முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, சென்னை கலைவாணர் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 18) நடைபெற்ற விழாவில் முத்தமிழறிஞர் கலைஞர் நாணயம் வெளியிடப்பட்டது.
அந்த விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை கலந்து கொண்டார். திமுக அமைப்புச் செயலாளர் திரு. ஆர்.எஸ்.பாரதி அவர்கள் இன்று (20.08.2024) சத்தியமூர்த்திபவனில் முத்தமிழறிஞர் கலைஞர் நாணயம் ஒன்றை நினைவு பரிசாக வழங்கினார்.
உடன் தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் இருந்தார்கள்.
கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட,விராலிமலை சட்டமன்ற தொகுதியில் நன்றி அறிவிப்பு நிகழ்ச்சியை துவங்கிவைத்து, ஐந்து நாட்கள் விராலிமலை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும்,பேருராட்சிகளிலும் மிகச்சிறப்பாக நடத்தி முடித்த புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக செயலாளர், அன்பிற்குரிய அண்ணன் திரு.KKசெல்லபாண்டியன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்! இந்நிகழ்வை மிகச்சிறப்பாக ஒருங்கிணைத்து,வெற்றிகரமாக நடத்திக்கொடுத்த திமுக நகர,ஒன்றிய,பேரூராட்சி,ஊராட்சி செயலாளர்களுக்கும்,காங்கிரஸ் கட்சியின் வட்டார,நகர,பேரூராட்சி ,ஊராட்சி நிர்வாகிகளுக்கும்,இந்தியா கூட்டணி நிர்வாகிகளுக்கும், ஊராட்சி மன்றத் தலைவர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் மனமார்ந்த நன்றிகள். தேர்தல்காலம் போலவே நன்றி அறிவிப்பு நிகழ்விலும், இரவானாலும் பிள்ளைகளோடு காத்திருந்து பேரன்போடு வரவேற்கும் எனதருமை சகோதர,சகோதரிகளுக்கும், பேரன்போடும் ,பெருமகிழ்ச்சியோடும் ,இரவு நெடுநேரமானாலும் அரைத்தூக்கத்தோடு விழித்திருந்து வரவேற்கும் எமது பிள்ளைகளுக்கும், நெஞ்சார்ந்த நன்றிகள். உங்கள் பேரன்பிற்கும்,பேராதரவிற்கும் தலை வணங்குகிறேன்.
முன்னாள் பிரதமர், பாரத ரத்னா திரு.ராஜிவ்காந்தி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று (20.08.2024) சென்னை, சத்தியமூர்த்திபவனில் அலங்கரிக்கப்பட்ட அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செய்தோம். பின்பு சமூக நல்லிணக்கநாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டோம். பின்பு சத்தியமூர்த்தி பவனில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு மருத்துவ முகாமினை திறந்து வைத்தோம். நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள் திரு.எம்.கிருஷ்ணசாமி அவர்கள், திரு.கே.வீ.தங்கபாலு அவர்கள், திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை காங்கிரஸ் தலைவர் திரு.எஸ்.ராஜேஷ்குமார் அவர்கள், துணைத்தலைவர் திரு.சொர்ணா சேதுராமன் அவர்கள், அமைப்புச் செயலாளர் திரு.ராம்மோகன் அவர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள், செயல்வீரர்கள் கலந்து கொண்டார்கள்.
சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 200 நடமாடும் வாகனங்கள் சேவைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்தும், பயனாளிகளுக்கான ஆணைகளையும் வழங்கி வருகிறார். அதன் ஒரு பகுதியாக சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில்,கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 200 நடமாடும் வாகனங்கள் சேவைகளை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதற்கிடையேயே தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் அரசுப் பணிகளில் பணியாற்ற பணியமர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம், கருவூலக் கணக்குத்துறை பதவிகளுக்குக்கு தேர்வாகியுள்ளவர்களுக்கும், பணிக்காலத்தில் மறைந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கும் பணி நியமன ஆணைகள் வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
முன்னாள் பிரதமர், பாரத ரத்னா திரு.ராஜிவ்காந்தி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று (20.08.2024) தென்சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி ஏற்பாட்டில் சைதாப்பேட்டை சின்னமலையில் அமைந்துள்ள ராஜிவ்காந்தி அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செய்தோம். பின்பு சமூக நல்லிணக்கநாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டோம். அங்கிருக்கும் கொடிக்கம்பத்தில் காங்கிரஸ் பேரியக்கத்தின் கொடியேற்றினோம்.
நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள் திரு.கே.வீ.தங்கபாலு அவர்கள், திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை காங்கிரஸ் தலைவர் திரு.எஸ்.ராஜேஷ்குமார் அவர்கள், துணைத்தலைவர் திரு.சொர்ணா சேதுராமன் அவர்கள், அமைப்புச் செயலாளர் திரு.ராம்மோகன் அவர்கள், கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பின் திரு.விஜய்வசந்த் அவர்கள் மற்றும் தென்சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வழக்கறிஞர் எம்.ஏ.முத்தழகன் அவர்கள் மற்றும் நிர்வாகிகள், செயல்வீரர்கள் கலந்து கொண்டார்கள்.
இதை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் திரு. Mallikarjun Kharge மற்றும் CPP தலைவர் திருமதி. சோனியா காந்தி ஜி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பாராளுமன்ற வளாகத்தில் அஞ்சலி செலுத்தினர்.
இன்று (20.08.2024) இந்தியாவை உலக அரங்கில் தனித்துவமாய் காட்டிய இளம் பிரதமர் பாரத ரத்னா திரு ராஜீவ்காந்தி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, திருப்பெரும்புதூரில் அவரது நினைவிடமான தியாக பூமியில் மலர் வளையம் வைத்து, மலர் தூவி மாரியாதை செய்தோம்.
பின்பு நினைவிடத்தில் நுழைவு வாயில் அருகே அமைந்துள்ள இரும்பு பெண்மணி அன்னை இந்திரா காந்தி அவர்களின் திருவுருவச் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்தோம்.
ஒன்றிய பா.ஜ.க. அமைச்சர் சுரேஷ் கோபி பேச்சுக்கு கண்டனம் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒன்றிய பா.ஜ.க. அமைச்சர் சுரேஷ்கோபி, முல்லைப் பெரியாறு அணை இடிந்தால் யார் பொறுப்பு ? நீதிமன்றம் பதில் சொல்லுமா ? அல்லது நீதிமன்றங்களில் இருந்து அத்தகைய முடிவுகளை பெறுபவர்கள் பொறுப்பேற்பார்களா ? என்று மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்துகிற வகையில் விஷமத்தனமான கருத்துகளை கூறியிருக்கிறார். இதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.
திரு.கு.செல்வப்பெருந்தகை தலைவர்,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
இந்த நூற்றாண்டின் ஒப்பற்றத் தலைவர் ஜனநாயகத்தில் அதிகாரங்கள் ஓரிடத்தில் குவிந்திருப்பதை தடுத்து நாடாளுமன்றம், சட்டமன்றம் ஆகியவற்றுக்கு அடுத்த நிலையில் பஞ்சாயத்து ராஜ், நகர்பாலிகா என்கிற அமைப்புகளை உருவாக்கி மக்கள் பங்கேற்கும் ஜனநாயகத்தை அரசமைப்புச் சட்ட திருத்தத்தின் மூலம் உருவாக்குவதில் வெற்றி கண்டவர். இதன்மூலம் ஜனநாயகத்தை பரவலாக்கினார். இலங்கை தமிழர்களின் 40 ஆண்டுகால பிரச்சினையை தீர்க்க உடன்பாடு கண்டவர். இலங்கையில் தமிழர் ஆட்சியை உருவாக்கி, தமிழை அரியணையில் ஏற்றி, தமிழ் தாயகப் பகுதியை உருவாக்கியவர் ராஜிவ்காந்தி. இந்தியாவின் சிறந்த வல்லமைமிக்க பிரதமராக அவர் சுடர்விட்டார். இந்தியாவை பற்றி ராஜிவ்காந்திக்கு நிறைய கனவுகள் இருந்தது. இந்தியாவும், இந்தியர்களும் உலகில் முன்னணியில் இருக்க வேண்டுமென்று ராஜிவ்காந்தி கனவு கண்டார். அதற்காக நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார். இந்திய நாட்டின் பிரதமராக ஐந்தாண்டுகளில் தேசிய, சர்வதேச அரங்கில் உலகம் போற்றும் வகையிலே சாதனைகளை படைத்து இந்த நூற்றாண்டின் ஒப்பற்ற தலைவராக விளங்கினார்.
லேட்டரால் என்ட்ரி என்பது தலித்துகள், ஓபிசிகள் மற்றும் பழங்குடியினர் மீதான தாக்குதலாகும். பாஜகவின் ராம ராஜ்ஜியத்தின் திரிபுபடுத்தப்பட்ட பதிப்பு அரசியலமைப்பை அழிக்கவும், பகுஜன்களிடமிருந்து இட ஒதுக்கீட்டைப் பறிக்கவும் முயல்கிறது.