Monday , November 25 2024
Breaking News
Home / செய்திகள் (page 91)

செய்திகள்

All News

மார்பக புற்றுநோயை சுய பரிசோதனை மூலம் எளிதில் கண்டறியலாம் அப்போலோ மருத்துவர்கள் தகவல்.!



மதுரை அப்போலோ மருத்துவமனையில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் குறித்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.இந்த சந்திப்பில் மருத்துவ புற்றுநோயியல் நிபுணர்கள் டாக்டர் முத்துக்குமாரசுவாமி, தேவானந்த், தீனதயாளன், அறுவை சிகிச்சை புற்றுநோயியல் நிபுணர்கள் சர்பராஜன், பாலுமகேந்திரா மற்றும் கதிர்வீச்சு புற்றுநோயியல் நிபுணர் சதீஷ்சீனிவாசன் ஆகியோர் முன்னிலையில் கலந்துரையாடல் நடந்தது.


புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் முத்துக்குமாரசுவாமி கூறுகையில், பெண்களைத் தாக்கும் புற்றுநோய்களில் மார்பகப் புற்றுநோய் முதன்மையானது. பெண்களிடையே புற்றுநோயால் ஏற்படும் மரணங்களில் மார்பகப் புற்றுநோயால் ஏற்படும் மரணங்கள் கணிசமானவை. காரணம், பெண்களின் தயக்கம். அந்தரங்கப் பிரச்சினைகளை வெளியே சொல்வதில் பெண்களுக்கு எப்போதும் தயக்கம் இருக்கும்.

அதனால்தான் பெண்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும்விதமாக அக்டோபர் மாதத்தை மார்பகப் புற்று நோய் விழிப்புணர்வு மாதமாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருக்கிறது. இந்த மாதத்தை ‘பிங்க் மாதம்’ என்றும் அழைக்கிறார்கள்.மார்பகப் புற்றுநோயை தொடக்க நிலையிலேயே கண்டறிந்துவிட்டால், அதிலிருந்து முழுமையாக மீண்டு விடலாம். மார்பகப் புற்றுநோயைச் சுயபரிசோதனை மூலம் நாமே எளிதில் கண்டறியலாம்.

18 முதல் 30 வயதிற்குட்பட்ட பெண்கள் மாதம் ஒரு முறையாவது மார்பக சுயபரிசோதனை செய்துகொள்வது அவசியம்.
முப்பது வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மார்பக சுயபரிசோதனையுடன், தேவை எற்பட்டால் மருத்துவமனைக்குச் சென்று முறையான பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றார்.
இதுகுறித்து புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் தேவானந்த் தெரிவிக்கையில், புற்றுநோய் பாதிப்பால் இறக்கும் விகிதம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தே வருகிறது.
மார்பகப்புற்று நோயை போக்குவதில் மருத்துவதுறை பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது. பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய்க்கு சிறந்த அறுவை சிகிச்சைகள் வழங்கப்படுகிறன்றன. குறிப்பாக மார்பகப் பாதுகாப்பு அறுவைசிகிச்சை முதல் ஆன்கோபிளாஸ்டிக் மார்பக அறுவைசிகிச்சை வரை வளர்ச்சியடைந்துள்ளது. மேலும், மார்பக அறுவை சிகிச்சையின் துறையானது, இம்யூனோ தெரபி மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை வாயிலாக முன்கூட்டியே கண்டறியப்பட்டு நோய் தீவிரத்தை குறைக்க முடியும் என்றார்.


இதில் சீஓஓ நீலகண்ணன் மதுரைமண்டலம், நிகில் திவாரி- ஜிஎம் – ஆபரேஷன், மணிகண்டன் – ஜிஎம் – மார்க்கெட்டிங், டாக்டர் பிரவீன் ராஜன் – ஜேடிஎம்எஸ் ஆகியோர் பங்கேற்றனர்.

மலேசிய போதைப் பொருள் கும்பலிடம் சிக்கிய இளைஞரை மீட்ட சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தினர்.!

நம் நாட்டில் தொடர்ந்து நிலவி வரும் வேலையில்லா திண்டாட்டதினால் வறுமையில் இருந்து மீள்வதற்காக வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்பு தேடிச் செல்வோர் தொடர்ந்து அதிகரித்து வருகின்றனர்.

இப்படி செல்வோரில் சிலர் மோசமான நபர்களிடம் சிக்கி பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாவது வழக்கமாகி வருகிறது. அப்படியோரு மோசமான கும்பலிடம் சிக்கி மீண்டு வந்த இளைஞரைப் பற்றிய தகவலே இது.

சிவகங்கை மாவட்டம், முத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்த் எனும் இளைஞர் வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர்கள் மூலம் மலேசிய நாட்டில் வேலைக்கென சென்றார். இதற்காக ரூ.80,000 முகவர்களிடம் வழங்கியிருந்தார். அங்கு சென்றவருக்கு சிலாங்கூர் மாநிலத்தில் இருக்கும் ஒரு அடுக்கு மாடிக்கட்டிடத்தில் வேலை வழங்கப்பட்டது. முற்றிலுமாக அடைக்கப்பட்டிருந்த அறைக்குள் மாவு போன்றதொரு பொருளை வழங்கி அவை மருந்தெனக் கூறி அவற்றை ஒரு கிராம் எடை கொண்ட சிறு பொதிகளாக்கும் வேலை வழங்கப்பட்டது. சந்தேகம் கொண்ட ஆனந்த் ரகசியமான முறையில் தகவலை சிவகங்கையில் வசித்து வரும் தனது உறவினருக்கு தெரிவித்தார். அவர் இத்தகவலை சிவகங்கை மாவட்டத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் நிறுவனர் அவர்களிடம் நடந்தவற்றைக் கூறினார்.

நடந்தவற்றை முழுமையாகக் கேட்டறிந்த அவர் மீண்டும் பல்வேறு வழிகளில் ஆனந்தை மீட்க தொடர் முயற்சிகளை மேற்கொண்டார். பின்னர் தமது நிறுவனத்தின் சிங்கப்பூர் நாட்டிற்கான தலைவர் முனைவர். மணிவண்ணன் நாச்சியப்பன் அவர்களுடன் இணைந்து செயற்பட்டு மலேசியக் காவல்துறையினரைத் தொடர்பு கொண்டு ஆனந்தை மீட்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டார். மிகவும் நுணுக்கமாகத் திட்டமிடப்பட்ட நடவடிக்கையின் மூலம் ஆனந்த் மீட்கப்பட்டார். அங்கிருந்த 5 கிலோ மற்றும் 160 கிராம் எடையிலான ஹெரோயின் போதைப் பொருளும் 175 கிராம் மெத்தபெத்தமின் ரக போதைப் பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
மலேசியக் காவல்துறையினர், சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் நிறுவனர் முனைவர்.நீலமேகம் நிமலன் அவர்களிடம் ஆனந்த் மீட்கப்படுவதற்கு முன்னர் வழங்கியிருந்த வாக்குறுதியை மீறி ஆனந்தை இவ்வழக்கின் சாட்சியாக உருவாக்கி வீட்டுக் காவலில் வைத்தனர்.

இரண்டு வருடங்களாக நடைபெற்ற பல்வேறு போராட்டங்களின் பின்னர் ஆனந்த கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு அவருடைய சொந்த ஊர் வந்து சேர்ந்தார்.

வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்பு தேடிச் செல்லும் போது அரசினால் அங்கீகாரம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களினூடாக செல்வது முக்கியமானதாகும்.

மதுரையில் ஆதரவற்றோர்களுக்கு தீபாவளி புத்தாடை வழங்கிய சிலம்பம் ஆசான் சரவணபாண்டி.!

மதுரையில் ஆதரவற்றோர்களுக்கு தீபாவளி புத்தாடை வழங்கிய சிலம்பம் ஆசான் சரவணபாண்டி

மதுரை எஸ்.எஸ் காலனியை சேர்ந்த சிலம்பம் ஆசான் டாக்டர் சரவணபாண்டி அவர்கள் கடந்த 5 வருடங்களாக இந்திய சிலம்பம் அறக்கட்டளை சார்பாக இலவசமாக சிலம்பம் கற்பித்தல் மற்றும் சாலையோரமாக வசிக்கும் ஆதரவற்றோர் மற்றும் மாற்று திறனாளிகளுக்கும் தொடர்ந்து உணவு கொடுத்து மனித நேயமிக்க இளைஞராக செயல்பட்டு வருகிறார்.

தற்போது வர உள்ள தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆதரவற்றோர் அனைவரும் கொண்டாட வேண்டும் என்ற அடிப்படையில் பெற்றோர்களை இழந்த பள்ளி குழந்தைகளுக்கும்,வயதான ஆதரவற்ற முதியோர்களுக்கும் புத்தாடைகளை இந்திய சிலம்பம் அறக்கட்டளை சார்பாக வழங்கினார். இவரது சமூக சேவைகளை அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.

தமிழக முதல்வர், அமைச்சர் செஞ்சி மஸ்தான்,டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோர்களுக்கு பிரவாசி புலம்பெயர்ந்த இந்தியர்கள் மீட்பு மற்றும் நல அமைப்பின் நிறுவனர் ஜாகிர் உசேன் நன்றி.!!

தமிழக முதல்வர், அமைச்சர் செஞ்சி மஸ்தான்,டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோர்களுக்குபிரவாசி புலம்பெயர்ந்த இந்தியர்கள் மீட்பு மற்றும் நல அமைப்பின் நிறுவனர் ஜாகிர் உசேன் நன்றி.!!

தமிழக முதல்வர், அமைச்சர் செஞ்சி மஸ்தான்,டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோர்களுக்குபிரவாசி புலம்பெயர்ந்த இந்தியர்கள் மீட்பு மற்றும் நல அமைப்பின் நிறுவனர் டாக்டர் ஜாகிர் உசேன் நன்றி தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது :-

போலி ஏஜெண்டுகளால் ஏமாற்றப்பட்டு முறையான ஆவணம் இல்லாமல் சுற்றுலா விசாவில் வேலைக்கு செல்வது, சட்டவிரோதமாக ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு எல்கையை கடப்பது. அங்கே சென்று சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடுவது. அதனால் அந்நாட்டு குடி வரவு அதிகாரிகளால் சிறைபிடிக்கப்பட்டு பல இன்னல்களை சந்தித்து வந்தனர்.

இதனை அறிந்து அவர்களை மீட்டு தாயகத்திற்கு திரும்ப அழைத்து வந்ததுள்ளேன்.


மேலும் பல விழிப்புணர்களை எனது அமைப்பின் மூலமாகவும், சமீபத்தில் நியூஸ் எக்ஸ்பிரஸ் தினசரி மாலை நாளிதழ் மூலமாகவும் செய்தி வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தேன்.


தமிழக முதல்வர் மற்றும் சிறுபான்மை மற்றும் வெளிநாட்டு வாழ் தமிழர் அமைச்சர் செஞ்சி கே.எஸ் மஸ்தான் மற்றும் தமிழ்நாடு காவல்துறை தலைவர் டிஜிபி சைலேந்திரபாபு அவர்களுக்கும், சில தினங்களுக்கு முன் இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை மனு அனுப்பினேன்.


எனது கோரிக்கையை ஏற்ற தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் இது போன்று செயல்படும் போலி ஏஜெண்டுகளை கண்டறிந்தால் குற்ற வழக்கு தொடரப்படும் என்றும் அறிக்கையாக வெளியிட்டுள்ளார்கள்.

மேலும் தமிழ்நாடு காவல்துறை தலைவர் டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் மக்களுக்கு இது பற்றி விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டு இருப்பது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.

இவர்களுக்கு பிரவாசி புலம்பெயர்ந்த இந்தியர்கள் மீட்பு மற்றும் நல அமைப்பு சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். என அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

மதுரையில் பிரவாசி புலம்பெயர்ந்த இந்தியர்கள் மீட்பு மற்றும் நல அமைப்பின் சார்பாக விருதுகள் வழங்கும் விழா.!!

பிரவாசி புலம்பெயர்ந்த இந்தியர்கள் மீட்பு மற்றும் நல அமைப்பின் சார்பாக பல்வேறு சமூக சேவைகள் செய்தோருக்கு விருதுகள் வழங்கும் விழா மதுரையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில்
1)தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் மாநில தலைவர் முனைவர் நம்புதாளை பாரிஸ் அவர்களுக்கு சிறந்த சமூக சேவகர் விருதும்,


2)ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு ஏரோநாட்டிக்கல் படிப்பை இலவசமாக அளித்து வரும் முனைவர் ஜாபர் ஷெரீப்க்கு சிறந்த சமூக சேவகர் விருதும்,

3)வெளிநாட்டில் வாழும் இந்திய பெண்களின் உரிமைக்காக போராடிவரும் ஆப்ரின் ஷேக்குக்கு பாரதி கண்ட புதுமைப் பெண் விருதும்,


4)கடந்த10 ஆண்டுகளுக்கு மேல் பறவைகளுக்கு உணவும் நீரும் வழங்கி வரும் சாகுல் அமீத்யிக்கு சிறந்த சமூக ஆர்வலர் விருதும்,


5.சிறந்த மாணவர்களை உருவாக்கி வரும் அம்ஜத் உசேனுக்கு சிறந்த நல்லாசிரியர் விருதை, பிரவாசி புலம்பெயர்ந்த இந்தியர்கள் மீட்பு மற்றும் நல அமைப்பின் நிறுவனர் முனைவர் ஜாகீர்உசேன் வழங்கி கௌரவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் கனவை  நிறைவேற்றுமா தமிழக அரசு.!! விஞ்ஞானி டாக்டர்.ஏ.சி. காமராஜ் அறிக்கை

WhatsApp Image 2022-10-15 at 1.13.51 PM.jpeg

கலாமின் கனவை, கலைஞரின் விருப்பத்தை 

நிறைவேற்றுமா தமிழக அரசு ?

– விஞ்ஞானி டாக்டர்.ஏ.சி. காமராஜ், B.E.(Hons)

மத்திய அரசின் நதிகள் இணைப்பு உயர்மட்ட நிபுணர் குழுவின் முன்னாள் உறுப்பினர்

தலைவர் – நவீன நீர்வழிச்சாலை

முன்னாள் ஜனாதிபதி டாக்டர் A.P.J.அப்துல் கலாம் பிறந்த தினத்தையொட்டி பொறியாளர் விஞ்ஞானி டாக்டர் ஏ.சி. காமராஜ் அறிக்கை,

முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் மக்கள் ஜனாதிபதியாக வாழ்ந்தார். இன்றளவும் மக்கள் மற்றும் இளைஞர்கள் உள்ளத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறார். அவர் கனவு காணுங்கள் என்றார். ஆனால் அவருடைய கனவு இன்னும் நிறைவேறாமல் உள்ளது.

டாக்டர். கலாம் அவருடைய “இளைஞர்கள் காலம்” எனும் புத்தகத்தில் “தமிழ்நாடு நவீன நீர்வழிச்சாலை” தனது கனவுத் திட்டம் என எழுதியுள்ளார். அவருடைய பிறந்த நாளான இன்று அவருடய கனவை விரைவிலே நிஜமாக்க தொடர்ந்து பாடுபடுவோம்.

உலகம் போற்றும்  நவீன நீர்வழிச்சாலைத் திட்டத்தை ஜனாதிபதியாக இருந்தபொழுது  டாக்டர் அப்துல் கலாம் பெற்று பீகார்கேரளாஆந்திரா என பல  மாநில  சட்டசபைகளில் பேசி வலியுறுத்தியுள்ளார். இதில்  பீகார் மாநில  அரசு  நவீன நீர்வழிச்சாலைத் திட்டத்தை தனது மாநிலத்தில் செயல்படுத்த ஏற்றுக்கொண்டது.

தமிழகத்தில் முன்னாள் முதல்வர்கள்  டாக்டர் ஜெயலலிதா & டாக்டர் கலைஞர் இருவரிடமும் நவீன நீர்வழிச்சாலைத் திட்டத்தை செயல்படுத்த டாக்டர். கலாம் வலியுறுத்தினார். அதன்  பிறகு டாக்டர் ஜெயலலிதா இத்திட்டத்தை தேர்தல் அறிக்கையில் சேர்த்தார்கள்.   டாக்டர் கலைஞர் அவர்களும்  ” பொறியாளர் ஏ.சி.காமராஜ் அவர்களின் நவீன நீர்வழிச்சாலைத் திட்டத்தை அவரது ஆலோசனைகளைப்  பெற்று செயல்படுத்திட வேண்டும்” என்று அறிக்கை  வெளியிட்டார்.

ஒரு முறை அப்துல்கலாம் கேட்டார் ” நவீன நீர்வழிச்சாலை வந்தால் இராமநாதபுரத்திற்கு தண்ணீர் வருமா ?” என்று. நான் “நிச்சயம் வரும்” என்று கூறியதோடு, எப்படி  வரும் என்றும்  விளக்கினேன். இந்தியாவிற்கே ஜனாதிபதியாக இருந்தாலும் சொந்த ஊர்க்கு நன்மை சேரவேண்டும் என விரும்பிய உன்னத தமிழர் மாமனிதர் கலாம்.

இந்தாண்டு நல்ல மழை பெய்தும் இராமநாதபுரத்துக்கு தண்ணீர் போதுமானளவு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கலாமின் கனவுத் திட்டம் நவீன நீர்வழிச்சாலை செயல்பாட்டுக்கு வரும் பொழுது, இராமநாதபுரம் உள்ளிட்ட அனைத்து ஊர்களுக்கும்  தண்ணீர் வழங்க முடியும். 

தமிழகத்தில் ஆண்டுதோறும் அனைத்து ஆறுகளிலிருந்தும் சுமார் 177 டி.எம்.சி. தண்ணீர்  கடலுக்கு செல்கிறது. (விஜயராகவன் கமிட்டி அறிக்கை).  இந்த தண்ணீரைக் கொண்டு வைகை  அணையை 30 முறை நிரப்பலாம். இந்தாண்டு மட்டும்  காவிரியில் இருந்து கடலுக்கு சென்ற தண்ணீரைக் கொண்டு வைகை  அணையை 75 முறை நிரப்பலாம்.

இவ்வாறு வீணாகும் வெள்ளநீரைத்  தேக்கி குடிநீர், பாசனம் போன்றவற்றுக்கு பயன்படுத்தவே நவீன நீர்வழிச்சாலைத்திட்டம் கொடுக்கப்பட்டது. மதுரைக்கு குடிநீர் வழங்கும் திட்டத்திற்கு மட்டும் ரூ.1300 கோடி, சிவகங்கைக்கு குடிநீர் வழங்கும் திட்டத்திற்கு ரூ.1200 கோடி, இராமநாதபுரத்தில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு பல கோடி என தமிழக அரசு பல்வேறு திட்டங்களுக்கு செலவு செய்கிறது.

ஆனால் நமது நவீன நீர்வழிச்சாலைத் திட்டம் செயல்பாட்டிற்கு வந்தால் இந்த மாவட்டங்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் குடிநீர் பிரச்சனையே தீரும். அதோடு ஏராளமான வேலைவாய்ப்புக்கள் உண்டாகும். இத்திட்டத்திற்கு அரசுக்கு ரூ.1000 கோடி கூட செலவு ஆகாது. மத்திய அரசு இதை தேசிய திட்டமாக அறிவித்து பணம் கொடுப்பார்கள்.   கூடவே தனியார் முதலீடும் கிடைக்கும்.

முடியும்” என்ற நம்பிக்கை கொண்ட இளைஞர் சமுதாயம் தான் இந்த திட்டத்தை நிறைவேற்ற முயற்சி எடுக்க வேண்டும் என கூறியதை வேதவாக்காக கருதி ஏராளமான இளைஞர்கள் நவீன நீர்வழிச்சாலைத் திட்டத்திற்காக செயல்பட்டு வருகிறார்கள். சென்னையை சேர்ந்த இளைஞர், நவீன நீர்வழிச்சாலை திட்ட ஆர்வலர் திரு.சித்து ஜி.எஸ்.எம் NATIONAL SMART WATERWAYS MISSION & #dreamofdrkalam# என்கிற பதாகையை தயார் செய்து பிரபலங்கள், சமூக வலைத்தளங்கள்  மூலம் விழிப்புணவு ஏற்படுத்தவுள்ளார். முதற்கட்டமாக, அந்த விழிப்புணர்வு பயணத்தை  மதுரையிலிருந்து துவக்கி வைக்கும் விதமாக நீர்வழிச்சாலைத் திட்டத்தின் தந்தை விஞ்ஞானி ஏ.சி.காமராஜ் அவர்களிடம் டாக்டர். அப்துல் காலம் பிறந்தநாளான இன்று பதாகையை கொடுத்து ஆசி பெற்றுக்கொண்டார். 

இளைஞர்களின் இந்த முயற்சி வெற்றியடைய, தமிழக அரசு கலாமின் கனவையும், கலைஞரின் விருப்பத்தையும் நிறைவேற்றும் விதமாக  உடனே இத்திட்டத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். .

இக்கூட்டத்தில் நவீன நீர்வழிச்சாலை பேரியக்க நிர்வாகிகள் திரு. ஆர். முருகப்பன் மற்றும் கே .ஆர். சுப்ரமணியன் கலந்துகொண்டனர்

மதுரை அப்போலோ மருத்துவமனையில் நரம்பியல் அறுவை சிகிச்சை நேரலை.!!

தென் தமிழகத்தில் முதல் முறையாக மதுரை அப்போலோ மருத்துவமனையில் நரம்பியல் அறுவை சிகிச்சை நேரலை செய்யப்பட்டது

மதுரை, அக்.12:

மதுரை அப்போலோ மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நேரலை மற்றும் நிகழ்நேர நரம்பியல் சிகிச்சை செயல்முறை கண்காணிப்பு பயிலரங்கு அக்.12-ஆம் தேதி நடைபெற்றது. இத்தகைய நேரலை அறுவை சிகிச்சை பயிலரங்கு நடைபெறுவது தென் தமிழகத்திலேயே இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது
அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழக பேராசிரியர் பார்த்தசாரதி திருமலா மேற்பார்வையில், மதுரை அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் டாக்டர் ஷ்யாம், டாக்டர் கெவின் ஜோசப், நரம்பியல் மயக்கமருந்தியல் நிபுணர் டாக்டர் நிஷா ஆகியோர் இணைந்து மிகவும் சிக்கலான மூளைக் கட்டிகள் மற்றும் முதுகு தண்டுவடக் கட்டிகளை அகற்றும் அறுவை சிகிச்சையை செய்தனர்.
சென்னை மருத்துவக் கல்லூரியின், இன்ஸ்டிடியூட் ஆஃப் நியூரோசர்ஜரி ஓய்வு பெற்ற இயக்குனர் பேராசிரியர் ரங்கநாதன் ஜோதி மற்றும் பேராசிரியர் ஜெகன் நாராயணா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு பயிலரங்கு நிகழ்வுகளை, துவக்கிவைத்து வழிநடத்தினர்.

இந்த ஒருநாள் பயிலரங்கில் 3 நோயாளிகள் பயன் அடைந்தனர். தமிழ்நாடு முழுவதிலும் இருந்து சுமார் 40 நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் காணொலி வாயிலாக இந்தப் பயிலரங்கில் பங்கேற்றனர்.


இந்த நிகழ்வின் பயிற்சி நேரமானது நவீன நரம்பியல் கண்காணிப்பு தொழில்நுட்பங்களையும், நரம்பியல் புற்றுநோய் பிரிவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களையும் அறிந்து கொள்ள பங்கேற்பாளர்கள் அறிந்துகொள்ள உதவியாக இருந்தது. நரம்பியல் சிகிச்சைப் பிரிவில் முன்னோடி மருத்துவமனை என்ற அடிப்படையில், சமீபத்திய மேம்பாடுகள் குறித்த தகவல்களைக் கொண்டு சேர்ப்பதிலும், பயிலரங்குகள் வாயிலாக நோயாளிகளை பலனடையச் செய்வதிலும் மதுரை அப்போலோ மருத்துவமனை மகிழ்ச்சி அடைகிறது.

இந்த நிகழ்வை மதுரை அப்போலோ மருத்துவமனை சிஓஓ நீலக்கண்ணன், டாக்டர் பார்த்தசாரதி திருமலா, பேராசிரியர் ஜெகன் நாராயணா, பேராசிரியர் ரெங்கநாதன் ஜோதி, டாக்டர் பிரவீண் ராஜன், JDMS அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் டாக்டர் ஷ்யாம் ஆகியோர் தொடங்கிவைத்தனர். மார்க்கெட்டிங் பிரிவு பொதுமேலாளர் கே .மணிகண்டன், செயல்பாடுகள் பொதுமேலாளர் டாக்டர் நிக்கல் திவாரி ஆகியோர் உடனிருந்தனர்.

அழகர்கோவில் பகுதியில் மதுரை சித்த வைத்திய சங்கத்தின் அசாதாரண பொதுக்குழு கூட்டம்.!

மதுரை சித்த வைத்திய சங்கத்தின் அசாதாரண பொதுக்குழு கூட்டம் அழகர் கோயில் ரோட்டில் உள்ள OASIS REFRESHMENTS அரங்கத்தில் அகஸ்தியர் ஹெர்பல்ஸ் உரிமையாளர் நாகலிங்கம் தலைமையிலும் மீனாட்சி மெடிக்கல் உரிமையாளர் ஆறுமுகம் முன்னிலையிலும் நடைபெற்றது.

மேலும் இக்கூட்டத்தில் சங்கத்தின் தலைவராக அரவிந்தர், கௌரவத்தலைவராக நாகலிங்கம், துணைத்தலைவர்களாக ஐயப்பராஜா, ஆறுமுகம்,செயலாளராக அந்தோணிராஜ்,பொருளாளராக எட்வர்ட் ராஜா,இணைச்செயலாளராக அண்ணாமலையார் தர்மசாலை அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் கண்ணதாசன் மற்றும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

மேலும் இக்கூட்டத்தில் பாரம்பரியமான சித்த வைத்தியத்தின் மேம்பாடு மாநிலம் மற்றும் மத்திய அரசு அங்கீகாரம் பெறுதல் பாரம்பரிய வைத்தியர்களின் மேம்பாடு குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

படப்பை, வஞ்சிவாஞ்சேரியில் காஞ்சிபுரம் மாவட்ட சிலம்பாட்ட கழகம் நடத்திய 27 ஆம் ஆண்டு மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி.!!

காஞ்சிபுரம் மாவட்ட சிலம்பாட்ட கழகம் நடத்திய 27 ஆம் ஆண்டு மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி (2022) படப்பை, வஞ்சுவாஞ்சேரியில் உள்ள ராசி பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.

இப்போட்டிக்கு காஞ்சிபுரம் மாவட்ட சிலம்பாட்ட கழக தலைவர் வலசை முத்துராமன் ஜி அவர்கள் தலைமை வகித்தார்.

தமிழ்நாட்டு சிலம்பாட்டக் கழக பொதுச்செயலாளர் முரளி கிருஷ்ணன் வாழ்த்தி பேசினார். காஞ்சிபுரம் மாவட்ட சிலம்பாட்டக் கழக செயலாளர் லட்சுமணன் வரவேற்புரை ஆற்றினார்.

இந்திய சிலம்ப சம்மேளன தலைவர் டாக்டர் ராஜேந்திரன் மற்றும் தமிழ்நாடு சிலம்பாட்ட கழக தலைவர் பிரதீப் ராஜேந்திரன் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினர்.

இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்களுடன் நீண்ட காலம் பணியாற்றிய
RRASE Engineering College நிர்வாக இயக்குனர் டாக்டர் ரெங்கநாதன் மற்றும் டாக்டர் ரேணூகாதேவி,
காஞ்சிபுரம் மாவட்ட பெருந்தலைவர் மனோகரன், குன்றத்தூர் ஒன்றிய பெருந்தலைவர் சரஸ்வதி மனோகரன் படப்பை ஊராட்சி மன்ற தலைவர் கர்ணன்,கௌரவத்தலைவர் அழகிரி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இதில் காஞ்சிபுரம் மாவட்ட கிளை நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தென்னிந்திய பாராம்பரிய சிலம்பாட்ட கழகம் மற்றும் வி.கே.எஸ் சிலம்பம் சார்பாக மதுரை அழகர் கோவில் ரோடு, அரிட்டாபட்டி அருகே வல்லாளபட்டியில் நாளை ஞாயிற்றுக்கிழமை சிலம்பாட்ட போட்டி.!!

தென்னிந்திய பாராம்பரிய சிலம்பாட்ட கழகம் மற்றும் வி.கே.எஸ் சிலம்பம் சார்பாக மதுரை மாவட்டம் அழகர் கோவில் ரோடு, அரிட்டாபட்டி அருகே சண்முகநாதபுரம், வல்லாளபட்டியில் உள்ள நியூட்டன் நர்சரி பிரைமரி பள்ளியில் நாளை (09/10/2022) ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் மாநில அளவிலான மாபெரும் சிலம்பாட்ட போட்டி நடைபெற உள்ளது.

இதில் தமிழகத்தில் இருந்து அனைத்து மாவட்டங்களிலும் இருந்து 30க்கும் மேற்பட்ட சிலம்ப ஆசான்கள் மற்றும் 600க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்து கொள்ள உள்ளனர்‌.

இப்போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு கேடயம், பதக்கம்,சான்றிதழ் மற்றும் முதல் பரிசு பெறும் மாணவ, மாணவிகளுக்கு ரேஞ்சர் சைக்கிள் வழங்க உள்ளார்கள். சிலம்பம் ஆசான்களை ஊக்குவிக்கும் விதமாக வெள்ளி நாணயம் வழங்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போட்டிக்கு நியூட்டன் வாழ்க்கை மழலையர் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தரபாண்டியன் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர் சங்க செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் தலைமை தாங்குகின்றனர்.

தென்னிந்திய பாராம்பரிய சிலம்பாட்ட கழக தலைவர் முன்னாள் ராணுவ வீரர் வேணுகோபால், செயலாளர் மில்டன் சைக்கி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன், ரூபா நர்சரி, பிரைமரி பள்ளி தலைமை ஆசிரியர் சூரிய நாராயணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக சரவணன், ஆளவந்தார், முருகானந்தம், ராமகிருஷ்ணன், சுந்தரம்,கராத்தே மூவேந்தர், கராத்தே ராஜா, அன்பு குழந்தைவேல் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தென்னிந்திய பாராம்பரிய சிலம்பாட்ட கழகத்தின் மதுரை மாவட்ட தலைவரும், வி.கே.எஸ் சிலம்பம் பள்ளியின் பயிற்சியாளருமான சிலம்பம் சண்முகவேல் செய்து வருகிறார்.

சிலம்பாட்ட போட்டி குறித்து தொடர்பு கொள்ள : 99944-86231

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES