Tuesday , February 3 2026
Breaking News
Home / செய்திகள் / மதுரையில் கலாம் பாரம்பரிய கலைக் கழகம் சார்பாக 110 மாணவர்களை ஒன்றிணைத்து புதிய சோழன் உலக சாதனை.!
NKBB Technologies

மதுரையில் கலாம் பாரம்பரிய கலைக் கழகம் சார்பாக 110 மாணவர்களை ஒன்றிணைத்து புதிய சோழன் உலக சாதனை.!

கொரோனா தொற்றுநோய் காலப்பகுதியில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய சித்த மருத்துவருக்கு சோழன் மறுபிறவி தந்த மருத்துவச் செம்மல் விருது வழங்கப்பட்டது

மதுரை கலாம் பாரம்பரிய கலைக் கழகம் சார்பாக 110 மாணவ/ மாணவிகளை ஒன்றிணைத்து புதிய சோழன் உலக சாதனை படைக்கப்பட்டது. புத்த பத்மாசனா நிலையில் 110 மாணவ/மாணவிகள் தமது உடலை தொடர்ந்து 30 நிமிடங்கள் சமநிலையில் வைத்திருந்து புதிய சோழன் உலக சாதனை படைத்தனர்.

இந்நிகழ்வில் கொரோணா தொற்றுநோய் காலத்தில் அர்ப்பணிப்புடன் பணியாற்றி நூற்றுக்கணக்கான நோயாளிகளை சித்த மருத்துவ ரீதியாகவும் உள ரீதியாகவும் குணமாக்கி மருத்துவம் என்பது இறையியலின் ஒரு பகுதி தான் என்பதை உணர்த்தும் வகையில் சேவையாற்றியதை பாராட்டும் வகையில் சோழன் உலக சாதனை புத்தக நிறுவனம் சார்பாக சோழன் மறுபிறவி தந்த மருத்துவச் செம்மல் விருது வழங்கப்பட்டது.

இந்த விருதை சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் நிறுவனர் முனைவர் நீலமேகம் நிமலன், தென்மண்டலத் தலைவர் முனைவர் சுந்தர்,மதுரை மாவட்டத் தலைவர் சண்முகவேல், ஆயுஷ்யம் வர்ம சிகிச்சை மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் ஆர்த்தி மற்றும் மருத்துவர் பாலாஜி போன்றோர் வழங்கிப் பாராட்டினார்கள்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

பள்ளபட்டியில், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி அவர்கள் திறந்து வைத்து மாணவர்கள் முன்னிலையில் உரை

பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து திறன் வகுப்பறையை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES