Friday , November 22 2024
Breaking News
Home / இளைஞர் கரம் / `தேர்தல் வாக்குறுதிகளை எப்போ சார் நிறைவேத்துவீங்க?’ -பாரிவேந்தரிடம் குளித்தலை இளைஞர்கள்
MyHoster

`தேர்தல் வாக்குறுதிகளை எப்போ சார் நிறைவேத்துவீங்க?’ -பாரிவேந்தரிடம் குளித்தலை இளைஞர்கள்

குளித்தலை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அவர் செய்வதாகக் கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை. இதனால், அவரை சந்தித்து, ‘நீங்கள் செய்வதாக கொடுத்த வாக்குறுதிகள் என்னாச்சு?’ என இளைஞர்கள் சிலர் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

`கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் நீங்கள் போட்டியிட்டபோது கொடுத்த கோரிக்கைகளை இன்னும் நிறைவேத்தலையே சார்.. எப்போ நிறைவேத்துவீங்க?’ என்று குளித்தலை இளைஞர்கள் பாரிவேந்தர் எம்.பி-யிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

அதோடு, பாரிவேந்தர் தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நினைவுபடுத்தும்விதமாக, அதை மனுவாக அவரிடம் அளித்திருக்கிறார்கள்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க கூட்டணி சார்பில் ஐ.ஜே.கே கட்சித் தலைவர் பாரிவேந்தர் போட்டியிட்டார். அந்த வகையில், பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் வரும் சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றான குளித்தலைப் பகுதிக்குச் சில விஷயங்களைச் செய்து தருவதாகக் கூறி, வாக்கு கேட்டார். தேர்தல் முடிவில் அமோகமாகவும் வெற்றிபெற்றார்.

ஆனால், குளித்தலை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அவர் செய்வதாகக் கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை என்கிறார்கள். இதனால், அவரை குளித்தலைப் பகுதி இளைஞர்கள் சந்தித்து, ‘நீங்கள் செய்வதாகக் கொடுத்த வாக்குறுதிகள் என்னாச்சு?’ என்று கேள்விகளை அடுக்கியிருக்கிறார்கள்.

இதுபற்றி, மனு அளித்தவர்களில் ஒருவரான சுந்தரிடம் பேசினோம். “நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து 8 மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால், எங்க எம்.பி பாரிவேந்தர் ஒரு வாக்குறுதியையும் நிறைவேத்தலை. அதனால், அவரைச் சந்தித்து, கேள்வி கேட்டதோட, அவர் கொடுத்த வாக்குறுதிகளை மனுவா எழுதி, அவருக்கு நினைவுபடுத்தும்விதமாகக் கொடுத்துள்ளோம்.

அந்த மனுவில், `தங்கள் கூறிய தேர்தல் வாக்குறுதிப்படி குளித்தலை நகரத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க எப்போ முயற்சி எடுக்கப்போறீங்க’னு கேட்டிருக்கிறோம். குளித்தலை ரயில் நிலையத்தை தரம் உயர்த்தி, ரயில் நிலையத்தில் முன்பதிவு மையம் தனியாக ஏற்படுத்திக் கொடுப்பது, தினமும் வரும் (மன்னார்குடி – கோவை ) (கோவை- மன்னார்குடி) செம்மொழி எக்ஸ்பிரஸ் குளித்தலை ரயில் நிலையத்தில் நின்று செல்லவும், வாராந்தர ரயில்களைக் குளித்தலை ரயில் நிலையத்தில் நின்று செல்லவும் நடவடிக்கை எடுக்க வைப்பதாகச் சொன்னீர்கள். அந்தக் கோரிக்கை என்னவானது?’ என்று கேட்டோம்.

அதேபோல், ரயில்வே மேம்பாலம் அமைக்கவும், உழவர் சந்தை முதல் மணப்பாறை ரயில்வே கேட் வரை உள்ள பாதையை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர நீதிமன்றத் தீர்ப்புக்கு உட்பட்டு பாதையைத் திறக்க நடவடிக்கை எடுக்கவும் கொடுத்த வாக்குறுதிகள் என்னாச்சுனு கேட்டோம்.

பெரிய பாலத்தில் பரிசல்துறை ரோட்டில் மின் மயானம் அமைக்கவும் உயர்மின் கோபுர விளக்கு அமைக்கவும், குளித்தலை தாலுகா சட்டமன்றத் தொகுதியில் தீயணைப்பு நிலையம் இல்லாமல் இருப்பதால் மக்களின் அத்தியாவசிய தேவையான தீயணைப்பு நிலையம் குளித்தலை நகரில் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கறதா சொன்னதையும் நினைவுபடுத்தினோம்.

Bala Trust

About Admin

Check Also

Saregamapa Li’l Champs சீசன் 4 இன் போட்டியாளரான யோகஸ்ரீ பின்னணி…

Saregamapa Li’l Champs சீசன் 4 இன் போட்டியாளரான யோகஸ்ரீ, அறிமுகச் சுற்றில் தனது பின்னணியைப் பகிர்ந்து கொண்டார்: *வயது …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES