Saturday , January 31 2026
Breaking News
Home / இந்தியா / போன்ல யாரு.. அடங்க மாட்டியா.. ஓவர் சந்தேகம்.. பாஜக பெண் தலைவியை சுட்டு பொசுக்கிய கணவன்!
NKBB Technologies

போன்ல யாரு.. அடங்க மாட்டியா.. ஓவர் சந்தேகம்.. பாஜக பெண் தலைவியை சுட்டு பொசுக்கிய கணவன்!

போன்ல யாரு.. அடங்க மாட்டியா.. ஓவர் சந்தேகம்.. பாஜக பெண் தலைவியை சுட்டு பொசுக்கிய கணவன்!

டெல்லி: ஓவர் சந்தேகம் ஏற்பட்டு.. பாஜக பெண் பிரமுகரை அவரது கணவனே துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டார்.

ஹரியானா மாநிலம் குருகிராமில் வசித்து வந்தவர் முனேஷ் கோதரா.. இவர் சுனில் என்பவரை 2001ஆம் ஆண்டு கல்யாணம் செய்து கொண்டார்.
கல்யாணமாகி சில வருடங்கள் கழித்து முனேஷூக்கு திடீரென அரசியல் ஆர்வம் வந்துவிட்டது.. தனது தோழியின் ஆலோசனையின் பேரில் பாஜகவில் இணைந்தார்.. கட்சி பணிகளையும் தொடர்ந்து செய்து வந்தார்.. பாஜக மேடை ஏறி முழக்கமிடுவதுதான் இவரது ஸ்பெஷாலிட்டியே!

ஆனால், இப்படி மேடைக்கு மேடை தனது மனைவி ஏறி பேசி வருவதையும், வீட்டு வேலைகளை எதுவுமே செய்யாமல், குடும்பத்தை மறந்து கட்சியே கதி என்று கிடந்ததையும் சுனில் விரும்பவில்லை.. தேர்தலையொட்டி மாநிலம் முழுவதும் சுற்றி சுற்றி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

இது எல்லாவற்றிற்கும் மேலாக, மனைவிக்கு கட்சியில் யாருடனோ தொடர்பு இருப்பதாகவும் சந்தேகம் வந்தது.. சந்தேகம் வீட்டில் புயலாக வீசி தம்பதிக்குள் சண்டையும் வந்தது. சம்பவத்தன்று மனைவி தன் சகோதரியுடன் போனில் பேசிக் கொண்டிருந்தார்… இதை பார்த்ததும் போனில் யார், என்ன என்றுகூட விசாரிக்காத கணவன், கடுப்பாகி போன சுனில், வீட்டிலிருந்த துப்பாக்கியை எடுத்து மனைவியை சுட்டு கொன்றுவிட்டார்.
சுனில் ஒரு முன்னாள் ராணுவ வீரர் ஆவார்.. துப்பாக்கி சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்தனர்.. ரத்த வெள்ளத்தில் பெண் விழுந்து கிடப்பதை பார்த்ததும் போலீசுக்கும் தகவல் சொல்ல.. அவர்கள் வந்து சுனிலை கைது செய்தனர்..மேலும் துப்பாக்கி லைசென்ஸையும் கைப்பற்றி விசாரித்து வருகிறார்கள்.

Bala Trust

About Admin

Check Also

பள்ளபட்டியில், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி அவர்கள் திறந்து வைத்து மாணவர்கள் முன்னிலையில் உரை

பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து திறன் வகுப்பறையை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES