Thursday , January 29 2026
Breaking News
Home / செய்திகள் / மதுரையில் பாஜக மகளிரணி சார்பாக தேசியக் கொடி வழங்கும் நிகழ்ச்சியை மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் தொடங்கி வைத்தார்
NKBB Technologies

மதுரையில் பாஜக மகளிரணி சார்பாக தேசியக் கொடி வழங்கும் நிகழ்ச்சியை மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் தொடங்கி வைத்தார்

75வது இந்திய சுதந்திர தின விழாவை முன்னிட்டு, மதுரை பெத்தானியாபுரம், அண்ணா மெயின் வீதி பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி மகளிரணி மாவட்ட தலைவி ஓம்சக்தி. தனலட்சுமி தலைமையில் வீடு,வீடாக சென்று தேசியக்கொடி வழங்கும் நிகழ்ச்சியை பாஜக மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் தொடங்கி வைத்தார்.

மேலும் மாவட்ட மகளிரணி தலைமை அலுவலகத்தை டாக்டர் சரவணன் ரிப்பன் வெட்டி அவர் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வின் போது பாரத அன்னை,பிரதமர் நரேந்திர மோடி போன்று வேடமிட்டு வந்தது மக்கள் வரவேற்பை பெற்றது.

இதில் பொருளாதார பிரிவு மாநில தலைவர் எம்.எஸ்.ஷா, மாவட்ட துணைத் தலைவர்கள் எஸ்.எஸ்.டி மனோகரன், பழனிவேல், மாவட்ட பொதுச்செயலாளர் வினோத் உள்பட மண்டல் தலைவர்கள், வார்டு தலைவர்கள், மகளிரணியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

பள்ளபட்டியில், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி அவர்கள் திறந்து வைத்து மாணவர்கள் முன்னிலையில் உரை

பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து திறன் வகுப்பறையை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES