Sunday , February 1 2026
Breaking News
Home / இந்தியா / அமைதியாக போராடிய தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் நாகை.திருவள்ளுவன் மற்றும் திராவிடர் தமிழர் கட்சியின் தலைவர் வெண்மணி உள்ளிட்ட 24 தோழர்கள் கைது
NKBB Technologies

அமைதியாக போராடிய தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் நாகை.திருவள்ளுவன் மற்றும் திராவிடர் தமிழர் கட்சியின் தலைவர் வெண்மணி உள்ளிட்ட 24 தோழர்கள் கைது

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தீண்டாமை சுவர் விழுந்து உயிரிழந்த 17 பேரின் மரணத்திற்கு நீதி வேண்டியும், அம்மக்களோடு அமைதியாக போராடிய தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் நாகை.திருவள்ளுவன் மற்றும் திராவிடர் தமிழர் கட்சியின் தலைவர் வெண்மணி உள்ளிட்ட 24 தோழர்கள் கைதை கண்டித்தும், தந்தைப் பெரியார் திராவிடர் கழகத்தின் ஒருங்கிணைப்பில், இன்று (03-12-19) காலை கோவை திருவள்ளுவர் பேருந்துநிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தந்தைப் பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் தோழர் கோவை.கு.இராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆதித்தமிழர் கட்சியின் தலைவர் கு.ஜக்கையன் உள்ளிட்ட பல்வேறு ஜனநாயக அமைப்புகள், கட்சிகளை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்று கைதாகினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மே பதினேழு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் உள்ளிட்ட எண்ணற்ற மே 17 இயக்கத் தோழர்கள் பங்கேற்று கைதாகினர்.

Bala Trust

About Admin

Check Also

பள்ளபட்டியில், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி அவர்கள் திறந்து வைத்து மாணவர்கள் முன்னிலையில் உரை

பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து திறன் வகுப்பறையை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES