டிசம்பர் 6 சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு மதுரை அவுட் போஸ்ட் பகுதியில் உள்ள அவரது திருவுருவச் சிலையை புதுப்பிக்கும் பணியை விசிக கல்வி பொருளாதாரம் விழிப்புணர்வு இயக்கத்தின் மாநில துணைச்செயலாளர் இரா.அய்யங்காளை மேற்கொண்டார். உடன் ஓவியர் மதியழகன், பிரபாகரன் உள்ளனர்.
பாஜக மதுரை மாநகர் மாவட்ட தலைவர் மகா.சுசீந்திரன் வழிகாட்டுதலின்படி, “ஒரு கிளையில் பத்து இளைஞர்கள்” என்ற படிவத்தை மதுரை மாநகர் மாவட்ட வடக்கு, மேற்கு மற்றும் மத்திய,தெற்கு தொகுதிகளின் படிவத்தை சம்பந்தப்பட்ட நிர்வாகிகளிடம் பாஜக இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர் நவீன்அரசு வழங்கினார்.
இந்நிகழ்வில் நிர்வாகிகள் மேலமடை மணி, நாகராஜ், சேதுசரவணன், வேல்முருகன், அருண்பிரசாத், கார்த்திக்மணி, ராம்,ஆட்டோ பிரபு வன்னி தினேஷ், அரவிந்த்,சந்துரு மகாதேவன் அஜித்,ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
வளைகுடா வாழ் தமிழர்கள் நலச்சங்கத்தின், மாநில துணைத்தலைவராக மதுரையை சேர்ந்த முனைவர் பிச்சைவேல் அவர்களை, வளைகுடா வாழ் தமிழர்கள் நலச்சங்கத்தின் நிறுவனத்தலைவர் டாக்டர் நம்புதாளை பாரிஸ் நியமனம் செய்துள்ளார்.
வளைகுடா வாழ் தமிழர்கள் நலச்சங்கத்தின், சிங்கப்பூர் மற்றும் மலேசியா நாடுகளின் தலைமை ஒருங்கிணைப்பாளராக மதுரையை சேர்ந்த டாக்டர் கஜேந்திரன் அவர்களை, வளைகுடா வாழ் தமிழர்கள் நலச்சங்கத்தின் நிறுவனத்தலைவர் நம்புதாளை டாக்டர் பாரிஸ் நியமனம் செய்துள்ளார்.
மதுரை மாட்டுத்தாவணி பழமண்டி வணிக வளாகத்தில் ரைட் பைக்ஸ் 7- வது இருசக்கர வாகன விற்பனை நிறுவனத்தை, ஜெயபாலன், நிர்மலா ஜெயபாலன், நிர்வாக இயக்குனர் ராஜுவ் சுப்பிரமணியம், ரேவதி ராஜுவ் , சுசி நிறுவனத்தலைவர் சுந்தர் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக ரம்யா மருத்துவமனை உரிமையாளர் டாக்டர் துரைராஜ் கலந்து கொண்டு சிறப்பித்தார். இதில் நிறுவனத்தின் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள், நண்பர்கள், உறவினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பால் விலை, சொத்து வரி குடிநீர் வரி மற்றும் மின் கட்டணம் உயர்வை கண்டித்து இந்திய மாதர் தேசிய சம்மேளனம் மதுரை மாநகர் – புறநகர் சார்பில், புறநகர் மாவட்ட செயலாளர் நாகஜோதி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாதர் சங்கத்தின் மாநில குழு உறுப்பினர் மணிமேகலை, மாதர் சங்கத்தின் மாநில துணைத் தலைவரும் மாவட்ட செயலாளருமான இராஜலெட்சுமி கண்டன உரை ஆற்றினர்.
மேலும், ஏஜடியூசி மாவட்ட துணைச் செயலாளர் தாமஸ், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் எம்.எஸ் முருகன், புறநகர் மாவட்ட செயலாளர் பி.முத்துவேல் ஆகியோர் இந்த ஆர்ப்பாட்டத்தை வாழ்த்தி பேசினர்.
மாநில குழு உறுப்பினரும் மாவட்ட தலைவருமான கற்பக வள்ளி, பொருளாளர் ஜாகீர் நிஷா, மாதர் உறுப்பினர்கள், நிர்வாகிகள், பெண்கள் உட்பட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்
இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு பிரவாசி புலம்பெயர்ந்த இந்தியர்கள் மீட்பு மற்றும் நல அமைப்பின் நிறுவனர் டாக்டர் ஜாகிர் உசேன் மக்கள் கண்காணிப்பகம் நிறுவனர் ஹென்றி டிபேன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.
மதுரை மாநகராட்சி 58வது வார்டு ஞானஒளிவுபுரம் A.A.ரோட்டில் அமைந்துள்ள பாமா மெடிக்கல் சார்பாக குப்பை அள்ளும் மிதிவண்டியை வார்டு கவுன்சிலர் மா.ஜெயராம் அவர்கள் துப்புரவு பணியாளர்களுக்கு வழங்கினார்.
உடன் வட்ட கழக செயலாளர் சீனிரமேஷ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உள்ளனர்.
எஸ்டிபிஐ கட்சியின் தெற்கு மாவட்ட பொதுக்கைகுயானைக்கல் பகுதியில் உள்ள ஹோட்டல் பிரசிடென்ட்ல் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு
மாவட்ட அமைப்பு பொதுச் செயலாளர் சிராஜ்தீன் வரவேற்புரையும்,
மாவட்ட செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் முகமது யூசுப் தொகுப்புரையும்,
மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர் தலைமையுரையும் நிகழ்த்தினார்கள்.
மாவட்ட பொதுச் செயலாளர் சாகுல் ஹமீது கடந்த ஒரு ஆண்டிற்கான அறிக்கையை சமர்ப்பித்தார்.
மாநில செயலாளர் நஜ்மா பேகம் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.
மேலும்
SDTU மாநில துணைத் தலைவர் அப்துல் சிக்கந்தர், SDTU மாநில செயற்குழு உறுப்பினர் சத்ய மூர்த்தி,
வழக்கறிஞர் அணி மண்டல தலைவர் வழக்கறிஞர் பஷீர்,
WIM மாநில செயற்குழு உறுப்பினர் கதிஜா
உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இக்கூட்டத்தில் கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
1) சென்னை போன்ற நகரங்களில் கடந்து சென்ற மழை காலங்களில் வெள்ளம் உள்ளிட்ட பேரிடர் நிகழ்வுகளில் சிறப்புற கையாண்டு சீரிய செயலாற்றிய மாண்புமிகு மாநில முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்.
2) மதுரை சாலைகள் குறிப்பாக நகரின் பிரதான பகுதியில் உள்ள முக்கிய சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன. ஆகவே உடனடியாக சரி செய்து தர மதுரை மாவட்ட அரசு நிர்வாகத்தை கேட்டு கொள்கிறோம்.
3) மதுரை ஸ்மார்ட் சிட்டி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
4)மழை காலத்தில் பெரியார் பேருந்து நிலைய பகுதியில் வெள்ளம் சூழ்ந்து மக்கள் அவதிப்படுகிறார்கள். இதற்கு உண்டான உரிய செயல் திட்டங்களை வகுத்து தீர்வு காண வேண்டும்.
5)மதுரையில் கஞ்சா, குட்கா போன்ற போதை வஸ்துகள் மாணவர்களிடம் மிகவும் சுலபமாக கிடைக்கும் அவல நிலை உள்ளது. இக்கொடிய பழக்கத்தினால் சமூக சீர்கேடு மற்றும் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. சம்மந்தப்பட்ட நிர்வாகம் உடனடியாக இரும்பு கரம் கொண்டு அடக்கி நம் நாட்டின் வருங்கால தூண்களை வளமான தலைமுறைகளாக காத்திட வேண்டும்.
என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இறுதியாக மாவட்ட பொருளாளர் சிக்கந்தர் நன்றியுரை கூறினார்.
மதுரை ஜெய்ஹிந்த்புரம் வீட்டு உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் 16-வது ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் தலைவர் மலர்பாண்டியன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பொருளாளர் சுகுமார், துணைத்தலைவர் கணேசன், மகளிர் பிரிவு கயர்நிஷாகபீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் சுப்புராம் வரவேற்புரை ஆற்றினார்.
இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ மற்றும் துணை மேயர் நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.
இந்விகழ்வில் மாமன்ற உறுப்பினர்கள் எஸ்.வி.முருகன், லக்சிகா ஸ்ரீ, காவேரி, எஸ்.எம்.டி ரவி, தமிழ்ச்செல்வி மற்றும் என்.எம் மாரி, பென்குயின் நடராஜன், நல்லதம்பி, செல்வராஜ், சண்முகசுந்தரம், வேல்பாண்டி ஆலோசகர்கள் நரசிங்கம், கோபால், சட்ட ஆலோசகர்கள் மரியவினோலா, வெங்கட்ராமன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.