Saturday , February 22 2025
Breaking News
Home / செய்திகள் (page 105)

செய்திகள்

All News

மதுரையில் தனியார் வங்கிகளுக்கு நிகராக புதிய 2 மொபைல் வங்கி துவக்கம்: மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எம்.எஸ்.பாண்டியன் தகவல்

மதுரையில் தனியார் வங்கிகளுக்கு நிகராக புதிய 2 மொபைல் வங்கி துவக்கம்: மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எம்.எஸ்.பாண்டியன் கூறினார்

மதுரை ரயில் நிலையம் அருகில் இருக்கக்கூடிய மதுரை மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமை அலுவலகத்தில் இன்று
16வது நிர்வாக குழு கூட்டம் வங்கியின் இரண்டாவது தளத்தில் நடைபெற்றது

மதுரை மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் எம் எஸ் பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்ட நிலையில்

வாடிக்கையாளர்களுக்கான புதிய திட்டங்கள் மற்றும் தனியார் வங்கிகளுக்கு நிகராக கொண்டு வரப் போகும் புதிய திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது

கூட்டத்தின் முடிவில் பேட்டி அளித்த போது

மதுரை மாநகரில் கூடல் நகரில் புதிய கிளை விரைவாக துவங்கப்பட உள்ளது என்றும், தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி பகுதி மற்றும் மதுரையில் உள்ள ஒத்தக்கடை ஆகிய பகுதிகளில் புதிய ஏடிஎம்கள் அமைய உள்ளன என்றும் தெரிவித்தார்.

மேலும் தனியார் வங்கிகளுக்கு இணையாக வாடிக்கையாளர்களின் வசதிக்கு ஏற்ப புதியதாக இரண்டு மொபைல் வங்கிகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன என்றும்

புதிய கணக்குகள் தொடங்குதல் காசோலை மாற்றம் உட்பட அனைத்து வங்கி பரிவர்த்தனைகளும் அந்த மொபைல் வங்கிகளில் வாடிக்கையாளர்கள் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்

மேலும் மாற்றுத்திறனாளிகள் கணவரால் கைவிடப்பட்டோர் விதவைகள் உள்ளிட்ட நபர்களுக்கு குறைந்த வட்டி கடன் மற்றும் வட்டி இல்லா கடன் ரூபாய் 50 ஆயிரம் வரை வழங்கப்படும் என்றார்

நலிந்த நிலையில் இருக்கக்கூடிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளுக்கு தலைமை வங்கியின் மூலம் பெறப்பட்டு ரூபாய் 50 லட்சம் வரை கொடுத்து உதவு உள்ளதாக தெரிவித்தார்

ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் மொபைல் ஏடிஎம்கள் தற்போது எம்ஜிஆர் பேருந்து நிலையம் மற்றும் பெரியார் பேருந்து நிலையங்களில் காலை மற்றும் மாலை வேலைகளில் மக்கள் பயன்பாட்டிற்காக இருந்து வரக்கூடிய நிலையில்

ஒரு சில வாரத்தில் அறிமுகமாக போகும் மொபைல் வங்கி மக்கள் மத்தியில் குறிப்பாக வாடிக்கையாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்றார்

இன்றைய போட்டி நிறைந்த உலகில் தனியார் வங்கிகளுக்கு நிகராக பல்வேறு திட்டங்களை வகுத்து வங்கி இருப்பு விகிதம் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் கடன் தொகை உள்ளிட்டவர்கள் பதவி ஏற்ற நாள் முதல் தற்போது வரை உயர்ந்து கொண்டிருப்பது பெருமிதம் என்றார்

குறிப்பாக கடந்த 31.3.2019 ஆம் ஆண்டு
தலைவராக பொறுப்பேற்ற நாளில் ரூபாய் 1.064 கோடி வங்கி இருப்பு இருந்த நிலையில்

தற்போது 14,460 கோடி ரூபாய் அளவுக்கு வங்கி இருப்பு உயர்த்தப்பட்டுள்ளது

மேலும் வங்கி மூலம் வழங்கப்படும் லோன் தொகை 1275கோடி ரூபாயாக இருந்த நிலையில் தற்போது 2040கோடி ரூபாயாக அளவிற்கு உயர்த்தப்பட்டிருக்கிறது என்றார்

அதிகப்படியாக 800 கோடி ரூபாய் வரையிலும் லோன் வழங்கப்பட்டு வருகிறது என்றார்.

இந்நிகழ்வின்போது டைரக்டர்கள் எம்.எஸ்.கே.மல்லன், கார்னர் பாஸ்கர் உள்பட பலர் உடன் இருந்தனர்.

மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்

மதுரையில் டால்மியா சிமெண்ட் சார்பாக கட்டிடக்கலைஞர்கள் கலந்தாய்வு கூட்டம்.

மதுரை கரிசல்குளம் பகுதியில் டால்மியா சிமெண்ட் சார்பாக கட்டிட கலைஞர்கள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு ஆரப்பாளையம் சூர்யா சிமெண்ட் ஏஜென்ஸி உரிமையாளர் சாலை.சிவக்குமார் அவர்கள் தலைமை வகித்தார்.

தொழில்நுட்ப மேலாளர் ஜெயபால் முருகன் டால்மியா சிமெண்ட்டின் உயர்ந்த தரத்தைப் பற்றியும்,அது எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பது குறித்தும் கட்டிட கலைஞர்களுக்கு விளக்கி கூறினார்.

இந்நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட கட்டிட கலைஞர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு நினைவு பரிசை சூர்யா சிமெண்ட் ஏஜென்சி உரிமையாளர் சாலை. சிவக்குமார் அவர்கள் வழங்கினார்.

இதில் தொழில்நுட்ப இன்ஜினியர்கள் சீனிவாசன், திருமேனிநாதன், ஏரியா விற்பனை அதிகாரி அரவிந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்

மதுரை 41 வது வார்டு பாஜக தலைவர் ரவிச்சந்திரபாண்டியன் தலைமையில் பாஜகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்.!

மதுரை மாநகர் மாவட்டம் 41 வது வார்டு பாரதிய ஜனதா கட்சி தலைவர் V.M.ரவிச்சந்திரபாண்டியன் தலைமையில் மாவட்ட கூட்டுறவு பிரிவு துணைத்தலைவர் மீசை முருகேசன் ஏற்பாட்டின் பேரில், மாநகர் மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் முன்னிலையில். அதிமுகவை சேர்ந்த சுந்தரபாண்டி சுவாமி, பூத் கமிட்டி நிர்வாகி முருகன். மகளிரணி நிர்வாகி விஜயலட்சுமி, மாஸ்டர் முருகன், சின்னகாதியானூர் கமல் முருகன், மோகன், தசானம். தெய்வகன்னி தெரு சுந்தரபாண்டி, மலைச்சாமி, தங்கபாண்டி, கிளிராஜா, பாபு நகரை சேர்ந்த திமுக பிரமுகர்கள் ஹரிராம் . வெங்கடேஸ் உள்பட பலர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனர்.

இந்நிகழ்வில் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் கோபாலகிருஷ்ணன், மீனவர் அணி துணைத் தலைவர் கார்த்திக் ராஜா, மண்டல் பொதுச்செயலாளர் ராம்தாஸ், செயலாளர் முருகன், துணைத்தலைவர்கள் ராஜசேகரன், ராஜீவ் காந்தி, கூட்டுறவு பிரிவு மண்டல் தலைவர் மகேசுவரன், செயலாளர் ராமராஜ், கிளைத்தலைவர்கள் இளங்கோவன், கார்த்திக், பன்னீர்செல்வம், திரவியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்..

மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்

மதுரை சோழவந்தான் அருகே வைகை ஆற்றில் குளிக்க சென்ற ஒருவர் பலி.!மேலும் ஒருவரின் உடலை தேடும் பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரம்.!

வைகை அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதை யொட்டி மூன்றாம் எச்சரிக்கை விடப்பட்டு அணைக்கு வரும் நீர் அனைத்தும் வைகை ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றில் யாரும் இறங்க வேண்டாம் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா கரடிக்கல் அருகே அனுப்பப்பட்டி பகுதியை சேர்ந்த வினோத்குமார், அன்பரசன் ஆகியோர் தனது நண்பர்கள் நான்கு பேருடன் சோழவந்தான் அருகே திருவேடகம் பகுதி வைகையாற்றில் 6 பேரும் குளித்து கொண்டிருந்தனர்.

அப்போது ஆற்று நீர்சுழலில் சிக்கிய ராணுவ வீரர் வினோத்குமார் மற்றும் அன்பரசன் ஆகிய இருவர் தண்ணீரில் மூழ்கினர்.

தகவலறிந்து விரைந்து வந்த சோழவந்தான் காவல்துறையினர், மற்றும் தீயணைப்புத்துறையினர் மாயமானவர்களை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டனர்.
நீண்ட நேரத்திற்கு பின் மேலக்கால் பகுதி வைகை ஆற்றுப்பாலம் அருகே அன்பரசனின் உடல் மட்டும் உயிரிழந்த நிலையில் தீயணைப்புதுறையினர் மீட்டனர். மேலும் ராணுவ வீரர் வினோத்குமாரின் உடலை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்

தேமுதிக மதுரை மாநகர் வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வரும் சனிக்கிழமை அன்று கள ஆய்வு.!

தேமுதிக மதுரை மாநகர் வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வரும் (13/08/2022) சனிக்கிழமை அன்று கள ஆய்வு நடைபெற உள்ளது என மாநகர் தேமுதிக மாநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:-

இதய தெய்வம் கேப்டன்- அவர்களின் ஆணைக்கிணங்க கழக பொருளாளர், அண்ணியார் அவர்களின் ஆலோசனைப்படி, மாநில கழக துணை செயலாளரும், கழக அமைப்பு தேர்தல்- மண்டல பொறுப்பாளருமான பார்த்தசாரதி மற்றும் மாநில பொறியாளர் அணி துணை செயலாளரும், கழக அமைப்பு தேர்தல்- மாவட்ட பொறுப்பாளருமான கே.கே.கிருஷ்ணன் மற்றும்

மதுரை மாநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் வி.பி.ஆர்.செல்வகுமாராகிய நான் மதுரை மாநகர் வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட 5 பகுதி கழகங்கள், 39வட்ட கழகங்களில் வருகின்ற 13/08/2022 (சனிக்கிழமை) அன்று நேரடி கள ஆய்வு நடத்த உள்ளோம்.

எனவே மதுரை மாநகர் வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட 5பகுதி கழக செயலாளர்கள் மற்றும் 39 வட்டக்கழக செயலாளர்கள் உள்ளிட்டோர் கழக அமைப்பு தேர்தல் (உட்கட்சி தேர்தல்) தொடர்பான அனைத்து பணிகளையும் அடுத்த 3நாட்களுக்குள் விரைவாக முடித்து, அதற்கான பூர்த்தி செய்யப்பட்ட அனைத்து படிவங்கள் மற்றும் ஆவணங்க ளையும் வருகின்ற 11/08/2022 (வியாழக்கிழமை) மாலை 7 மணிக்குள் என்னிடம் வழங்குமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். என கூறியுள்ளார்.

மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்

மதுரையில் தவத்திரு சுவாமி சதா சிவானந்தா அவர்களின் யதி பூஜை விழா.!

மதுரை எஸ்.எஸ்.காலனியில் தவத்திரு சுவாமி சதா சிவானந்தா அவர்கள் சமாதி நிலை அடைந்து 13 வது நாள் வழிபாடு விழாவை முன்னிட்டு யதி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வின் போது திருக்குற்றாலம் சுவாமி அகிலானந்தா, சின்னமனூர் சுவாமி முத்தானந்தா, சங்கரன்கோவில் சுவாமி ராகவானந்தா, திண்டுக்கல்லை சேர்ந்த சுவாமி ஞானசிவானாந்தா, சுவாமி மகேஷ்வரனந்தா மற்றும் சின்மயா மிஷன் சுவாமி சிவயோகானந்தா உள்பட 15 சுவாமிகளுக்கு யதி பூஜை வழிபாடு செய்யப்பட்டது.

சுவாமி சதா சிவானந்தா அவர்களின் திருவுருவப்படத்திற்கு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், முன்னாள் வருவாய்த்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார், இந்து மக்கள் கட்சி மாநிலத்தலைவர் அர்ஜுன் சம்பத், அகில இந்திய பார்வர்ட் பிளாக் மாநில பொதுச் செயலாளர் பி.வி கதிரவன், தென்னிந்திய பார்வர்ட் பிளாக் நிறுவனத்தலைவர் திருமாறன் ஜி, அட்சய பாத்திரம் டிரஸ்ட் சேர்மன் நெல்லை பாலு, திராவிடர் கழகம் மாவட்ட செயலாளர் வரதராஜன், திருவருட் பேரவை பாதர் பெனிடிக் பர்னாஷ் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுவாமி விவேகானந்தா சேவா ஆசிரமம் மதிவாணன், எம்.பி.ராமன், சூர்யாநகர் செந்தில், ரகுராஜ‌ன், விஸ்வநாதன்,பாண்டி குமார், சின்னன், மூர்த்தி, பேராசிரியர் செந்தில், ரஞ்சித்குமார் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

இதில் பிரசிடெண்ட் கிளப் சார்பாக எம்.பி.லட்சுமணன், அகில இந்திய பார்வர்ட் பிளாக் வடிவேலு, நாகராஜன், பிரபாகரன், வடக்கம்பட்டி பாண்டி மற்றும் திருச்சி சதுரகிரி, சென்னை ஜி.கே.ஆர் கணேசன், உடுமலைப்பேட்டையை சேர்ந்த மாணிக்கவேல், ஜெயக்குமார், தியாகராஜன் மற்றும் பெரம்பலூர் வைத்தியர் வரதராஜன், மெக்கானிக் கென்னடி, டிரைவர் முத்துச்செல்வம், தேசிய சமூக சேவை அறக்கட்டளை அமைப்பாளர் எஸ்.ரவி, தினகரன் ஜெய் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்

மதுரையில் தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தின் 34_வது அமைப்பு தின விழா

மதுரையில் தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தின் 34_வது அமைப்பு தின விழா சங்க தலைவர் சந்திரபோஸ் தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் தெற்கு வட்டக் கிளையின் செயலாளர் பழனிவேல் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் இணைச் செயலாளர் பரமசிவன் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கொடியை ஏற்றி வைத்து வாழ்த்துரை வழங்கினர்.

முன்னதாக தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சீனியப்பா கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க கொடியை ஏற்றி வைத்து இந்த கூட்டுறவு துறை ஊழியர் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து உறுப்பினர்களுக்கு விளக்க உரை நிகழ்த்தினார்.

சங்க மாநில செயலாளர் நவநீதகிருஷ்ணன் அகில இந்திய அரசு ஊழியர் சங்கத்தின் கொடியை ஏற்றி வைத்து சங்கத்தின் உறுப்பினர்களுக்கு அமைப்பு தின விழா வாழ்த்துரை நிகழ்த்தினார். இறுதியாக சங்க பொருளாளர் மணிகண்டன் நன்றியுரை தெரிவித்தார்.

மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்

மதுரையில் தேமுதிக வட்டக்கழக செயலாளர் நாகராஜன் இல்ல விழாவில் வி.பி.ஆர்.செல்வகுமார் பங்கேற்று வாழ்த்து.!

தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன்- பொருளாளர் பிரேமலதா அவர்களின் நல்லாசியுடன் மதுரை மாநகர் வடக்கு மாவட்டம்- தெப்பக்குளம் பகுதிக்குட்பட்ட 46வது வட்டக்கழக செயலாளர், நாகராஜன் இல்ல விழா மதுரை கீரைத்துறையில் நடைபெற்றது.

இவ்விழாவிற்கு மாநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் வி.பி.ஆர் செல்வகுமார் அவர்கள் தலைமை வகித்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட கழக துணைச்செயலாளர் பா.மானகிரியார், தலைமை பொதுக்குழு உறுப்பினர், சின்னச்சாமி, மாவட்ட செயல்வீரர், ரமேஷ்பாபு, பகுதி கழக செயலாளர்கள் கோல்டு முருகன், கோவிந்தராஜ், தெய்வேந்திரன், மேலமடை ஐயப்பன், கேப்டன் மன்றம் சுரேஷ், மாவட்ட மாணவரணி செயலாளர், காளீஸ்வரன், நெசவாளர் அணி பிரகாஷ், பகுதி கழக நிர்வாகிகள் செல்வம், கவிஞர் மணிகண்டன், ராஜ்குமார், வட்டக்கழக செயலாளர்கள் நல்லமருது, சைவம், ஆறுமுகம் மற்றும் 46 வது வட்டக்கழக அவைத்தலைவர் ஏ.எஸ்.குருநாதன், பொருளாளர் வேல்முருகன், கீரைத்துறை வட்டக்கழக துணைச்செயலாளர் முத்துமணி, பகுதி பிரதிநிதி முரசு அழகர் உள்பட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்

மதுரை வைகை லயன்ஸ் சங்கம் மற்றும் மதுரை ஆயுஷ்யம் வர்மா யோகா மையமும் இணைந்து நடத்திய இலவச யோகா பயிற்சி

மதுரை வைகை லயன்ஸ் சங்கம் மற்றும் மதுரை ஆயுஷ்யம் வர்மா யோகா மையமும் இணைந்து நடத்திய இலவச யோகா பயிற்சி வகுப்புகள் மதுரை திருப்பாலை மெயின் ரோட்டில் உள்ள வைகை ஹாலில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஆயுஷ்யம் வர்ம யோகா சென்டர் நிர்வாக இயக்குனர் மருத்துவர் ஆர்த்தி, மருத்துவர் பாலாஜி, ஒருங்கிணைப்பாளர் விஜய் மற்றும் கவுன்சில் பொருளாளர் மணிகண்டன், டாக்டர் லட்சுமி நாராயணன், தமிழ்நாடு யோகா ஸ்போர்ட்ஸ் செயலாளர் சுந்தர், லயன்ஸ் கிளப் தலைவர் ஜேசுதாஸ், செயலாளர் மலைராஜன், பொருளாளர் சண்முகசுந்தரம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மதுரை செய்தியாளர் கனகராஜ்

வத்தலக்குண்டு வட்டார இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம்

வத்தலக்குண்டு காளியம்மன் கோவில் அருகில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மீது ஹெரால்டு வழக்கை கண்டித்தும். பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்தும் வத்தலக்குண்டு வட்டார இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பாக வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் காமாட்சி தலைமையில், நகர தலைவர் அப்துல் அஜீஸ்,கோபால் மாநில செயற்குழு உறுப்பினர் அஜீஸ் மாநில மகிளா காங்கிரஸ் செயலாளர் திருமதி ஸ்டெல்லா அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பட்டிவீரன்பட்டி நகரத் தலைவர் பிரசன்னா, பெரியதம்பி, மகாதேவன் சேவுகம்பட்டி காங்கிரஸ்கமிட்டி தலைவர் நாகராஜ், வட்டார பொது செயலாளர் பாஸ்கரன், வட்டார அவைத் தலைவர் ராஜா.செயலாளர் கணேசன் பழனி முத்து மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES