Wednesday , March 25 2026
Breaking News
Home / செய்திகள் / மதுரை மேற்கு மாவட்ட பாஜக விவசாய அணி சார்பாக நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள நதியில் மஹா தீப ஆராதனை விழா.!
NKBB Technologies

மதுரை மேற்கு மாவட்ட பாஜக விவசாய அணி சார்பாக நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள நதியில் மஹா தீப ஆராதனை விழா.!

பாரதிய ஜனதா கட்சி விவசாய அணி சார்பாக கார்த்திகை திருநாளை முன்னிட்டு, நீர் பெருக, நிலம் செழிக்க, தமிழகம் சிறக்க தமிழகத்தில் உள்ள முக்கிய நீர்நிலைகளில் மஹா தீப ஆராதனை திருவிழா நடைபெற்றது.

அந்த வகையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே நாகராஜன், மாநில துணைத்தலைவர் எஸ்.ஆர்.தேவர் ஆகியோர் அறிவுறுத்தலின்படி, பாஜக பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்கப் பெருமாள், மாநில மீனவர் பிரிவு சண்முகநாதன், மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சசிக்குமார் ஆகியோர் ஆலோசனைப்படி, விவசாய அணி மேற்கு மாவட்ட தலைவர் முத்துப்பாண்டி அவர்களின் தலைமையில் மதுரை நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள புதுக்குளம் 1பிட் செல்லும் ரோட்டில் உள்ள நதியில் கார்த்திகை திருநாளை முன்னிட்டு தீப ஆராதனை விழா நடைபெற்றது.

இந்நிகழ்வில் பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்கப் பெருமாள், பாஜக மேற்கு மாவட்ட தலைவர் சசிக்குமார், விவசாய அணி மேற்கு மாவட்ட தலைவர் முத்துப்பாண்டி, பொதுச் செயலாளர்கள் தர்மர், ரத்தினசாமி, துணைத் தலைவர் மகாலிங்கம், செயலாளர்கள் பெருமாள், ரமேஷ்கண்ணன், மண்டல் பொதுச் செயலாளர் ஜெகதீஸ்வரி, இளைஞரணி மேற்கு மாவட்ட தலைவர் கார்த்திகேயன், மண்டல் தலைவர் இளையராஜா மற்றும் குபேந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை பிப் 06 மதுரை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES