Tuesday , February 3 2026
Breaking News
Home / செய்திகள் / மதுரை தவிட்டுச்சந்தையில் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
NKBB Technologies

மதுரை தவிட்டுச்சந்தையில் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அ.தி.மு.க 51-ஆம் ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு, மதுரை தவிட்டுச்சந்தை பகுதியில் மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


இந்நிகழ்வில் மாநகர் மாவட்ட கழக செயலாளர், அதிமுக அமைப்பு செயலாளர், முன்னாள் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ கலந்து கொண்டு மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பித்தார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை 85-வது வார்டு மாமன்ற உறுப்பினர் முத்துமாரி ஜெயக்குமார் ஏற்பாடு செய்திருந்தார். இந்நிகழ்ச்சிக்கு மாநகர் 5-ஆம் பகுதி கழகச் செயலாளர் ஜோசப் தனுஷ்லாஸ் தலைமை வகித்தார்.

இந்நிகழ்வில் மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் வில்லாபுரம் ராஜா அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளர் எம்.எஸ் பாண்டியன், அவைத்தலைவர் அண்ணாதுரை, மாவட்ட பொருளாளர் பா.குமார், பகுதி செயலாளர்கள் சக்தி விநாயகர் பாண்டியன், ஞானசேகரன், இலக்கிய அணி மாநில துணைச்செயலாளர் ஆர்.கே.ரமேஷ், மகளிரணி இணைச்செயலாளர்கள் பாண்டிச்செல்வி ஞானசேகரன், ராணி நல்லுசாமி உள்பட சார்பு அணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

பள்ளபட்டியில், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி அவர்கள் திறந்து வைத்து மாணவர்கள் முன்னிலையில் உரை

பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து திறன் வகுப்பறையை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES