Saturday , January 31 2026
Breaking News
Home / இந்தியா / வீட்டுக்குள் இருங்க.. இல்லைன்னா கண்டதும் சுட உத்தரவுதான்: தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்.
NKBB Technologies

வீட்டுக்குள் இருங்க.. இல்லைன்னா கண்டதும் சுட உத்தரவுதான்: தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்.

வீட்டுக்குள் இருங்க.. இல்லைன்னா கண்டதும் சுட உத்தரவுதான்: தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்.

ஹைதராபாத்: கொரோனாவுக்கான லாக்டவுன் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் வீடுகளில்தான் முடங்கி இருக்க வேண்டும்; வீதிகளில் நடமாடினால் கண்டதும் சுட உத்தரவும் பிறப்பிக்க நேரிடும் என்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் எச்சரித்துள்ளார்.

கொரோனா தாக்கத்தால் தெலுங்கானாவிலும் லாக் டவுன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் வீதிகளில் பொதுமக்கள் நடமாட்டம் தொடருவதால் மாநில அரசு கடும் எச்சரிக்கை விடுத்து வருகிறது. இது தொடர்பாக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கூறியதாவது:

தெலுங்கானாவில் இரவு முதல் காலை வரை தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். இதனை மீறினால் 24 மணிநேர தடை உத்தரவு பிறப்பிக்கவும் அரசு தயங்காது.

அமெரிக்காவைப் போல சட்டம் ஒழுங்கு பாதுகாப்பை ராணுவத்திடம் கொடுத்துவிடுவோம். பொதுமக்களில் பலர் லாக்டவுன் உத்தரவை மதிக்காமல் வீதிகளில் நடமாடுவதையும் பார்க்க முடிகிறது. அனைத்து கடைகளும் மாலை 6 மணிக்கு கண்டிப்பாக மூடப்பட வேண்டும்.

ஹைதராபாத்தில் 150 கவுன்சிலர்கள் இருக்கின்றனர். ஆனால் அதிகாரிகளும் போலீசாரும்தான் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கவுன்சிலர்கள் எங்கே போனார்கள் என்பதுதான் தெரியவில்லை. வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தங்களது பாஸ்போர்ட்டை ஒப்படைத்துவிட வேண்டும். 14 நாட்கள் கண்காணிப்பில் அவர்கள் இருந்துதான் ஆக வேண்டும்.
கொரோனா- இத்தாலியில் தொடரும் பயங்கரம்- ஒரே நாளில் 743 பேர் பலி; உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,820
லாக்டவுன் சட்டங்களை மீறுகிறவர்களுக்கு சில நாடுகளில் சிறை தண்டனையும் விதிக்கப்படுகிறது. ஆகையால் பொதுமக்கள்தான் வீடுகளில் இருக்க வேண்டுமா? சிறைக்கு போக வேண்டுமா? என்பதை முடிவு செய்து கொள்ள வேண்டும். சட்டங்களை மீறி வீதிகளில் நடமாடினால் கண்டதும் சுட உத்தரவும் பிறப்பிக்கவும் நேரிடும். இவ்வாறு சந்திரசேகர ராவ் தெரிவித்தார்.

Bala Trust

About Admin

Check Also

பள்ளபட்டியில், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி அவர்கள் திறந்து வைத்து மாணவர்கள் முன்னிலையில் உரை

பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து திறன் வகுப்பறையை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES