Friday , March 20 2026
Breaking News
Home / செய்திகள் / அனைத்து பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்கள் சங்கம் கோவை சார்பாக பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியம் சார்பாக 4-ஆம் ஆண்டு வண்ணத் திருவிழா..!
NKBB Technologies

அனைத்து பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்கள் சங்கம் கோவை சார்பாக பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியம் சார்பாக 4-ஆம் ஆண்டு வண்ணத் திருவிழா..!

மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, அனைத்து பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்கள் சங்கம் கோவை சார்பாக பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியம் சார்பாக 4-ஆம் ஆண்டு வண்ணத் திருவிழா நடைபெற்றது.

மேலும் இலப்பைக்குடிக்காடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஏராளமானோர் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கினர்.

இந்நிகழ்விற்கு மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.பி கிட்டு என்ற கிருஷ்ணசாமி தலைமை வகித்தார்.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சேசு மற்றும் தீயணைப்பு மீட்பு பணி நிலைய சிறப்பு அலுவலர் அங்கமுத்து, மாநில ஒருங்கிணைப்பாளர் யோகதாசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இதில் மாவட்ட கவுரவத் தலைவர் ஆறுமுகம், மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணி, மாவட்ட செயலாளர் ரமேஷ் அர்ஜுனா, மாவட்ட பொருளாளர் காமராஜ், மாவட்டத் துணைத் தலைவர் ராம்குமார், மாவட்ட துணைச் செயலாளர் ரவிச்சந்திரன், நகரத்தலைவர் செந்தில்குமார், நகர செயலாளர் ரமேஷ், வேப்பூர் ஒன்றிய துணைத் தலைவர் இப்ராஹீம் பாஷா, ஒன்றிய செயலாளர் தாஜுதீன், ஒன்றிய பொருளாளர் அஹமது மற்றும் மகளிரணி நிர்வாகிகள் ராஜேஷ்வரி, புவனேஸ்வரி, ஸிபியா, ரஹமத் நிஷா, ஆசியா பேகம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை பிப் 06 மதுரை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES