வெங்காய விலை வீழ்ச்சி!! குறை தீர்ப்பு கூட்டத்தை புறக்கணித்த விவசாயிகள் வெங்காயத்தை ரோட்டில் கொட்டி போராட்டம்!!!
கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்பு வெங்காயம் கிலோ 100 தாண்டி விற்பனையானது இந்நிலையில் கடந்த ஒரு சில வாரங்களாக வெங்காயம் கடும் விலை வீழ்ச்சியை சந்தித்தது இதனால் விவசாயிகள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்
தமிழகத்தில் திருப்பூர் கோவை ஈரோடு கரூர் திண்டுக்கல் தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் நிலங்களில் வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது வெங்காயம் சாகுபடிக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. தற்போது வெங்காயம் கிலோ 8 ரூபாய் என்ற தரைமட்ட விலையில் வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர் இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகி வருகின்றனர். வெங்காய சாகுபடிக்கு ஒரு ஏக்கர் ஒன்றுக்கு 80 ஆயிரம் வரை செலவாகிறது. ஒரு ஏக்கரில் சராசரியாக 5 டன் மகசூல் கிடைக்கும். தற்போதைய விலையில் ஒரு ஏக்கர் சாகுபடி செய்தால் விவசாயிகள் 40 ஆயிரம் நஷ்டம் ஏற்படுகிறது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே வெங்காயத்திற்கு ஆதரவு விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் மேலும் வெங்காயத்தை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் வெங்காயம் ஏற்றுமதிக்கு அனுமதி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கட்சி சார்பற்ற விவசாயிகள் மற்றும் ஏர்முனை இளைஞர் அமைப்பை சேர்ந்த விவசாயிகள் வெங்காயத்தை ரோட்டில் கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வெங்காய விலை வீழ்ச்சியை கண்டித்து அதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இன்று மாவட்ட ஆட்சியர் அரங்கில் நடைபெறும் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது போலீசாருக்கும் விவசாயி களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
Check Also
தந்தையை இழந்த மாணவிக்கு உதவித்தொகை வழங்கிய ரூட்ஸ் அறக்கட்டளை…
12ம் வகுப்பு பொதுத்தேர்வின் போது தந்தையை இழந்த திருப்பூர் அருள்புரம் அரசுமேல்நிலைப்பள்ளி மாணவி விஷ்னுபிரியாவின்மூன்றாண்டு உயர்கல்வி கட்டணத்தை ரூட்ஸ் கல்வி …