Friday , December 19 2025
Breaking News
Home / செய்திகள் / குஜராத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை முன்னிட்டு மதுரையில் பாஜகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.!
NKBB Technologies

குஜராத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை முன்னிட்டு மதுரையில் பாஜகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.!

குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்று 7-வது முறையாக ஆட்சி அமைக்க உள்ளதை முன்னிட்டு, மதுரை பீ.பீ.குளம் பகுதியில் உள்ள மாநகர் மாவட்ட பாஜக அலுவலகத்தில் மாவட்ட துணை தலைவர் ஜெயவேல் ,மாவட்ட பார்வையாளர் கார்த்திக் பிரபு ஆகியோர் தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

இந்நிகழ்வில் பட்டியல் அணி மாநில செயலாளர் சிவாஜி, ஓபிசி அணி மாநில பொருளாளர் மோகன்குமார்,மாவட்ட பொதுச் செயலாளர் பாலமுருகன், மீனவர் அணி மாவட்ட தலைவர் இளங்கோ மணி , மாவட்ட துணைத்தலைவர் குமார், 41 வது வார்டு தலைவர் ரவிச்சந்திரபாண்டியன் உள்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

பி.கே மூக்கையா தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ

கல்வித்தந்தை பி.கே.மூக்கையாத்தேவரின் நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை அரசரடியில் உள்ள அவரது திருவருச்சிலைக்கு, முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES