Monday , July 28 2025
Breaking News
Home / செய்திகள் / பாஜகவின் கலவர அரசியலை மீறி தமிழகம் தொடர்ந்து அமைதிப்பூங்காவாகவே இருக்கும் – ஜோதிமணி, கரூர், எம்.பி
NKBB Technologies

பாஜகவின் கலவர அரசியலை மீறி தமிழகம் தொடர்ந்து அமைதிப்பூங்காவாகவே இருக்கும் – ஜோதிமணி, கரூர், எம்.பி

கோவை ஒரு  பெருமைக்குறிய தொழில் நகரம். மோடியின் மோசமான ஆட்சியில் தொழில்கள் சிதைந்து விட்டன. லட்சக்கணக்கானவர்கள் வேலை இழந்துள்ளனர். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல, மதவெறி பிடித்த, கலவர பாஜக, பொறுப்பற்ற முறையில், கோவையை தீவிரவாத நகரமாக சித்தரிப்பது கடுமையான கண்டனத்துக்குரியது. மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின்  அவர்களின் பொறுப்புமிகுந்த அரசு, குற்றவாளிகளை பிடிக்க விரைந்து செயல்பட்டுள்ளது. முறையான,விரைவான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் பாஜக மலிவான அரசியல் செய்வது அவமானகரமானது. மோடி, பாஜக ஆட்சியைப் போல சீனாவைக் கண்டு அஞ்சி நடுங்குகிற, தீவிரவாத குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டவர்களை நாடாளுமன்ற உறுப்பினராக்கி அழகு பார்க்கிற ஆட்சி தமிழகத்தில் நடக்கவில்லை. பாஜகவின் கலவர அரசியலை மீறி தமிழகம் தொடர்ந்து அமைதிப்பூங்காவாகவே இருக்கும் - ஜோதிமணி, கரூர், எம்.பி.


Bala Trust

About Admin

Check Also

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிறப்பாக வரவேற்பு அளிப்பது குறித்து ஆலோசனை கூட்டம்

மதுரை மாநகருக்கு வருகை தர உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு சிறப்பாக வரவேற்பு அளிப்பது குறித்து விளாங்குடி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES