Wednesday , March 18 2026
Breaking News
Home / செய்திகள் / பால் விலை உயர்வை கண்டித்து மதுரை பெத்தானியாபுரத்தில் பாஜக விளாங்குடி மண்டல் தலைவர் கஜேந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்.!
NKBB Technologies

பால் விலை உயர்வை கண்டித்து மதுரை பெத்தானியாபுரத்தில் பாஜக விளாங்குடி மண்டல் தலைவர் கஜேந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்.!

பால் விலை உயர்வை கண்டித்து மதுரை பெத்தானியாபுரத்தில் பாஜக விளாங்குடி மண்டல் தலைவர் கஜேந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வார்டு தலைவர்கள் ராதா, திருப்பதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஓபிசி அணி மாநில பொருளாளர் மோகன்குமார் கண்டன உரை ஆற்றினார்.

இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் வேங்கைமாறன், ஓபிசி அணி மாவட்ட துணைத்தலைவர் பாலன் ரேடியோஸ் பாலமுருகன், மகளிரணி மாவட்ட தலைவி ஓம்சக்தி.தனலட்சுமி, சோலை பரமன், பூமிநாதன், ராணுவ பிரிவு மாவட்ட தலைவர் ராஜேந்திரன், மண்டல் பொதுச் செயலாளர் கோச்சடை ரங்கராஜன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை பிப் 06 மதுரை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES