Friday , November 22 2024
Breaking News
Home / செய்திகள் (page 51)

செய்திகள்

All News

எப்என்ஐ மற்றும் ஜி.பி.பி நெட் , அன்னை வசந்தா டிரஸ்ட் சார்பாக மாணவர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் விழா

எப்என்ஐ மற்றும் ஜி.பி.பி நெட் , அன்னை வசந்தா டிரஸ்ட் சார்பாக மாணவர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் விழா

மதுரை, ஜனவரி.15-

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் எப்என்ஐ, ஜி.பி.பி நெட் மற்றும் அன்னை வசந்தா டிரஸ்ட் மற்றும் திருமங்கலம் நகர் மக்கள் நலச்சங்கம் இணைந்து நடத்திய விவேகானந்தர் பிறந்த நாள் விழா மற்றும் மாலை நேர வள்ளலார் பயிற்சி பள்ளி மாணவர்கள், மாவட்ட அளவில் வெற்றி பெற்ற அகத்தியர் சிலம்ப பயிற்சி பள்ளி மாணவ மாணவியர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா டிரஸ்ட் தலைவர் அமுதவள்ளி பழனிமுருகன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு செயலாளர் சித்ரா ரகுபதி, ஆசிரியர் பவித்ரா பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொல்காப்பியர் மன்ற தலைவர் இருளப்பன் வரவேற்று பேசினார்.

பயிற்சி பள்ளியின் தலைமை ஆசிரியர் ருக்குமணி பரிசுகளை வழங்கி பாராட்டினார். சிலம்பம் பயிற்சி பள்ளியின் தலைமை ஆசான் மருதுபாண்டியன் பொங்கல் பரிசுகளை வழங்கினார்.

திருமங்கலம் நகர் மக்கள் நலச்சங்க தலைவர் இரா.சக்கையா, டிரஸ்ட் நிறுவனர் எஸ்.எம் ரகுபதி, வள்ளலார் பயிற்சி பள்ளி ஆசிரியர் சிவஜோதிகா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

நிகழ்ச்சியின் முடிவில் டிரஸ்ட் பொருளாளர் அருள்ஜோதி ஆறுமுகம் நன்றி கூறினார்.நிகழ்ச்சியை ரோகுபாண்டி ஒருங்கிணைத்தார்.

பாஜக விவசாய அணி மாநில துணைத்தலைவர் வளசை முத்துராமன் ஜி பொங்கல் வாழ்த்து..!

பாஜக விவசாய அணி மாநில துணைத்தலைவரும், பெருங்கோட்ட பொறுப்பாளருமான வளசை. முத்துராமன் ஜி பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :-

அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

சங்க காலத்திலிருந்து கொண்டாடப்படும் தமிழர்களின் தைப்பொங்கல் பல வரலாறு மிக்க தமிழன் கதிரவனின் ஒளியினால் தான் பயிர்கள் வளர்கின்றன என்றும் காய்கறிகள் காய்க்கிறது என்றும் துல்லியமாக கணித்தார்கள். அதனால்தான் கழனியில் விளைந்த கதிரை பறித்து கதிரவனுக்கு நன்றி செலுத்தினார்கள்.

மருத நிலத்தில் வாழ்ந்த மக்கள் மிகவும் உணர்ச்சியாக கொண்டாடினார்கள் தை1 முன்தினம் போகி பன்டிகை ஆயர்கள் கொண்டாடினார்கள் என்ற வரலாறும் சொல்லப்படுகிறது.தை1 ஆம் நாள் சூரிய நாராயணன் என்ற பெயரில் நாமும் வழிபட காரணமானது. அந்தக் கால நெல் விதைகள் அறுவடை செய்ய குறைந்தது ஆறு மாத காலங்கள் ஆகும் அதாவது ஆடியில் விதைத்தால் மார்கழி அறுவடை செய்து வீட்டுக்கு கொண்டு வரும் காலமே தைப்பொங்கல் ஆனது.

அதனால் தான் நம் தமிழ்நாட்டில் பழமொழி தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள் அரசருக்கு வரியாக செலுத்தியது நெல் போக மீதி இருக்கும் நெல்லை விற்பதற்கும் வீட்டுக்கு எடுத்து வந்து அரிசி ஆக்கி புது மண் பானையில் பச்சரிசி வெல்லம் பால் நெய் முந்திரி பருப்பு கலந்து பொங்கல் வைப்பது மட்டுமல்லாமல் கரும்பு இலை, மஞ்சள் அனைத்து பொருளுமே புதுசாக இட்டு பொங்கல் உருவாக்கி மனிதனுக்கும் மாட்டுக்கும் கொடுத்து மகிழ்ந்து வந்தார்கள் நம் தமிழர்கள்.

அது மட்டுமல்லாமல் போகி பண்டிகை அன்று பழையதை எரிக்கும் சடங்காக கொண்டாடினார்கள் அடுத்ததாக மாட்டுப் பொங்கல் ஊரில் ஒரு பழமொழி உண்டு. நன்றாக உழைக்கும் ஒரு மனிதனைப் பார்த்து மாடு போல் உழைக்கிறான் என்று சொல்வார்கள் அந்த காலத்தில் மனிதனுக்கு மேலாக மாடுகள் தான் உழைத்தன. உழைத்த மாட்டை பெருமை படுத்தும் விதமாக மாடுகளை குளிப்பாட்டி கொம்புகளுக்கு பெயிண்ட் அடித்து சந்தனம் குங்குமம் சாத்தி கலப்பைகளையும் நன்றாக சுத்தம் செய்து அதற்கும் சந்தனம் குங்குமம் விட்டு உழவுக்கு உறுதுணையாக இருந்த அத்தனை பொருளையும் மதித்தார்கள்.

ஏறு தழுவுதல் மஞ்சு விரட்டு என்று கி.மு 2000 முன்பு இருந்த தமிழர்களின் வீர விளையாட்டை ஜல்லிக்கட்டு என்று மாற்றியவர்கள் நாயக்கர் மன்னர்கள். பழந்தமிழ் இலக்கியங்கள் பல இடத்தில் சொல்லப்பட்டுள்ளன அதுபோல் சொல்லால் தரப்பட்டவள் என்ற கலிப்பாடல்,

ஆயமகன் ஆயமகளை மணமுடிக்க வேண்டுமானால் கொடிய போரேற்றைத் தழுவி வெற்றி பெற வேண்டும். இல்லையேல் இவள் அழகு மேனியைத் தீண்ட இயலாது என்று குறிப்பிடுகிறது. திவ்ய பிரபந்தத்தில் கூட திருமங்கை ஆழ்வார்.அம்பொனார் உலகம் ஏழும் அறிய ஆய்ப்பாடி தன்னுள்
கொம்பனார் பின்னை கோலம் கூடுதற்கு ஏறு கொன்றான்
நெம்பொனார் மதிள்கள் சூழ்ந்த தென் திருப்பேருள் மேவும்
எம்பிரான் நாமம் நாளும் ஏத்தி நான் உய்ந்த வாறே” தன் மாமன் மகளான நப்பினையா பகவான் கிருஷ்ணன் ஏழு காளைகளை அடக்கி மணமுடித்தார் என்கிறார்.

தில்(புறம்:22)
என்ற புறநானூற்றுப் பாடல் தைத்திருநாளில் செந்நெல்லினை அறுத்து கரும்பினைக் கட்டி அந்த இடத்தில் நெல்லோடு வேயப்பட்ட நெல்லந்தாள் கூரை வீடும்,கருப்பஞ்சருகு வேய்ந்த கூரை வீடுகளும் தனித்தனியே விழாக் கொண்டாடப்பட்ட களம் போலப் பொலிவுடன் காட்சி தருகின்றன என்று கூறுகிறார் திருமங்கை ஆழ்வார்

வரலாற்றுச் சான்றுகள்:

பழங்காலப் பெண்கள் தை மாதத்தில் நோன்பிருந்த செய்திகளை சங்க இலக்கியங்கள் சில குறிப்பிட்டிருக்கின்றன. தை மாதத்தில் நோன்பிருந்து, வைகை ஆற்றில் நீராடி, சிறந்த கணவர் வாய்க்கப்பெற வேண்டும் என பெண்கள் வேண்டியதாக ‘பரிபாடல்’ கூறுகின்றது.
‘தீயெரிப் பாலுஞ் செறிந்த முன் பூற்றியோ
தாயருகா நின்று தவத் தைந்நீராடல்
நீயுரைத்தி வையை நதி’

       (பரிபாடல்:11)என் 

தமிழர்களின் இந்த பாரம்பரியத்தை பொங்கல் தமிழ்நாட்டு மட்டுமல்லாமல் அறுவடை கர்நாடகா ஆந்திரா மகா சங்கராந்தி என்ற பெயரிலும் ஜனவரி 13 இல் பஞ்சாப் மற்றும் அரியானா லோஹ்ரி, ஜனவரி 14 15 அசாம் மாநிலத்திலும் மாஹ் பிகு என்ற பெயரில் நெல் அறுவடை திருவிழா நடைபெறுகிறது.

கிரேக் எகிப்து ரோம ஜப்பானியர்கள்
டோரினோய்ச்சி என்றும் கொரியாவில் சூசாக் என்றும் ஆப்பிரிக்காவில் சில பகுதிகளில் மூன்று நாள் திருவிழாவாகவும் அக்டோபர் மாதம் இரண்டாவது திங்கட்கிழமை சீனாவில் நிலா விழா என்ற பெயரில் அறுவடை திருநாள் கொண்டாடப்படுகிறது.

உணவுக்கு இல்லாமல் உயிரினம் வாழ முடியாது என்பதை தெரிந்து தான் திருவள்ளுவர் உழவுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்
திருக்குறள் சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.
பல தொழில் செய்து சுழலும் இவ்வுலகத்தில் ஏர்ப்பிடிக்கும் தொழிலை பின்பற்றி தான் உலகம் சுற்ற வேண்டியிருக்கிறது. துன்பங்கள் பலயானும் உழவுத் தொழிலே உலகத்தில் சிறந்தது என்பது வள்ளுவன் வாக்கு. இப்படி பல ஆழ்வார்களும் நாயன்மார்களும் தை திருநாளை போற்றி புகழ்ந்து கூறியுள்ளார் என்பது தமிழர்களுக்கு மேலும் பெருமை சேர்க்கிறது.

அப்படிப்பட்ட தருணத்தில் தமிழ்நாட்டில் ஒரு எம்.பி கூட இல்லாத போதிலும் தமிழ்நாட்டுக்கு இரண்டு லட்சத்தி 70 ஆயிரம் கோடிய அளவுக்கு தமிழர்களின் முன்னேற்றத்துக்காக அள்ளி கொடுத்த நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சார்பாகவும், மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் சார்பாகவும், மத்திய அமைச்சர் டாக்டர் எல்.முருகன் அவர்கள் சார்பாகவும் பாரதிய ஜனதா கட்சி சார்பாக தைப்பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என பாஜக விவசாய அணி மாநில துணைத் தலைவர் வளசை முத்துராமன் கூறியுள்ளார்.

அகத்தியர் அன்னதான அறக்கட்டளை சார்பாக பொங்கல் திருநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டம், கரிசல்பட்டியில் உள்ள அகத்தியர் அன்னதான அறக்கட்டளை அலுவலகத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு பச்சரிசி, வெல்லம்,கரும்பு உள்ளிட்ட பொங்கல் தொகுப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா டிரஸ்ட் நிறுவனத் தலைவர் பா.முத்துப்பாண்டி தலைமையிலும், பில்டிங் காண்ட்ராக்டர் பூமிநாதன் ஏற்பாட்டிலும் நடைபெற்றது.

டிரஸ்ட் செயலாளர் திருமதி. மு.சகுந்தலாதேவி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பொருளாளர் மு.சக்திவேல் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக அன்னாள் நல காப்பகம் ஒருங்கிணைப்பாளர் யோகராஜ் பங்கேற்றார்.

இதில் டிரஸ்ட் ஒருங்கிணைப்பாளர்கள் திருமதி பாக்கியலெட்சுமி, கவிதா,நாகஜோதி, சக்கரை, கோமதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் முடிவில் துணைத்தலைவர் மாலா நன்றி கூறினார்.

டி.எம்.எஸ் ரசிகர் மன்றம் சார்பாக டாக்டர் சரவணனுக்கு சமூக நல்லிணக்க மருத்துவர் விருது வழங்கி கௌரவிப்பு..!

டி.எம்.எஸ் ரசிகர் மன்றம் சார்பாக டாக்டர் சரவணனுக்கு “சமூக நல்லிணக்க மருத்துவர்” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்

மதுரை, ஜனவரி.15-

மதுரை தொழில் வர்த்தக சங்க அரங்கில் நடைபெற்ற பத்மஶ்ரீ டி.எம்.சௌந்தரராஜன் நூற்றாண்டு விழாவின் போது, ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு மருத்துவ சேவைகளை வழங்கி “மக்களின் மருத்துவர்” என பொதுமக்களால் அழைக்கப்படும் அதிமுக மருத்துவரணி மாநில இணைச்செயலாளர் “டாக்டர் சரவணன்” அவர்களுக்கு, டி.எம்.எஸ் சௌந்தரராஜன் அவர்களின் மகன் பாடகர் டி.எம்.எஸ் பால்ராஜ் மற்றும் அகில இந்திய டி.எம்.எஸ் ரசிகர் மன்றத்தின் தலைவர் எம்.பி பாலன் ஆகியோர் “சமூக நல்லிணக்க மருத்துவர்” விருதை வழங்கி கௌரவித்தனர்.

முன்னதாக டி.எம்.எஸ் படத்தை டாக்டர் சரவணன் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அகில இந்திய டி.எம்.எஸ் ரசிகர் மன்ற தலைவர் முகுந்து எம்.பி.பாலன் சிறப்பாக செய்திருந்தார்.

இந்நிகழ்வில் பூமிநாதன் எம்.எல்.ஏ, மண்டல தலைவர் முகேஷ்சர்மா, முன்னாள் எம்.எல்.ஏ எஸ்.எஸ்.சரவணன், அதிமுக இலக்கிய அணி மாநில இணைச்செயலாளர் ஆர்.கே.ரமேஷ், சௌராஷ்டிரா கூட்டுறவு வங்கி தலைவர் சாரதி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பெருந்தலைவர் நடிகர் திலகம் அறக்கட்டளை அலுவலகத்தில் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்லக்குமார் பிறந்த நாள் விழா..!

பிரியங்கா காந்தி பிறந்த நாள் மற்றும் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்லகுமார் எம்.பி ஆகியோர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, மதுரை ஆழ்வார்புரத்தில் உள்ள பெருந்தலைவர் நடிகர்திலகம், அறக்கட்டளை அலுவலகத்தில் கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வேட்டி,சட்டை பெண்களுக்கு சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னதாக அருள்மிகு ஶ்ரீ மகா காளியம்மன் கோவிலில் விஷேச பூஜை, சிறப்பு ஆராதனை செய்யப்பட்டது. பின்னர் அறக்கட்டளை அலுவலகத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

இவ்விழாவிற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுக்குழு உறுப்பினர் நாஞ்சில்பால் ஜோசப் தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ்.மீர்பாஷா, பஞ்சாயத்துராஜ் மாவட்ட தலைவர் முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் தொழிற்சங்கம் பாலாஜி,மாரிக்கனி பாலு என்ற சுந்தர மகாலிங்கம்,கே.ஆர் சுரேஷ் பாபு, மற்றும் வார்டு தலைவர்கள் கண்ணன், பாலமுருகன், பவர்சிங், ராஜராஜசோழன், கணேசன், மாவட்ட பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம், மற்றும் மாநில பொதுச் செயலாளர் மூவேந்திரன், எம்.போஸ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தமிழகத் திரைப்பட துணை நடிகர், நடிகைகள் & திரைப்பட உதவியாளர்கள் நலச்சங்கம் சார்பாக பொங்கல் விழா

தமிழகத் திரைப்பட துணை நடிகர், நடிகைகள் & திரைப்பட உதவியாளர்கள் நலச்சங்கம் சார்பாக பொங்கல் விழா மதுரையில் சிறப்பாக நடைபெற்றது

மதுரை,ஜனவரி,13-

தமிழகத் திரைப்பட துணை நடிகர், நடிகைகள் & திரைப்பட உதவியாளர்கள் நலச்சங்கம் சார்பாக மதுரை ஆழ்வார்புரத்தில் சமத்துவ பொங்கல் விழா கோலாகலமாக நடைபெற்றது.
பின்னர் சங்க உறுப்பினர்களுக்கு புத்தாடைகள் மற்றும் பச்சரிசி,வெல்லம், கரும்பு உள்ளிட்ட பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது.

இவ்விழாவிற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் அய்யப்பன் தலைமை வகித்தார். செயலாளர் சரவணகுமார் மற்றும் பொருளாளர் திரைப்பட இயக்குனர் கொக்கி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்வில் சங்கத்தின் மாநில தலைவர் பன்னீர்செல்வம், மகளிரணி மாநில ஒருங்கிணைப்பாளர் பேச்சி, கவுரவ ஆலோசகர் செல்வம், தென் மாவட்ட பொறுப்பாளர் நாகா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக அதிமுக நிர்வாகி டாக்டர் வி.பி.ஆர் செல்வகுமார், சங்கீதா கேட்டரிங் உரிமையாளர் ஜெகன், மருது திரைப்பட புகழ் நடிகை பொன்னுத்தாயி, கொளத்தூரான் திரைப்பட இயக்குனர் கலைச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இதில் பெருந்தலைவர் நடிகர் திலகம் அறக்கட்டளை நிர்வாகிகள் முத்துக்குமார், போஸ், மீர்பாஷா, பாலாஜி மற்றும் சங்கத்தின் செயலாளர் வள்ளி, மாநில செயற்குழு உறுப்பினர் வளர்மதி மற்றும் டாக்டர் மலர்விழி, டாக்டர் சின்னச்சாமி, பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல் அஞ்சலி ரவுண்டானா மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம் செல்லும் வழியில் கிரசன்ட் ஆட்டோ வாகன புகை பரிசோதனை நிலையம் திறப்பு…

திண்டுக்கல் அஞ்சலி ரவுண்டானா மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம் செல்லும் வழியில் கிரசன்ட் ஆட்டோ வாகன புகை பரிசோதனை நிலையம் திறப்பு விழா 13 -1-2024 சனிக்கிழமை மாலை 3 மணிக்கு நடைபெற்றது.

இத்திறப்பு விழாவில் ஏ எச் எஸ் ஜியாவுர் ரஹ்மான் வரவேற்புரை நிகழ்த்த எல் எஸ் அப்துல் ஹை முன்னிலையில் உயர்திரு அப்துல் சமது சட்டமன்ற உறுப்பினர் மணப்பாறை அவர்கள் திறந்து வைக்க, தென்னக நுகர்வோர் மற்றும் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் நிறுவன தலைவரும் ஃபெட்காட் சவுத் இந்தியாவின் தலைவருமான மனித விடியல் மோகன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். உடன் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் பிரசாத், ஹர்ஷவர்தன், தமிழ்நாடு ஊடக மக்கள் சங்கம் மாநில தலைவர் புருஷோத்தமன், மாமாகா மாநில அமைப்பு செயலாளர் பாரூக் அப்துல்லா இவ்விழாவில் பஜூலுல் ஹக் யூசப், அன்சாரி, துரை மாணிக்கம், மைதீன், பாபா அன்சாரி, முகமது ஜமால், ரியாஜ் அஹமத், ஷேக் பரீத், அம்ஜா சர்புதீன், இலியாஸ், அன்சர், மைதீன், பக்ருதீன், பாலமுருகன், அமீர், கனவா பீர் பாலன், ராயல் காஜாமைதீன், முகமது இப்ராஹிம், முஸ்தாக் ஹபீப், சந்திரன், இஸ்மாயில், ஈசா, ஹாஜி நசுருதீன், ஹாஜி அப்துல் கரீம், பிலால் உசேன், ஜமாலுதீன்.

மதுரை தமிழ் திரை கலைஞர்கள் நலச்சங்கம் சார்பாக பொங்கல் திருவிழா..!

மதுரை தமிழ் திரை கலைஞர்கள் நலச்சங்கம் சார்பாக பொங்கல் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இவ்விழாவிற்கு சங்கத்தலைவர் சுப்புராஜ் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் மதுரை கனகு முன்னிலை வகித்தார். பொருளாளர் பி.டி.ஆர் பழனி முருகன் வரவேற்று பேசினார்.
வல்லரசு பார்வர்ட் பிளாக் நிறுவனர் தலைவர் அம்மாவாசி வாழ்த்துரை வழங்கினார்.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக விருதுநகர் மாவட்டம் குரண்டி ஊராட்சி மன்ற தலைவர் எம்.ஆர்.ஜி சிவசக்தி கலந்து கொண்டு பச்சரிசி,வெல்லம், கரும்பு உள்ளிட்ட பொங்கல் தொகுப்பு மற்றும் நிதி உதவியை வழங்கினார்.

இதில் நிர்வாக குழு தலைவர் கே.வி.ஆர் காமராஜ், தலைமை ஆலோசகர் திரைப்பட இயக்குனர் ரே, தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் பிரபு,ரங்கராஜன், சட்ட ஆலோசகர் பிரேம்குமார், துணைத்தலைவர் ஜெரோம், தலைமை மாவட்ட பொறுப்பாளர்கள் சிலம்பம் சாந்தி, மீனா, கோவை மாவட்ட பொறுப்பாளர் மகா.ரம்யா, மகளிரணி பொறுப்பாளர் இயக்குனர் இளையகுமார், வழக்கறிஞர் செந்தில்குமார், செய்தி தொடர்பாளர் மீடியா இபு, அலங்கை ராஜேந்திரன், அழகுபாண்டி, ஒளிப்பதிவாளர்கள் மதுரை பாண்டி, ராஜ்குமார் மற்றும் மூத்த நடிகர்கள் மீசை.அழகப்பன், மீசை.மனோகரன், அலங்கை பிரபு, மோகன், வேல்முருகன், மகளிரணி ரீனா, ஜோதிமீனா, தனலட்சுமி, ஜோதிசங்கர், ஜெனிபர் நிஷா உள்பட மற்றும் இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர்கள், துணை நடிகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tirumangalam, Madurai district, on behalf of FNI and GPBNET, Annai Vasantha Trust, a Pongal gift giving ceremony and 600th consecutive day food distribution ceremony

In Tirumangalam, Madurai district, Tamilnadu on behalf of FNI and GPBNET, Annai Vasantha Trust, a Pongal gift giving ceremony and 600th consecutive day food distribution ceremony was held under the chairmanship of trust president amudhavalli Palanimurugan.

Secretary Chitra Raghupathi presided over the event. Tirumangalam Nagar People’s Council President Ira Chakaiah and Tolkappiyar Council President Irulappan presented Pongal packages as special invitees.

Trust Honorary Advisor Alagarsamy, Vice President Arumugam, Coordinator Ganesanmurthy delivered the greetings.

At the end of the program Founder of the Trust s.m. Raghupati and Treasurer Aruljyothi Arumugam gave vote of thanks.

மதுரை முன்னாள் எம்.பி ஏ.ஜி.எஸ் ராம்பாபு நினைவு தினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது..!

மதுரை முன்னாள் எம்.பி ஏ.ஜி.எஸ் ராம்பாபு அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு,அவரின் படத்திற்கு மகன் ஏ.ஜி.எஸ்.ஆர்.சச்சின் ஹரேஷ்பாபு, மகள் சுப்ரியா, மற்றும் மருமகன் அச்சுதானந்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மேலும் ஏழை எளியோருக்கு வேட்டி, சேலைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஏ.ஜி.எஸ் கோபிபாபு, முன்னாள் எம்.எல்.ஏ கே.எஸ்.கே. ராஜேந்திரன், தமாகா மாவட்ட செயலாளர் காந்தி, மாவட்ட தலைவர் ராஜாங்கம், காங்கிரஸ் பிரமுகர் ஐ.சிலுவை, அயல், ஈஸ்வரன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜெகநாதன் மற்றும் சங்கர்,குமரன் ஆகியோர் செய்திருந்தனர்.

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES