சென்னையில் முத்தூட் குழுமம் CSR திட்டம் மூலம் ஹோப் அறக்கட்டளையின் பள்ளிக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
இந்தியாவின் மிகப்பெரிய தங்க நகைக் கடன் நிறுவனமான முத்தூட் பைனான்ஸ் தங்களது CSR திட்டம் மூலம் பல்வேறு சமூக சேவைகளை செய்துவருகிறது.
இதனை தொடர்ந்து சென்னை துரைப்பாக்கம் கண்ணகி நகரில் ஹோப் அறக்கட்டளை மூலம் இயங்கி வரும் ஆங்கிலவழி பள்ளிக்கு சுமார் 2 லட்சம் மதிப்புள்ள ஐந்து மடிக்கணினியை வழங்கியது.
இந்நிகழ்வில் முத்தூட் பைனான்ஸ் சென்னை தெற்கு பிராந்திய மேலாளர் ரூபேஸ், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைமை அதிகாரி நிர்மல்ராஜ், மற்றும் திருமதி.சரஸ்வதி, தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து மாணவர்களுக்கு மடிக்கணினியை வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் முத்தூட் சமூக பொறுப்பு திட்ட மேலாளர் ரமேஷ்கண்ணா திட்டத்தின் நோக்கம் மற்றும் முத்தூட் குழுமம் சமுக பொறுப்பின் மூலம் நடைபெறும் பல்வேறு திட்டங்கள் சேவைகள் பற்றி பேசினார்.
இந்நிகழ்வில் முத்தூட் நிறுவனத்தின் பணியாளர்கள், ஹோப் அறக்கட்டளை அலுவலர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் சமுக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.