17.01.2024
கரூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை வட்டம், கூடலூர் கிராமம் பூசாரிபட்டியில் மூன்று மந்தை 84 ஊர் சோழிய வெள்ளாளர்கள் சமூக நலச் சங்கம் சார்பில் உழவர் திருநாள் மற்றும் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டது. விழாவில் சங்கத்தின் தலைவர் திரு. கௌரிசங்கர், செயலாளர் திரு.சண்முகராஜ், பொருளாளர் திரு.ஜெய சரவண பாலாஜி மற்றும் சங்க பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு. ஜோதிமணி அவர்கள் திருவள்ளுவர் படத்தை திறந்து வைத்து மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செய்ததோடு, அந்தப் பகுதி பொதுமக்களின் கோரிக்கைகளை பெற்று அவற்றை நிறைவேற்றுவதாக உறுதி அளித்தார்.

உடன் கூடலூர் பஞ்சாயத்து தலைவர் திருமதி. சாந்தி கோபால், குஜிலியம்பாறை ஒன்றிய துணை சேர்மன் திருமதி. மணிமேகலை தங்கராஜ், திமுக பிரமுகர் திரு.கர்ணன் மற்றும் வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன், காங்கிரஸ் மாநில பொது குழு உறுப்பினர்கள் திரு.சாமிநாதன், திரு.ரங்கமலை, திரு.முரளி, காங்கிரஸ் வட்டாரத் தலைவர் திரு.பாலமுருகன், கரூர் மாவட்ட காங்கிரஸ் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத்துறை ஒருங்கிணைப்பாளர் திரு.பாலமுருகன் கந்தசாமி, கரூர் நகர திமுக திரு.கிருபா, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், இந்தியா கூட்டணி நிர்வாகிகள் உட்பட ஏராளமான பிரமுகர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பெருமளவில் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.










