிப்படுகிறார்கள். இதற்கு உண்டான உரிய செயல் திட்டங்களை வகுத்து தீர்வு காண வேண்டும்.

5)மதுரையில் கஞ்சா, குட்கா போன்ற போதை வஸ்துகள் மாணவர்களிடம் மிகவும் சுலபமாக கிடைக்கும் அவல நிலை உள்ளது. இக்கொடிய பழக்கத்தினால் சமூக சீர்கேடு மற்றும் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. சம்மந்தப்பட்ட நிர்வாகம் உடனடியாக இரும்பு கரம் கொண்டு அடக்கி நம் நாட்டின் வருங்கால தூண்களை வளமான தலைமுறைகளாக காத்திட வேண்டும்.

என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இறுதியாக மாவட்ட பொருளாளர் சிக்கந்தர் நன்றியுரை கூறினார்.

மதுரை ஜெய்ஹிந்த்புரம் வீட்டு உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் 16-வது ஆண்டு விழா.!

மதுரை ஜெய்ஹிந்த்புரம் வீட்டு உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் 16-வது ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் தலைவர் மலர்பாண்டியன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு பொருளாளர் சுகுமார், துணைத்தலைவர் கணேசன், மகளிர் பிரிவு கயர்நிஷாகபீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் சுப்புராம் வரவேற்புரை ஆற்றினார்.

இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ மற்றும் துணை மேயர் நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

இந்விகழ்வில் மாமன்ற உறுப்பினர்கள் எஸ்.வி.முருகன், லக்சிகா ஸ்ரீ, காவேரி, எஸ்.எம்.டி ரவி, தமிழ்ச்செல்வி மற்றும் என்.எம் மாரி, பென்குயின் நடராஜன், நல்லதம்பி, செல்வராஜ், சண்முகசுந்தரம், வேல்பாண்டி
ஆலோசகர்கள் நரசிங்கம், கோபால், சட்ட ஆலோசகர்கள் மரியவினோலா, வெங்கட்ராமன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

உடல் உறுப்பு தான தினத்தை முன்னிட்டு திருச்சி அப்போலோ மருத்துவமனையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி.!

இந்திய அளவில் தேசிய உடல் உறுப்பு தான தினம் ஒவ்வொரு ஆண்டும்  நவம்பர் 27ல் கொண்டாடபட்டு வருகின்றது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு தேவைப்படும் உறுப்புகள் கிடைக்காமல் இறப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து, நாடு முழுவதும் உடல்உறுப்புகளை தானமாக பெறுவதற்காக 5 லட்சம் பேர் பதிவு செய்து காத்திருக்கின்றனர்.

திருச்சி அப்போலோ மருத்துவமனையில் உடல் உறுப்பு தான தினத்தை முன்னிட்டு இன்று விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் 100 நபர்கள் தங்களின் உடல் உறுப்புகளை தானம் அளிப்பதாக உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். மேலும் இந்நிகழ்ச்சியில் திருச்சி அப்போலோ மருத்துவமனையில் உடல் உறுப்பு தானம் அளித்த கொடையாளர்கள் மற்றும் உறுப்பு தானம் பெற்ற நபர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.


இம்மருத்துவமனை கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் மருத்துவமனையின் Dr. வேல் அரவிந்த் – மூத்த சிறப்பு சிறுநீரக சிகிச்சை நிபுணர் மற்றும் Dr. C. அழகப்பன் – மூத்த சிறப்பு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் ஆகியோரால் உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சையினை வெற்றிகரமாக வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுநீரகம் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையினை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளனர்.

குறிப்பாக மாற்று அறுவை சிகிச்சையில் கொடையாளர்களுக்கு லேபராஸ்கோபிக் டோனர் நெஃப்ரெக்டோமி (Laparascopic DOnor Nephrectomy) முறைப்படி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுவதால் கொடையாளர்கள்  துரிதமாக உடல்நிலை தேறி இயல்புநிலைக்கு திரும்ப ஏதுசெய்கிறது. இம்முறையில் அறுவை சிகிச்சை மேற்கொள்வதில் மிகுந்த அனுபவம் மற்றும் உட்கட்டமைப்பு வசதி அவசியம் இதனை திருச்சி அப்போலோ மருத்துவமனை கொண்டுள்ளது என
Dr. வேல் அரவிந்த், சிறுநீரக மாற்று மருத்துவ சிகிச்சை நிபுணர் கூறினார் அனைவரும் தங்கள் இறப்பிற்கு பின்பாவது  உடல் உறுப்பு தானம் செய்ய வேண்டும் என்று கூறினார்.

Dr. C. அழகப்பன் – மூத்த சிறப்பு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நிபுணர், Dr. சிவம் ,நிலைய மருத்துவ அதிகாரி உடன் இருந்தனர்.  

மருத்துவமனை மூத்த பொதுமேலாளர் சாமுவேல்  அவர்கள் மருத்துவர்களை பாராட்டியதுடன் கொடையாளர்கள் மற்றும் உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டு நபர்களுக்கு பரிசுகளை வழங்கி உற்சாகப்படுத்தினார்

பொதுமேலாளர் சங்கீத், விற்பனை பிரிவு பொதுமேலாளர் மணிகண்டன் மற்றும் முதன்மை மேலாளர் அனந்த ராமகிருஷ்ணன் உடன் இருந்தனர்.  

மதுரையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட பேரவை கூட்டம் நடைபெற்றது.!

மதுரையில் அரசு ஊழியர்கள் சங்க கட்டிடத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டப் பேரவை கூட்டம் மாவட்ட தலைவர் மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில்
மாநில துணைத்தலைவர் ஞானத்தம்பி,
மாவட்ட செயலாளர் நீதிராஜா, மாவட்ட பொருளாளர் சந்திரபோஸ்,இணைச்செயலாளர் ராம்தாஸ், மாவட்டச்செயலாளர், தமிழ்நாடு ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் சீனிவாசகன், துணைத்தலைவர்கள்
த.மனோகரன், தூ.முருகன்,
இணைச்செயலாளர்கள்
ஆ.பரமசிவன், சி.பெரியகருப்பன்
மகளிர் துணைக்குழு மாவட்ட அமைப்பாளர் தீ.ராஜி,
பொதுச்செயலாளர் செல்வம், மாவட்ட துணை தலைவர் சந்திரபாண்டி, நெடுஞ்சாலைத்துறை மாநில பொருளாளர் தமிழ்,

மதுரை மாநகராட்சி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பாக கூட்டுறவு சங்க தலைவர் கே.கண்ணன், பொறியியல் பிரிவு பணியாளர்கள் சங்க பொருளாளர் கே.டி.துரைக்கண்ணன், மாநில துணைச்செயலாளர் மகுடீஸ்வரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
1.புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திட வேண்டும்
2. சத்துணவு அங்கன்வாடி வருவாய் கிராம உதவியாளர்கள் ஊர் புற நூலகர்கள் எம்ஆர்பி செவிலியர்கள் உள்ளிட்ட தொகுப்பூதியம் மதிப்பூதியம் சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் ஊழியர்கள் காலமுறை ஊதியத்தில் நியமனம் செய்து குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கிட வேண்டும்
3.முடக்கப்பட்ட அகவிலைப்படி சரண்டர் உள்ளிட்டவற்றை தமிழக அசரசு உடனடியாக வழங்கிட வேண்டும்.



4.சாலை பணியாளர்களை 41 மாத பணி நீக்க காலம் பணிக்காலமாக வரன்முறை செய்யப்பட வேண்டும்.
5. அரசாணை என் 115,139&152 ரத்து செய்து அரசு துறையில் தனியாரை புகுத்துவதை கைவிட வேண்டும்

6. அனைத்து அரசுத் துறைகளிலும் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.



7.புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குளறுபடிகளை களைந்து உரிய காப்பீடு தொகை வழங்கிட வேண்டும்
8.21 மாத ஊதியமற்ற நிலுவைத்தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும்
9. மாநகராட்சிகளில் பணிபுரியும் தேர்ச்சி திறனற்ற ஊழியர்களுக்கு ஒரு நபர் குழு பரிந்துரையின் அடிப்படையில் தர ஊதியம் ரூ.1950/- என்ற ஊதிய விகிதத்தை வழங்கிட வேண்டும்.



10.மதுரை மாநகரப் பகுதியில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க கோரிப்பாளையத்திலிருந்து சிவகங்கை சாலை, அழகர்கோவில் சாலை, கோரிப்பாளையம் முதல் சிம்மக்கல், கோரிப்பாளையம் முதல் தெற்குவாசல் வரை உயர்மட்ட பாலங்களை ஏற்படுத்த வேண்டும்
11.மதுரை மாவட்டத்தில் சத்துணவுத் திட்டத்தில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும்
12. உசிலம்பட்டி பகுதியில் இன்று நிலத்தடி நீர்மட்டம் உயருவதற்காக ஏற்படுத்தப்பட்ட 58 கிராம கால்வாய் பாசன திட்டத்திற்கு நிரந்தர அரசாணை ஏற்படுத்திட வேண்டும்.


13. ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய GST நிலுவைத் தொகை 1,186 கோடியை உடனடியாக வழங்கிட வேண்டும்
14. மதுரை திருமங்கலம் இடையே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியை நீக்க வேண்டும்
15. மதுரை மாவட்டத்தில் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் விதமாக புதிய தொழிற் பூங்காக்களை ஏற்படுத்தி பல்வேறு நிறுவனங்கள் மதுரையில் தொழிற் தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


16. தமிழக அரசு துறையில் கருணை அடிப்படை பணி நியமனத்திற்கு விண்ணப்பித்து காத்திருக்கும் அனைவருக்கும் சிறப்பு நிகழ்வாக கருததி பணிநியமனம் வழங்கிட வேண்டும்
17.கருவூலத்துறையில் அமல்படுத்தப்பட்டுள்ள IFHRMS திட்டத்தை அரசே ஏற்று நடத்திட வேண்டும்.
18. மதுரை நகருக்குள் காலை மாலை இரு வேளைகளிலும் பெண்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய வகையில் இலவச பேருந்து வசதியை அதிக எண்ணிக்கையில் இயக்கிட வேண்டும்.


19. மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பெண்கள் பாதுகாப்பாக பணிபுரிய விசாக குழுவை ஏற்படுத்த வேண்டும்
20. பள்ளிக்கல்வித்துறையில் நிர்வாக சீர்திருத்தம் என்று அக்டோபர் மாதம் முதல் ஊதியம் வழங்காமல் இருப்பதால், அரசு சிறப்பு கவனம் செலுத்தி பிரச்சனைகளை களைந்து ஊதியம் வழங்கிட உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும்
21.மதுரை மருத்துவக் கல்லூரியில் MBBS, படிக்கும் மாணவர்களுக்கு விடுதி வசதி உள்ளது போல் மருத்துவ கல்லூரியில் பயிலும் மற்ற துறை மாணவர்களுக்கும் விடுதி வசதி ஏற்படுத்திட வேண்டும்.



22. மதுரை மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மெட்ரோ ரயில் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்
23.மதுரை போடி ரயில் பாதையை விரைந்து முடித்து மதுரை-போடி, போடி-மதுரை என இரு மார்க்கங்களிலும் தொடர்ந்து ரயில் இயக்கிட வேண்டும்.
24. 1990களில் திமுக ஆட்சியின் போது பணியமரத்தப்பட்ட மக்கள் நல பணியாளர்கள் 32 ஆண்டுகளில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணி நீக்கத்திலும் பத்தாண்டுகள் பணிபுரிந்தும் இருந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தமிழக அரசு வாய்மொழி உத்தரவாக பணியில் இணைய உத்தரவிட்டது.
.

பணி நியமன ஆணை வழங்கப்பெற்று பணிநீக்க காலத்தை வரன்முறை செய்து குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயித்து தர வேண்டும் என இப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


The King Rashid International College of Aeronautics கல்லூரி சார்பாக மதுரையில் விமான கண்காட்சி.!

The King Rashid International College of Aeronautics கல்லூரியின் சார்பாக மதுரை ஆனையூர் பகுதியில் இயங்கிவரும் Sri Maha Matric Hr. Sec பள்ளியில் மிக பிரம்மாணடமான விமான கண்காட்சி நடைபெற்றது.

இதில் விமான பொறியாளர் / கல்லுரியின் நிறுவனர் Dr. K. Jaffer Sheriff, AME., அவர்கள் தொடங்கிவைத்தார். அவரிடம் பள்ளியின் மாணவர்கள் பலர் விமானம் சம்மந்தமாக கேள்விகளை கேட்டு அறிந்துகொண்டனர்.

ஆறாம் வகுப்பு படிக்கும் Mohammed Abubakkar Siddiq தான் விமானி ஆக தக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு படித்துவருவதை அறிந்து அந்த மாணவனுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார்.

The King Rashid International College of Aeronautics கல்லூரி சார்பாக மதுரையில் விமான கண்காட்சி.!

The King Rashid International College of Aeronautics கல்லூரியின் சார்பாக மதுரை ஆனையூர் பகுதியில் இயங்கிவரும் Sri Maha Matric Hr. Sec பள்ளியில் மிக பிரம்மாணடமான விமான கண்காட்சி நடைபெற்றது.

அதில் விமான பொறியாளர் / கல்லுரியின் நிறுவனர் Dr. K. Jaffer Sheriff, AME., அவர்கள் தொடங்கிவைத்தார். அவரிடம் பள்ளியின் மாணவர்கள் பலர் விமானம் சம்மந்தமாக கேள்விகளை கேட்டு அறிந்துகொண்டனர்.

ஆறாம் வகுப்பு படிக்கும் Mohammed Abubakkar Siddiq தான் விமானி ஆகா வேண்டும் என்ற எண்ணதோடு படித்துவருவதை அறிந்து அந்த மாணவனுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார்.

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES