Saturday , January 31 2026
Breaking News
Home / தமிழகம் / தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி பகுதிகளில் 2ஆம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருகிறது.
NKBB Technologies

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி பகுதிகளில் 2ஆம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி பகுதிகளில் 2ஆம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருகிறது.

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்காக 25 ஆயிரத்து 8 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஆயிரத்து 551 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு அங்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. 2ஆம் கட்ட வாக்குப்பதிவுக்கு 93 ஆயிரம் வாக்குப்பெட்டிகள் பயன்படுத்தப்படுகிறது. 158 ஊராட்சி ஒன்றியங்கள் உட்பட்ட 255 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 2 ஆயிரத்து 544 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 38 ஆயிரத்து 916 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 4 ஆயிரத்து 924 கிராம ஊராட்சி தலைவர்கள் என மொத்தம் 46 ஆயிரத்து 639 பதவி இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் 1 கோடியே 28 லட்சம் வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனர். போலீசார், முன்னாள் ராணுவ வீரர்கள் என 61 ஆயிரத்து 4 பேர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்குப்பதிவு வீடியோவாக பதிவு செய்வதுடன், வெப் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. இரண்டு கட்ட உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் ஜனவரி 2ஆம் தேதி வெளியாக உள்ளது.

 

Bala Trust

About Admin

Check Also

பள்ளபட்டியில், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி அவர்கள் திறந்து வைத்து மாணவர்கள் முன்னிலையில் உரை

பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து திறன் வகுப்பறையை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES