Wednesday , March 18 2026
Breaking News
Home / செய்திகள் / பாஜகவில் இருந்து விலகுவதாக மதுரை மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் அறிவிப்பு
NKBB Technologies

பாஜகவில் இருந்து விலகுவதாக மதுரை மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் அறிவிப்பு

பாஜகவில் இருந்து விலகினார் மதுரை மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன்.நடந்த சம்பவத்திற்கு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரிடம் மன்னிப்பு கேட்டார்.

இதுகுறித்து டாக்டர் சரவணன் கூறுகையில்:-

பாஜகவின் மத வெறுப்பு அரசியல் பிடிக்காததால் இங்கு தொடர விரும்பவில்லை. அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை சந்தித்து என் மனதில் உள்ளதையெல்லாம் கொட்டி மன்னிப்பு கேட்டுவிட்டேன்.இனி என்னால் உறுதியாக பாஜகவில் இருக்க முடியாது ; காலையில் ராஜினாமா கடிதம் கொடுக்க போகிறேன்.

மத அரசியலில் ஈடுபடுவதில் உடன்பாடு இல்லை என்றும் காலையில் நிகழ்ந்த சம்பவம் மன அமைதியை கெடுத்துவிட்டது, மன அமைதி வேண்டி தற்பொழுது நிதி அமைச்சரை சந்தித்து நேரில் வருத்தமும் மன்னிப்பும் கேட்டதாகவும் தெரிவித்துள்ளார்..

திமுக தனக்கு தாய்வீடு அதில் மீண்டும் இணைய வேண்டும் என்றெல்லாம் இல்லை.

டாக்டர் தொழிலை பார்க்க போகிறேன்.. திமுகவில் சேர்ந்தால் தவறு இல்லை,

பாஜக தொண்டர்கள் கட்டுபாட்டை மீறி நடந்து கொண்டது வருத்தம் அளிக்கிறது எனவும் தெரிவித்தார்..

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை பிப் 06 மதுரை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES