Saturday , December 20 2025
Breaking News
Home / செய்திகள் / தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கலைப்பிரிவு சார்பாக மதுரை மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
NKBB Technologies

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கலைப்பிரிவு சார்பாக மதுரை மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கலைப்பிரிவு சார்பாக மதுரை மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மதுரை ரயில்வே நிலையம் மேற்கு நுழைவு வாயில் எதிரே உள்ள தனியார் உணவகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கலை பிரிவு தலைவர் சந்திரசேகரன் தலைமை வகித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறுகையில்

வரும் பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் பெரு வாக்குகள் பெற வைத்து வெற்றி பெற வைப்பது குறித்து முடிவு எடுக்கப்பட்டது.

பாஜக ஆட்சியை வீழ்த்துவது குறித்து எல்லா வியூகங்களையும் வகுத்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஆலோசனைப்படி கலைப்பிரிவு சார்பாக தீவிரமாக செயலாற்றி பணியாற்றுவது குறித்து தீர்மானிக்கப்பட்டது.

மதுரை பாராளுமன்ற தொகுதிக்கு மாநில செயலாளர் சந்திரசேகர் தலைமையில், மாவட்ட தலைவர்கள் ஈஸ்வரமூர்த்தி, துரைசிங், கார்த்திகேயன் கொண்ட குழு அமைப்பது எனவும், அதுபோல ஒவ்வொரு பாராளுமன்ற தொகுதிக்கும் கலைப்பிரிவு சார்பாக குழு அமைத்து கூட்டணி சார்பாக போட்டியிடும்
வேட்பாளர்கள் வெற்றி பெற தீவிரமாக பணியாற்றவது என முடிவு எடுக்கப்பட்டது என கூறினார்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

பி.கே மூக்கையா தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ

கல்வித்தந்தை பி.கே.மூக்கையாத்தேவரின் நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை அரசரடியில் உள்ள அவரது திருவருச்சிலைக்கு, முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES