வாழ்த்துக்கள்…
ரசிகர்களின் புதிய முயற்சி…
நடிகர் விஜய் அவர்களின் பிகில் திரைப்படம் வெளியானதை முன்னிட்டு கரூர் மாவட்டம் குளித்தலை ஒன்றிய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கத்தினர் கட்-அவுட் பேனர்கள் வைப்பதை தவிர்த்து விளையாட்டுத் துறையில் சாதிக்கத் துடிக்கும் பெண்களுக்கு அவரவர் விளையாட்டை சார்ந்த விளையாட்டு உபகரணங்கள் நேற்று குளித்தலை சண்முகானந்தா தியேட்டரில் #பிகில்
திரைப்படம் வெளியாகும் முன்பு விஜய் மக்கள் இயக்கத்தினர் சார்பில் குளித்தலை ஊர்க்காவல் படையை சார்ந்த அகில இந்திய மூத்தோர் தடகள வீராங்கனை ஐந்து முறை அகில இந்திய தடகளப் போட்டியில் முதல் பரிசு வென்ற ரேவதி அவர்களுக்கு
தடகளப் பயிற்சிக்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது, டேக் ஒன் டோ பிரிவில் தேசிய அளவில் சாதித்த மாணவிகள் சுவாதி, பாவனா மற்றும் மாநில அளவில் சாதித்த நீனோ ஸ்ரீ ஆகிய மூன்று பேருக்கு Take won do பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் விளையாட்டு ஆடைகள் வழங்கப்பட்டது ..
இந்த நிகழ்ச்சியில் குளித்தலை ஒன்றிய தலைவர் சதாசிவம் மற்றும் செயலாளர் மோகன்ராஜ் பொருளாளர் நிதிஷ்குமார் துணை தலைவர் பொன் வினோத் அமைப்பாளர் தியாகு துணை செயலாளர் பாண்டியன் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக ராஜாளி ராஜா மற்றும் சிலம்பரசன் ஆகியோர்களும் ஏராளமான தளபதி விஜய் ரசிகர்களும் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்…

இளைஞர் குரல் இனி ஒரு விதி செய்வோம்