Wednesday , July 30 2025
Breaking News
Home / கலாம் / நம் எல்லோருக்கும் ஒரு ஆசை இருக்கும் APJ அப்துல் கலாம் மாதிரி மனிதர்கள் தங்களுடைய நாட்களை எவ்வாறு அமைத்து கொள்கிறார்கள் என்று….
NKBB Technologies

நம் எல்லோருக்கும் ஒரு ஆசை இருக்கும் APJ அப்துல் கலாம் மாதிரி மனிதர்கள் தங்களுடைய நாட்களை எவ்வாறு அமைத்து கொள்கிறார்கள் என்று….

நம் எல்லோருக்கும் ஒரு ஆசை இருக்கும் APJ அப்துல் கலாம் மாதிரி மனிதர்கள் தங்களுடைய நாட்களை எவ்வாறு அமைத்து கொள்கிறார்கள் என்று.

நான் APJ அப்துல் கலாம் அவர்களிடம் மிகுந்த மரியாதை கொண்டு படித்து கொள்ள விரும்பியது , எவ்வாறு வாழ்நாள் எல்லாம் மிகவும் துடிப்புடன் இருப்பது என்பதை மட்டும் தான்.

என்னுடைய அனுபவத்தில் அவரின் அன்றாட வழக்கமான செயல்களை பட்டியலிட முயற்சிக்கிறேன். உங்கள் அனுபவத்தையும் பகிரலாம்.

1. வேலையில் 100 % அர்ப்பணிப்பு

அப்துல் கலாம் தன்னுடைய வேலை நாட்களை மிகவும் கவனமுடன் கையாள நினைப்பவர். தான் எடுத்துக்கொண்ட வேலையை கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேற்ற உழைப்பவர்.

அவர் வேளையில் இருக்கும் பொது நான் அவரை 100% ஈடுபாடுடன் இருப்பதை பார்த்திருக்கிறேன். தான் வேலை செய்யும் போது வேலை மட்டும்தான் கவனம் முழுவதும். அப்பொழுது நாம் அருகில் போய் இருந்தால் கூட என்ன வேண்டும் என்று கூட கேட்ட மாற்றார்கள். தன்னுடைய முழுமையான கவனம் தன்னுடைய பணியில் இருக்கும். அதாவது ஒரு 2 மணியில் இருந்து 3 மணி நேரம் தன்னுடைய வேளையில் கவனம் சிதறாத அர்ப்பணிப்பு .

முழுக்க முழுக்க தன் கையில் உள்ள வேளையில் கவனம். தொலைபேசி அழைப்பு அல்லது வேறு எதாவது பணியில் கவனம் அப்படி என்றுமில்லாமல் தான் செய்து கொண்டிருக்கிற பணியில் மற்றும் கவனம்.

2. புதிதாய் கற்று கொள்ளும் ஆர்வம்

83 வயதிலும் எதாவது புதிதாய் கற்றுக்கொள்ளும் ஆர்வம் . அதாவது ஒவ்வொரு துறையிலும் புதிதாய் உள்ள
கருத்துக்கள் , சமீபத்திய நடப்புகள் என நேரம் செலவிடுவார். அவருடைய ஆர்வத்தினால் தான் Nano Technology, Renewable energy, cyber security, Modern Agri என பல்வேறு துறைகளில் தன்னுடைய நேரத்தை செலவழித்தார்.

a. புத்தகங்களில் இருந்து கற்று கொள்ளுதல்
b. கல்வி நிறுவனங்களில் இருந்து கற்று கொள்ளுதல்
c. துறை சார்ந்த மனிதர்களிடம் இருந்து கற்று கொள்ளுதல்
d.பல்வேறு இடங்களுக்கு பிரயாணம் செய்து கற்று கொள்ளுதல்

தன்னுடைய கல்லூரி படிப்பு முடிந்த பிறகும் பல்கலை கழகங்கள் தொடர்பை ஏற்படுத்தி கொண்டு தொடர்ந்து கற்றலை ஒரு விடா பணியாக செய்து வந்தார். 2001ம் ஆண்டு தன்னுடைய பிரதமருடைய ஆலோசகர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நேரே சென்ற இடம் அண்ணா பல்கலை கழகம்.

3. துவளாத மனம் கொண்டு பிரச்சனைகளை தீர்க்கும் திறன்

தான் பணி புரிந்த ஒவ்வொரு இடத்திலும் எதாவது ஒரு சவாலை எடுத்துக்கொண்டு அதை தைரியமாக கையாண்டு ஒரு தீர்வு காண முயற்சிப்பார்.

4. துறை சார்ந்த மனிதர்களிடம் நட்பு

ஒவ்வொரு துறையிலும் உள்ள நல்ல திறமையான மனிதர்களிடம் உரையாடலை மேற்கொள்வர். தொடர்ந்து என்ன புதிதாய் மாற்றம் அல்லது வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது அந்த துறையில் என்பதை அந்த துறை சார்ந்த வல்லுநர்கள்களிடம் உரையாடுவார்

5. கற்பனை திறனை பயன்படுத்துதல்

Logic will get you from A to B. Imagination will take you everywhere. இந்த ஆல்பர்ட் ஐன்டீன் (Albert Einstein) கூற்றுக்கு ஏற்ப தன்னுடைய கற்பனை திறனை தொடர்ந்து வளர்ச்சி சார்ந்த திட்டங்களுக்கு பயன்படுத்துவார்.

6. புதிதாய் முயற்சிக்கும் அறிவு (இன்னோவேஷன்)

எதாவது புதிதாய் செய்தல் என்ன என்று திரும்ப திருப்ப கேட்டு கொண்டே இருப்பார். அதாவது எதாவது இயல்பாய் இருக்கும் திட்டங்களை / நடைமுறையை எவ்வாறு மேலும் மெருகூட்டலாம் என்று யோசித்து கொண்டே இருப்பார்.

APJMJ SheikDawood.

Co-founder,

APJ Abdul Kalam International Foundation.

Like our Page: https://www.apjabdulkalamfoundation.org

Bala Trust

About Admin

Check Also

தெரு நாய் கடிகளால் ஏற்படும் பாதிப்புகளை உடனடியாக தடுத்து நிறுத்த தேசிய செயல் திட்டம் வகுக்க வேண்டும்…

உலகில் ரேபிஸ் நோய்களால் ஏற்படும் உயிரிழப்புகள் இந்தியா முதலிடம் வகிக்கின்றது. இதை தடுக்க மத்திய மாநில அரசு கால்நடை மருத்துவத்துறையின் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES