Thursday , March 19 2026
Breaking News
Home / செய்திகள் / மதுரையில் சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்
NKBB Technologies

மதுரையில் சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்

மதுரை கோரிப்பாளையத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்

மதுரை,பிப்.28

குலசேகரப்பட்டினத்தில் உருவாக்கப்படுகின்ற ராக்கெட் ஏவுதளத்தை கைவிட வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும்,மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலை அருகே காங்கிரஸ் கட்சி சார்பாக மதுரை மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமையில் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது திடீரென சாலைக்கு சென்ற மாவட்ட தலைவர் கார்த்திகேயன் மற்றும் 31-வது வார்டு கவுன்சிலர் தல்லாகுளம் முருகன் மற்றும் நிர்வாகிகள் டாக்டர் ரவிச்சந்திரன், மீர்பாஷா உள்பட மாநில,மாவட்ட, வார்டு நிர்வாகிகள் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடனடியாக அவர்களை அதிரடியாக கைது செய்த காவல்துறையினர் ரிசர்வ் லைனில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. மேலும் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை பிப் 06 மதுரை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES