Monday , July 28 2025
Breaking News
Home / செய்திகள் / கர்ப்பப்பை வாய் புற்று நோயை பாப்ஸ்மியர் சோதனையில் கண்டறியலாம் மதுரை அப்போலோ மருத்துவர்கள் தகவல்.!
NKBB Technologies

கர்ப்பப்பை வாய் புற்று நோயை பாப்ஸ்மியர் சோதனையில் கண்டறியலாம் மதுரை அப்போலோ மருத்துவர்கள் தகவல்.!

மதுரை, அக் 25:
பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை புற்றுநோய் குறித்து அப்போலோ மருத்துவ குழுவினர்கள் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்ததாவது
நவீன உலகில் பெண்கள் உடல் நலம் குறித்த அதிக கவனம் இல்லாமல் உள்ளனர். ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்களுக்கு மாரடைப்பினால் வரும் மரண விகிதம் அதிகமாக உள்ளது.
கருப்பை மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் இரண்டுக்கும் இடையேயான வேறுபாடுகள் பலருக்கும் தெரிவதில்லை.

கர்ப்பை வாய் புற்றுநோயை பாப்ஸ்மியர் சோதனையில் கண்டறியலாம்.
கருப்பை புற்றுநோய் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு ஏற்படுகிறது, ஆனால் 25% பெண்களுக்கு மாதவிடாய் நிற்பதற்க்கு முன் ஏற்படலாம்.
பிறப்புறுப்பு இதழ் (வால்வார்) புற்றுநோய் புற்றுநோய் என்பது 0.6% பெண்களுக்கு ஏற்படும் அரிதான புற்றுநோயாகும். 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் 4% பெண்களுக்கு வரும் புற்றுநோய். இது பாலியல் ரீதியாக பரவும் வைரஸ். ஒரு பெண்ணுக்கு வெளிப்புற பிறப்புறுப்பில் தொடர்ந்து அரிப்பு, வலி, புண், மருக்கள், புண் அல்லது கட்டியுடன் கூடிய வெள்ளைப்படுதல் அல்லது ரத்தப்போக்கு இருக்கும் பெண்கள் மருத்துவர்களை அனுக வேண்டும்.

மகளிர் மற்றும் மகப்பேறு நோய்களை நிர்வகிப்பதில் அறுவை சிகிச்சை தலையீடுகளுக்கு தலையீட்டு கதிரியக்க செயல்முறைகள் ஒரு சிறந்த மாற்றாகும். வழக்கமான அறுவை சிகிச்சையை விட எம்போலைசேஷன் சிகிச்சையில் குறைவான சிக்கல்களே உள்ளது என்றனர்.


பேட்டியின்போது போது
மருத்துவர்கள் லலிதா, ஹேமலேகா, ஷாஹிதா பர்வீன், -மகப்பேறு மருத்துவர் ஸ்ரீ தேவி, அறுவை சிகிச்சை மற்றும் புற்றுநோயியல் நிபுணர் பாலு மகேந்திரா, கதிர்வீச்சு புற்றுநோயியல் நிபுணன் சதீஷ் சீனிவாசன், இன்டர்வென்ஷனல் ரேடியாலஜிஸ்ட் மற்றும் தலைமை செயல் அதிகாரி நீலக்கண்ணன், பொது மேலாளர் நிக்கி திவாரி, மார்க்கெட்டிங் மேலாளர் மணிகண்டன், டாக்டர் பிரவீன் ராஜன் ஜேடிஎம்எஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரையைச் சேர்ந்த உமா மகேஸ்வரிக்கு முனைவர் பட்டம் வழங்கி கௌரவிப்பு…!

மதுரையைச் சேர்ந்த உமா மகேஸ்வரிக்கு முனைவர் பட்டம் வழங்கி கௌரவிப்பு சென்னை ஜூலை 28 சென்னையில் சன்மார்க் சமூக கல்வி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES