அகில இந்திய தெலுங்கு சம்மேளனம், ஜனநாயக மக்கள் ராஜ்ஜியம் கட்சி மற்றும் பெத்தானியாபுரம் நாயுடு சங்கம் இணைந்து மாமன்னர் திருமலை நாயக்கரின் 441 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு பொது மருத்துவ முகாம், ஏழை, எளியோர்களுக்கு வேட்டி,சேலை மற்றும் மாணவ மாணவிகளுக்கு நோட்புக் மற்றும் கல்வி உபகரணங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்கு ஜனநாயக மக்கள் ராஜ்ஜியம் கட்சியின் மதுரை மண்டல ஒருங்கிணைப்பாளர் எவர்கிரீன் ஜி.வி பாலமுருகன் தலைமை வகித்தார்.
அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் தலைமை நிலைய செயலாளர் டி.எம் நாயுடு முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை இந்து கவரா நாயுடு அறக்கட்டளை தலைவர் பொம்மை பி.ரவிச்சந்திரன் நாயுடு மற்றும் ஜனநாயக மக்கள் ராஜ்ஜியம் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் செல்லப்பாண்டியன் ஆகியோர் வரவேற்று பேசினர்.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக ஜனநாயக மக்கள் ராஜ்ஜியம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் குணசேகரன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மருத்துவ முகாமை அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் துணைத் தலைவர் டாக்டர் சி.எம் கிஷோர் தொடங்கி வைத்தார்.
சிறப்பு விருந்தினராக தென் இந்திய ஃபார்வர்ட் பிளாக் நிறுவன தலைவர் கே.சி திருமாறன் ஜி மற்றும் டாக்டர் சிட்டிபாபு ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.
பின்னர் ஆரப்பாளையம் கிராஸ் ரோட்டில் உள்ள மன்னர் திருமலை நாயக்கர் சிலைக்கும், மஹாலில் உள்ள அவரது சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் தேனி கவுன்சிலர் கிருஷ்ணபிரபா, அய்யப்பன், அமைதிப்புயல் ரெங்கராஜ், பெத்தானியாபுரம் நாயுடு சங்க பொருளாளர் ரவிக்குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
என்.டி.சி மருத்துவமனையை சேர்ந்த மருத்துவ குழுவினர் பரிசோதனைகளை மேற்கொண்டனர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
நிகழ்ச்சியின் முடிவில் அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் மாவட்ட இளைஞரணி தலைவர் பார்மா. ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.