இந்தியாவின் இரண்டாவது சுதந்திர தினம் அக்டோபர் 12
மக்களுக்கான தகவல்களை பெற்று நாட்டு நலனை மேம்படுத்த உருவான தகவல் அறியும் உரிமைச் சட்டம் அமலான தினம் இன்று…

அரவக்குறிச்சி தொகுதியில் ஜல்லிக்கட்டில் உருவான தமிழ்நாடு இளைஞர் கட்சி தேர்தல் களத்தை சந்திக்க இளைஞர் காளைகளை வரவேற்பதாக அரவக்குறிச்சி தொகுதியில் ஓர் அரசியல் மாற்றம் என்ற தலைப்பில் அறிவித்துள்ளது.

அரவக்குறிச்சி வாக்காளர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க முகாம்கள் நடத்தப்படும் இடங்கள் மிக விரைவில் அறிவிக்கப்படும் என மாநில துணைச்செயலாளர் க.முகமது அலி அவர்கள் அறிவித்தார்.
சீன அதிபரை வரவேற்க தமிழக பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் மோடி வருகை.
மாமல்லபுரத்தில் அர்ஜுனன் தபசு பகுதியில் சீன அதிபரை பிரதமர் மோடி தற்போது அழைத்துச் செல்கிறார். தமிழர்களின் சிற்பக் கலையை அதிசயத்துடன் ரசித்து பார்க்கிறார் கன அதிபர்,
இதை அடுத்து ஐந்து ரதம் பகுதிக்கு இருவரும் செல்கி றார்கள். மாமல்லபுரத்தில் அர்ஜுனன் தபசு பகுதியில் சீன அதிபரை பிரதமர் மோடி தற்போது அழைத்துச் செல்கிறார்.
தமிழர்களின் சிற்பக் கலையை அதிசயத்துடன் ரசித்து பார்க்கிறார் கன அதிபர், இதை அடுத்து ஐந்து ரதம் பகுதிக்கு இருவரும் செல்கிறார்கள்.


?முன்னுரிமை?
? நண்பர்களே, தினமும் மாலை 7-8 மணிக்குள் நம் பேஸ்புக் நேரலை
?தயவுசெய்து பங்கேற்று ஒரு ஊடாடும் அமர்வை உருவாக்கவும்
?TNYP கொள்கைகள் மற்றும் சித்தாந்தங்கள் பற்றிய நம் எல்லா கேள்விகளையும் தெளிவுபடுத்த முடியும்,
?சமூகப் பிரச்சினைகளில் நிலைப்பாடு
தினசரி ஒரு தலைப்பை எடுத்து விவாதிப்போம்
?தவறவிடாதீர்கள்
?தயவுசெய்து நேரடி ஒளிபரப்பில் கருத்துத் தெரிவிக்கவும், பகிரவும்
? புரிந்துகொள்ளுதலுக்கும் ஆதரவிற்கும் நன்றி
*அரசியல் பழகு – ஒரு கலந்துரையாடல்*
தினம் இரவு 7 மணி முதல் 8 மணி வரை
நேரடி ஒளிபரப்பில் பங்குகொள்வோம்
Fb.me/tnyparty
இந்தியாவில் பிரிட்டிஷாரின் ஆதிக்கத்திற்கு முன்பு வார சம்பள முறையே நடைமுறையில் இருந்து வந்தது…!! ( வருடத்திற்கு 52 வாரங்கள்). ஆங்கிலேயர்கள் மாத சம்பள முறையை அமுல் படுத்தினார்கள் 4வாரங்களுக்கு ஒரு சம்பளம் என கணக்கிட்டு மாத சம்பளமாக கொடுத்தனர்…!!(12×4=48 வாரங்கள்). அவ்வாறு மாதத்திற்கு ஒரு சம்பளம் என்றால் வருடத்திற்கு 12 சம்பளம் வருகிறது. ஆனால் 4வாரத்திற்கு ஒரு சம்பளம் என்று கணக்கிட்டு பார்த்தால் வருடத்திற்கு 13 சம்பளம் வர வேண்டும்.
இந்தியர்னா சும்மாவா?
அதனை தரும்படி 1930-1940 களில் மஹாராஷ்டிரா வில் உள்ள தொழிற்சங்க ஊழியர்கள் தங்களது 1 மாத சம்பளம் வஞ்சிக்கப் படுவதாக போராடினார்கள்.அதன் விளைவாக அந்த ஒரு மாத சம்பளத்தை எப்போது எப்படி கொடுக்கலாம் என பிரிட்டிஷார் தொழிற்சங்க தலைவர்களுடன் ஆலோசனை செய்தார்கள்.அப்போது தான் தீபாவளி / தசரா பண்டிகை பிரசித்தி பெற்ற பண்டிகையாதலால் அதனையொட்டி கொடுத்தால் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய அது வசதியாக இருக்கும் என கோரிக்கை வைத்ததின் விளைவாக போனஸ் என்ற பெயரில் முதன் முதலில் 1940ம் வருடம் ஜூன் மாதம் 30ம் தேதி வழங்கப்பட்டது.
பின்நாட்களில் அது லாப விகிதத்தை கணக்கிட்டு விஸ்தரிக்கப்பட்டது.ஆக போனஸ் என்பது விடுபட்ட-கொடுக்கப்படாத- நமக்குரிய (சேர வேண்டிய) ஒரு மாத சம்பளம்.
இன்றைக்கு பல மக்களுக்கு இந்த சரித்திர நிகழ்வு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.. !!

இணைய செய்தித்தாள் தொடங்க வேண்டுமா? Want to start online News Website?
மிகக் குறைந்த விலையில் உங்களது இணைய செய்தித்தாள் என் கே பி பி டெக்னாலஜிஸ் நிறுவனம் மூலமாக ரூபாய் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை செய்து தரப்படும்.
இதில் டொமைன் ஹோஸ்டிங் உள்ளடங்கும் மேலும் ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் வேண்டுமெனில் அதுவும் மிக மிக குறைந்த விலையில் செய்து தரப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
மற்றும் அனைத்து வகையான தொழில்களுக்கும் முறையாக இணையதளம் செய்து தரப்படும்.
இப்படிக்கு,
NKBB Technologies,
9965557755.


தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 1000 ரூபாய் வரும் 7-ந்தேதி முதல் அனைத்து ரேசன் கடைகளிலும் வழங்கப்படுகிறது.கடந்த ஆண்டு பொங்கல் பொருட்கள் தொகுப்பு பச்சை நிற ரேசன் கார்டு வைத்துள்ள குடும்பங்களுக்கு மட்டும் வழங்கப்பட்டது.சர்க்கரை பெறக்கூடிய குடும்ப அட்டை வைத்து இருப்பவர்களுக்கு இதுவரை பொங்கல் பரிசு வழங்கப்படவில்லை. இதனால் நடுத்தர மற்றும் வசதி படைத்த குடும்பத்தினர் அதிருப்தி அடைந்தனர்.ஆனால் இந்த வருடம் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் பொங்கல் பொருட்கள் தொகுப்புடன் ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2 கோடியே ஒரு லட்சம் குடும்பத்தினர் இதன் மூலம் பயன் அடைகிறார்கள்.இடைத்தேர்தல் நடைபெறும் திருவாரூர் மாவட்டம் தவிர அனைத்து மாவட்டங்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது. இடைத்தேர்தல் முடிந்த பின்னர் திருவாரூர் மாவட்டத்திற்கு பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கருணாநிதி முதல்- அமைச்சராக இருந்தபோது தி.மு.க. ஆட்சியிலும் சரி, ஜெயலலிதா முதல்- அமைச்சராக இருந்த போதும் கூட அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படவில்லை. 1000 ரூபாய் பணமும் வழங்கப்படவில்லை.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிதான் முதன் முதலாக அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படுவதாக அறிவித்துள்ளார்.ஏழைகள், வசதி படைத்தவர்கள் என்று பாகுபாடு பார்க்காமல் பொது விநியோகத் திட்டத்தின்கீழ் பொருட்கள் வாங்குகின்ற அனைத்து குடும்பங்களுக்கும் பொங்கல் சிறப்பு தொகுப்புடன் ரூ.1000 ரொக்கமும் கிடைக்கும்.
இதன் மூலம் அரசுக்கு ரூ.1,974 கோடியே 17 லட்சம் செலவாகிறது. பொங்கல் பொருட்கள் தொகுப்பிற்கு மட்டும் ரூ.257 கோடியே 52 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பொங்கல் தொகுப்பில் ஒரு கிலோ பச்சிரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 2 அடி கரும்பு துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் ஆகியவை அடங்கும். இந்த பொருட்களுடன் பை ஒன்றும் வழங்கப்படும்.
பொங்கல் பொருட்கள் தொகுப்புடன் ரூ.1000 ரொக்கப்பணம் அனைத்து ரேசன் கடைகள் மூலம் குடும்பதாரர்களிடம் கையெழுத்து பெறப்பட்டு வழங்கப்படும். ஒவ்வொரு அட்டைத்தாரர்களோ அல்லது குடும்ப உறுப்பினர்களோ நேரில் சென்று பெற்று கொள்ள வேண்டும்.பொங்கல் தொகுப்பில் இடம் பெற்றுள்ள பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டு பேக்கிங் செய்யும் பணி நடைபெறுகிறது. பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை செய்யப்பட்டு இருப்பதால் காகித பையில் பொருட்களை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.
பொங்கல் பரிசு 7-ந்தேதி முதல் அனைத்து ரேசன் கடைகளிலும் கிடைக்கும் வகையில் இத்திட்டத்தினை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.அதனை தொடர்ந்து அடுத்த வாரம் முதல் 13-ந்தேதி வரை பொங்கல் பரிசு அனைவருக்கும் கிடைக்கும்.நெரிசல் இல்லாமல் வழங்கும் வகையில் ஒவ்வொரு ரேசன் கடைகளிலும் தினமும் 300 குடும்ப அட்டைத்தாரர்களுக்கு வழங்க திட்டமிட்டப்பட்டுள்ளது.எந்தெந்த கார்டுகளுக்கு எந்த நாட்களில் பெற்றுக் கொள்வது என்பது குறித்து ரேசன் கடைகளில் அறிவிப்பு வெளியிடப்படும். Courtesy : maalaimalar

இலங்கையில் அதிபர் தேர்தல் நவம்பர் 16ஆம் தேதி நடைபெறுகிறது. அதில் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகருமான கோத்தபய ராஜபக்சே போட்டியிடுகிறார். முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் தம்பியான இவர், ராஜபக்சே கட்சியின் வேட்பாளராக மனுதாக்கல் செய்துள்ளார்.
இதற்கிடையே, அவர் இலங்கை குடிமகன் அல்ல, அமெரிக்க குடியுரிமை பெற்றவர் என்றும், அவரது இலங்கை குடியுரிமை சான்றிதழ் போலியாக உருவாக்கப்பட்டதாகவும் இலங்கை மேல்முறையீட்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இலங்கை அரசியல் சட்டப்படி, அந்நாட்டு குடிமகன் மட்டுமே அதிபர் தேர்தலில் போட்டியிட முடியும். கோத்தபய, தேர்தலில் போட்டியிட தடை விதித்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறும் மனுவில் கோரப்பட்டு இருந்தது. இந்த மனுக்களை பரிசீலித்த இலங்கை கோர்ட், மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து, இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபயே ராஜபக்சே போட்டியிடுவதில் இருந்த சிக்கல் நீங்கியது.

ஸ்வீடனைச் சேர்ந்த 16 வயது சிறுமி கிரேட்டா தன்பர்க் அமைதிக்கான நோபல் பரிசுக்கான போட்டியில் இடம்பெற்றுள்ளார். சுற்றுச்சூழல் மீது மிகுந்த அக்கறை கொண்ட இவர் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம், உலக வெப்பமயமாதலை தடுக்க வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகம் முன்பு தனி ஒரு ஆளாக போராட்டம் நடத்தினார்.
இதன் மூலம் பிரபலமான அவர் இளம் சுற்றுச்சூழல் ஆர்வலராக அறியப்பட்டார். அதனை தொடர்ந்து கிரேட்டா தன்பர்க், தனது பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்துவிட்டு உலக வெப்பமயமாதல் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு தொடர்பான போராட்டங்களை முன்னெடுக்க தொடங்கினார். இவரது இந்தப் போராட்டத்திற்கு இந்தியா உள்ளிட்ட பல நாட்டு மாணவர்களும் ஆதரவு தெரிவித்து வெள்ளி தோறும் பள்ளிகளுக்குச் செல்லாமல் பருவநிலைக்கு எதிராக போராடி வருகின்றனர்.
மேலும் இவர் கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற ஐ.நா.வின் உலக வெப்பமயமாதல் மாநாட்டிலும், கடந்த ஜனவரி மாதம் நடந்த உலக பொருளாதார மன்றத்திலும் பங்கேற்று உரையாற்றி உள்ளார்.
இயற்கையை நேசிக்கும் சிறுமியின் பொதுநல சிந்தனையை பாராட்டி இதற்கு முன் amnesty international அமைப்பு விருது கொடுத்து கவுரவித்துள்ளது. நோபல் பரிசுக்கு நிகரான right livelihood விருதும் வழங்கப்பட்டது. இவரது இந்த முயற்சியை கெளரவிக்கும் விதமாக டைம் இதழ் வெளியிட்ட 2018ஆம் ஆண்டின் செல்வாக்கு மிக்க இளைஞர் பட்டியலில் கிரேட்டா தன்பர்க் பெயரும் இடம் பெற்றிருந்தது.
2019ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு 219 தனி நபர்களின் பெயர்களும், 85 அமைப்புகளின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், நார்வே நாட்டைச் சேர்ந்த 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள், கிரேட்டாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கவேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளனர். இந்த விருதானது வரும் வெள்ளிக்கிழமை நார்வேயில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், சிறுமி கிரெட்டாவுக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பு குறைவாகவே இருப்பதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தன்பர்க் சிறுமி என்பதால், நோபல் பரிசு அவருக்கு மட்டுமே வழங்கப்படாது என பீஸ் இன்ஸ்ட்ட்டியூட் (Peace Research Institute) இயக்குனர் ஹென்ரிக் உர்தால் என்பவர் தெரிவித்துள்ளார்.
மேலும் சிறுமிக்கு, பாகிஸ்தான் சிறுமி மலாலாவுக்கு வழங்கப்பட்டது போல் நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட வாய்ப்புள்ளதாக அவர் கூறியுள்ளார். இதே கருத்தையே பிற நிபுணர்களும் முன்வைத்துள்ளனர்.

தீபாவளிப் பண்டிகை அக்டோபர் 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு 26ஆம் தேதி சனிக்கிழமை 4வது வாரம் என்பதால் அன்று வழக்கம் போல் பள்ளி அலுவல் நாளாக இருக்கும்.
அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தால், சொந்த ஊர்களுக்குச் செல்வோருக்கு பயனளிக்கும் என்று கோரிக்கைகள் முன் வைக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 26ஆம் தேதி சனிக்கிழமை மற்றும் 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதே சமயம், அக்டோபர் 28ஆம் தேதி திங்கட்கிழமை விடுமுறை தேவைப்படும் மாவட்டங்கள் உள்ளூர் விடுமுறை அறிவித்துவிட்டு, வேறொரு சனிக்கிழமையில் பள்ளி வேலை நாளாக அறிவிக்கலாம் என்றும், தேவைப்படும் பள்ளிகளும் விடுமுறை அறிவிக்கலாம் என்றும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் அனுமதி பெற்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
