Saturday , February 22 2025
Breaking News
Home / செய்திகள் (page 55)

செய்திகள்

All News

சபரிமலையில் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பாக மண்டல கால சேவை.!

சபரிமலையில் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பாக இந்த மண்டல மகரவிளக்கு காலங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க இயலாத சூழ்நிலையில் சபரிமலை சிறப்பு அதிகாரி (Special Officer) அவர்களின் வேண்டுகோளின் பேரில் வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு மூலிகை குடிநீர், பிஸ்கட் வழங்கப்பட்டது.

நவம்பர் 29 முதல் டிசம்பர் 27 வரை 31 நாட்களில் ரூபாய் 8 இலட்சம் மதிப்பிலான பிஸ்கட்கள் சன்னிதானம் வரை காத்திருக்கும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
சன்னிதானம் அப்பாச்சிமேடு, புல்மேடு பாதையில் உடல்நலக்குறைவு ஏற்பட்ட பக்தர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச்செல்ல ஸ்டெச்சர் சர்வீஸ் சேவை வழங்கப்பட்டது.

இந்தாண்டு புல்மேடு பாதையில் அதிகளவிலான பக்தர்கள் வருகை புரிவதால் உரல்குழி தீர்த்தம் செல்லும் வழி அருகே முகாம் அமைக்கப்பட்டு ஸ்டெச்சர் சர்வீஸ் பிஸ்கட் மூலிகை குடிநீர் வழங்கப்பட்டது. 622 முறை ஸ்டெச்சர் சர்வீஸ் மேற்கொள்ளப்பட்டது

குறிப்பாக இச்சேவைகளில் மண்டல காலத்தில் மட்டும் 611 சேவா சங்க தொண்டர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். தமிழ்நாடு தொண்டர்கள் மூலம் அழுதா.கரிமலை. பெரியானை வட்டம் மற்றும் பல்வேறு மாவட்டங்களிலும் அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது.

வரும் மகரவிளக்கு காலத்தில் மூலிகை குடிநீர், பிஸ்கட் வழங்குதல்,ஸ்டெச்சர் சர்வீஸ் சேவை மேற்கொள்ள அதிக அளவிலான தொண்டர்களை ஈடுபடுத்த தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேற்படி சேவைகளை ஒருங்கிணைத்து செய்ய மத்திய தலைவர் ஐயப்பன், மத்திய பொதுச்செயலாளர் விஜயக்குமார், மத்திய பொருளாளர் விஸ்வநாதன் மற்றும் முகாம் அலுவலர்கள் தொண்டர் படை தளபதிகள் ராஜதுரை, ராமையா மற்றும் நிர்வாகிகள் சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

மள்ளப்புரம் ஊராட்சியில் உண்ணாவிரத போராட்டம் : அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்கம் பங்கேற்பு.!

மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம், மள்ளப்புரம் ஊராட்சி அய்யனார் கோவில் அணையை தூர்வாரி கோரியும், மதகுகளை சரி செய்து,கரை கால்வாய்களை சீரமைக்ககோரி அய்யனார் கோவில் அணை பாசன விவசாயிகள் சங்கம் சார்பாக மாபெரும் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்தில் அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்க மாநில தலைவர் ஆபேல் மூர்த்தி மற்றும் உசிலம்பட்டி தொகுதி எம்.எல்.ஏ அய்யப்பன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

இதில் போராட்ட ஒருங்கிணைப்பாளர் தவ வினோத்குமார், அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்கத்தின் பேரையூர் தாலுகா தலைவர் முன்னாள் ராணுவ வீரர் கண்ணன் உள்பட விவசாய சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்கம் சார்பாக உசிலம்பட்டி செயற்பொறியாளரிடம் மனு.!

மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் மல்லப்புரம் ஊராட்சி அய்யனார்குளம் அணையை தூர்வார கோரியும், மதகுகள் மற்றும் கால்வாய்களை சரி செய்யக்கோரி அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்க மாநில தலைவர் ஆபேல் மூர்த்தி தலைமையில் உசிலம்பட்டி செயற்பொறியாளர் அவர்களை நேரில் சந்தித்து மனு வழங்கப்பட்டது.

இதில் பேரையூர் தாலுகா தலைவர் கண்ணன் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கேப்டன் விஜயகாந்த் மறைவையொட்டி தென் மாவட்ட திரைப்பட கலைஞர்கள் நலச்சங்கம் சார்பாக மௌன அஞ்சலி.!

மறைந்த புரட்சிகலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவையொட்டி, மதுரை அரசரடி சோலைமலை தியேட்டர் அருகே உள்ள தென் மாவட்ட திரைப்பட கலைஞர்கள் நலச்சங்க அலுவலகத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி நடிகர்,நடிகைகள் மௌன அஞ்சலி செலுத்தினர்.

மேலும் அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் பிரார்த்தனை செய்தனர்.

இந்நிகழ்வில் சங்கத்தலைவர் டாக்டர் வி.பி.ஆர். செல்வகுமார், பொதுச்செயலாளர் மாஸ்.மணி, இணைத்தலைவர் சோமசுந்தரம், இணைச்செயலாளர் கனரா சோனி, செயற்குழு உறுப்பினர்கள் டாக்டர் சின்னச்சாமி, டாக்டர் மலர்விழி,செல்வம் மற்றும் கார்த்திக்குமார், பொன்னுப்பாண்டி, அசோக், பாண்டியம்மாள், வசந்தி, ஸ்ரீ விசாலி உள்பட நடிகர், நடிகைகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க கோரி சென்னையில் பாஜக விவசாய அணி சார்பாக ஆர்ப்பாட்டம்

ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க கோரி பாஜக விவசாய அணியினர் ஆர்ப்பாட்டம்

சென்னை, டிசம்பர்.28-

தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில், ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெயை வழங்க கோரி பாஜக விவசாய அணி சார்பாக தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த வகையில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய அணி மாநில துணைத்தலைவர் வளசை முத்துராமன் ஜி தலைமையில் நடைபெற்றது.

பாஜக மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன், விவசாய அணி மாநிலச் செயலாளர் ராமலிங்கம் மற்றும் மாவட்ட,மண்டல் தலைவர்கள், நிர்வாகிகள் உள்பட 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து வளசை முத்துராமன் ஜி செய்தியாளர்களிடம் கூறுகையில், நம்பர் 1 இல் இருந்த கேரளாவை மூன்ற இடத்துக்கு தள்ளிவிட்டு தேங்காய் உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது ஆனா கேரளாவில் மட்டையுடன் கூடிய தேங்காயையும் கொப்பரையும் சேர்த்து கேரளா அரசே கொள்முதல் செய்து விற்பனை செய்து வருகிறார்கள்

தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரமாக தென்னை மரம் விளங்குவதால் மத்திய அரசு சார்பில் தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை
கடைகள் மூலமாக ஒரு கிலோ ரூ.108.60-க்கு கொப்பரை கொள்முதல் செய்கிறது. அந்தவகையில், தற்போதுள்ள கொப்பரை தேங்காய்களை விற்க வேண்டிய கட்டாயத்தில் தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை கூட்டமைப்பு உள்ளது.

எனவே, தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியாக 66 இல் அளித்த வாக்குறுதிப்படி தேங்காய் கொப்பரைகளை கொள்முதல் செய்து, கூட்டுறவு சங்கங்கள் மூலமாக தேங்காய் எண்ணையாக மாற்றி பாமாயிலுக்கு பதிலாக
தேங்காய் எண்ணெயை 32,000 ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய வேண்டும் என கூறினார்.

சாலையோரமாக வசிக்கும் முதியோர்களுக்கு உணவு வழங்கிய கல்கி பவுண்டேஷன் டிரஸ்ட் நிறுவனர் அங்குலட்சுமி

சாலையோரமாக வசிக்கும் ஆதரவற்ற முதியோர்களுக்கு உணவு வழங்கிய கல்கி பவுண்டேஷன் டிரஸ்ட் நிறுவனர் அங்குலட்சுமி

மதுரை, டிசம்பர்.28-

மதுரை அரசரடி காளவாசல் பகுதிகளில் சாலையோரமாக வசிக்கும் ஆதரவற்றோர்களுக்கு கல்கி பவுண்டேஷன் டிரஸ்ட் நிறுவனத் தலைவர் அங்குலட்சுமி மதிய உணவு வழங்கினார்.

மேலும் உங்களுக்கு வேறு என்ன உதவி தேவைப்படுகிறது எனவும், ஏன் இப்படி சாலை ஓரமாக தங்கி உள்ளீர்கள். முதியோர் இல்லத்தில் சேர்த்து விடவா எனவும், வேறு எந்த உதவி தேவைப்பட்டாலும் என்னிடம் கேளுங்கள் உடனடியாக செய்து தருகிறேன் என பேசினார்.

உணவு கொடுத்தது மட்டும் இன்றி அன்புடன் பேசிய சமூக சேவகி அங்குலட்சுமியை ஆதரவற்ற முதியோர்கள் கையெடுத்து கும்பிட்டனர். இது பெரும் நிகழ்ச்சியை ஏற்படுத்தியது.

தமிழக திரைப்படத் துணை நடிகர், நடிகைகள் & திரைப்பட உதவியாளர் நலச்சங்கம சார்பாக சான்றிதழ் வழங்கும் விழா

தமிழக திரைப்படத் துணை நடிகர், நடிகைகள் & திரைப்பட உதவியாளர் நலச்சங்கம் மற்றும் சென்னை கூத்துப்பட்டறை இணைந்து திரைப்பட நடிகர்களுக்கு பயிற்சி பட்டறை திருவண்ணாமலை காஞ்சி முருகன் கோவில் அருகில் நடைபெற்றது.

மேலும் சமீபத்தில் காலமான காமெடி நடிகர் போண்டாமணி அவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இவ்விழாவிற்கு மாவட்ட தலைவர் சென்னகிருஷ்ணன் தலைமை வகித்தார். இதில் மாநிலத் தலைவர் பன்னீர்செல்வம் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

தமிழ்நாடு நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் சங்க மாநிலத் தலைவர் தங்கவேல் மற்றும் பொதுச்செயலாளர் வடுகப்பட்டி எம்.செல்வம், திரைப்பட நடிகர் பயிற்சியாளர் லதா, சென்னை கூத்துப்பட்டறை நிறுவனர் முத்துச்சாமி ஆகியோர் சான்றிதழை வழங்கினர்.

தமிழக திரைப்படத் துணை நடிகர், நடிகைகள் & திரைப்பட உதவியாளர் நலச்சங்கம் சார்பாக சான்றிதழ் வழங்கும் விழா

தமிழக திரைப்படத் துணை நடிகர், நடிகைகள் & திரைப்பட உதவியாளர் நலச்சங்கம் மற்றும் சென்னை கூத்துப்பட்டறை இணைந்து திரைப்பட நடிகர்களுக்கு பயிற்சி பட்டறை திருவண்ணாமலை காஞ்சி முருகன் கோவில் அருகில் நடைபெற்றது.

மேலும் சமீபத்ம்மதில் காலமான காமெடி நடிகர் போண்டாமணி அவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இவ்விழாவிற்கு மாவட்ட தலைவர் சென்னகிருஷ்ணன் தலைமை வகித்தார். இதில் மாநிலத் தலைவர் பன்னீர்செல்வம் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

தமிழ்நாடு நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் சங்க மாநிலத் தலைவர் தங்கவேல் மற்றும் பொதுச்செயலாளர் வடுகப்பட்டி எம்.செல்வம், திரைப்பட நடிகர் பயிற்சியாளர் லதா, சென்னை கூத்துப்பட்டறை நிறுவனர் முத்துச்சாமி ஆகியோர் சான்றிதழை வழங்கினர்.

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியில் அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்கம் சார்பாக விவசாயிகள் கலந்தாய்வு கூட்டம்

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி பகுதியில் அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்கத்தின் விவசாயிகள் கலந்தாய்வு கூட்டம் பேரையூர் தாலுகா தலைவர் முன்னாள் ராணுவ வீரர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் மாநில தலைவர் ஆபேல் மூர்த்தி கலந்து கொண்டு விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சிறப்புரை ஆற்றினார்.

மேலும் இந்நிகழ்வின் போது விவசாயத்தை தரமான விதைகளை கொண்டு முறையாக விவசாயம் செய்வோம். தீய பழக்கங்களான மது போதைக்கு அடிமையாக மாட்டோம் என விவசாயிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெயை வழங்க கோரி பாஜக விவசாய அணி சார்பாக மதுரையில் ஆர்ப்பாட்டம்

தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில், ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெயை வழங்க கோரி பாஜக விவசாய அணி மதுரை மாநகர் தலைவர் துரைபாஸ்கர், மேற்கு மாவட்ட தலைவர் சி.ரத்தினசாமி, கிழக்கு மாவட்ட தலைவர் பூமிராஜன் ஆகியோர் ஏற்பாட்டில் மதுரை புதூர் பேருந்து நிலையம் எதிரே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு மாநில செயற்குழு உறுப்பினர் மு.மு.க. செந்தூர்பாண்டியன் தலைமை வகித்தார்.

இந்நிகழ்வில் மாநகர், கிழக்கு, மேற்கு விவசாய அணி நிர்வாகிகள் மற்றும் பாஜக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES