Tuesday , February 3 2026
Breaking News
Home / செய்திகள் / மதுரை செல்லூரில் சங்கேஸ்வரா அறக்கட்டளையின் சார்பாக பிரதோஷத்தை முன்னிட்டு சங்காபிஷேக பூஜை.!
NKBB Technologies

மதுரை செல்லூரில் சங்கேஸ்வரா அறக்கட்டளையின் சார்பாக பிரதோஷத்தை முன்னிட்டு சங்காபிஷேக பூஜை.!

மதுரையில் சங்கேஸ்வரா அறக்கட்டளையின் சார்பாக செல்லூர் பகுதியில் உள்ள சிவன்கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு யாகபூஜை, சங்காபிஷேக பூஜை மற்றும் சுவாமிக்கு விபூதி அபிஷேகம், இளநீர் அபிஷேகம் போன்ற பல்வேறு அபிஷேகம் நடைபெற்றது.
மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 100-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதுகுறித்து அறக்கட்டளையின் செயலாளர் ராதாகிருஷ்ணன் நம்மிடம் கூறுகையில் :-

மதுரையில் சங்கேஸ்வர அறக்கட்டளையின் மூலம் அனைத்து பிரதோஷ நாட்களிலும் அன்னதானம் மற்றும் ஏழை,எளிய மக்களுக்கு மருத்துவ சேவைகள், கல்வி உதவித்தொகை, அரிசி,மளிகை பொருட்கள் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறோம்.

இந்த உதவிகள் அனைத்தும் யாரிடமும் எந்த நன்கொடையும் வாங்காமல் எங்களின் சொந்த பணத்தை கொண்டு அறக்கட்டளை மூலம் இந்த உதவிகளை வழங்கி வருகிறோம்.

கொரோனா ஊரடங்கின் போது பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய நாங்கள் இந்த உதவிகளை தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக வழங்கி வருகிறோம்.

இந்நிகழ்வில் அறக்கட்டளையின் தலைவர் சீனிவாசன், செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் வீரபாண்டி, டிரஸ்டி ரவிசங்கர், துணைச் செயலாளர் பாண்டியன் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

பள்ளபட்டியில், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி அவர்கள் திறந்து வைத்து மாணவர்கள் முன்னிலையில் உரை

பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து திறன் வகுப்பறையை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES