Friday , November 22 2024
Breaking News
Home / சினிமா / கேப்டனான லாஸ்லியா, அப்போ நாமினேசன்?
MyHoster

கேப்டனான லாஸ்லியா, அப்போ நாமினேசன்?

பிக் பாஸ் வீட்டின் கேப்டனானார் லாஸ்லியா!

Bigg Boss Tamil 3: பிக் பாஸ் நிகழ்ச்சி விருவிருப்பான கட்டத்தை எட்டியுள்ளது. 11 வாரங்களை கடந்து, அதன் இறுதி நிலையை நெருங்கியுள்ளது. இன்னும் 4 வாரங்களே உள்ள நிலையில், வீட்டிற்குள் இன்னும் 8 போட்டியாளர்கள் இருக்கிறார்கள், நேற்று வெளியேறி ரகசிய அறைக்குள் அனுப்பப்பட்ட சேரன் (Cheran) உட்பட. இந்த வாரத்தில் வாக்குகள் அடிப்படையில் சேரன் வெளியேற்றப்பட்டிருந்தாலும், அவருக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கும் விதமாக, சீக்ரெட் ரூமிற்குள் அனுப்பப்பட்டார். 12வது வாரத்தில் காலெடுத்து வைக்கும் பிக் பாஸ் வீடு இன்று இரண்டு விஷயங்களை சந்திக்கவுள்ளது, ஒன்று நாமினேசன் (Bigg Boss Nomination), மற்றொன்று கேப்டன் டாஸ்க் (Bigg Boss Captain Task). ஆனால், இன்று நடைபெற்ற கேப்டன் டாஸ்கின் முடிவுகள் இப்போதே வெளியாகிவிட்டது. வீட்டின் தலைவர் லாஸ்லியா (Losliya) பதவியை லாஸ்லியா பெற்றுள்ளார்.

சென்ற வாரம் நடந்து முடிந்த லக்சரி பட்ஜெட் டாஸ்கின் சிறந்த போட்டியாளர்களாக வனிதா மற்றும் தர்சன் (Tharshan) ஆகியோரை தேர்வு செய்தது வெற்றி பெற்ற அணி. இந்த முடிவில் மிகுந்த முறன்பாடுகள் இருந்தது, நேற்று அந்த முறன்பாடுகளை வெளுத்து வாங்கிவிட்டார் கமல் ஹாசன். அதற்கடுத்து, வீட்டின் இந்த வார சிறந்த போட்டியாளர் யார் என்ற கேள்விக்கு சேரன் மற்றும் லாஸ்லியாவின் பெயர்கள் அடிபட, இறுதியில் லாஸ்லியா (Losliya) தேர்வானார். மற்றொருபுறம், சிறப்பாக செயல்படாத போட்டியாளரை நேரடி நாமினேசனுக்கு தேர்வு செய்ய சொல்ல, கவின் தானே முன்வந்து நேரடி நாமினேசனுக்கு தேர்வானார்.

இன்னிலையில் சிறந்த போட்டியாளர்களாக தேர்வான லாஸ்லியா, தர்சன் மற்றும் வனிதா ஆகியோருக்கு இந்த வார கேப்டன் போட்டிக்கான டாஸ்க் கொடுக்கப்பட்டது. உச்சி வெயிலில், இரண்டு கைகளிலும், அடர்த்தியான திரவத்தை இரண்டு கைகளிலும் வைத்துக்கொண்டு கால்களை மடக்கி நிற்க வேண்டும். டாஸ்கின் முடிவில் யாருடைய பவுலில் அதிக திரவம் இருக்கிறதோ அவரே வெற்றியாளர்.

Bala Trust

About Admin

Check Also

Saregamapa Li’l Champs சீசன் 4 இன் போட்டியாளரான யோகஸ்ரீ பின்னணி…

Saregamapa Li’l Champs சீசன் 4 இன் போட்டியாளரான யோகஸ்ரீ, அறிமுகச் சுற்றில் தனது பின்னணியைப் பகிர்ந்து கொண்டார்: *வயது …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES