Friday , March 20 2026
Breaking News
Home / இந்தியா / கருணை இல்லத்தில் உள்ள ஆதரவற்ற முதியோர்களுடன் தீபாவளி கொண்டாடிய காவல் ஆய்வாளர்.!
NKBB Technologies

கருணை இல்லத்தில் உள்ள ஆதரவற்ற முதியோர்களுடன் தீபாவளி கொண்டாடிய காவல் ஆய்வாளர்.!

கருணை இல்லத்தில் உள்ள ஆதரவற்ற முதியோர்கள் மற்றும் கை கால்கள் செயலிந்தோருக்கு உணவுகளை ஊட்டி தீபாவளி கொண்டாடிய காவல் ஆய்வாளரை சமூக சேவகர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் பாராட்டி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் அருகில் முதியோர் கருணை இல்லம் உள்ளது.இந்த இல்லத்தில் ஏராளமான முதியோர்கள் உள்ளனர்.

தீபாவளி அன்று கருணை இல்லத்தில் இருக்கும் முதியோர்களை அம்மைய நாயக்கனூர் காவல் ஆய்வாளர் சண்முகலட்சுமி சென்று பார்த்து அன்பாகவும் ஆதரவாகவும் பேசினார்.மேலும் கை,கால்கள் செயலற்று இருந்தோருக்கு உணவை ஊட்டினார்.

மேலும் அங்கிருந்த அனைவருக்கும் உணவு வழங்கி அவர்கள் அனைவருடனும் தீபாவளி வாழ்த்து பகிர்ந்து கொண்டார்.

சொந்த பந்தங்களை விட்டு பிரிந்து வாழ்ந்து வரும் முதியோர்களுடன் தீபாவளி கொண்டாடிய காவல் ஆய்வாளர் சண்முகலட்சுமியை அனைவரும் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

நன்றி : அஸ்கர் திண்டுக்கல் மாவட்டம்

இளைஞர் குரல் செய்திகளுக்காக செய்தியாளர் கனகராஜ்

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை பிப் 06 மதுரை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES